திருப்புகழ் 947 மதப்பட்ட விசால  (திருப்புக்கொளியூர்)
Thiruppugazh 947 madhappattavisAlaga  (thiruppukkoLiyUr)
Thiruppugazh - 947 madhappattavisAlaga - thiruppukkoLiyUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்தத்தன தானன தானன
     தனத்தத்தன தானன தானன
          தனத்தத்தன தானன தானன தந்ததான

......... பாடல் .........

மதப்பட்டவி சாலக போலமு
     முகப்பிற்சன வாடையு மோடையு
          மருக்கற்புர லேபல லாடமு ...... மஞ்சையாரி

வயிற்றுக்கிடு சீகர பாணியு
     மிதற்செக்கர்வி லோசன வேகமு
          மணிச்சத்தக டோரபு ரோசமு ...... மொன்றுகோல

விதப்பட்டவெ ளானையி லேறியு
     நிறைக்கற்பக நீழலி லாறியும்
          விஷத்துர்க்கன சூளிகை மாளிகை ...... யிந்த்ரலோகம்

விளக்கச்சுரர் சூழ்தர வாழ்தரு
     பிரப்புத்வகு மாரசொ ரூபக
          வெளிப்பட்டெனை யாள்வய லூரிலி ...... ருந்தவாழ்வே

இதப்பட்டிட வேகம லாலய
     வொருத்திக்கிசை வானபொ னாயிர
          மியற்றப்பதி தோறுமு லாவிய ...... தொண்டர்தாள

இசைக்கொக்கவி ராசத பாவனை
     யுளப்பெற்றொடு பாடிட வேடையி
          லிளைப்புக்கிட வார்மறை யோனென ...... வந்துகானிற்

றிதப்பட்டெதி ரேபொதி சோறினை
     யவிழ்த்திட்டவி நாசியி லேவரு
          திசைக்குற்றச காயனு மாகிம ...... றைந்துபோமுன்

செறிப்பித்த கராவதின் வாய்மக
     வழைப்பித்தபு ராணக்ரு பாகர
          திருப்புக்கொளி யூருடை யார்புகழ் ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

மதப்பட்ட விசால கபோலமு(ம்) முகப்பில் ச(ன்)ன ஆடையும்
ஓடையும் மருக் கற்புர லேப லலாடமும் மஞ்சை ஆரி
... மதநீர்
பெருகுவதற்கு இடமானதும் அகலமானதுமான தாடையும், முன்
புறத்தில் நுண்ணிய முகபடாமும் நெற்றிப் படமும், வாசனை பொருந்திய
பச்சைக்கற்பூரம் கூடிய கலவையைக் கொண்ட நெற்றியும் உடைய
யானையின் முதுகில் அம்பாரி பொருந்த,

வயிற்றுக்கு இடு சீகர பாணியு(ம்) மிதல் செக்கர் விலோசன
வேகமு(ம்) மணிச் சத்த கடோர புரோசமும் ஒன்று
... வயிற்றில்
இடுகின்ற வெகு அழகான தும்பிக்கையும், நன்கு சிவந்த கண்களும்,
அதிவேகமாகச் செல்லும் நடையும், மணிகளின் சப்தம் மிகப் பலமாகக்
கேட்கும்படிக் கட்டப்பட்ட (கழுத்துக்) கயிறும் இவை எல்லாம் பொருந்தி,

கோல விதப்பட்ட வெள் ஆனையில் ஏறியு(ம்) நிறை கற்பக
நீழலில் ஆறியும்
... அழகு விளங்குமாறு வெள்ளை யானையாகிய
ஐராவதத்தின் மேல் ஏறி பவனி வந்தும், நிறைந்து செழிப்பு உற்ற கற்பகத்
தருவின் நிழலில் அமைதியாகக் களைப்பாறியும்,

விஷத் துர்க்க(ம்) அ(ன்)ன சூளிகை மாளிகை இந்த்ரலோகம்
விளக்கச் சுரர் சூழ்தர வாழ் தரு பிரபுத்வ குமார சொரூபக
...
மலைக் கோட்டை போன்றனவும், நிலா முற்றங்களை உடையனவுமாகிய
அரண்மனைகளை உடைய பொன்னுலகத்தில் புகழ் கொண்ட தேவர்கள்
சூழ்ந்து பணிய வாழ்கின்ற பிரபுத் தன்மை கொண்டு ஆட்சி செய்யும்
இளைஞனாகிய உருவம் உடையவனே,

