திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 229 யமன் (கிட்ட நெருங்குவதற்குக்) கலங்கி அஞ்சும்படியாக, (அருள் கூர்ந்து) வந்து (அன்பர்களுடைய இருதய) குகையிற் கலந்து (வீற்றிருந்தருளும்) தெய்வயானை. யம்மை சிறப்புடன் மகிழ்ந்து திருப்தியுடன் பொருந்தும் திருமார்பனே! அழகிய (தினைப்) புனத்தில் (உன் பொருட்டுப்) புகுந்த உனது நண்பராம் (நாரதரும்), சிவனும், நல்ல இந்திரன் முதலான சிறப்புற்ற பல தேவர்களும், கும்ப முநிவராம் (அகத்தியரும்) விரும்புகின்ற தம்பிரானே! (சதங்கை தங்கு பங்கயங்கள் தாராய்.) 97 ரேகைகள் உள்ள கரிய கண்களை உடைய மடப்பம் பொருந்திய மாதர்கள், குழந்தைகள் (என்கின்ற) ஆசையாகிய பந்தத்திலே (கட்டிலே) பட்டவனாகி; (பகல் - இரவு) என்கின்ற இரண்டு பொழு துகளி லும் மனம் நைந்துபோய் மெலிவு அடையாமல் - (உனது) இரண்டு திருவடிகளின்மீது அன்பைத் தந்தருளு G)JTTILffT&95; காத்து அளித்து அருள்வோனே! பரமசிவன் தந்தருளிய குழந்தையே! ஹரிகேசவராம் திருமாலின் மருகனே! அலைவாய் (என்கின்ற) திருச்செந்துாரில் வீற்றிருந்தருளும் பெருமாளே! (உன் இருதாளின் அன்பு தருவாயே)
பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/245
Appearance