பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை (பொ-உ) (அவுணர்) அசுரர்களுடைய (உரத்து) மார் பினின்றும் பெருகி வந்த (உதிரக் குளத்தில் ரத்தக் குளத்தில் குதித்தும் குளித்தும் (களித்து மகிழ்ந்தும் (அந்த ரத்தத்தைக் குடித்தும் (வெற்றிக் களத்தில் ஐயம் விளங்கின. அந்தப் போர்க் களத்தில், (செருக்கி) இன்பம் அநுபவித்து மகிழ்ந்து (கழுது) பேய்கள் (ஆட) கூத்திாடும்ப்டி வேலா யுதத்தைச் செலுத்தின. (காவலனே) அரசே! (சள்த்தில்) வஞ்சனையிலும் பொய்யிலும் (பிணிபட்டு கட்டுண்டு (அசட்டுக் க்ரியைக்குள்) சத்து இல்லாத மூடத்தனமான செய் கைகள் செய்து தவிக்கின்ற என்னுடைய (உளத்தில்) மனதில் உள்ள (ப்ரமத்தை) மயக்க அறிவை (தவிர்ப்பாய்) ஒழித்தருளுக (சு-உ) அசுரரைச் சங்கரித்த அரசே வீணான தொழில்களைச் செய்யும் எனது மயக்க அறிவை நீக்கி அருளுக (கு உ) சளம் = வஞ்சனை பொய் பிணிபட்டு அசட்டுக் கிரிய்ைக்குள் தவிக்கும் எனப்பிரிக்க கழுது = பேய் தொட்ட j இந்தப் பாடலின் 3, 4 அடிகள் ஆசிரியர் சந்தக் கவி என்பதைக் காட்டும். 8. தன் அநுபவம் உபதேசம் பெற்றது ஒளியில் விளைந்த வுயர்ஞான யூதரத் துச்சியின்மேல் அளியில் விளைந்ததொ ராநந்தத் தேனை யநாதியிலே வெளியில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியைத் தெளிய விளம்பிய வா முக மாறுடைத் தேசிகனே. (அந்) முகமாறுடைத் தேசிகன்- ஒளியில்- தெளிய விளம்பியவா. (பொ - உ) ஆறு திருமுகங்களைக் கொண்ட தேசிகமூர்த்தி (ஒளியில் விளைந்த) இன்ப ஒளியாக - சிவ ஒளியாக ஏற்பட்ட மேலான (ஞானபூதரத்து) ஞானம் என்னும் மலையின் உச்சியின் மேலே (அள்யில்) கருணை மயமாய் விளங்கி எழும் (ஓர் ஆநந்தத் தேனை) ஒப்பற்ற ஒரு ஆனந்தத் தேன் போல் இனிக்கும் சுவைப் பொருளை (அநாதியிலே) முதலற்றதான பரவெளியில் (விளைந்த) தோன்றி விளங்கும் (வெறும் பாழை) இது என்று சுட்டிக் காட்டுதற் கில்லாத பாழ் இடத்தை வெற்றிடத்தைப் (பெற்ற) கொண்ட (வெறுந் தனிய்ை) தன்ன்ந் தனியான ஒரு நிலையைத் (தெளிய) நான் தெளிவாக அறியும்படி (விளம்பியவா) உபதேசித்த கருணையை என்னென்று வியப்பேன்.