வெளிப்பட்டு எனை ஆள் வயலூரில் இருந்த வாழ்வே ... என்
முன்னே வந்து தோன்றி என்னை ஆண்டருளிய, வயலூரில்
வீற்றிருந்தருளும் செல்வனே,

இதப் பட்டிடவே கமலாலய ஒருத்திக்கு இசைவான பொன்
ஆயிரம் இயற்றப் பதி தோறும் உலாவிய தொண்டர்
... இன்பம்
அடையுமாறு திருவாரூரில் இருந்த ஒப்பற்ற காதலி பரவை நாச்சியாருக்கு
ஏற்றதான ஆயிரம் பொன்னைச் சம்பாதிக்க தலங்கள்* தோறும் சென்று
தரிசித்த அடியராகிய சுந்தரர்

தாள இசைக்கு ஒக்க இராசத பாவனை உ(ள்)ளப் பெற்றொடு
பாடிட வேடையில் இளைப்பு உக்கிட வார் மறையோன் என
வந்து கானில் திதப்பட்டு எதிரே
... தாளத்தின் இசைக்குப்
பொருந்தும்படி உறுதியான முயற்சித் தெளிவுடன் உள்ளப்
பெருக்கத்துடன் தேவாரப்பதிகம் பாடி வருகையில், கோடைக் கால
வெப்பத்தால் அவருக்கு ஏற்பட்ட இளைப்பு நீங்க, நேர்மையான ஒரு
மறையவர் கோலத்துடன், சுந்தரர் வந்து கொண்டிருந்த காட்டில் வந்து
நிலையாகவே சுந்தரரின் எதிரே தோன்றி,

பொதி சோறினை அவிழ்த்து இட்ட அவிநாசியிலே வரு
திசைக்கு உற்ற சகாயனும் ஆகி மறைந்து போம்
... (தாம்
கொண்டு வந்த) சோற்றுக் கட்டை அவிழ்த்துத் தந்தவரும், அவிநாசி
என்னும் தலத்துக்கு வரும்போது, சுந்தரர் திசை தடுமாறிய சமயத்தில்
அவருக்குத் திசையைக் காட்டி உதவி செய்து மறைந்து போனவரும்,

முன் செறிப்பு இத்த கரா அதின் வாய் மகவு அழைப்பித்த
புராண க்ருபாகர
... முன்பு ஏரியில் இருந்த முதலையின் வாயிலிருந்து
(உள்ளிருந்த) பிள்ளையைச் (சுந்தரர் பாட்டுக்கு இரங்கி) வரச் செய்த**
பழையவராகிய கருணாமூர்த்தியும்,

திருப்புக் கொளியூர் உடையார் புகழ் தம்பிரானே. ...
திருப்புக்கொளியூர்*** என்னும் தலத்தை உடையவருமாகிய சிவபெருமான்
புகழும் தம்பிரானே.


* சுந்தரர் இறைவனைப் பொன் வேண்டிய இடங்கள் திருப்புகலூர்,
திருப்பாசிலாச்சிராமம், திருமுது குன்றம் என்பன.


** திருப்புக்கொளியூர் ஏரியில் குளிக்கச் சென்ற பாலகனை ஒரு முதலை
உண்டது. பிறகு ஓராண்டு கழித்து அங்கு சென்ற சுந்தரமூர்த்தி நாயனார்,
வற்றிய ஏரியின் கரையில் அவிநாசியின் மேல் பதிகம் பாட, ஏரி நீர் நிரம்பி,
முதலை வந்து கரையில் பாலகனை ஓராண்டு வளர்ச்சியுடன் உயிரோடு
உமிழ்ந்தது.


*** திருப்புக்கொளியூர் அவிநாசிக்கு மிகச் சமீபத்தில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1319  pg 2.1320  pg 2.1321  pg 2.1322  pg 2.1323  pg 2.1324 
 WIKI_urai Song number: 951 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 947 - madhappatta visAla (thiruppukkoLiyUr)

mathappattavi sAlaka pOlamu
     mukappiRchana vAdaiyu mOdaiyu
          marukkaRpura lEpala lAtamu ...... manjaiyAri

vayitRukkidu seekara pANiyu
     mithaRchekkarvi lOchana vEkamu
          maNicchaththaka dOrapu rOsamu ...... monRukOla

vithappattave LAnaiyi lERiyu
     niRaikkaRpaka neezhali lARiyum
          vishaththurkkana cULikai mALikai ...... yinthralOkam

viLakkacchurar cUzhthara vAzhtharu
     pirapputhvaku mAraso rUpaka
          veLippattenai yALvaya lUrili ...... runthavAzhvE

ithappattida vEkama lAlaya
     voruththikkisai vAnapo nAyira
          miyatRappathi thORumu lAviya ...... thoNdarthALa

isaikkokkavi rAsatha pAvanai
     yuLappetRodu pAdida vEdaiyi
          liLaippukkida vArmaRai yOnena ...... vanthukAnit

