திருப்புகழ் 979 கருப்புச் சாப  (திருப்புத்தூர்)
Thiruppugazh 979 karuppuchchAba  (thiruppuththUr)
Thiruppugazh - 979 karuppuchchAba - thiruppuththUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்தத் தான தனன தனதன
     தனத்தத் தான தனன தனதன
          தனத்தத் தான தனன தனதன ...... தனதான

......... பாடல் .........

கருப்புச் சாப னனைய இளைஞர்கள்
     ப்ரமிக்கக் காத லுலவு நெடுகிய
          கடைக்கட் பார்வை யினிய வனிதையர் ...... தனபாரங்

களிற்றுக் கோடு கலச மலிநவ
     மணிச்செப் போடை வனச நறுமலர்
          கனத்துப் பாளை முறிய வருநிக ...... ரிளநீர்போற்

பொருப்பைச் சாடும் வலியை யுடையன
     அறச்சற் றான இடையை நலிவன
          புதுக்கச் சார வடமொ டடர்வன ...... எனநாளும்

புகழ்ச்சிப் பாட லடிமை யவரவர்
     ப்ரியப்பட் டாள வுரைசெ யிழிதொழில்
          பொகட்டெப் போது சரியை கிரியைசெய் ...... துயிர்வாழ்வேன்

இருட்டுப் பாரில் மறலி தனதுடல்
     பதைக்கக் கால்கொ டுதைசெய் தவன்விழ
          எயிற்றுப் போவி யமர ருடலவர் ...... தலைமாலை

எலுப்புக் கோவை யணியு மவர்மிக
     அதிர்த்துக் காளி வெருவ நொடியினில்
          எதிர்த்திட் டாடும் வயிர பயிரவர் ...... நவநீத

திருட்டுப் பாணி யிடப முதுகிடை
     சமுக்கிட் டேறி யதிர வருபவர்
          செலுத்துப் பூத மலகை யிலகிய ...... படையாளி

செடைக்குட் பூளை மதிய மிதழிவெ
     ளெருக்குச் சூடி குமர வயலியல்
          திருப்புத் தூரில் மருவி யுறைதரு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

(இப்பாடலின் பின்பாதி சிவபெருமானை வர்ணிக்கிறது).

கருப்புச் சாபன் அனைய இளைஞர்கள் ப்ரமிக்கக் காதல்
உலவு நெடுகிய கடைக் கண் பார்வை இனிய வனிதையர் தன
பாரம்
... கரும்பு வில்லை உடைய மன்மதன் போன்ற இளைஞர்கள்
வியந்து மயங்கும்படி, காம இச்சை உலவுகின்றதும் நீண்டதுமான
கடைக்கண் பார்வையைக் கொண்ட இனிய விலைமாதர்களின்
தனபாரங்கள்

களிற்றுக் கோடு கலச(ம்) மலி நவ மணிச் செப்பு ஓடை வனச
நறு மலர் கனத்துப் பாளை முறிய வரு நிகர் இள நீர் போல்
...
யானையின் தந்தம், குடம், நிறைந்த நவரத்தினச் சிமிழ், நீரோடையில்
தாமரையின் நறுமண மலர், பாரத்துடன் தென்னம் பாளையும் முறியும்படி
எழுந்துள்ள ஒளியுள்ள இள நீரைப் போல,

பொருப்பைச் சாடும் வலியை உடையன அறச் சற்றான
இடையை நலிவன புதுக் கச்சு ஆர வடம் ஒடு அடர்வன என
...
மலையையும் மோதி வெல்லக்கூடிய வலிமையைக் கொண்டவை, மிகவும்
இளைத்துள்ள இடையை மெலியும்படி செய்பவை, புதிய கச்சுடனும்
முத்து மாலையுடனும் நெருங்குபவை என்றெல்லாம்

நாளும் புகழ்ச்சிப் பாடல் அடிமை அவர் அவர் ப்ரியப்பட்டு
ஆள உரை செய் இழி தொழில் பொகட்டு எப்போது சரியை
கிரியை செய்து உயிர் வாழ்வேன்
... நாள் தோறும்
அம்மாதர்களுக்குப் புகழ்ச்சிப் பாடல்களை அடிமைப்பட்ட அந்த அந்தக்
காதலர்கள் ஆசையுடன் எடுத்தாண்டு பேசுகின்ற இழிவான தொழிலைப்
போகவிட்டு, நான் எப்பொழுது சரியை, கிரியை ஆகிய மார்க்கங்களில்*
நின்று உழைத்து உயிர் வாழ்வேன்?

