திருப்புகழ் 928 சஞ்சல சரித  (கருவூர்)
Thiruppugazh 928 sanjalasaridha  (karuvUr)
Thiruppugazh - 928 sanjalasaridha - karuvUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்தன தனன தனதாத்தன
     தந்தன தனன தனதாத்தன
          தந்தன தனன தனதாத்தன ...... தனதான

......... பாடல் .........

சஞ்சல சரித பரநாட்டர்கள்
     மந்திரி குமரர் படையாட்சிகள்
          சங்கட மகிபர் தொழுஆக்கினை ...... முடிசூடித்

தண்டிகை களிறு பரிமேற்றனி
     வெண்குடை நிழலி லுலவாக்கன
          சம்ப்ரம விபவ சவுபாக்கிய ...... முடையோராய்க்

குஞ்சமும் விசிற இறுமாப்பொடு
     பஞ்சணை மிசையி லிசையாத்திரள்
          கொம்புகள் குழல்கள் வெகுவாத்திய ...... மியல்கீதங்

கொங்கணி மகளிர் பெருநாட்டிய
     நன்றென மனது மகிழ்பார்த்திபர்
          கொண்டய னெழுதும் யமகோட்டியை ...... யுணராரே

பஞ்சவர் கொடிய வினைநூற்றுவர்
     வென்றிட சகுனி கவறாற்பொருள்
          பங்குடை யவனி பதிதோற்றிட ...... அயலேபோய்ப்

பண்டையில் விதியை நினையாப்பனி
     ரண்டுடை வருஷ முறையாப்பல
          பண்புடன் மறைவின் முறையாற்றிரு ...... வருளாலே

வஞ்சனை நழுவி நிரைமீட்சியில்
     முந்துத முடைய மனைவாழ்க்கையின்
          வந்தபி னுரிமை யதுகேட்டிட ...... இசையாநாள்

மண்கொள விசையன் விடுதேர்ப்பரி
     யுந்தினன் மருக வயலூர்க்குக
          வஞ்சியி லமரர் சிறைமீட்டருள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சஞ்சல சரித பர நாட்டர்கள் மந்திரி குமரர் படை ஆட்சிகள்
சங்கட மகிபர்
... துயரமான சரித்திரத்தைக் கொண்ட பிற
நாட்டவர்களும், மந்திரிகளும், இள வீரர்களைக் கொண்ட படைத்
தலைவர்களும், துன்ப நிலையில் இருந்த அரசர்களும்,

தொழு ஆக்கினை முடிசூடி தண்டிகை களிறு பரி மேல் தனி
வெண் குடை நிழலில் உலவா
... தொழுது நிற்கும்படி கட்டளை
செலுத்தவல்ல திருமுடியைச் சூடிக் கொண்டு, பல்லக்கு, யானை, குதிரை
இவைகளின் மேல் ஏறி வீற்றிருந்து, ஒப்பற்ற வெண்கொற்றக் குடை
நிழலில் செல்பவர்களாய்,

கன சம்ப்ரம விபவ சவுபாக்கியம் உடையோராய் ... பெருமை
தங்கிய, சிறப்புற்ற, செல்வ வாழ்வான மிக்க பாக்கிய நிலையைக்
கொண்டவர்களாய்,

குஞ்சமும் விசிற இறுமாப்பொடு பஞ்சணை மிசையில்
இசையா
... வெண்சாமரங்கள் வீசப்பட, செருக்குடன் பஞ்சணை
மெத்தையில் வீற்றிருந்து,

திரள் கொம்புகள் குழல்கள் வெகு வாத்தியம் இயல் கீதம் ...
நிரம்பிய ஊது கொம்புகள், குழல்கள் முதலான பலவித
வாத்தியங்களினின்றும் எழுகின்ற இசை ஒலி பெருக,

கொங்கு அணி மகளிர் பெரு நாட்டிய(ம்) நன்று என மனது
மகிழ் பார்த்திபர்
... நறு மணம் கமழும் பெண்களின் விசேஷ
நாட்டியங்களை இவை நன்றாயுள்ளன என்று மனம் மகிழும் பேரரசர்கள்,

கொண்டு அயன் எழுதும் யம கோட்டியை உணராரே ...
படைப்போனாகிய பிரமனது கணக்கில் உட்படுத்தி, யமன் அவர்களைப்
படுத்தப் போகின்ற துன்பங்களை அறியவில்லையோ?

பஞ்சவர் கொடிய வினை நூற்றுவர் வென்றிட ... தருமன் முதலாய
பஞ்ச பாண்டவர்களை கெட்ட செயலைக் கொண்ட துரியோதனன்
முதலிய நூற்றுவரும் வெற்றி கொள்ள,

சகுனி கவறால் பொருள் பங்கு உடை அவனி பதி தோற்றிட ...
சகுனி ஆடிய சூதாட்டத்தினால் தங்கள் பொருளையும், பாகமாய் இருந்த
பூமியையும், ஊர்களையும் தோற்றுப் போனதினால்,

அயலே போய்ப் பண்டையில் விதியை நினையாப்
பனிரண்டுடை வருஷ முறையாப் பல பண்புடன்
...
வேற்றிடத்துக்குச் சென்று தமது பண்டைய விதியை நினைத்து,
பன்னிரண்டு ஆண்டுகள் பல விதமான விதங்களில் இருந்து,

மறைவின் முறையால் திருவருளாலே வஞ்சனை நழுவி நிரை
மீட்சியில்
... அஞ்ஞாத வாசமாக (ஓராண்டு சென்றபின்) இறைவன்
திருவருளால் சபத நாள் (13 ஆண்டுகள்) முடிவு பெற, (துரியோதனால்
கவரப்பட்ட) பசுக்களை மீட்டபின்,

