திருப்புகழ் 986 விரகற நோக்கியும்  (எழுகரைநாடு)
Thiruppugazh 986 viragaRanOkkiyum  (ezhugarainAdu)
Thiruppugazh - 986 viragaRanOkkiyum - ezhugarainAduSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தாத்தன தனதன தாத்தன
     தனதன தாத்தன ...... தந்ததான

......... பாடல் .........

விரகற நோக்கியு முருகியும் வாழ்த்தியும்
     விழிபுனல் தேக்கிட ...... அன்புமேன்மேல்

மிகவுமி ராப்பகல் பிறிதுப ராக்கற
     விழைவுகு ராப்புனை ...... யுங்குமார

முருகஷ டாக்ஷர சரவண கார்த்திகை
     முலைநுகர் பார்த்திப ...... என்றுபாடி

மொழிகுழ றாத்தொழு தழுதழு தாட்பட
     முழுதும லாப்பொருள் தந்திடாயோ

பரகதி காட்டிய விரகசி லோச்சய
     பரமப ராக்ரம ...... சம்பராரி

படவிழி யாற்பொரு பசுபதி போற்றிய
     பகவதி பார்ப்பதி ...... தந்தவாழ்வே

இரைகடல் தீப்பட நிசிசரர் கூப்பிட
     எழுகிரி யார்ப்பெழ ...... வென்றவேலா

இமையவர் நாட்டினில் நிறைகுடி யேற்றிய
     எழுகரை நாட்டவர் ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

விரகற நோக்கியும் ... தந்திரம் ஏதும் இல்லாத நேரான பார்வையோடு
உன்னை நோக்கிக் கருதியும்,

உருகியும் வாழ்த்தியும் ... உன்னை நினைந்து மனம் உருகியும்,
உன்னைத் துதித்து வாழ்த்தியும்,

விழிபுனல் தேக்கிட ... கண்களில் நீர் நிறைந்து வழிய,

அன்புமேன்மேல் மிகவும் ... பக்தி மேலும் மேலும் பெருகவும்,

இராப்பகல் பிறிது பராக்கற ... இரவும் பகலும் மற்ற விஷயங்களில்
சிந்தனை அற்றுப்போக,

விழைவு குராப் புனையுங் குமார ... விருப்பமுடன் குராமலரை
அணியும் குமரனே,

முருக ஷடாக்ஷர சரவண ... முருகனே, ஆறெழுத்து அண்ணலே,
சரவணபவனே,

கார்த்திகை முலைநுகர் பார்த்திப ... கார்த்திகைப் பெண்களின்
முலைப்பால் அருந்தி அருளிய அரசனே,

என்றுபாடி ... என்றெல்லாம் பாடி,

மொழிகுழறாத் தொழுது ... மொழிகள் குழறும்படி உன்னைத்
தொழுது,

அழுதழுது ஆட்பட ... ஓயாமல் அழுது யான் உன்னால்
ஆட்கொள்ளப்பட,

முழுதும் அலாப்பொருள் ... உலகப் பொருட்கள் யாவற்றையும்
கடந்த ஞானப் பொருளை

தந்திடாயோ ... அடியேனுக்குத் தரமாட்டாயா?

பரகதி காட்டிய விரக ... உபதேச* மூலமாக மோக்ஷ வீட்டைக்
காட்டிய சாமர்த்தியசாலியே,

சிலோச்சய ... மலை அரசனே,

பரம பராக்ரம ... மிக்க பராக்கிரமசாலியே,

சம்பராரி படவிழியாற்பொரு ... மன்மதன் சாம்பலாய் அழிய
நெற்றிக்கண் கொண்டு அவனை எரித்த

பசுபதி போற்றிய பகவதி ... பசுபதி சிவபிரான் போற்றிய
பகவதியாகிய

பார்ப்பதி தந்தவாழ்வே ... பார்வதி பெற்றளித்த பெருவாழ்வே,

இரைகடல் தீப்பட ... அலை ஓசை ஒலிக்கும் கடல் எரிபடவும்,

நிசிசரர் கூப்பிட ... அசுரர்கள் அலறி கூப்பாடு போடவும்,

எழுகிரி யார்ப்பெழ ... கிரெளஞ்சமலைக் கூட்டங்களான ஏழு
மலைகளும் அதிர்ந்து ஆர்ப்பரிக்கவும்,

வென்றவேலா ... வெற்றி கொண்ட வேலனே,

இமையவர் நாட்டினில் நிறைகுடி யேற்றிய ... தேவர்களின் உலகில்
யாவரையும் நிறைவாகக் குடியேற்றிய

எழுகரை நாட்டவர் தம்பிரானே. ... எழுகரைநாடு** என்ற தலத்தவர்
தம்பிரானே.


