பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை (அர்) கெடுவீர்! - பொங்கார.... மடந்தையரும் உயிர்போம் அத் தனி வழிக்குச்சங்காதமோ, (பொ உ) கெடுவீர்! ஐயோ ஈயாது வைத்துக் கெட்டுப் போகிறீர்களே! பொங்கார வேலையில் அல்ைகள் பொங்கி எழுகின்றதும் (ஆரம்) முத்துக்களை உடையதுமான கடல்மீது (வேலை விட்டேர்ன்) வேலைச் செலுத்தினவனான திருமுருகன் திருவருள்போல (உங்களுக்கு உதவ)-(எங்காயினும் வரும் ஏற்ப்வர்க்கு இட்டது) ஏற்பவர்க்கு - யாசித்தவர்க்கு இட்டது. நீங்கள் கொடுத்துதவின உதவி (எங்காயினும் வரும் உங்களுக்குப் பிரதி உபகாரம் செய்ய எந்த சமயத்திலாவது வந்து உதவி செய்யும்; அங்ங்ணம் இட்டு உதவி செய்யாது (நீங்கள்) சேகரித்து வைத்த (வங்காரமும்) - பொன்னும், உங்கள் (சிங்கார வீடும்) - அலங்கரிக்கப்பட்ட வீடும், (மடந்தையரும்) வீட்டு மாதர் ■ (உயிர்போம் அத் தனி வழிக்குச் சங்காதமோ) நீங்கள் ಧ್ಧಿ உங்கள் உயிர் செல்லுகின்ற அந்த தனி வழிக்கு உங்களுக்குத் துணையாய் வருமா? துணையாய் வருவார்களா? (சு உ) ஏற்பவர்க்கு இட்டது - முருகன் திருவருள்போலத் தக்க சமயத்தில் வந்து உங்களுக்கு உதவும், இடாது சேகரித்த மண்-பெர்ன் - பெண் இம் மூன்றும் உயிர் போகும் அந்தத் தனி வழிக்குத் துணையாக வாரா; ஆதலால் ஈதல் அறம் என்பதை உணர்வீர்களாக கெட்டுப் போகாதீர்கள். (கு உ) பொங்கல் - கிளர்தல். வங்காரம் = பொன்; "வங்கார மார்பில்" - திருப்புகழ் 817. சங்காதம் = துணை, கூட வருதல், வேலையில் வேலை விட்ட வரலாறு - திருப்புகழ் 905 பக்கம் 640, பாடல் 1148 பக்கம் 344 கீழ்க்குறிப்புக்களைப் பார்க்க. ஈதலாகிய அறமே துணை யாவது; மற்றவை துணையாக வாரா "மிக்க நல்லறம் விரும்பாது வாழும் மக்களிற் சிறந்த மடவோ ருண்டோ" - மணிமேகலை 6-103. "இளமையும் நில்லா, யாக்கையும் நில்லா வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா புத்தேள் உலகம் புதல்வரும் தாரார் மிக்க அறமே வழித்துணை யாவது தாணஞ் செய்யெனத் தருமதத்தனும். வான்பொருள் காட்டி" = I மணிமேகலை 22, 135, 140. 'இல்லும் பொருளும் இருந்த மனை யளவே கூேத்திரத் திருவெண்பா 14 உற்றார் ஆர் உளரோ உயிர் கொண்டு போம்பொழுது'-அப்பர் -49-10.