திருப்புகழ் 1196 மோது மறலி  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1196 mOdhumaRali  (common)
Thiruppugazh - 1196 mOdhumaRali - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தனதனன தான தாத்தன
     தான தனதனன தான தாத்தன
          தான தனதனன தான தாத்தன ...... தனதான

......... பாடல் .........

மோது மறலியொரு கோடி வேற்படை
     கூடி முடுகியெம தாவி பாழ்த்திட
          மோக முடையவெகு மாதர் கூட்டமு ...... மயலாரும்

மூளு மளவில்விசை மேல்வி ழாப்பரி
     தாப முடனும்விழி நீர்கொ ளாக்கொடு
          மோக வினையில்நெடு நாளின் மூத்தவ ...... ரிளையோர்கள்

ஏது கருமமிவர் சாவெ னாச்சிலர்
     கூடி நடவுமிடு காடெ னாக்கடி
          தேழு நரகினிடை வீழ்மெ னாப்பொறி ...... யறுபாவி

ஏழு புவனமிகு வான நாட்டவர்
     சூழு முநிவர்கிளை தாமு மேத்திட
          ஈச னருள்குமர வேத மார்த்தெழ ...... வருவாயே

சூது பொருதரும னாடு தோற்றிரு
     வாறு வருஷம்வன வாச மேற்றியல்
          தோகை யுடனுமெவி ராட ராச்சிய ...... முறைநாளிற்

சூறை நிரைகொடவ ரேக மீட்டெதி
     ராளு முரிமைதரு மாறு கேட்டொரு
          தூது செலஅடுவ லாண்மை தாக்குவ ...... னெனமீள

வாது சமர்திருத ரான ராட்டிர
     ராஜ குமரர்துரி யோத னாற்பிறர்
          நிருபரொடு சேனை தூட்பட ...... வரிசாப

வாகை விஜயனடல் வாசி பூட்டிய
     தேரை முடுகுநெடு மால்ப ராக்ரம
          மாயன் மருகஅமர் நாடர் பார்த்திப ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மோது மறலி ஒரு கோடி வேல் படை ... தாக்குகின்ற யமன் தனது
ஒப்பற்ற கூரிய வேற்படையுடன்

கூடி முடுகி எமது ஆவி பாழ்த்திட ... வேகமாக வந்து எனது
உயிரை (உடலினின்றும்) பிரிக்க,

மோகம் உடைய வெகு மாதர் கூட்டமும் அயலாரும் ... (என்
மேல்) ஆசை கொண்டிருந்த பல மாதர்களின் கூட்டமும், பிறரும்,

மூளும் அளவில் விசை மேல் விழா ... துக்கம் மூண்டு மிகவும்
வேகமாக மேலே விழுந்து,

பரிதாபமுடனும் விழி நீர் கொளா ... இரக்கத்துடனே கண்களில்
நீர் கொண்டு நிற்க,

கொடு மோக வினையில் நெடு நாளின் மூத்தவர்
இளையோர்கள்
... கொடிய மோக மயக்கத்தில் நீண்ட நாட்கள்
இருந்த மூத்தவர்களும், இளமையானவர்களும்,

ஏது கருமம் இவர் சாவு எனா ... இவர் இறந்ததற்கு என்ன காரணம்
என்று விசாரிக்கவும்,

சிலர் கூடி நடவும் இடு காடு எனா ... பிணத்துக்குப் பின் சிலர்
கூடி சுடு காட்டுக்கு நடவுங்கள் என்று மற்றவர் கூறவும்,

கடிது ஏழு நரகின் இடை வீழ்ம் எனா ... (இவனை) விரைவாக
ஏழு நரகினிடையே வீழ்த்துங்கள் என்று சிலர் கூறவும்,

பொறியறு பாவி (எனா) ... இவன் புலன்களை நல்ல வழியில்
செலுத்தாத பாவி எனச் சிலர் கூறவும் (இடம் கொடுக்காமல்),

ஏழு புவனம் மிகு வான நாட்டவர் ... ஏழு உலகங்களில்
உள்ளவர்களும், சிறந்த தேவ நாட்டவரும்,

சூழும் முநிவர் கிளை தாமும் ஏத்திட ... சூழ்ந்துள்ள முனிவர்
கூட்டங்களும் போற்றி நிற்க,

ஈசன் அருள் குமர வேதம் ஆர்த்து எழ வருவாயே ...
சிவபெருமான் அருளிய குமரனே, வேதம் ஒலித்து எழ, நீ
எழுந்தருள்வயாக.

