திருப்புகழ் 1069 கருவாய் வயிற்றில்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1069 karuvAivayitRil  (common)
Thiruppugazh - 1069 karuvAivayitRil - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனனா தனத்த தனனா தனத்த
     தனனா தனத்த ...... தனதான

......... பாடல் .........

கருவாய் வயிற்றி லுருவா யுதித்து
     முருகாய் மனக்க ...... வலையோடே

கலைநூல் பிதற்றி நடுவே கறுத்த
     தலைபோய் வெளுத்து ...... மரியாதே

இருபோது மற்றை யொருபோது மிட்ட
     கனல்மூழ்கி மிக்க ...... புனல்மூழ்கி

இறவாத சுத்த மறையோர் துதிக்கு
     மியல்போத கத்தை ...... மொழிவாயே

அருமாத பத்தஅமரா பதிக்கு
     வழிமூடி விட்ட ...... தனைமீள

அயிரா வதத்து விழியா யிரத்த
     னுடனே பிடித்து ...... முடியாதே

திருவான கற்ப தருநா டழித்து
     விபுதேசர் சுற்ற ...... மவைகோலித்

திடமோ டரக்கர் கொடுபோ யடைத்த
     சிறைமீள விட்ட ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கருவாய் வயிற்றில் உருவாய் உதித்து முருகாய் மனக்
கவலையோடே
... தாயின் வயிற்றில் கருவாகி, உருவாகப் பிறந்து,
இளமைப் பருவம் அடைந்து, மனக் கவலையுடன்

கலை நூல் பிதற்றி நடுவே கறுத்த தலை போய் வெளுத்து
மரியாதே
... படிக்க வேண்டிய கலை நூல்களை உண்மை அறிவின்றிக்
குழறிப் படித்து, வாழ் நாளின் நடுவில் கறுத்திருந்த தலை மயிர் வெளுத்து,
வீணனாக இறந்து போகாமல்,

இரு போதும் மற்றை ஒரு போதும் இட்ட கனல் மூழ்கி
மிக்க புனல் மூழ்கி
... நாள் தோறும், காலை மாலை ஆகிய இரண்டு
வேளைகளிலும், மற்றுமுள்ள உச்சி வேளையிலும் (சிவ யோக நெறியால்)
வளர்த்த மூலாக்கினியில்* முழுகுவதற்கும், (என்னுள் இருக்கும்) சிறந்த
மதி மண்டலச் சுத்த கங்கையில் (சிவயோக நிஷ்டையில்) முழுகுவதற்கும்,

இறவாத சுத்த மறையோர் துதிக்கும் இயல் போதகத்தை
மொழிவாயே
... சாகா வரம் பெற்ற (அகத்தியர் முதலிய) முனிவர்கள்
போற்றும் தகுதியுள்ள மந்திர உபதேசத்தை எனக்கும் உபதேசித்து
அருள்வாயாக.

அரும் ஆதபத்த அமரா பதிக்கு வழி மூடி விட்டு ... அருமை
வாய்ந்த ஒளியை உடைய தேவர்களின் ஊருக்குச் செல்லும் வழியை
முதலில் மூடிவிட்டு,

அதனை மீள அயிராவதத்து விழி ஆயிரத்தன் உடனே
பிடித்து முடியாதே
... அந்தப் பொன்னுலகை மறுபடியும் தாக்கி,
ஐராவதம் என்ற வெள்ளை யானைக்குத் தலைவனான ஆயிரம்
கண்களை உடைய இந்திரனை உடனே பிடிக்க முயன்று, அங்ஙனம்
பிடிக்க முடியாமல் போன காரணத்தால்,

திருவான கற்ப தரு நாடு அழித்து ... செல்வம் நிறைந்த, கற்பக
விருட்சத்தைக்கொண்ட தேவர் உலகை தீயிட்டுப் பாழ் படுத்தி,

விபு தேசர் சுற்றம் அவை கோலி(த்து) ... தேவ சிரேஷ்டர்களை
அவர்களுடைய சுற்றத்தாருடன் வளைத்து ஒருங்கே பிடித்து,

திடமோடு அரக்கர் கொடு போய் அடைத்த சிறை மீள விட்ட
பெருமாளே.
... வலிமையுடன் அசுரர்கள் கொண்டு போய் அடைத்த
சிறையினின்றும் அந்தத் தேவர்களை மீட்டு விடுவித்து (மீண்டும்
அவர்களது நாட்டில்) குடிபுகச் செய்த பெருமாளே.


* சிவ ஒளி இன்பப் புனலில் முழுகி எனப்படும் திருவண்ணாமலையைக்
குறிக்கும். அருணாசலம் சிவ ஒளி, ஆறு ஆதாரங்களுள் ஒன்று - மணிபூரகம்.


ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆதாரம்

மூலாதாரம்


சுவாதிஷ்டானம்



மணிபூரகம்



அநாகதம்



விசுத்தி



ஆக்ஞா


பிந்து சக்கரம்
(துவாதசாந்தம்,
ஸஹஸ்ராரம்,
பிரமரந்திரம்)
இடம்

குதம்


கொப்பூழ்



மேல்வயிறு



இருதயம்



கண்டம்



புருவத்தின் நடு


கபாலத்தின்
மேலே


பூதம்

மண்


அக்கினி



நீர்



காற்று



ஆகாயம்



மனம்






வடிவம்

4 இதழ் கமலம்
முக்கோணம்

6 இதழ் கமலம்
லிங்கபீடம்
நாற் சதுரம்

10 இதழ் கமலம்
பெட்டிப்பாம்பு
நடு வட்டம்

12 இதழ் கமலம்
முக்கோணம்
கமல வட்டம்

16 இதழ் கமலம்
ஆறு கோணம்
நடு வட்டம்

3 இதழ் கமலம்


1008
இதழ் கமலம்


அக்ஷரம்

ஓம்


ந(கரம்)



ம(கரம்)



சி(கரம்)



வ(கரம்)



ய(கரம்)






தலம்

திருவாரூர்


திருவானைக்கா



திரு(வ)
அண்ணாமலை


சிதம்பரம்



திருக்காளத்தி



காசி
(வாரணாசி)

திருக்கயிலை




கடவுள்

விநாயகர்


பிரமன்



திருமால்



ருத்திரன்



மகேசுரன்



சதாசிவன்


சிவ . சக்தி
ஐக்கியம்



  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.176  pg 3.177  pg 3.178  pg 3.179 
 WIKI_urai Song number: 1072 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1069 - karuvAi vayitRil (common)

karuvAy vayitRi luruvA yuthiththu
     murukAy manakka ...... valaiyOdE

kalainUl pithatRi naduvE kaRuththa
     thalaipOy veLuththu ...... mariyAthE

irupOthu matRai yorupOthu mitta
     kanalmUzhki mikka ...... punalmUzhki

iRavAtha suththa maRaiyOr thuthikkum
     iyalpOtha kaththai ...... mozhivAyE

arumAtha paththa amarA pathikku
     vazhimUdi vitta ...... thanaimeeLa

ayirA vathaththu vizhiyA yiraththan
     udanE pidiththu ...... mudiyAthE

thiruvAna kaRpa tharunA dazhiththu
     viputhEsar sutRa ...... mavaikOlith

thidamO darakkar kodupO yadaiththa
     siRaimeeLa vitta ...... perumALE.

......... Meaning .........

karuvAy vayitRil uruvAy uthiththu murukAy manak kavalaiyOdE: Having been conceived in a mother's womb, taking shape to be born as a child, reaching adulthood, feeling miserable,

kalai nUl pithatRi naduvE kaRuththa thalai pOy veLuththu mariyAthE: studying worthwhile texts of art without proper understanding and in a state of utter confusion, witnessing in mid-life the greying of the erstwhile black hair and ultimately dying as a total waste - I do not want to go away like this;

iru pOthum matRai oru pOthum itta kanal mUzhki mikka punal mUzhki: (instead), everyday, both in the morning and the evening, and at the noon time, I wish to immerse myself in the primordial fire* raised by the method of Siva-yOgA and drown in the holy water of pure Ganga in the lunar zone (within myself)* created through the penance of Siva-yOgA; to be able to do that,

iRavAtha suththa maRaiyOr thuthikkum iyal pOthakaththai mozhivAyE: kindly teach me the worthy lesson that You taught immortal and pure sages (like Agasthya), which ManthrA is cherished by them!

arum Athapaththa amarA pathikku vazhi mUdi vittu: They (the demons) first blocked the entrance to the golden land of the celestials who are uniquely self-luminous;

athanai meeLa ayirAvathaththu vizhi Ayiraththan udanE pidiththu mudiyAthE: then they attacked their land again in order to immediately incarcerate the thousand-eyed IndrA, the leader of the white elephant, AirAvadham; being unable to do so,

thiruvAna kaRpa tharu nAdu azhiththu: they devastated the land of the DEvAs, which has the unique (wish-yielding) KaRpaga tree, by setting fire to it;

vipu thEsar sutRam avai kOli(ththu): they surrounded all the celestials, including the high ranking ones and their kin,

thidamOdu arakkar kodu pOy adaiththa siRai meeLa vitta perumALE.: and forcibly took them to the prison and locked them up; from the shackles fettered by the demons, You liberated the celestials (and redeemed for them their land), Oh Great One!


* The primordial fire and the Siva-yOgA in the lunar zone referred to here relate to ThiruvaNNAmalai, which is one of the centres 'MaNipUragam' in the Kundalini ChakrA.


The names of the chakrA centres, the deities, the elements, the zones of the body where they are located, the shape of the chakrAs, the description of the flowers in the chakrAs, the letters of the ManthrA governing them and the temple-towns representing them are given in the following chart:

ChakrA

mUlAthAram


swAthishtAnam



maNipUragam



anAgatham



visudhdhi



AgnyA


Bindu chakkaram
(DhwAdhasAntham,
SahasrAram,
Brahma-ranthiram)

Body Zone

Genitals


Belly-button



Upper belly



Heart



Throat



Between the
eyebrows

Over
the skull



Element

Earth


Fire



Water



Air



Sky



Mind






Shape

4-petal lotus
Triangle

6-petal lotus
Lingam
Square

10-petal lotus
cobra in box
central circle

12-petal lotus
Triangle
lotus circle

16-petal lotus
Hexagon
central circle

3-petal lotus


1008-petal
lotus


Letter

Om


na



ma



si



va



ya






Temple

ThiruvArUr


ThiruvAnaikkA



Thiru
aNNAmalai


Chidhambaram



ThirukkALaththi



VaranAsi
(kAsi)

Mt. KailAsh



Deity

VinAyagar


BrahmA



Vishnu



RUdhran



MahEswaran



SathAsivan


Siva-Sakthi
Union


தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1069 karuvAi vayitRil - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]