திருப்புகழ் 1005 நெடிய வட  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1005 nediyavada  (common)
Thiruppugazh - 1005 nediyavada - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

......... பாடல் .........

நெடிய வடகுவ டிடியவு மெழுகிரி
     நெறுநெ றெனநெரி யவுமுது பணிபதி
          நிபிட முடிகிழி யவுநில மதிரவும் ...... விளையாடும்

நிகரில் கலபியும் ரவியுமிழ் துவசமும்
     நினது கருணையு முறைதரு பெருமையும்
          நிறமு மிளமையும் வளமையு மிருசர ...... ணமும்நீப

முடியு மபிநவ வனசரர் கொடியிடை
     தளர வளர்வன ம்ருகமத பரிமள
          முகுள புளகித தனகிரி தழுவிய ...... திரடோளும்

மொகுமொ கெனமது கரமுரல் குரவணி
     முருக னறுமுக னெனவரு வனபெயர்
          முழுது மியல்கொடு பழுதற மொழிவது ...... மொருநாளே

கொடிய படுகொலை நிசிசர ருரமொடு
     குமுகு மெனவிசை யுடனிசை பெறமிகு
          குருதி நதிவித சதியொடு குதிகொள ...... விதியோடக்

குமுறு கடல்குடல் கிழிபட வடுமர
     மொளுமொ ளெனஅடி யொடலறி விழவுயர்
          குருகு பெயரிய வரைதொளை படவிடு ...... சுடர்வேலா

இடியு முனைமலி குலிசமு மிலகிடு
     கவள தவளவி கடதட கனகட
          இபமு மிரணிய தரணியு முடையதொர் ...... தனியானைக்

கிறைவ குருபர சரவண வெகுமுக
     ககன புனிதையும் வனிதைய ரறுவரும்
          எனது மகவென வுமைதரு மிமையவர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

நெடிய வட குவடு இடியவும் ... நீண்டதும், வடக்கே உள்ளதுமான
மேரு மலை இடிபட்டுப் பொடிபடவும்,

எழு கிரி நெறு நெறு என நெரியவும் ... (சூரனின் நாட்டைச்
சுற்றியிருந்த) ஏழு மலைகளும் நெறு நெறு என்று நெரிவுறவும்,

முது பணி பதி நிபிட முடி கிழியவும் ... முதுமை வாய்ந்ததும்,
பாம்புகளுக்குத் தலைவனும் ஆகிய ஆதிசேஷனது நெருங்கிய பணா
முடிகள் கிழிபடவும்,

நிலம் அதிரவும் விளையாடும் ... பூமி அதிரவும் விளையாடுகின்ற

நிகர் இல் கலபியும் ரவி உமிழ் துவசமும் ... ஒப்பில்லாத மயிலும்,
சூரியனைத் தனது கூவலினால் (தினமும்) உமிழ்ந்தளிக்கும்* சேவல்
அமைந்த கொடியும்,

நினது கருணையும் உறை தரு பெருமையும் ... உன்னுடைய
கருணையும், உன்னிடம் நிலைத்து விளங்கும் பெருமையும்,

நிறமும் இளமையும் வளமையும் இரு சரணமும் நீப முடியும் ...
உன் செந்நிறமும், இளமையும், வளமையும், இரண்டு திருவடிகளும்,
கடம்பமாலை அணிந்த திருமுடிகளும்,

அபிநவ வனசரர் கொடி இடை ... புதுமை நிறைந்த வேடர்களின்
மகளாம் வள்ளியின் கொடி போன்ற இடையானது

தளர வளர்வன ம்ருகமத பரிமள ... தளர்வுறும்படி வளர்கின்ற,
கஸ்தூரி நறுமணம் கமழ்கின்ற,

முகுள புளகித தன கிரி தழுவிய திரள் தோளும் ... மொட்டுப்
போல் குவிந்து பூரித்துள்ள மலை போன்ற மார்பகங்களைத் தழுவிய
திரண்ட தோள்களும்,

மொகுமொகு என மதுகரம் முரல் குரவு அணி ...
மொகுமொகுவென்று வண்டுகள் ஒலிக்கின்ற குரா மலர் மாலையை
அணியும்

முருகன் அறுமுகன் என வருவன பெயர் முழுதும் ... முருகன்,
ஆறுமுகன் என்று வரும் உன் திருநாமங்கள் யாவையும்,

இயல் கொடு பழுது அற மொழிவதும் ஒரு நாளே ... இயல்
தமிழில் அமைத்து, குற்றமறப் பாடி நான் ஓதும் ஒரு நாள் கிடைக்குமோ?