* அருணகிரிநாதரின் வாழ்க்கையில் முருகன் உபதேசித்து பரகதியைக்
காட்டியது குறிப்பிடப்படுகிறது.


** எழுகரைநாடு இலங்கையில் உள்ள திருத்தலம். சிலர் இத்தலம் குடகு
நாட்டில் உள்ளதாகவும் சொல்வர்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1421  pg 2.1422  pg 2.1423  pg 2.1424  pg 2.1425  pg 2.1426 
 WIKI_urai Song number: 990 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
The Kaumaram Team
கௌமாரம் குழுவினர்

The Kaumaram Team
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Mrs. Malathi Velayudhan, Chennai
திருமதி வே. மாலதி, சென்னை

Mrs. Malathi Velayudhan, Chennai
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 986 - viragaRa nOkkiyum (ezhukarainAdu)

viragaRa nOkkiyum urugiyum vAzhththiyum
     vizhipunal thEkkida ...... anbumEnmEl

migavum irAppagal piRidhu parAkkaRa
     vizhaivu kurAppunai ...... yunkumAra

murugasha tAkshara saravaNa kArththigai
     mulainugar pArththiba ...... endrupAdi

mozhi kuzhaRAth thozhu thazhuthazhu thAtpada
     muzhudhuma lApporuL ...... thandhidAyO

paragathi kAttiya viragasi lOcchaya
     parama parAkrama ...... sambarAri

padavizhi yARporu pasupathi pOtriya
     bagavathi pArppathi ...... thandhavAzhvE

iraikadal theeppada nisicharar kUppida
     ezhugiri yArppezha ...... vendravElA

imaiyavar nAttinil niRaikudi yEtriya
     ezhukarai nAttavar ...... thambirAnE.

......... Meaning .........

viragaRa nOkkiyum: I would like to look right into Your eyes without any trickery;

urugiyum vAzhththiyum: my mind should melt; I should be singing Your glory with

vizhipunal thEkkida: my eyes filled with tears;

anbumEnmEl migavum: my love for You should keep on swelling; and

irAppagal piRidhu parAkkaRa: day and night, I should concentrate only on You and nothing else.

vizhaivu kurAppunai yunkumAra: "Oh KumarA, You love to wear garlands of kurA flowers;

murugasha tAkshara saravaNa: Oh MurugA, ShatAksharA (six-lettered Lord), SaravaNabavA,

kArththigai mulainugar pArththiba: Oh King, who as a child suckled the breasts of Karthigai women"

endrupAdi: I would like to sing as above!

mozhi kuzhaRAth thozhu thazhuthazhuthu: With my words fumbling, I should worship You crying repeatedly.

Atpada muzhudhuma lApporuL thandhidAyO: I should belong to You completely; and thereupon, would You not give me the Eternal Knowledge that is beyond anything else in this world?

paragathi kAttiya viraga: You showed* me the path to Eternal Bliss, Oh the Cleverest One!

silOcchaya: You are the King of all mountains!

parama parAkrama: You are the greatest warrior!

sambarAri padavizhi yARporu: He burnt down Manmathan (Love God) by the glance of His fiery eye;

pasupathi pOtriya bagavathi: and He is SivA who worshipped Bhagavathi,

pArppathi thandhavAzhvE: also known as PArvathi, who delivered You, our Treasure!

iraikadal theeppada: The sea with noisy waves caught fire;

nisicharar kUppida: the demons (asuras) started yelling and screaming;

ezhugiri yArppezha: and the seven hills of Mount Krouncha group shook violently,

vendravElA: when You won Your victory, Oh Lord with the Spear!

imaiyavar nAttinil niRaikudi yEtriya: You redeemed DEvAs' land and setlled them there safely!

ezhukarai nAttavar thambirAnE.: You are praised by the people of EzhukarainAdu**, Oh Great One!


* In the life of AruNagirinAthar, Murugan preached him the ManthrA leading to eternal bliss.


** EzhukarainAdu is in Sri LankA. Some say that it is in the Coorg Region of Karnataka State.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 986 viragaRa nOkkiyum - ezhugarainAdu

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]