திருப்புகழ் 1271 மன நூறு கோடி  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1271 mananURukOdi  (common)
Thiruppugazh - 1271 mananURukOdi - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதான தான தந்த தனதான தான தந்த
     தனதான தான தந்த ...... தனதான

......... பாடல் .........

மனநூறு கோடி துன்ப நொடிமீதி லேநி னைந்து
     மதனூட லேமு யங்கி ...... யதிரூப

மடமாத ராசை கொண்டு புவிமீதி லேம யங்கி
     மதிசீரெ லாம ழிந்து ...... கொடிதான

வினைமூடி யேதி ரிந்து புவிமீதி லேயு ழன்று
     விரகான்மெ யேத ளர்ந்து ...... விடுநாளில்

விசையான தோகை துங்க மயிலேறி யோடி வந்து
     வெளிஞான வீடு தந்து ...... அருள்வாயே

தினைவேடர் காவல் தங்கு மலைகாடெ லாமு ழன்று
     சிறுபேதை கால்ப ணிந்த ...... குமரேசா

திரையாழி சேது கண்டு பொருராவ ணேசை வென்ற
     திருமால்மு ராரி தங்கை ...... யருள்பாலா

முனிவோர்கள் தேவ ரும்பர் சிறையாக வேவ ளைந்த
     முதுசூரர் தானை தங்கள் ...... கிளையோடு

முடிகோடி தூளெ ழுந்து கழுகோடு பாற ருந்த
     முனைவேலி னாலெ றிந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மனநூறு கோடி துன்ப நொடிமீதிலே நினைந்து ... மனத்திலே
நூறு கோடிக்கணக்கான துன்பங்கள் ஒரு நொடிப் பொழுதிலே
நினைந்து,

மதனூடலே முயங்கி ... மன்மதனது லீலையால் காம ஊடலிலே
ஈடுபட்டு,

அதிரூப மடமாதராசை கொண்டு ... மிக்க அழகுள்ள இளம்
பெண்களிடத்தில் ஆசை கொண்டு,

புவிமீதிலே மயங்கி ... இந்தப் புவிமீதிலே மயங்கிக் கிடந்து,

மதிசீரெலாம் அழிந்து ... அறிவு, மதிப்பு எல்லாம் கெட்டு,

கொடிதான வினைமூடியே திரிந்து ... கொடுமையான தீவினை
மூடித்திரிந்து,

புவிமீதிலே யுழன்று ... இவ்வுலகில் பல இடத்திலும் அலைந்து,

விரகான்மெயே தளர்ந்து விடுநாளில் ... அப்பெண்களின் தந்திரச்
செயல்கள் காரணமாக உடல் தளர்ந்து போய்விடுகின்ற அந்த நாளில்,

விசையான தோகை துங்க மயிலேறி யோடி வந்து ... வேகம்
வாய்ந்த தோகையுடன் கூடிய பெருமைமிக்க மயிலில் ஏறி,
விரைவில் வந்து,

வெளிஞான வீடு தந்து அருள்வாயே ... பரவெளியாம் ஞான
முக்தியினை நீ தந்தருள்வாயாக.

தினைவேடர் காவல் தங்கு மலைகாடெலாம் உழன்று ...
தினைப்புனத்தில் வேடர்களின் காவல் உள்ள மலைப் புறம், காட்டுப் புறம்
எல்லாம் திரிந்து,

சிறுபேதை கால்பணிந்த குமரேசா ... சிறு பேதைப் பெண்ணாகிய
வள்ளியின் அடிகளில் பணிந்த குமரேசனே,

திரையாழி சேது கண்டு பொரு ராவணேசை வென்ற ...
அலைகள் வீசும் சமுத்திரத்தில் அணைகட்டி, போருக்கு வந்த
ராவணேசனை வெற்றிகொண்ட

திருமால்மு ராரி தங்கை யருள்பாலா ... (ராமனாம்) திருமாலின்,
முரன் என்ற அசுரனைக் கொன்ற முராரியின், தங்கை பார்வதி அருளிய
பாலனே,