சூது பொரு தருமன் நாடு தோற்று ... சூதுப்போர் செய்த
தருமபுத்திரன் தன் நாட்டைச் சூதில் இழந்து,

இரு ஆறு வருஷம் வனவாசம் ஏற்று ... பன்னிரண்டு
ஆண்டுகள் காட்டில் வாழும் வாழ்க்கையை பாண்டவர்கள் ஏற்றுக்
கொண்டு வசித்தபின்,

இயல் தோகை உடனுமெ விராடராச்சியம் உறை நாளில் ...
கற்பியல் உடைய மயில் போன்ற மனைவி திரெளபதியுடன் விராட
நாட்டில் (ஓர் ஆண்டு அஞ்ஞாத வாசம் செய்து) காலம் கழித்து
வந்த நாளில்,

சூறை நிரை கொடு அவர் ஏக மீட்டு எதிர் ... பசுக்களைக்
கொள்ளை அடித்துக் கொண்டு விராட நாட்டிலிருந்து
துரியோதனாதியர் செல்ல, அப்பசுக்களை எதிர்ச் சென்று மீட்டுவந்து,

ஆளும் உரிமை தருமாறு கேட்டு ... அரசாட்சி உரிமையைத்
தரும்படி கேட்பதற்காக,

ஒருதூது செல அடு வல் ஆண்மை தாக்குவன் என மீள ...
ஒப்பற்ற தூதனாகக் கண்ணணை அனுப்ப, போருக்கு உரிய வலிய
ஆண்மையோடு தாக்குவேன் (ஆனால் அரசுரிமையைத் தரமாட்டேன்)
என்று துரியோதனன் கூற, தூதினின்றும் வெற்றியின்றி கண்ணன்
மீண்டும் வரவும்,

வாது சமர் திருதரானராட்டிர ராஜ குமரர் துரியோதனால்
பிறர் மாள
... வலிய வாது பேசிப் போருக்கு வந்த திருதராஷ்டிர
ராஜனுடைய குமாரர்களும், துரியோதனன் காரணமாகப் போரிட்ட
மற்றவர்களும் இறக்க,

நிருபரொடு சேனை தூட்பட ... பிற அரசர்களோடும்
சேனைகள் எல்லாம் தூள்பட்டு அழிய,

வரி சாப வாகை விஜயன் அடல் வாசி பூட்டிய தேரை ... வரிகள்
பொருந்திய காண்டீபம் என்ற வில்லினால் வெற்றியைக் கொண்ட
அர்ச்சுனனுடைய வலிய குதிரைகள் பூட்டிய ரதத்தை

முடுகு நெடு மால் பராக்ரம மாயன் மருக ... வேகமாகச் செலுத்திய
பெரிய திருமால், வல்லமை பொருந்திய மாயோனின் மருகனே,

அமர் நாடர் பார்த்திப பெருமாளே. ... விண்ணுலகத்தோருக்குச்
சக்ரவர்த்தியாகிய பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.488  pg 3.489  pg 3.490  pg 3.491 
 WIKI_urai Song number: 1195 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1196 - mOdhu maRali (common)

mOdhu maRali oru kOdi vERpadai
     kUdi mudugi emadhAvi pAzhth thida
          mOham udaiya vegu mAdhar kUttamum ...... ayalArum

mULum aLavil visai mEl vizhAp pari
     dhApa mudanum vizhi neer koLAk kodu
          mOha vinaiyil nedu nALin mUththavar ...... iLaiyOrgaL

