(இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு எனது முக்கியக் குறிப்பைப் படியுங்கள் - நன்றி).
(Please read my important note before using this website - Thank You).
திருப்புகழ் 991 திருகு செறிந்த  (விசுவை)
Thiruppugazh 991 thiruguseRindha  (visuvai)
Thiruppugazh - 991 thiruguseRindha - visuvaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

 
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தந்த தனதன தந்த
     தனதன தந்த ...... தனதான

......... பாடல் .........

திருகுசெ றிந்த குழலைவ கிர்ந்து
     முடிமலர் கொண்டொ ...... ரழகாகச்

செயவரு துங்க முகமும்வி ளங்க
     முலைகள்கு லுங்க ...... வருமோக

அரிவையர் தங்கள் வலையில்வி ழுந்து
     அறிவுமெ லிந்து ...... தளராதே

அமரர்ம கிழ்ந்து தொழுதுவ ணங்கு
     னடியிணை யன்பொ ...... டருள்வாயே

வரையைமு னிந்து விழவெக டிந்து
     வடிவெலெ றிந்த ...... திறலோனே

மதுரித செஞ்சொல் குறமட மங்கை
     நகிலது பொங்க ...... வரும்வேலா

விரைசெறி கொன்றை யறுகுபு னைந்த
     விடையரர் தந்த ...... முருகோனே

விரைமிகு சந்து பொழில்கள்து லங்கு
     விசுவைவி ளங்கு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

திருகு செறிந்த குழலை வகிர்ந்து ... திருகு ஜடைபில்லையை
அணிந்துள்ள கூந்தலை வகிர்ந்து வாரி,

முடி மலர் கொண்டு ஒர்அழகாகச் செ(ய்)ய வரு(ம்) துங்க
முகமும் விளங்க
... தலைமுடியில் மலர்களைத் தொடுத்து ஒரு
வகையான அழகு விளங்கும்படிச் செய்வதால் வரும் சிறப்பான முகம்
பிரகாசிக்க,

முலைகள் குலுங்க வரும் மோக அரிவையர் தங்கள் வலையில்
விழுந்து அறிவு மெலிந்து தளராதே
... மார்பகங்கள் குலுங்க
வருகின்ற, காம மயக்கத்தைத் தரும் விலைமாதர்களின் வலையிலே
விழுந்து, புத்தி கெட்டுச் சோர்வு அடையாமல்,

அமரர் மகிழ்ந்து தொழுது வணங்கு(ம்) உன் அடி இணை
அன்பொடு அருள்வாயே
... தேவர்கள் மகிழ்ச்சியுற்று தொழுது
வணங்குகின்ற உனது இரண்டு திருவடிகளையும் அன்புடன் தந்து
அருள்வாயாக.

வரையை முனிந்து விழவெ கடிந்து வடிவெல் எறிந்த
திறலோனே
... கிரெளஞ்ச மலையைக் கோபித்து, அது அழிபட்டு
விழும்படிக் கண்டித்து, கூரிய வேலாயுதத்தைச் செலுத்திய திறமை
வாய்ந்தவனே,

மதுரித செம் சொல் குற மட மங்கை நகில் அது பொங்க
வரும் வேலா
... இனிமை வாய்ந்த செவ்விய சொற்களை உடைய இளம்
குற மகளாகிய அழகிய வள்ளி நாயகியின் மார்பகங்கள் பூரிக்குமாறு
வருகின்ற வேலனே,

விரை செறி கொன்றை அறுகு புனைந்த விடையரர் தந்த
முருகோனே
... நறு மணம் வீசும் கொன்றை மலர், அறுகம் புல்
இவைகளைச் சூடியுள்ளவரும் ரிஷப (நந்தி) வாகனத்தை
உடையவருமான சிவபெருமான் ஈன்றருளிய முருகனே,

விரை மிகு சந்து பொழில்கள் துலங்கு விசுவை விளங்கு(ம்)
பெருமாளே.
... நறு மணம் மிக்க சந்தன மரச் சோலைகள் விளங்கும்
விசுவை* என்னும் தலத்தில் விளங்கி வீற்றிருக்கும் பெருமாளே.


(* விசுவை என்பது ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடா என்று கருதப்படுகிறது).

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1437  pg 2.1438  pg 2.1439  pg 2.1440 
 WIKI_urai Song number: 995 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song

YouTube  'YouTube' Links for this song  
  இப்பாடலுக்கான யூ ட்யூப் பதிவுகள்  

to come வரவிருக்கின்றது

 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 


Song 991 - thirugu cheRindha (visuvai - vijayawAda)

thirukuse Rintha kuzhalaiva kiarnthu
     mudimalar koNdo ...... razhakAka

seyavaru thunga mukamumvi Langa
     mulaikaLku lunga ...... varumOka

arivaiyar thangaL valaiyilvi zhunthu
     aRivume linthu ...... thaLarAthE

amararma kizhnthu thozhuthuva Nangu
     nadiyiNai yanpo ...... daruLvAyE

varaiyaimu ninthu vizhaveka dinthu
     vadivele Rintha ...... thiRalOnE

mathuritha senjol kuRamada mangai
     nakilathu ponga ...... varumvElA

viraiseRi konRai yaRukupu naintha
     vidaiyarar thantha ...... murukOnE

viraimiku santhu pozhilkaLthu langu
     visuvaivi Langu ...... perumALE.

......... Meaning .........

thiruku seRintha kuzhalai vakirnthu: Thoroughly combing the hair on which the golden screw-brooch is fastened,

mudiya malar koNdu orazhakAka se(y)ya varu(m) thunga mukamum viLanga: on top of the hair, bunches of flowers are adorned, embellishing the beauty of their bright face;

mulaikaL kulunga varum mOka arivaiyar thangaL valaiyil vizhunthu aRivu melinthu thaLarAthE: with swinging bosom the whores come out spreading their net of delusory passion; I do not wish to fall a prey in their net, nor do I want to lose my mind and become debilitated;

amarar makizhnthu thozhuthu vaNangu(m) un adi iNai anpodu aruLvAyE: (instead,) kindly grant me with love Your hallowed feet at which the celestials happily prostrate!

varaiyai muninthu vizhave kadinthu vadivel eRintha thiRalOnE: Being enraged with Mount Krouncha, You punished it angrily by wielding Your sharp spear, Oh valorous One!

mathuritha sem sol kuRa mada mangai nakil athu ponga varum vElA: She speaks sweetly using the choicest words; She is the young damsel of the KuRavAs; the bosom of that beautiful VaLLi swells with pleasure when You come to her, Oh Lord with the Spear!

virai seRi konRai aRuku punaintha vidaiyarar thantha murukOnE: He wears the fragrant kondRai (Indian laburnum) flower and aRugam (cynodon) grass on His matted hair; He mounts the bull (Nanthi); that Lord SivA delivered You, Oh MurugA!

virai miku santhu pozhilkaL thulangu visuvai viLangu(m) perumALE.: This town is full of fragrant groves of sandalwood trees; this is known as Visuvai*, which is Your abode, Oh Great One!


* Visuvai is said to be the city of Vijayawada in Andhra Pradesh).

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
 

Thiru Arunagirinathar's Thiruppugazh - 991 thirugu seRindha - visuvai


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

 மேலே   top