திருப்புகழ் 919 நிரைத்த நித்தில  (திருத்தவத்துறை)
Thiruppugazh 919 niraiththaniththila  (thiruththavaththuRai)
Thiruppugazh - 919 niraiththaniththila - thiruththavaththuRaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்த தத்தன தானன தானன
     தனத்த தத்தன தானன தானன
          தனத்த தத்தன தானன தானன ...... தனதான

......... பாடல் .........

நிரைத்த நித்தில நீள்மணி மாலைகள்
     பொருத்த வெற்பிணை மார்முலை மேலணி
          நெறித்த நெய்க்குழல் வாள்விழி மாமதி ...... முகமானார்

நெளித்த சிற்றிடை மேல்கலை யாடையை
     யுடுத்தி யத்தமு ளோர்தமை யேமயல்
          நிரப்பி நித்தமும் வீதியில் நேருறு ...... நெறியாலே

கரைத்தி தக்குயில் போல்மொழி மாதர்கள்
     வலைக்கு ளிற்சுழ லாவகை யேயுன
          கழற்று தித்திடு வாழ்வது தான்மன ...... துறமேவிக்

கதித்த பத்தமை சாலடி யார்சபை
     மிகுத்தி ழிக்குண பாதக னேனுயர்
          கதிக்க டுத்துயர் வாகவு மேயரு ...... ளுரையாதோ

வரைத்த நுக்கரர் மாதவ மேவின
     ரகத்தி டத்தினில் வாழ்சிவ னார்திரு
          மணிச்செ விக்குள்மெய்ஞ் ஞானம தோதிய ...... வடிவேலா

மதித்த முத்தமி ழாய்வினர் மேலவ
     ருரைத்து ளத்திரு வாசக மானது
          மனத்து ளெத்தழ கார்புகழ் வீசிய ...... மணிமாடத்

திரைக்க டற்பொரு காவிரி மாநதி
     பெருக்கெ டுத்துமெ பாய்வள நீர்பொலி
          செழித்த நெற்செநெல் வாரிக ளேகுவை ...... குவையாகச்

செருக்கு செய்ப்பதி வாழ்முரு காஅறம்
     வளர்த்த நித்யகல் யாணிக்ரு பாகரி
          திருத்த வத்துறை மாநகர் தானுறை ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

நிரைத்த நித்தில(ம்) நீள் மணி மாலைகள் பொறுத்த வெற்பு
இணை மார் முலை மேல் அணி
... வரிசையாயுள்ள முத்து
மாலைகளையும், நீண்ட ரத்தின மாலைகளையும் தாங்கியுள்ளதும்
மலைக்கு ஒப்பானதுமான மார்பகங்களின் மீது விளங்கும் மேலாடை,

நெறித்த நெய்க் குழல் வாள் விழி மா மதி முக மானார் ...
சுருண்டதும் எண்ணெய்ப் பசை உள்ளதுமான கூந்தல், வாள் போன்ற
கண்கள், அழகிய சந்திரன் போன்ற முகம் இவைகளைக் கொண்ட
மாதர்கள்,

நெளித்த சிற்றிடை மேல் கலை ஆடையை உடுத்தி அத்தம்
உளோர் தமையே மயல் நிரப்பி
... நெளியும் சிறிய இடையின் மேல்
மேகலை பூண்ட ஆடையை உடுத்தி, பொருள் உள்ளவர்களுக்கு மிக்க
காம மயக்கம் தந்து,

நித்தமும் வீதியில் நேர் உறு நெறியாலே கரைத்து இதக்
குயில் போல் மொழி மாதர்கள் வலைக்கு உ(ள்)ளில்
சுழலா வகையே
... நாள்தோறும் தெருவில் நைச்சியமான வழியில்
கூப்பிட்டு அழைத்து, நன்மை தரும் குயில் போல் மொழி பேசுகின்ற
விலைமாதர்களின் வலைக்குள்ளே விழுந்து நான் சுழலாதபடி,

உன கழல் துதித்திடு வாழ்வு அது தான் மனது உற மேவி ...
உனது திருவடியை வணங்கும் வாழ்வே மனத்தில் பொருந்தி,

கதித்த பத்தி அமை சால் அடியார் சபை மிகுத்து இழிக் குண
பாதகனேன் உயர் கதிக்கு அடுத்து உயர்வாகவுமே அருள்
உரையாதோ
... இயற்கையாகவே உண்டாகும் பக்தி நிலை நிரம்பியுள்ள
அடியார்களின் கூட்டத்தை மிக இழிவாகப் பேசும் பாவியாகிய நான்
உயர்ந்த நற்கதியை நாடி மேன்மை அடையவே உனது திருவருள்
உபதேசம் செய்யக்கூடாதோ?