Rithappattethi rEpothi chORinai
     yavizhththittavi nAsiyi lEvaru
          thisaikkutRasa kAyanu mAkima ...... RainthupOmun

cheRippiththa karAvathin vAymaka
     vazhaippiththapu rANakru pAkara
          thiruppukkoLi yUrudai yArpukazh ...... thambirAnE.

......... Meaning .........

mathappatta visAla kapOlamu(m) mukappil sa(n)na Adaiyum Odaiyum maruk kaRpura lEpa lalAtamum manjai Ari: It has a wide jaw that serves as the source for generation of bilious juice; in the front, it has the decorative cover for its face and the ornamental cover for its forehead; fragrant paste of camphor is smeared on the forehead of that elephant on which is fitted a decorative covered pavilion (ampAri) as the seat;

vayitRukku idu seekara pANiyu(m) mithal chekkar vilOchana vEkamu(m) maNic chaththa kadOra purOsamum onRu: it has a very elegant trunk with which it feeds itself; it has exceedingly reddish eyes and a very speedy gait; around its neck a rope is tied with hanging bells that jingle with a loud noise;

kOla vithappatta veL Anaiyil ERiyu(m) niRai kaRpaka neezhalil ARiyum: mounting, in style, that white elephant, AirAvatham, You go about in a procession and later relax peacefully under the shade of the rich and fertile KaRpaga tree;

vishath thurkka(m) a(n)na cULikai mALikai inthralOkam viLakkac churar cUzhthara vAzh tharu piraputhva kumAra sorUpaka: in the golden land of the celestials that has palaces with mountain-like fortress walls and courtyards filled with moonlight, You are reigning with nobility, surrounded by the worshipping DEvAs, Oh Lord with a youthful mien!

veLippattu enai AL vayalUril iruntha vAzhvE: Appearing in person in VayalUr to grant me Your vision, You took charge of me graciously, Oh Lord!

ithap pattidavE kamalAlaya oruththikku isaivAna pon Ayiram iyatRap pathi thORum ulAviya thoNdar: To elate his matchless lover, Paravai NAcchiyAr of ThiruvArUr, by showering on her a thousand sovereigns of gold, he went to many Saivite shrines* to earn that gold; when that devotee, Sundarar

thALa isaikku okka irAsatha pAvanai u(L)Lap petRodu pAdida vEdaiyil iLaippu ukkida vAr maRaiyOn ena vanthu kAnil thithappattu ethirE: went to those places, singing ThEvAram hymns maintaining rhythmic beats, with a determined perseverance and an effusive mind, he became exhausted due to excessive heat of the summer; to alleviate his exhaustion, He came in the disguise of an upright brahmin to the forest travelled through by Sundarar and appeared before him;

pothi chORinai avizhththu itta avinAsiyilE varu thisaikku utRa sakAyanum Aki maRainthu pOm: He then opened the bundle of food (brought along with Him) and offered food to Sundarar; when Sundarar reached AvinAsi, he became befuddled and lost direction; at that time, He showed him the proper direction and vanished;

mun seRippu iththa karA athin vAy makavu azhaippiththa purANa krupAkara: once, when a child was gobbled up by a crocodile in a lake, moved by the hymn sung by Sundarar, He retrieved that child from the crocodile's jaws**; He is primordial and the most compassionate One;

thiruppuk koLiyUr udaiyAr pukazh thambirAnE.: He is Lord SivA with His abode in ThiruppukkoLiyUr***, and You are praised by Him, Oh Great One!


* The shrines visited by Sundarar seeking the thousand sovereigns of gold are ThiruppugalUr, ThiruppAsilacchiramam and ThirumuthukundRam.


** Once, a little boy went to take a dip in the nearby lake at ThiruppukkoLiyUr and was eaten alive by a crocodile. After a year, Sundarar, one of the Four Great Saivites, came to the barren lake and heard about the death of the boy. He sang AvinAsi Pathikam whereupon the lake was filled with water. The crocodile came to the bank of the lake and spat out the boy alive, with one year's growth in the body too!.


*** ThiruppukkoLiyUr is located very near AvinAsi.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 947 madhappattavi sAlaga - thiruppukkoLiyUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]