கொடிய படுகொலை நிசிசரர் உரமொடு ... கொடுமையான
படுகொலைகளைச் செய்யும் அசுரர்களது மார்பில்

குமுகும் என விசையுடன் இசை பெற மிகு குருதி ... குமுகும்
என்னும் ஒலி எழும்படி வேகத்துடன் தாக்க, நிரம்ப இரத்தம்

நதி வித சதியொடு குதி கொள விதி ஓட ... நதி வெள்ளம் போல்
தாளத்தோடு குதித்துப் பாயவும், பிரமன் அஞ்சி ஓடவும்,

குமுறு கடல் குடல் கிழி பட ... கலங்கி ஒலிக்கும் கடலின்
நடுப்பாகங்கள் கிழிபடவும்,

வடு மரம் மொளு மொளு என அடியொடு அலறி விழ ...
பிஞ்சுகளுடன் கூடிய மாமரம் (சூரன்) மொளுமொளுவென்று
அடிப்பாகத்திலிருந்து அலறி விழவும்,

உயர் குருகு பெயரிய வரை தொளை பட விடு சுடர் வேலா ...
உயர்ந்து வளர்ந்த பறவையின் பெயர் கொண்ட கிரெளஞ்ச மலை
தொளைபட்டு அழியவும், ஒளிபடைத்த வேலைச் செலுத்தும் வேலனே.

இடியும் முனை மலி குலிசமும் இலகிடு ... இடியும், கூர்மை மிக்க
வஜ்ராயுதமும் (இவளுக்கு ஆயுதங்களாக) விளங்குபவை,

கவள தவள விகட தட கன கட இபமும் ... கவளமாக ஊண்
உண்பதும், வெண்ணிறமானதும், அழகுள்ளதும், பரந்ததும், மதச்
சுவட்டினின்று மிகுந்த மதநீர் பொழியும் ஐராவதம் என்னும்
வெள்ளை யானையும்,

இரணியதரணியும் உடையதொர் தனி யானைக்கு இறைவ
குருபர சரவண
... பொன்னுலகமும் தனக்குச் சொந்தமாக உள்ள
ஒப்பற்ற பெண்ணாம் தேவயானைக்குத் தலைவனே, குருபரனே,
சரவணனே,

வெகு முக ககன புனிதையும் வனிதையர் அறுவரும் ... பல
முகங்களாய்ப் பரந்து வரும் ஆகாய கங்கையும், கார்த்திகைப்
பெண்கள் அறுவரும்,

எனது மகவு என உமை தரும் இமையவர் பெருமாளே. ...
எங்கள் குழந்தை என்று உரிமை பாராட்டும்படி பார்வதி பெற்றெடுத்த
தேவர்கள் பெருமாளே.


* சேவல் வாய்விட்டுக் கூவுவவதால் சூரியன் உதிப்பது புலவர் கற்பனையில்
சேவல் சூரியனை உமிழ்வதாக உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.44  pg 3.45  pg 3.46  pg 3.47 
 WIKI_urai Song number: 1008 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1005 - nediya vada (common)

nediya vadakuvad idiyavum ezhugiri
     neRu neRena neriyavu mudhu paNipathi
          nipidamudi kizhiyavu nilam adhiravum ...... viLaiyAdum

nigaril kalabiyum raviyumizh dhuvajamum
     ninadhu karuNaiyum uRaitharu perumaiyum
          niRamum iLamaiyum vaLamaiyum iruchara ...... Namumneepa

mudiyum abinava vanacharar kodiyidai
     thaLara vaLar vana mrigamadha parimaLa
          mukuLa puLagitha thanagiri thazhuviya ...... thiraLthOLum

mogu mogena madhukara mural kuravaNi
     murugan aRumugan enavaru vanapeyar
          muzhudhum iyalkodu pazhudhaRa mozhivadhum ...... orunALE

kodiya padukolai nisicharar uramodu
     gumu gumena visaiyudan isai peRa migu
          kurudhi nadhi vidha sadhiyodu kudhikoLa ...... vidhiyOda