வரைத் தநுக் கரர் மா தவம் மேவினர் அகத்து இடத்தினில்
வாழ் சிவனார் திரு மணிச் செவிக்குள் மெய்ஞ் ஞானம் அது
ஓதிய வடிவேலா
... மேரு மலையை வில்லாக ஏந்திய கரத்தை
உடையவர், நல்ல தவத்தை மேற்கொண்டவர்களின் மனமாகிய இடத்துள்
வாழ்கின்றவர் ஆகிய சிவபெருமானின் சிறப்பும் அழகும் கொண்ட காதில்
மெய்ஞ்ஞான உபதேசத்தைச் சொன்ன வடிவேலனே,

மதித்த முத்தமிழ் ஆய்வினர் மேலவர் உரைத்துள திருவாசகம்
ஆனது மனத்துள் எத்து
... போற்றத் தக்க முத்தமிழை
ஆய்ந்தவர்களாகிய மேலோர் சொல்லியுள்ள திருவாசகத்தில் உள்ள
உபதேச மொழிகளை (அடியார்கள்) மனதில் போற்றுகின்றதும்,

அழகார் புகழ் வீசிய மணி மாட திரைக் கடல் பொரு காவிரி
மா நதி பெருக்கு எடுத்துமெ பாய் வள நீர் பொலி செழித்த
...
அழகு நிறைந்த புகழ் விளங்கும் மணி மாடங்களை உடையதும், அலை
வீசும் கடல் போன்ற காவேரியாகிய பெரிய ஆற்றில் வெள்ளம் பெருகிப்
பாய்கின்ற வளப்பமுள்ள நீரால் பொலிவதும்,

நெல் செ(ந்)நெல் வாரிகளே குவை குவையாகச் செருக்கு
செய்ப்பதி வாழ் முருகா
... நெற்பயிரும், செந்நெல் பயிரும் கும்பல்
கும்பலாக விளைந்து பெருகிக் கிடப்பதும் ஆகிய வயலூரில் வாழ்கின்ற
முருகனே,

அறம் வளர்த்த நித்ய கல்யாணி க்ருபாகரி திருத்தவத்துறை
மா நகர் தான் உறை பெருமாளே.
... (காஞ்சியில் முப்பத்திரண்டு)
அறங்களை* வளர்த்த நித்ய கல்யாணியும், அருள் நிறைந்தவளும் ஆகிய
உமாதேவி உறையும் திருத்தவத்துறை** ஆகிய லால்குடியில் வீற்றிருக்கும்
பெருமாளே.


* பெரிய புராணத்தில் கூறிய முப்பத்திரண்டு அறங்கள் பின்வருமாறு:

சாலை அமைத்தல், ஓதுவார்க்கு உணவு, அறுசமயத்தாருக்கும் உணவு,
பசுவுக்குத் தீனி, சிறைச் சோறு, ஐயம், தின்பண்டம் நல்கல், அநாதைகளுக்கு
உணவு, மகப்பெறுவித்தல், மகவு வளர்த்தல், சிசுக்களுக்குப் பால் நல்கல்,
அநாதைப் பிணம் சுடுதல், அநாதைகளுக்கு உடை, சுண்ணாம்பு பூசல்,
நோய்க்கு மருந்து, வண்ணார் தொழில், நாவிதத் தொழில், கண்ணாடி
அணிவித்தல், காதோலை போடுதல், கண் மருந்து, தலைக்கு எண்ணெய்,
ஒத்தடம் தருதல், பிறர் துயர் காத்தல், தண்ணீர்ப் பந்தல், மடம் கட்டுதல்,
தடாகம் அமைத்தல், சோலை வளர்த்தல், தோல் பதனிடல், மிருகங்களுக்கு
உணவு, ஏர் உழுதல், உயிர் காத்தல், கன்னிகாதானம்.


** திருத்தவத்துறையின் இன்றைய பெயர் 'லால்குடி'. திருச்சிக்கு அருகில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1249  pg 2.1250  pg 2.1251  pg 2.1252 
 WIKI_urai Song number: 923 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 919 - niraiththa niththila (thiruththavaththuRai)

niraiththa niththila neeLmaNi mAlaikaL
     poruththa veRpiNai mArmulai mElaNi
          neRiththa neykkuzhal vALvizhi mAmathi ...... mukamAnAr

neLiththa sitRidai mElkalai yAdaiyai
     yuduththi yaththamu LOrthamai yEmayal
          nirappi niththamum veethiyil nEruRu ...... neRiyAlE

karaiththi thakkuyil pOlmozhi mAtharkaL
     valaikku LiRchuzha lAvakai yEyuna
          kazhatRu thiththidu vAzhvathu thAnmana ...... thuRamEvik

kathiththa paththamai sAladi yArsapai
     mikuththi zhikkuNa pAthaka nEnuyar
          kathikka duththuyar vAkavu mEyaru ...... LuraiyAthO