முனிவோர்கள் தேவர் உம்பர் சிறையாகவே வளைந்த ... முநிவர்கள்,
தேவர்கள், விண்ணுலகத்தார் அனைவரையும் வளைத்துச் சிறைசெய்த

முதுசூரர் தானை தங்கள் கிளையோடு ... கொடிய சூரர்களின்
சேனைகளை, அவர்களின் சுற்றமுடன்

முடிகோடி தூளெழுந்து கழுகோடு பாறருந்த ... அவர்களின்
தலைகள் சிதறி கோடிக்கணக்கான தூள்களாகப் பறக்க, அவற்றை
கழுகுகளும் பருந்துகளும் உண்ண,

முனைவேலினால் எறிந்த பெருமாளே. ... வேலின் முனையினால்
அழித்த பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.632  pg 3.633  pg 3.634  pg 3.635 
 WIKI_urai Song number: 1270 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 1271 - mana nURu kOdi (common)

mananURu kOdi thunpa nodimeethi lEni nainthu
     mathanUda lEmu yangi ...... yatheerupa

madamAtha rAsai koNdu puvimeethi lEma yangi
     mathiseere lAma zhinthu ...... kodithAna

vinaimUdi yEthi rinthu puvimeethi lEyu zhanRu
     virakAnme yEtha Larnthu ...... vidunALil

visaiyAna thOkai thunga mayilERi yOdi vanthu
     veLinjAna veedu thanthu ...... aruLvAyE

thinaivEdar kAval thangu malaikAde lAmu zhanRu
     siRupEthai kAlpa Nintha ...... kumarEsA

thiraiyAzhi sEthu kaNdu porurAva NEsai venRa
     thirumAlmu rAri thangai ...... yaruLbAlA

munivOrkaL thEva rumpar siRaiyAka vEva Laintha
     muthu cUrar thAnai thangaL ...... kiLaiyOdu

mudikOdi thULe zhunthu kazhukOdu pARa runtha
     munaivEli nAle Rintha ...... perumALE.

......... Meaning .........

mananURu kOdi thunpa nodimeethi lEni nainthu: My mind ponders over millions of miseries in a fraction of a second.

mathanUda lEmu yangi: Taunted by the God of Love, my mind indulges in lustful thoughts,

yatheerupa madamAtha rAsai koNdu: hankering after exquisitely beautiful and young girls.

puvimeethi lEma yangi: I move about on this earth in total daze,

mathiseere lAma zhinthu: having lost my sense and prestige.

kodithAna vinaimUdiyE thirinthu puvimeethi lEyu zhanRu: Being fenced in by the worst karma (bad deed), I roam around in this world aimlessly.

virakAnme yEtha Larnthu vidunALil: On the final day when my body is rendered extremely weak due to the tricks played on me (by those women),

visaiyAna thOkai thunga mayilERi yOdi vanthu: will You kindly rush to my aid, mounting Your Peacock that has the speediest wings,

veLinjAna veedu thanthu aruLvAyE: and grant me blissful liberation; the Supreme Cosmos of Wisdom?

thinaivEdar kAval thangu malaikAde lAmuzhanRu: You roved about in the hills and forests to reach the millet-field guarded by the hunters

siRupEthai kAlpa Nintha kumarEsA: and finally surrendered at the feet of the innocent petite damsel, VaLLi, Oh Kumaresa!

thiraiyAzhi sEthu kaNdu porurAva NEsai venRa: He built a bridge across the wavy seas and conquered the embattling King, Ravana;

thirumAlmu rAri thangai yaruLbAlA: He is Rama (Vishnu), who killed the demon Muran to earn the name MurAri; His younger sister, PArvathi, delivered You as Her child!

munivOrkaL thEva rumpar siRaiyAka vEva Laintha: The sages, the DEvAs and all those in the celestial land were encircled and imprisoned by

muthu cUrar thAnai thangaL kiLaiyOdu: the powerful demons; their armies, with their entire families, were killed;

mudikOdi thULe zhunthu kazhukOdu pARa runtha: their heads were shattered all over into millions of pieces to be devoured by eagles and vultures;

munaivEli nAle Rintha perumALE.: such was the prowess of Your sharp spear, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1271 mana nURu kOdi - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]