திருப்புகழ் 935 சங்குவார் முடி  (ராஜபுரம்)
Thiruppugazh 935 sangkuvArmudi  (rAjapuram)
Thiruppugazh - 935 sangkuvArmudi - rAjapuramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்த தானன தத்தன, தந்த தானன தத்தன
     தந்த தானன தத்தன ...... தனதான

......... பாடல் .........

சங்கு வார்முடி பொற்கழல் பொங்கு சாமரை கத்திகை
     தண்டு மாகரி பெற்றவன் ...... வெகுகோடிச்

சந்த பாஷைகள் கற்றவன் மந்த்ர வாதிச துர்க்கவி
     சண்ட மாருத மற்றுள ...... கவிராஜப்

பங்கி பாலச ரச்வதி சங்க நூல்கள்வி தித்தப்ர
     பந்த போதமு ரைத்திடு ...... புலவோன்யான்

பண்டை மூவெழு வர்க்கெதிர் கண்ட நீயுமெ னச்சில
     பஞ்ச பாதக ரைப்புகழ் ...... செயலாமோ

வெங்கை யானை வனத்திடை துங்க மாமுத லைக்குவெ
     ருண்டு மூலமெ னக்கரு ...... டனிலேறி

விண்ப ராவஅ டுக்கிய மண்ப ராவஅ தற்குவி
     தம்ப ராவஅ டுப்பவன் ...... மருகோனே

கொங்க ணாதித ரப்பெறு கொங்கி னூடுசு கித்திடு
     கொங்கின் வீரக ணப்ரிய ...... குமராபொற்

கொங்கு லாவுகு றக்கொடி கொங்கை யேதழு விச்செறி
     கொங்கு ராஜபு ரத்துறை ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சங்குவார் முடி பொன் கழல் பொங்கு சாமரை கத்திகை ...
சங்கு வாத்தியம் என்ன, நீண்ட கிரீடம், பொன்னாலாகிய கழல் என்ன,
மேலெழுந்து விளங்கும் சாமரங்கள் என்ன, விருதுக் கொடி என்ன,

தண்டு மா கரி பெற்றவன் ... பல்லக்கு என்ன, குதிரை, யானை
என்ன - இவைகளை எல்லாம் உடையவன்,

வெகு கோடிச் சந்த பாஷைகள் கற்றவன் மந்த்ர வாதி சதுர்க்
கவி
... பல கோடிக் கணக்கான அழகிய வார்த்தைகளைக் கற்றவன்,
மந்திர வாதத்தில் வல்லவன், நான்கு வகைக் கவிகளிலும்*1 வல்லவன்,

சண்ட மாருதம் மற்றுள கவி ராஜப் பங்கி பால சரச்வதி ...
கொடுங் காற்றைப் போல பேச வல்லவன், மற்றும் பல பேர்கள் உள்ள
கவிராஜன் என்ற பட்டத்தை உடையவன், பால சரஸ்வதி என்னும்
விருதைப் பெற்றவன்,

சங்க நூல்கள் விதித்த ப்ரபந்த போதம் உரைத்திடு புலவோன்
யான்
... சங்க நூல்களில் சொல்லப்பட்ட பிரபந்த அறிவு நூல்களை
எடுத்து ஓத வல்ல புலவன் நான்.

பண்டை மூ எழுவர்க்கு எதிர் கண்ட நீயும் எனச் சில பஞ்ச
பாதகரைப் புகழ் செயலாமோ
... பழைய இருபத்தொரு
வள்ளல்களுக்கு ஒப்பானவன் எதிரே உள்ள நீயும் என்றெல்லாம் கூறி
ஐம்பெரும் பாதகங்களைச்*2 செய்பவர்களான சிலரை அங்ஙனம்
புகழ்கின்ற செயல் ஆகுமோ?

வெம் கை யானை வனத்து இடை துங்க மா முதலைக்கு
வெருண்டு
... விரும்பத் தக்க துதிக்கையை உடைய கஜேந்திரன் என்ற
யானை காட்டிடையே ஒரு பொய்கையில் வலிய முதலைக்கு மருட்சி
உற்று,

மூலமெனக் கருடனில் ஏறி விண் பராவ அடுக்கிய மண்
பராவ அதற்கு இதம் பராவ அடுப்பவன் மருகோனே
... ஆதி
மூலமே என்று கூச்சலிட்ட போது, கருடன் மேல் ஏறி, விண்ணுலகம்
போற்றவும், அடுக்காயுள்ள பதினாலு உலகங்கள் போற்றவும், அந்த
யானைக்கு வேண்டிய நன்மைகளைப் பெருகும்படி அடுத்து உதவும்
திருமாலின் மருகனே,

கொங்கணாதி தரப்பெறு கொங்கினூடு சுகித்திடு கொங்கின்
வீர கண ப்ரிய குமரா
... கொங்கண முனிவர் முதலியோரால் (பொன்)
தரப்பட்ட*3 கொங்கு நாட்டில் சுகமாக இருக்கின்ற, மணம் வீசும்
மாலைகள் அணிந்த, வீரனே, பதினெண் கணங்களும் விரும்புவனே,
குமரனே,

பொன் கொங்கு உலாவு குறக் கொடி கொங்கையே தழுவி ...
கொங்கு நறு மணம் வீசும் குறப்பெண்ணாகிய வள்ளியின் அழகிய
மார்பகங்களை அணைந்தவனே,

செறி கொங்கு ராஜபுரத்து உறை பெருமாளே. ... செழிப்பான
கொங்கு மண்டலத்தில் உள்ள ராசிபுரத்தில்*4 வீற்றிருக்கும் பெருமாளே.


