திருப்புகழ் 1175 பாணிக்கு உட்படாது  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1175 pANikkuutpadAdhu  (common)
Thiruppugazh - 1175 pANikkuutpadAdhu - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானத்தத் தனான தானன தானத்தத் தனான தானன
     தானத்தத் தனான தானன ...... தந்ததான

......... பாடல் .........

பாணிக்குட் படாது சாதகர் காணச்சற் றொணாது வாதிகள்
     பாஷிக்கத் தகாது பாதக ...... பஞ்சபூத

பாசத்திற்படாது வேறொரு பாயத்திற் புகாது பாவனை
     பாவிக்கப் பெறாது வாதனை ...... நெஞ்சமான

ஏணிக்கெட் டொணாது மீதுயர் சேணுக்குச் சமான நூல்வழி
     யேறிபபற் றொணாது நாடினர் ...... தங்களாலும்

ஏதுச்செப் பொணாத தோர்பொருள் சேரத்துக் கமாம கோததி
     யேறச்செச் சைநாறு தாளைவ ...... ணங்குவேனோ

ஆணிப்பொற் ப்ரதாப மேருவை வேலிட்டுக் கடாவி வாசவன்
     ஆபத்தைக் கெடாநி சாசரர் ...... தம்ப்ரகாசம்

ஆழிச்சத் ரசாயை நீழலி லாதித்தப் ப்ரகாச நேர்தர
     ஆழிச்சக் ரவாள மாள்தரும் ...... எம்பிரானே

மாணிக்க ப்ரவாள நீலம தாணிப்பொற் கிராதைநூபுர
     வாசப்பத் மபாத சேகர ...... சம்புவேதா

வாசிக்கப் படாத வாசகம் ஈசர்க்குச் சுவாமி யாய்முதல்
     வாசிப்பித் ததேசி காசுரர் ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

பாணிக்கு உட்படாது சாதகர் காணச் சற்று ஒணாது ...
கரங்களால் தொட்டுப் பிடிக்க முடியாதது, யோக வழியில் சாதகம்
செய்பவர்களால் சிறிதும் காண முடியாதது,

வாதிகள் பாஷிக்கத் தகாது ... தர்க்க வாதிகளால் பேசி முடிவு
காணமுடியாதது,

பாதக பஞ்ச பூதப் பாசத்தில் படாது ... பாவங்களுக்கு இடம் தரும்
ஐந்து பூதங்களால் நிகழும் பாசங்களிலும் தளைகளிலும் அகப்படாதது,

வேறு ஒரு உபாயத்தில் புகாது ... வேறு எந்தவிதமான உபாயத்திலும்
மாட்டிக் கொள்ளாதது,

பாவனை பாவிக்கப் பெறாது ... எவ்வித தியான வகையாலும்
தியானிக்கமுடியாதது,

வாதனை நெஞ்சமான ஏணிக்கு எட்டொணாது ...
வருத்தங்களுக்கு இடமான மனம் என்கின்ற ஏணி கொண்டு
எட்டமுடியாதது,

மீது உயர் சேணுக்குச் சமான நூல்வழி ஏறிப் பற்ற ஒணாது ...
மேலே உயரத்தில் இருக்கும் ஆகாயத்துக்கு ஒப்பான கருத்துள்ள கலை
நூல்களின் வழியே ஆய்ந்து ஏறிக்கொண்டு பிடிக்கமுடியாதது,

நாடினர் தங்களாலும் ஏதுச் செப்ப ஒணாதது ... தேடி
முயல்பவர்களாலும் அதன் காரண மூலம் இன்னதென்று
சொல்லமுடியாதது,

ஓர் பொருள் சேரத் துக்கமாம் மகா உததி ... இத்தகைய ஒப்பற்ற
பரம்பொருளை நான் அடைய, துக்கம் என்னும் பெரிய கடலினின்றும்

ஏறச் செச்சை நாறு தாளை வணங்குவேனோ ... நான் கரை
ஏறுவதற்காக, வெட்சி மலரின் நறு மணம் கமழும் உனது திருவடிகளை
வணங்க மாட்டேனோ?

ஆணிப் பொன் ப்ரதாப மேருவை வேல் இட்டுக் கடாவி ...
பத்தரை மாற்றுப் பொன் மயமானதும், புகழ் பெற்றதுமான மேரு மலையை
வேலாயுதத்தை எடுத்துச் செலுத்தியும்,*

வாசவன் ஆபத்தைக் கெடா ... இந்திரனுடைய ஆபத்தைக்
கெடுமாறு செய்தும்,

நிசாசரர் தம் ப்ரகாசம் ஆழிச் சத்ர சாயை நீழலில் ...
அசுரர்களுடைய ஒளிமயமான சக்கரங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றின்
சாயையின் நிழல் நீங்க

ஆதித்த ப்ரகாச நேர் தர ... சூரியனுடைய ஒளிக்கு நிகராக விளங்கும்,

ஆழிச் சக்ரவாளம் ஆள் தரும் எம்பிரானே ... வட்டமான சக்ரவாள
கிரிவரையில் உள்ள உலகை ஆண்டருளும் எம்பெருமானே,

மாணிக்க ப்ரவாள நீலம் மதாணி ... மாணிக்கமணி, பவளம்,
நீலமணி (இவைகள் பதிக்கப் பெற்ற) பதக்கத்தை அணிந்த

பொன் கிராதை நூபுரவாசப் பத்ம பாத சேகர ... அழகிய வேடப்
பெண் வள்ளியின் சிலம்பு அணிந்த தாமரைபோன்ற திருவடியின்
நறுமணத்தைச் சூடியுள்ளவனே (அதாவது முருகனின் சிரம்
வள்ளியின் பாதங்களில் விழுந்ததின் காரணமாக),

சம்பு வேதா வாசிக்கப் படாத வாசகம் ... பிரம்ம தேவர் படித்துக்
கூறமுடியாத தனிமந்திரத்தின் உட்பொருளை,

ஈசர்க்குச் சுவாமியாய் முதல் வாசிப்பித்த தேசிகா சுரர்
தம்பிரானே.
... சிவ பெருமானுக்கு நல்லாசிரியனாக இருந்து முன்பு
உபதேசித்த குரு நாதனே, தேவர்கள் போற்றும் தனிப்பெரும் தலைவனே.