Edhu karumam ivar sA enAch silar
     kUdi nadavum idugAdenAk kadidh
          Ezhu narakinidai veezh menAp poRi ...... aRupAvi

Ezhu buvanamigu vAna nAttavar
     sUzhu munivarkiLai thAmum Eththida
          eesan aruL kumara vEdha mArththezha ...... varuvAyE

sUdhu poru dharuma nAdu thOtriru
     ARu varusham vana vAsam Ettriyal
          thOgai udanume virAta rAjjiyam ...... uRainALiR

sURai niraikod avarEga meet edhi
     rALum urimai tharumARu kEttoru
          dhUthu sela aduval ANmai thAkkuvan ...... enameeLa

vAdhu samar dhirudharAna rAttira
     rAja kumarar dhuriyOdhanAR piRar
          mALa niruparodu sEnai thUL pada ...... varichApa

vAgai vijayan adal vAsi pUttiya
     thErai mudugu nedumAl parAkrama
          mAyan maruga amar nAdar pArthiba ...... perumALE.

......... Meaning .........

mOdhu maRali oru kOdi vERpadai kUdi mudugi emadhAvi pAzhth thida: The aggressive God of Death (Yaman) came rushing in, armed with his unique and sharp spear, to snatch my life,

mOham udaiya vegu mAdhar kUttamum ayalArum: the entire women folk who loved me, coming along with my neighbours,

mULum aLavil visai mEl vizhA: and overcome by grief, swiftly falling on my body;

paridhApa mudanum vizhi neer koLAk kodu: standing there saddened, with tears welling up in their eyes.

mOha vinaiyil nedu nALin mUththavar iLaiyOrgaL Edhu karumam ivar sA enA: Due to delusory attachment, some elders and also a few youngsters enquiring as to what had caused my death;

silar kUdi nadavum idugAdenA: some suggesting to others to walk up to the cremation ground;

kadidh Ezhu narakinidai veezh menAp poRi aRupAvi: some saying that he must be rushed to the seven hells as he was a big sinner who abused his sensory organs immorally;

Ezhu buvanamigu vAna nAttavar sUzhu munivarkiLai thAmum Eththida: (lest I am subjected to these kinds of treatment), with glorious tributes from all those living in the seven worlds and the celestial land and the host of sages and saints,

eesan aruL kumara vEdha mArththezha varuvAyE: You must come to me, Oh Son of Lord SivA, with the loud chanting of the VEdAs in the background!

sUdhu poru dharuma nAdu thOtriru ARu varusham vana vAsam Ettru: After Dharman lost his country in a gambling war, the PANdavAs accepted banishment for twelve years in the forest;

iyal thOgai udanume virAta rAjjiyam uRainALil: with their chaste spouse, Draupathi, they lived in VirAta kingdom (in disguise for a year); at that time,

sURai niraikod avarEga meetu: DuryOdhanan and his clan abducted herds of cows from VirAta kingdom; the PANdaVAs intercepted the abductors and successfully redeemed the cows;

edhirALum urimai tharumARu kEttu: in order to claim their right to the kingdom,

oru dhUthu sela aduval ANmai thAkkuvan enameeLa: they sent a unique messenger, Krishna; however, DuryOdhanan said that he would rather confront them with all his might in the battlefield (than cede the kingdom); and Krishna returned without success.

vAdhu samar dhirudharAna rAttira rAja kumarar dhuriyOdhanAR piRar mALa: The sons of DhirudharAshtiran who came to the war after animated discussions and the others who joined the war for the sake of DhuryOdhanan - all of them died;

niruparodu sEnai thUL pada: the other kings and all their armies were destroyed;

varichApa vAgai vijayan adal vAsi pUttiya thErai mudugu: He swiftly drove the strong horses tied to the chariot of Arjunan who held the triumphant bow, GANdeepam, with elegant stripes on it;

nedumAl parAkrama mAyan maruga: He is Lord VishNu, the gallant and mystic one; You are His nephew!

amar nAdar pArthiba perumALE.: You are the emperor of the land of the celestials, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1196 mOdhu maRali - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]