முந்து த(ம்) முடைய மனை வாழ்க்கையில் வந்த பின் உரிமை
அது கேட்டிட இசையா நாள்
... முன்பு தங்களுக்கு இருந்த இல்லற
நிலையில் வந்த பிறகு, தங்களுக்கு உரிய பாகத்தைக் கேட்க, (அதற்குத்
துரியோதனன்) இணங்காத நாளில்,

மண் கொள விசையன் விடு தேர்ப் பரி உந்தினன் மருக
வயலூரக் குக
... அவர்கள் பாகத்துப் பூமியைப் பெறும்படி, போரில்
அர்ச்சுனன் விட்ட தேரின் குதிரையைச் சாரதியாகச் செலுத்திய
திருமாலின் மருகனே, வயலூரில் உள்ள குகனே,

வஞ்சியில் அமரர் சிறை மீட்டு அருள் பெருமாளே. ... தேவர்கள்
சிறையை மீட்டருளி, வஞ்சி எனப்படும் கருவூரில்* உறையும் பெருமாளே.


இப்பாடலில் மகாபாரத கதைச் சுருக்கத்தைக் காணலாம்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1271  pg 2.1272  pg 2.1273  pg 2.1274 
 WIKI_urai Song number: 932 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 928 - sanjala saridha (karuvUr)

sanjala saritha paranAttarkaL
     manthiri kumarar padaiyAtchikaL
          sangada makipar thozhuAkkinai ...... mudicUdith

thaNdikai kaLiRu parimEtRani
     veNkudai nizhali lulavAkkana
          samprama vipava savupAkkiya ...... mudaiyOrAyk

kunjamum visiRa iRumAppodu
     panjaNai misaiyi lisaiyAththiraL
          kompukaL kuzhalkaL vekuvAththiya ...... miyalkeetham

kongaNi makaLir perunAttiya
     nanRena manathu makizhpArththipar
          koNdaya nezhuthum yamakOttiyai ...... yuNarArE

panjavar kodiya vinainUtRuvar
     venRida sakuni kavaRARporuL
          pangudai yavani pathithOtRida ...... ayalEpOyp

paNdaiyil vithiyai ninaiyAppani
     raNdudai varusha muRaiyAppala
          paNpudan maRaivin muRaiyAtRiru ...... varuLAlE

vanjanai nazhuvi niraimeetchiyil
     munthutha mudaiya manaivAzhkkaiyin
          vanthapi nurimai yathukEttida ...... isaiyAnAL

maNkoLa visaiyan viduthErppari
     yunthinan maruka vayalUrkkuka
          vanjiyi lamarar siRaimeettaruL ...... perumALE.

......... Meaning .........

sanjala saritha para nAttarkaL manthiri kumarar padai AtchikaL sangada makipar: All those foreigners with a sad history, their ministers, commanders of armies consisting of young soldiers and the kings in miserable condition

thozhu Akkinai mudicUdi thaNdikai kaLiRu pari mEl thani veN kudai nizhalil ulavA: lined up to worship them; so powerful was their command; wearing the royal crown, mounting the palanquin, elephant and horse, they moved about under the white stately umbrella;

kana samprama vipava savupAkkiyam udaiyOrAy: their majestic, famous and rich life was replete with good fortune;

kunjamum visiRa iRumAppodu panjaNai misaiyil isaiyA: amidst the swaying of white royal fans on either side, they reclined arrogantly on their soft cotton mattress;

thiraL kompukaL kuzhalkaL veku vAththiyam iyal keetham: full-blowing wind instruments, flutes and many other devices made a lot of musical sound;

kongu aNi makaLir peru nAttiya(m) nanRu ena manathu makizh pArththipar: those great kings witnessed the special dances by young danseuses exuding pleasant aroma and appreciated their performance;

koNdu ayan ezhuthum yama kOttiyai uNarArE: did they not know the miseries in store for them contemplated by Yaman, the God of Death, in accordance with the calculation of BrahmA, the Creator?

panjavar kodiya vinai nUtRuvar venRida: The five PANdavAs, led by DharmA, were defeated by the wicked bunch of a hundred KauravAs, led by DuryOdhanan;

sakuni kavaRAl poruL pangu udai avani pathi thOtRida: they lost their wealth, their portion of the kingdom and their towns in the gambling game craftily played by Sakuni;

ayalE pOyp paNdaiyil vithiyai ninaiyAp paniraNdudai varusha muRaiyAp pala paNpudan: being banished into exile, they mulled over their old fate and spent twelve years in several different ways;

maRaivin muRaiyAl thiruvaruLAlE vanjanai nazhuvi nirai meerchiyil: after the lapse of a year in disguise, the period of banishment (13 years) ended by the grace of God; then, they rescued the herd of cows (kidnapped by DuryOdhanan);

munthu tha(m)mudaiya manai vAzhkkaiyil vantha pin urimai athu kEttida isaiyA nAL: when they settled in their family life once again, they asked for their rightful share of the kingdom; on the day their request was turned down (by DuryOdhanan),

maN koLa visaiyan vidu thErp pari unthinan maruka vayalUrak kuka: war broke out, and in order that they could get their portion of the kingdom, He came as the charioteer for the chariot of Arjunan and drove his horse; He is Lord VishNu, and You are His nephew, Oh Lord GuhA of VayalUr!

vanjiyil amarar siRai meettu aruL perumALE.: You freed the celestials from their prison and took Your seat in this place Vanji (known as KaruvUr*), Oh Great One!


The synopsis of the great epic MahAbhAratham is contained in this song.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 928 sanjala saridha - karuvUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]