இருட்டுப் பாரில் மறலி தனது உடல் பதைக்கக் கால் கொடு
உதை செய்து அவன் விழ எயில் துப்பு ஓவி அமரர் உடல்
அவர் தலை மாலை எலுப்புக் கோவை அணியும் அவர்
...
அஞ்ஞானம் என்ற இருட்டு நிறைந்த இப் பூமியில், யமனுடைய உடல்
பதைக்கும்படி, காலால் அவன் விழும்படி உதைத்தவர், திரிபுரங்களின்
வலிமையை ஒழித்தவர், தேவர்களின் உடல் அவர்களின் தலைகள்
மாலை ஆகிய எலும்பு வடத்தை மாலையாக அணிந்தவர்,

மிக அதிர்த்துக் காளி வெருவ நொடியினில் எதிர்த்திட்டு
ஆடும் வயிர பயிரவர்
... மிகவும் நடுங்கச் செய்து, காளி அஞ்சும்படி
ஒரு நொடிப் பொழுதில் எதிர்த்து நடனம் புரிந்த வயிரவ, பயிரவ மூர்த்தி,

நவநீத திருட்டுப் பாணி இடப முதுகு இடை சமுக்கு இட்டு
ஏறி அதிர வருபவர்
... வெண்ணெயைத் திருடிய கைகளை உடைய
திருமாலாகிய ரிஷபத்தின் முதுகின் மேல் சேணம் போட்டு ஏறி
முழக்கத்துடன் வருபவர்,

செலுத்துப் பூதம் அலகை இலகிய படையாளி செடைக்குள்
பூளை மதியம் இதழி வெள் எருக்குச் சூடி குமர
... செலுத்தப்படும்
பூதம் பேய்க் கணம் ஆகியவை விளங்குகின்ற படையைக் கொண்டவர்,
சடையில் பூளை மலர், சந்திரன், கொன்றை, வெள்ளெருக்கு இவைகளைச்
சூடியுள்ளவராகிய சிவ பெருமானின் குமரனே.

வயலியல் திருப்புத்தூரில் மருவி உறைதரு பெருமாளே. ...
வயல்கள் பொருந்திய திருப்புத்தூரில்** பொருந்தி வீற்றிருக்கும்
பெருமாளே.


* நான்கு பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:

1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம்
வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு
பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.

2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல்.
இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.

3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு
ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி,
முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.

4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு
ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'.

. . . சிவஞான சித்தியார் சூத்திரம்.


** திருப்புத்தூர் குன்றக்குடிக்கும் காரைக்குடிக்கும் அருகில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1399  pg 2.1401  pg 2.1402  pg 2.1403  pg 2.1404 
 WIKI_urai Song number: 983 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 979 - karuppuch chAba (thiruppuththUr)

karuppuc chApa nanaiya iLainjarkaL
     pramikkak kAtha lulavu nedukiya
          kadaikkat pArvai yiniya vanithaiyar ...... thanapArang

kaLitRuk kOdu kalasa malinava
     maNicchep pOdai vanasa naRumalar
          kanaththup pALai muRiya varunika ...... riLaneerpOR

poruppaic chAdum valiyai yudaiyana
     aRacchat RAna idaiyai nalivana
          puthukkac chAra vadamo dadarvana ...... enanALum

pukazhcchip pAda ladimai yavaravar
     priyappat tALa vuraise yizhithozhil
          pokattep pOthu sariyai kiriyaisey ...... thuyirvAzhvEn

iruttup pAril maRali thanathudal
     pathaikkak kAlko duthaisey thavanvizha
          eyitRup pOvi yamara rudalavar ...... thalaimAlai

eluppuk kOvai yaNiyu mavarmika
     athirththuk kALi veruva nodiyinil
          ethirththit tAdum vayira payiravar ...... navaneetha

thiruttup pANi yidapa muthukidai
     samukkit tERi yathira varupavar
          seluththup pUtha malakai yilakiya ...... padaiyALi

sedaikkut pULai mathiya mithazhive
     Lerukkuc cUdi kumara vayaliyal
          thirupputh thUril maruvi yuRaitharu ...... perumALE.