kumuRu kadal kudal kizhipada vadumara
     moLu moLena adiyod alaRi vizha uyar
          kurugu peyariya varai thoLai padavidu ...... sudarvElA

idiyu munaimali kulisamum ilagidu
     kavaLa thavaLavi kadathada kanakada
          ibamum iraNiya dharaNiyum udaiyadhOr ...... thaniyAnai

iRaiva gurupara saravaNa vegumuka
     gagana punidhaiyum vanithaiyar aRuvarum
          enadhu magavena umaitharum imaiyavar ...... perumALE.

......... Meaning .........

nediya vadakuvad idiyavum: The long northern range of mountain (Mount MEru) was shattered;

ezhugiri neRu neRena neriyavu: the seven hills (surrounding SUran's country) were smashed to smithreen;

mudhu paNipathi nipidamudi kizhiyavu: the very old leader of the snakes (AdhisEshan) had his closely formed hoods torn to pieces;

nilam adhiravum: and the earth shuddered;

viLaiyAdum nigaril kalabiyum: when Your matchless peacock played around! That peacock,

raviyumizh dhuvajamum: along with Your staff on which is engraved the rooster that crows and spits out the sun* every morning,

ninadhu karuNaiyum uRaitharu perumaiyum: Your compassion, Your eternal greatness,

niRamum iLamaiyum vaLamaiyum iruchara Namumneepa mudiyum: Your red complexion, Your youth, Your strength, Your two hallowed feet, Your hair adorned with kadappa flowers,

abinava vanacharar kodiyidai thaLara vaLar vana mrugamadha parimaLa mukuLa puLagitha thanagiri thazhuviya thiraLthOLum: Your majestic shoulders hugging the mountain-like and fragrant chest of VaLLi, the damsel of the fashionable hunters, and whose tender creeper-like waist which is pressed by the sheer weight of the budding bosoms,

mogu mogena madhukara mural kuravaNi: Your garland made of kurA flowers around which beetles make a humming noise and

murugan aRumugan enavaru vanapeyar muzhudhum: Your names such as Murugan, ARumugan etc.,- all these

iyalkodu pazhudhaRa mozhivadhum orunALE: I want to sing about in chaste, literary and flawless Tamil. Will there be a day when I may be able to do so?

kodiya padukolai nisicharar uramodu: From the chests of the evil demons who commit heinous murders,

gumu gumena visaiyudan isai peRa migu kurudhi: abundant blood began to gush with a gurgling noise

nadhi vidha sadhiyodu kudhikoLa vidhiyOda: as if it was a river flowing with ripples at a regular beat; Lord BrahmA was so scared that He ran away;

kumuRu kadal kudal kizhipada: the rough sea swayed roaring as if its bowels were split open;

vadumara moLu moLena adiyod alaRi vizha: the mango tree (SUran in disguise) with plenty of baby mangoes was felled with a great noise as it was uprooted;

uyar kurugu peyariya varai thoLai pada: and the mountain with the name of the large, tall bird (Krouncham) was pierced and destroyed

vidu sudarvElA: when You wielded the bright spear, Oh Lord!

idiyu munaimali kulisamum ilagidu: The thunder and the sharp Kulicham (IndrA's weapon) are the weapons belonging to Her;

kavaLa thavaLavi kadathada kanakada ibamum: the white, large and beautiful elephant, AirAvadham, which swallows food through the snout and from whose jaws fluid of rage is discharged, along with

iraNiya dharaNiyum udaiyadhOr thaniyAnai: the golden celestial land are Her properties; She is the peerless damsel, DEvayAnai;

iRaiva gurupara saravaNa: You are Her Lord, Oh Great Master! Oh Saravanabhava!

vegumuka gagana punidhaiyum vanithaiyar aRuvarum: The River Ganga gushing with a thousand faces from the skies and the six damsels of KArthigai

enadhu magavena umaitharum imaiyavar perumALE.: equally claim You as their child because You were delivered to them by Goddess PArvathi. You are the Lord of the Celestials, Oh Great One!


* Everyday at dawn, rooster crows while the sun rises.
The poet's imagination extends to suggest that the rooster spits out the sun by crowing.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1005 nediya vada - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]