![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
---|
திருப்புகழ் 949 தீராப் பிணிதீர (பேரூர்) Thiruppugazh 949 theerAppiNitheera (pErUr) |
![]() | ![]() | தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு ![]() ![]() ![]() | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தானாத் தனதான தானாத் ...... தனதான ......... பாடல் ......... தீராப் பிணிதீர சீவாத் ...... துமஞான ஊராட் சியதான ஓர்வாக் ...... கருள்வாயே பாரோர்க் கிறைசேயே பாலாக் ...... கிரிராசே பேராற் பெரியோனே பேரூர்ப் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... தீராப் பிணிதீர ... முடிவே இல்லாத பிறவி நோய் முடிவு பெறவும், சீவ ஆத்தும ஞான ... ஜீவனாகிய ஆத்மாவைப் பற்றிய இந்தச் சிற்றுயிர் ஞான நிலை பெறுவதற்கும், ஊராட்சியதான ஓர்வாக்கு அருள்வாயே ... உலகெல்லாம் ஆட்சி செய்யக் கூடிய ஒப்பற்ற உபதேச மொழியொன்றை நீ எனக்கு ஓதி அருள்வாயாக. பாரோர்க் கிறைசேயே ... உலகத்துக்கெல்லாம் தலைவராகிய சிவபிரானின் குமாரனே, பாலாக் கிரிராசே ... இளையோனே, குன்றுகளுக்கெல்லாம் அரசனான குமரனே, பேராற் பெரியோனே ... புகழால் மிகவும் பெரியவனே, பேரூர்ப் பெருமாளே. ... பேரூர்த் தலத்தில்* எழுந்தருளியுள்ள பெருமாளே. |
* பேரூர் கோயமுத்தூர் ரயில் நிலையத்திலிருந்து 3 மைலில் உள்ளது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.1325 pg 2.1326 pg 2.1327 pg 2.1328 WIKI_urai Song number: 953 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
![]() | 'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
![]() | ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | ![]() to singer's page |
![]() | சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil | ![]() |
![]() | திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
![]() | திரு L. வசந்த குமார் Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 949 - theerAp piNitheera (pErUr) theerAp piNitheera jeevAth ...... thumagnAna UrAt chiyadhAna OrvAk ...... aruLvAyE pArOrk iRaisEyE bAlAk ...... girirAsE pErAR periyOnE pErUr ...... perumALE. ......... Meaning ......... theerAp piNitheera: In order that the unending disease of rebirth is ended jeevAth thumagnAna: and that the insignificant life in this soul attains wisdom, UrAt chiyadhAna OrvAk aruLvAyE: You should kindly preach to me that unique formula which will enable me to rule this entire world! pArOrk iRaisEyE: You are the Son of the Great Lord of the Universe (SivA)! bAlAk girirAsE: You are the youthful the king of all mountains! pErAR periyOnE: You are great by name and fame! pErUr perumALE.: You have Your abode at PErUr*, Oh Great One! |
* PErUr is about 3 miles off Coimbatore Railway Station. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search | ![]() | ![]() ![]() |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 [W3]COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. |