......... Meaning .........

(The second half of this song describes Lord SivA).

karuppuc chApan anaiya iLainjarkaL pramikkak kAthal ulavu nedukiya kadaik kaN pArvai iniya vanithaiyar thana pAram: "These sweet whores with highly provocative and long eyes and sideways glance are endowed with heavy breasts that enchant young men who resemble Manmathan (God of Love) holding a bow of sugarcane in His hand;

kaLitRuk kOdu kalasa(m) mali nava maNic cheppu Odai vanasa naRu malar kanaththup pALai muRiya varu nikar iLa neer pOl: their bosom may be compared to the ivory tusk of an elephant, the pot, the casket filled with nine precious gems, the fragrant lotus in the brook and the bright and blooming tender coconut whose weight could break the bough of the coconut tree;

poruppaic chAdum valiyai udaiyana aRac chatRAna idaiyai nalivana puthuk kacchu Ara vadam odu adarvana ena: those breasts have the strength of smashing and conquering the mountain; they press heavily on the slender waistline making it even more emaciated; and they are intimately covered by the brand-new blouse and a string of pearls" -

nALum pukazhcchip pAdal adimai avar avar priyappattu ALa urai sey izhi thozhil pokattu eppOthu sariyai kiriyai seythu uyir vAzhvEn: so singing songs in praise of those whores everyday, their paramours are engaged in the activity of choosing passionate words of speech; giving up such demeaning act, when shall I lead a life steadfastly remaining in the service of ardent devotion, treading the paths of sariyai, kiriyai and so on?*

iruttup pAril maRali thanathu udal pathaikkak kAl kodu uthai seythu avan vizha eyil thuppu Ovi amarar udal avar thalai mAlai eluppuk kOvai aNiyum avar: In this world filled with the darkness of ignorance, He kicked with His foot the Lord of Death, Yaman, knocking his shuddering body down; He destroyed the strength of Thiripuram; He has worn as a garland the bodies of the celestials, their heads, and the string of their bones;

mika athirththuk kALi veruva nodiyinil ethirththittu Adum vayira payiravar: making the Goddess tremble violently, He is capable of dancing before the awe-struck KALi in a fraction of second; He is the Great Vairava and Bhairava MUrthy;

navaneetha thiruttup pANi idapa muthuku idai samukku ittu ERi athira varupavar: with saddle in His hand and making a thunderous noise, He mounts the back of His vehicle Rishabha, who is none other than Lord VishNu who came as Krishna, with His hands dipped in butter that He stole;

seluththup pUtham alakai ilakiya padaiyALi sedaikkuL pULai mathiyam ithazhi vauf erukkuc cUdi kumara: He has an army of fiercely moving devils and multitude of fiends; on His matted hair He wears, the pULai (Indian laburnum) flower, the moon, kondRai (Indian laburnum) flower and white leaf of erukku; He is Lord SivA, and You are His Son, Oh Lord!

vayaliyal thiruppuththUril maruvi uRaitharu perumALE.: This place is surrounded by several paddy fields, and You are seated elegantly in this town ThiruppuththUr**, Oh Great One!


* The four methods of worship are:

1.  sariyai:  Worship through service in temples such as doing penance, washing the floor, lighting the lamps, maintaining the flower garden, plucking the flowers for offering, making of garlands, singing of hymns, decorating the deities etc. This is known as 'dhAdha mArgam - sAlOkam'.

2.  kiriyai:  Worship, both inwardly and externally, of a God with a form through daily offerings (pUjA) and with several pUjA materials. This is called 'puthra mArgam - sameepam'.

3.  yOgam:  Inward worship only of a formless God by control of senses, holding the oxygen in the inhaled air and letting it through the six centres of 'kuNdalini chakrA' after understanding each state fully, experiencing the flow of nectar in the 'Lunar zone' between the eyebrows and letting it seep throughout the body and meditating on the full effulgence. This is 'sakha mArgam - sArUbam'.

4.  gnAnam:  Ceasing all external and internal activities, this method consists of worshipping through the medium of intellect alone, seeking the True Knowledge. This is 'san mArgam - sAyujyam'.


** ThiruppuththUr is near the towns of KundRakkudi and KAraikkudi.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 979 karuppuch chAba - thiruppuththUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]