திருப்புகழ் 1189 மாறுபொரு காலன்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1189 mARuporukAlan  (common)
Thiruppugazh - 1189 mARuporukAlan - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானதன தான தத்த தானதன தான தத்த
     தானதன தான தத்த ...... தனதான

......... பாடல் .........

மாறுபொரு கால னொக்கும் வானிலெழு மாம திக்கும்
     வாரிதுயி லாவ தற்கும் ...... வசையேசொல்

மாயமட வார்த மக்கும் ஆயர்குழ லூதி சைக்கும்
     வாயுமிள வாடை யிற்கு ...... மதனாலே

வேறுபடு பாய லுக்கு மேயெனது பேதை யெய்த்து
     வேறுபடு மேனி சற்று ...... மழியாதே

வேடர்குல மாதி னுக்கு வேடைகெட வேந டித்து
     மேவுமிரு பாத முற்று ...... வரவேணும்

ஆறுமிடை வாள ரக்கர் நீறுபட வேலெ டுத்த
     ஆறுமுக னேகு றத்தி ...... மணவாளா

ஆழியுல கேழ டக்கி வாசுகியை வாய டக்கி
     ஆலுமயி லேறி நிற்கு ...... மிளையோனே

சீறுபட மேரு வெற்பை நீறுபட வேசி னத்த
     சேவலவ நீப மொய்த்த ...... திரள்தோளா

சேருமட லால்மி குத்த சூரர்கொடு போய டைத்த
     தேவர்சிறை மீள விட்ட ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மாறு பொரு காலன் ஒக்கும் வானில் எழு மா மதிக்கும் ...
பகைமையுடன் சண்டை செய்யும் யமனை நிகர்த்து ஆகாயத்தில்
எழுகின்ற அழகிய சந்திரனுக்கும்,

வாரி துயிலா அதற்கும் வசையே சொல் மாய மடவார் தமக்கும்
ஆயர் குழல் ஊது இசைக்கும்
... கடல் தூக்கம் கொள்ளாது (அலை
ஒலித்துக் கொண்டே) இருக்கும் அந்த நிலைக்கும், வசை மொழிகளையே
பேசிக் கொண்டிருக்கும் வஞ்சனை கொண்டுள்ள மாதர்களுக்கும்,
இடையர் குழல் ஊதும் இசைக்கும்,

வாயும் இள வாடையிற்கும் அதனாலே வேறுபடு
பாயலுக்குமே
... வாய்ந்துள்ள இளம் வாடைக் காற்றுக்கும், அதனாலே
படுக்கை வேறுபடுவதற்கும் (தனித்திருப்பதற்கும்),

எனது பேதை எய்த்து வேறு படு மேனி சற்றும் அழியாதே ...
(இவைகள் காரணமாக) எனது பேதைப் பெண் இளைத்து நிறம் மாறி
போன உடல் கொஞ்சமும் கெடாதவாறு,

வேடர் குல மாதினுக்கும் வேடை கெடவே நடித்து மேவும்
இரு பாதம் உற்று வரவேணும்
... வேடப் பெண்ணாகிய வள்ளியின்
பொருட்டு காம நோய் தீரும்படி திருவிளையாடல்களைச் செய்து
விளங்கும் உன் இரண்டு திருவடிகளுடன் பொருந்தி (இப்பேதையிடமும்)
நீ வர வேண்டும்.

ஆறும் மிடை வாள் அரக்கர் நீறு பட வேல் எடுத்த ஆறு
முகனே குறத்தி மணவாளா
... ஆறு வகைக் கெட்ட குணங்கள்*
நிறைந்தவர்களும், வாட்படை ஏந்தியவர்களும் ஆகிய அசுரர்கள்
பொடிபட்டு அழிய வேலாயுதத்தைச் செலுத்திய ஆறுமுகப்பிரானே,
குறப் பெண் வள்ளியின் கணவனே.

ஆழி உலகு ஏழு அடக்கி வாசுகியை வாய் அடக்கி ஆலும்
மயில் ஏறி நிற்கும் இளையோனே
... கடலால் சூழப்பட்ட ஏழு
உலகங்களையும் அடக்கி, வாசுகிப் பாம்பின் வாயை அடக்கிக்
கூச்சலிடும் மயில் மீது ஏறி விளங்கும் இளையோனே,

சீறு பட மேரு வெற்பை நீறு படவே சினத்த சேவலவ நீபம்
மொய்த்த திரள் தோளா
... மிக்க சினத்துடன் மேருமலையை
பொடியாகும்படி கோபித்த சேவற் கொடியோனே, கடப்பமாலையை
நெருக்கமாய் அணிந்த திரண்ட தோளனே,

சேரும் அடலால் மிகுத்த சூரர் கொடு போய் அடைத்த தேவர்
சிறை மீள விட்ட பெருமாளே.
... கூடியுள்ள வலிமையால் வெற்றி
மிக்குள்ள சூரர்கள் கொண்டு போய் அடைத்த தேவர்களின் சிறையை
நீக்கிய பெருமாளே.