varaiththa nukkarar mAdhava mEvina
     rakaththi daththinil vAzhsiva nArthiru
          maNicche vikkuLmeynj njAnama thOthiya ...... vadivElA

mathiththa muththami zhAyvinar mElava
     ruraiththu Laththiru vAsaka mAnathu
          manaththu Leththazha kArpukazh veesiya ...... maNimAdath

thiraikka daRporu kAviri mAnathi
     perukke duththume pAyvaLa neerpoli
          sezhiththa neRchenel vArika LEkuvai ...... kuvaiyAkac

cherukku seyppathi vAzhmuru kAaRam
     vaLarththa nithyakal yANikru pAkari
          thiruththa vaththuRai mAnakar thAnuRai ...... perumALE.

......... Meaning .........

niraiththa niththala(m) neeL maNi mAlaikaL poRuththa veRpu iNai mAr mulai mEl aNi: These whores display the cloth that covers their mountain-like bosom bedecked with strings of pearls and long chains embedded with rubies,

neRiththa neyk kuzhal vAL vizhi mA mathi muka mAnAr: their curly and greasy hair, sword-like eyes and beautiful face like the moon;

neLiththa sitRidai mEl kalai Adaiyai uduththi aththam uLOr thamaiyE mayal nirappi: they wear a sari around their quivering and slender waist, clasped with golden band (mEkalai); they fill moneyed people with enchantment by stimulating them passionately;

niththamum veethiyil nEr uRu neRiyAlE karaiththu ithak kuyil pOl mozhi mAtharkaL valaikku u(L) Lil suzhalA vakaiyE: every day, on the street, they coax people to their place and speak to them nicely in a cooing voice of the cuckoo; saving me from the fall into their web and reeling under it,

una kazhal thuthiththidu vAzhvu athu thAn manathu uRa mEvi: I must set my mind to lead a life dedicated to the worship of Your hallowed feet;

kathiththa paththi amai sAl adiyAr sapai mikuththu izhik kuNa pAthakanEn uyar kathikku aduththu uyarvAkavumE aruL uraiyAthO: I have been the worst sinner ridiculing the assembly of Your devotees who are filled up with natural and spontaneous devotion; will You not kindly preach to me so that I could attain prosperous and blissful state?

varaith thanuk karar mA thavam mEvinar akaththu idaththinil vAzh sivanAr thiru maNis sevikkuL meynj njAnam athu Othiya vadivElA: He held in His arm Mount MEru bending it as a bow; He dwells in the heart of those who undertake righteous penance; into the famous and beautiful ears of that Lord SivA You preached the principle of True Knowledge, Oh Lord with the sharp spear!

mathiththa muththamizh Ayvinar mElavar uraiththuLa thiruvAsakam Anathu manaththuL eththu: This place is extolled by devotees wholeheartedly cherishing the words of wisdom spoken by great people who have researched into the three illustrious branches of Tamil language;

azhakAr pukazh veesiya maNi mAda thiraik kadal poru kAviri mA nathi perukku eduththume pAy vaLa neer poli sezhiththa: it has many tall and famous buildings with balconies embedded with beautiful gems; it also flourishes with rich and abundant flood water gushing in the wide river KAvEri which looks like the wavy sea;

nel se(n) nel vArikaLE kuvai kuvaiyAkac cherukku seyppathi vAzh murukA: this is VayalUr, Your abode, where harvested paddy and red rice crops are strewn everywhere in heaps after heaps, Oh Lord MurugA!

aRam vaLarththa nithya kalyANi krupAkari thiruththavaththuRai mA nakar thAn uRai perumALE.: She is the eternal Benefactor (Nithya KalyANi) who carried out (thirty-two) religious duties* (in Kancheepuram); She is the gracious Goddess UmAdEvi who is seated in ThiruththavaththuRai** (LAlgudi), which is also Your abode, Oh Great One!


* Thirty-two religious duties are listed in Periya PurANam as follows:

Road-laying; Food for teachers; Food for all the six kinds of religious people; Feeding the cows; Feeding the prisoners; Alms; Distribution of eatables; Feeding the orphans; Obstetrics; Orphanage; Feeding milk to babies; Cremation of destitute corpses; Clothing the orphans; Whitewashing old houses; Offering medicines; Washing others' clothes; Barber's work; Providing glasses for visually-impaired; Piercing ears and providing studs; Eyedrops for medication; Providing hair oil and hair cream; Fomentation for relief; Protecting others from perils; Free distribution of potable water; Provision of free accommodation; Provision of bathing facility; Rearing shady groves; Providing sandals and shoes; Feeding animals; Ploughing the field; Providing security guard; and Conducting marriages.


** ThiruththavaththuRai is now known as LAlgudi, situated 10 miles north of TiruchirAppaLLi.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 919 niraiththa niththila - thiruththavaththuRai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]