* முருகன் பாண்டியன் உக்கிரவழுதியாக மதுரையில் அவதரித்தபோது கொடிய
பஞ்சம் ஏற்பட்டது. அப்போது மேருவிடம் பொற்குவியலைக் கேட்க,
அது தராமையால் சினந்து செண்டால் மேருவின்மீது எறிந்து பொன் பெற்றார்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.430  pg 3.431  pg 3.432  pg 3.433 
 WIKI_urai Song number: 1174 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1175 - pANikku utpadAdhu (common)

pANik utpadAdhu sAdhakar kANa satroNAdhu vAdhigaL
     bAshikkath thagAdhu pAthaka ...... panchabUtha

pAsaththil padAdhu vERor ubAyaththil pugAdhu bAvanai
     bAvikkap peRAdhu vAdhanai ...... nenjamAna

ENik kettoNAdhu meedhuyar sENukku samAna nUl vazhi
     yERip patroNAdhu nAdinar ...... thangaLAlum

Edhuc ceppoNAdha dhOrporuL sEra dhukkamA mahOdhadhi
     yERa chechchai nARu thALai va ...... NanguvEnO

ANip poRprathApa mEruvai vElittuk kadAvi vAsavan
     Abaththaik kedA nisAcharar ...... thamprakAsam

Azhi chathra sAyai neezhalil Adhiththa prakAsa nErthara
     Azhich chakravALa mALtharum ...... embirAnE

mANikka pravALa neela madhANip pOR kirAdhai nUpura
     vAsa padhma pAdha sEkara ...... sambuvEdhA

vAsikkap padAdha vAsakam eesarkku suvAmiyAy mudhal
     vAsippiththa dhEsikA surar ...... thambirAnE.

......... Meaning .........

pANik utpadAdhu sAdhakar kANa satroNAdhu: It cannot be touched and held in hands; It cannot be seen even a little by those practitioners of yOgAs;

vAdhigaL bAshikkath thagAdhu: It cannot be determined by squabblers debating in vain;

pAthaka panchabUtha pAsaththil padAdhu: It cannot be trapped by the delusory bonds of attachment, caused by the five elements which are treacherous;

vERor ubAyaththil pugAdhu: It cannot be snared by any other method;

bAvanai bAvikkap peRAdhu: It cannot be contemplated upon by any type of meditation;

vAdhanai nenjamAna ENik kettoNAdhu: It cannot be reached by climbing the ladder of the mind, a receptacle of all worries;

meedhuyar sENukku samAna nUl vazhi yERip patroNAdhu: It cannot be attained through the research of rich texts containing lofty ideas that are high as the sky;

nAdinar thangaLAlum Edhuc ceppoNAdhadhu: Its root cause cannot be interpreted in any way by Its seekers;

OrporuL sEra dhukkamA mahOdhadhi yERa: It is such a unique and Supreme matter. To enable me to attain It, and to get out of the big sea of misery and reach the shore,

chechchai nARu thALai vaNanguvEnO: will I be able to worship Your hallowed feet, fragrant with vetchi flowers adorning them?

ANip poRprathApa mEruvai vElittuk kadAvi: The famous Mount Meru was made of absolutely pure and solid gold; You wielded Your spear on that mountain*;

vAsavan Abaththaik kedA: You destroyed the danger that had befallen IndrA;

nisAcharar thamprakAsam Azhi chathra sAyai neezhalil: dispelling even the shadow of the dazzling discs and other weapons of the demons,

Adhiththa prakAsa nErthara Azhich chakravALa mALtharum embirAnE: my Lord, You ruled the universe bounded by Mount ChakravALam that is bright as the sun!

mANikka pravALa neela madhANi: She wears a pendant embedded with rubies, corals and blue sapphires;

pOR kirAdhai nUpura vAsa padhma pAdha sEkara: that beautiful lass belonging to the hunter tribe is VaLLi; and the fragrance of Her ankle-bearing lotus feet is distinctly discernible in Your head (meaning Murugan's head fell at VaLLi's feet)!

sambuvEdhA vAsikkap padAdha vAsakam: The inner meaning of the PraNava ManthrA which could not be interpreted by Lord BrahmA

eesarkku suvAmiyAy mudhal vAsippiththa dhEsikA: was once preached to Lord SivA by You as His mentor, Oh Great Master,

surar thambirAnE.: You are the unique Lord of all the celestials!


* When Murugan incarnated as PANdiya King, Ugra Vazhudhi, there was an unprecedented famine in Madhurai. In order to bring gold from Mount Meru, the King went up to the mount and prayed. As the mount was not yielding the gold, the King was enraged and wielded his spear upon it and obtained gold.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1175 pANikku utpadAdhu - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]