(*1) தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்:

ஆசு - எதுகை மோனையுடன் கூடியது,
மதுரம் - இனிமை வாய்ந்தது,
சித்திரம் - கற்பனையும் அழகும் மிக்கது,
வித்தாரம் - வர்ணனை மிக்கது.


(*2) ஐவகை பாதகங்கள்:

கொலை, களவு, சூது, கள்ளுண்ணல், குரு நிந்தை.


(*3) கொங்கு நாட்டில் இருந்த கொங்கணச் சித்தர் தாமிரம் முதலிய
உலோகங்களைப் பொன் செய்து விரும்பினோர்க்குக் கொடுத்தார். எனவே
இங்ஙனம் கூறப்பட்டுள்ளது.


(*4) 'ராஜபுரம்' இப்போது 'ராசிபுரம்' என வழங்கப்படுகிறது. இது சேலம் ரயில்
நிலையத்திலிருந்து 20 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1289  pg 2.1290  pg 2.1291  pg 2.1292 
 WIKI_urai Song number: 939 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 935 - sangkuvAr mudi (rAjapuram - rAsipuram)

sangu vArmudi poRkazhal pongu sAmarai kaththikai
     thaNdu mAkari petRavan ...... vekukOdi

santha pAshaikaL katRavan manthra vAthisa thurkkavi
     saNda mArutha matRuLa ...... kavirAjap

pangi pAlasa rasvathi sanga nUlkaLvi thiththapra
     pantha pOthamu raiththidu ...... pulavOnyAn

paNdai mUvezhu varkkethir kaNda neeyume nacchila
     panja pAthaka raippukazh ...... seyalAmO

vengai yAnai vanaththidai thunga mAmutha laikkuve
     ruNdu mUlame nakkaru ...... danilERi

viNpa rAvA dukkiya maNpa rAvA thaRkuvi
     thampa rAvA duppavan ...... marukOnE

konga NAthitha rappeRu kongi nUdusu kiththidu
     kongin veeraka Napriya ...... kumarApoR

kongu lAvuku Rakkodi kongai yEthazhu viccheRi
     kongu rAjapu raththuRai ...... perumALE.

......... Meaning .........

changuvAr mudi pon kazhal pongu sAmarai kaththikai thaNdu mA kari petRavan: "What a paraphernalia like the blowing conch shell, a long crown, golden anklets, prominently displayed royal fans, flagstaff, palanquin, horse and elephant! - all these belong to me;

veku kOdis santha pAshaikaL katRavan manthra vAthi sathurk kavi: I have learnt several million beautiful words; I am an expert magician; I am very proficient in the four varieties*1 of Tamil poetry;

saNda mArutham matRuLa kavi rAjap pangi pAla sarasvathi: my speech is fierce like the typhoon; I have earned the title of Poet-King and many other accolades; I was awarded the title of "Bala Saraswathi" (Young God of Learning);

sanga nUlkaL vithiththa prapantha pOtham uraiththidu pulavOn yAn: I am a poet capable of exposition of literary works described in the Sangam texts;

paNdai mU ezhuvarkku ethir kaNda neeyum enac chila panja pAthakaraip pukazh seyalAmO: and you are seated before me like the great alms-giver, comparable to the twenty-one celebrated philanthropists" - with such hyperbole, how could I be flattering people who indulge in the five heinous sins?*2?

vem kai yAnai vanaththu idai thunga mA muthalaikku veruNdu: When GajEndran, the elephant with an attractive trunk, was terrified by a huge crocodile in a pond in the middle of the forest,

mUlamenak karudanil ERi viN parAva adukkiya maN parAva athaRku itham parAva aduppavan marukOnE: and screamed His name as "Oh Primordial One!", He mounted the eagle, Garudan, and rushed to the aid of the elephant as the celestial world hailed His kindness and the fourteen worlds in a row rejoiced; You are the nephew of that Lord VishNu!

kongaNAthi tharappeRu konginUdu sukiththidu kongin veera kaNa priya kumarA: You are seated with relish in KongunAdu which was awarded a lot of gold by sages like KongaNa Munivar*3, Oh valorous Lord with fragrant garlands, Oh KumarA, You are liked by the eighteen kinds of gaNas (semi-deities who are attendants of Lord SivA)!

pon kongu ulAvu kuRak kodi kongaiyE thazhuvi: You hug the fragrant and beautiful bosom of VaLLi, the damsel of the KuRavAs, Oh Lord!

seRi kongu rAjapuraththu uRai perumALE.: You have Your abode in Rasipuram*4 which is located in the fertile land of KongunAdu, Oh Great One!


(*1) The four varieties of Tamil poetry are:

Asu (alliteration)
Mathuram (sweetness)
Chiththiram (artful presentation) and
ViththAram (description).


(*2) Five heinous sins (crimes) are:

murder, stealing, lying, drunkenness and abuse of the teacher.


(*3) One KongaNa Chiththar, a sage of KongunAdu, used the method of alchemy and converted lower metals like copper into gold and gave it away to people who sought gold. That is why reference is made to that sage here.


(*4) Rajapuram is now known as Rasipuram, located 20 miles from SAlem Railway Station.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 935 sangkuvAr mudi - rAjapuram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]