* ஆறு கெட்ட குணங்கள்:

காமம், குரோதம், மோகம், லோபம், மதம், மாற்சர்யம்.


இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் நாயகியின் நற்றாய்
கூறுவதுபோல அமைந்தது. சந்திரன், கடல் ஓசை, வசை பேசும் மாதர், குழல்
ஓசை, வாடைக் காற்று, தனிப் படுக்கை முதலியவை தலைவனின் பிரிவை
மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.470  pg 3.471  pg 3.472  pg 3.473 
 WIKI_urai Song number: 1188 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1189 - mARu poru kAlan (common)

mARuporu kAla nokkum vAnilezhu mAma thikkum
     vArithuyi lAva thaRkum ...... vasaiyEsol

mAyamada vArtha makkum Ayarkuzha lUthi saikkum
     vAyumiLa vAdai yiRku ...... mathanAlE

vERupadu pAya lukku mEyenathu pEthai yeyththu
     vERupadu mEni satRu ...... mazhiyAthE

vEdarkula mAthi nukku vEdaikeda vEna diththu
     mEvumiru pAtha mutRu ...... varavENum

ARumidai vALa rakkar neeRupada vEle duththa
     ARumuka nEku Raththi ...... maNavALA

Azhiyula kEzha dakki vAsukiyai vAya dakki
     Alumayi lERi niRku ...... miLaiyOnE

seeRupada mEru veRpai neeRupada vEsi naththa
     sEvalava neepa moyththa ...... thiraLthOLA

sErumada lAlmi kuththa cUrarkodu pOya daiththa
     thEvarsiRai meeLa vitta ...... perumALE.

......... Meaning .........

mARu poru kAlan okkum vAnil ezhu mA mathikkum: Because of the beautiful moon that rises in the sky like the God of Death (Yaman) who fights with hostility,

vAri thuyilA athaRkum vasaiyE sol mAya madavAr thamakkum Ayar kuzhal Uthu isaikkum: because of the constant roaring of the wavy sea without a wink of sleep, because of the gossip-mongering treacherous womenfolk, because of the sound of flute played by the shepherds,

vAyum iLa vAdaiyiRkum athanAlE vERupadu pAyalukkumE: because of the prevailing cold northerly breeze and the consequent separation of the lonely bed (on which she sleeps alone),

enathu pEthai eyththu vERu padu mEni satRum azhiyAthE: my little daughter has been rendered weak, with her complexion deteriorating; lest her body suffer any further,

vEdar kula mAthinukkum vEdai kedavE nadiththu mEvum iru pAtham utRu varavENum: You must appear before her on the very same hallowed feet of Yours that distinguished themselves in pursuit of VaLLi, the damsel of the hunters, to quench whose agony of passion You played many a sport!

ARum midai vAL arakkar neeRu pada vEl eduththa ARu mukanE kuRaththi maNavALA: Those demons, filled up with the six major vices* and armed with swords, were all shattered to pieces when You wielded Your spear, Oh Lord with Six Faces! You are the Consort of VaLLi, the damsel of the KuRavAs!

Azhi ulaku Ezhu adakki vAsukiyai vAy adakki Alum mayil ERi niRkum iLaiyOnE: Your peacock, capable of controlling the seven worlds surrounded by the seas, screamed after successfully binding the mouth of the Serpent VAsuki; You mounted the peacock elegantly, Oh Young One!

seeRu pada mEru veRpai neeRu padavE sinaththa sEvalava neepam moyththa thiraL thOLA: You were so enraged with the mount MEru that You reduced it to ashes, Oh Lord with the staff of Rooster! Your broad shoulders are adorned with closely-knit garlands of kadappa, Oh Lord!

sErum adalAl mikuththa cUrar kodu pOy adaiththa thEvar siRai meeLa vitta perumALE.: Because of the excessive strength of their power, the triumphant demons had imprisoned the celestials, and You freed the DEvAs, Oh Great One!


* The six vices are:

desire, anger, lust, miserliness, intoxication, jealosy.


This song is based on the Nayaka-Nayaki Bhavam, where the poet, assuming the heroine's mother's role, expresses the pang of separation from the hero, Murugan.
The moon, the noisy sea, the scandal-mongering women, the sound of flute, the northerly breeze and the lonely bed are a few of the things that aggravate the agony of separation.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1189 mARuporu kAlan - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]