| ஆலயத்தைப் பற்றி About the temple
ஆலயத்தைப் பற்றி அதன் தலைவர் திரு டி. முருகேசு கூறியது.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து கிழக்குக் கரையின் குவாந்தான் நகரை நோக்கிச் செல்லும் விறைவுச் சாலையில் இடப்புறத்தில் முதல் ஆலயமாக அமைந்திருக்கிறது. இக்கோயில், பெந்தோங் மாவட்டத்தைச் சேர்ந்தது. காராக் நகரின் முறைப்படி பதிவுச் செய்யப்பட்ட ஒரே ஆலயம் இது.
சுமார் 1926 ஆம் ஆண்டில் அன்றைய அரசாங்க உழியர்களால் ஒரு சிறிய கூடாரத்தில் ஆரம்பிக்கப்பட்டு வழிபாடு துவங்கப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக வளர்ச்சி கண்டு தற்போதைய தோற்றத்தில் காட்சியளிக்கிறது. இப்போது மேலும் சில அபிவிருத்திகளை மேற்கொள்ள திட்டங்கள் உள்ளன. ஓரு மண்டபம் அமைப்பதற்கும் திட்டம் உண்டு.
மலேசியாவின் மற்ற ஆலயங்களில் நடைபெறுவதைப்போல் இங்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. தைப்பூசம் மிகச் சிறப்பாக நடைபெறும். கந்த சஷ்டி, திருவிளக்கு வழிபாடு, திருக்கல்யாணம், கார்த்திகை போன்ற சிறப்பு வழிபாடுகளைத் தொடர்ந்தாற்போல் செய்துவருகிறோம். மேலும், சமயத்தைப்பற்றியான சிறப்புச் சொற்பொழிவுகளும் இங்கு நடைபெறுகின்றன. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலையில் பஜன் நடைபெறும்.
காராக் நகரில், சுமார் ஆயிரம் இந்துக் குடும்பங்கள் உள்ளன. மற்ற வட்டார மக்களும் வருகை புரிவார்கள். தலைநகரிலிருந்தும் பினாங்கிலிருந்தும் கிழக்கில் உள்ள மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயம் செல்லும் பக்த சுற்றுலா பேருந்துகள் இங்கேயும் வருகை புரிந்துச் செல்லும். தைப்பூசத்தின் போது சுமார் 5000 பக்தர்கள் இங்கு வருவார்கள். பால்குடங்களையும் காவடிகளையும் எடுத்துவந்து செலுத்துவார்கள். ஆனால் இங்கு அலகுக் காவடிகளைத் தவிர்க்க நாங்கள் முயற்சிக்கிறோம்.
இங்கு அர்ச்சகர் காலை 7 முதல் 9 வரையிலும் மாலை 3க்கு மேல் இரவு 9 வரையிலும் இருப்பார். காலைப் பூஜை 7 மணிக்கும் மாலைப் பூஜை 7 மணிக்கும் நடைபெறும். காலை அபிஷேகம் 6.30க்கு. மாலை அபிஷேகம் 3 மணிக்கு. மார்கழி மாதத்தில் மட்டும் காலை அபிஷேகம் 4 மணிக்கு நடைபெறும்.
அர்ச்சகர் இல்லாத நேரங்களில் பாதுகாப்புக்காக மூலஸ்தானம் பூட்டி வைக்கப்பட்டிருக்கும். ஆனால் ஆலயம் எப்போதும் திறந்திருக்கும்.
Brief History
Karak Sri Subramaniar Temple is first temple situated on the left side of Kuala Lumpur - Kuantan highway. It was started as a small temple in a shed, by the then JKR (Government) workers. The main celebrations here are like other temples in Malaysia. Thaipoosam, Kandha Sashti, Thiruvilakku, Thirukkalyaanam and Kaarththigai are some of them. Speeches about religion are also presented regularly. Bhajans are held every Friday evening.
This temple is regularly visited by the nearly 1000 Hindu families in this town. Devotees on their way to the capital, and also other temples in the East, make a halt here to worship. Temple tour buses from the capital and Penang usually make a stop here before proceeding to the Maran Sri Marathaandavar Temple, further east. On several occasions, devotees have done special poojas and re-visited this temple as a way of saying 'Thanks' to Lord Murugan, after having their prayers answered. During the Thaipoosam festival, around 5000 devotees visit here. Normally Paal Kodams (milk pots) and kaavadis are carried and presented to Lord Murugan during this festival. We try to discourage the use of 'Alagu' Kaavadis here.
The temple priest will be present from 7am to 9am and from 3pm to 9pm daily. At other times, the Sannithi will be locked for security reasons, but the temple premises will be open for devotees to worship. Morning pooja is at 7am and evening pooja is at 7pm. The morning abishegam is at 6.30am and the evening abishegam is at 3pm. During the month of Maargazhi, the morning abishegam is performed at 4.30am.
|