திருப்புகழ் 914 முலை மறைக்கவும்  (வயலூர்)
Thiruppugazh 914 mulaimaRaikkavum  (vayalUr)
Thiruppugazh - 914 mulaimaRaikkavum - vayalUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தத்தன தானன தானன
     தனன தத்தன தானன தானன
          தனன தத்தன தானன தானன ...... தனதான

......... பாடல் .........

முலைம றைக்கவும் வாசலி லேதலை
     மறைய நிற்கவும் ஆசையு ளோரென
          முகிழ்ந கைச்சிறு தூதினை யேவவு ...... முகமோடே

முகம ழுத்தவும் ஆசைகள் கூறவு
     நகம ழுத்தவும் லீலையி லேயுற
          முறைம சக்கவும் வாசமு லாமல ...... ரணைமீதே

கலைநெ கிழ்க்கவும் வாலிப ரானவர்
     உடல்ச ளப்பட நாள்வழி நாள்வழி
          கறைய ழிக்கவு நானென வேயணி ...... விலையீதே

கடிய சத்திய மாமென வேசொலி
     யவர்கொ டப்பண மாறிட வீறொடு
          கடுக டுத்திடு வாரொடு கூடிய ...... தமையாதோ

மலையை மத்தென வாசுகி யேகடை
     கயிறெ னத்திரு மாலொரு பாதியு
          மருவு மற்றது வாலியு மேலிட ...... அலையாழி

வலய முட்டவொ ரோசைய தாயொலி
     திமிதி மித்திமெ னாவெழ வேயலை
          மறுகி டக்கடை யாவெழ மேலெழு ...... மமுதோடே

துலைவ ருத்திரு மாமயில் வாழ்வுள
     வயலை யற்புத னேவினை யானவை
          தொடர றுத்திடு மாரிய கேவலி ...... மணவாளா

துவள்க டிச்சிலை வேள்பகை வாதிரு
     மறுவொ ரெட்டுட னாயிர மேலொரு
          துகள றுத்தணி யாரழ காசுரர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

முலை மறைக்கவும் வாசலிலே தலை மறைய நிற்கவும் ஆசை
உ(ள்)ளோர் என முகிழ் நகைச் சிறு தூதினை ஏவவும்
...
மார்பகத்தை மறைக்கவும், ஒரு வாசற் படியருகில் தலை மறையும்படி
நிற்கவும், ஆசை கொண்டுள்ளவர்கள் போல, அரும்பு போன்ற பற்களைக்
காட்டிப் (புன்னகை என்னும்) ஒரு சிறிய தூதை அனுப்பவும்,

முகம் ஓடே முகம் அழுத்தவும் ஆசைகள் கூறவு(ம்) நகம்
அழுத்தவும் லீலையிலே உற முறை மசக்கவும்
... முகத்துடன்
முகத்தை வைத்து அழுத்தவும், ஆசை மொழிகளைப் பேசவும், நகங்
கொண்டு அழுத்தவும், காம லீலைகளில் பொருந்துமாறு (மாமா,
அத்தான் என்ற) உறவு முறைகளைக் கூறி மயக்கவும்,

வாசம் உலா மலர் அணை மீதே கலை நெகிழ்க்கவும் வாலிபர்
ஆனவர் உடல் சளப்பட நாள் வழி நாள் வழி கறை
அழிக்கவும்
... நறு மணம் உலாவும் மலர்ப் படுக்கையின் மேல் ஆடையை
நெகிழ்ச்சியுறச் செய்தும், இளைஞர்களின் உடல் துன்பப்படவும், நாட்பட
நாட்பட இரத்தத்தைச் கெடச் செய்யவும்,

நான் எனவே அ(ண்)ணி விலை ஈதே கடிய சத்தியமாம்
எனவே சொ(ல்)லி அவர் கொடு அப்பணம் மாறிட வீறொடு
கடுகடுத்திடுவாரொடு கூடியது அமையாதோ
... நான் உள்ளேன்
என்பது போல் சார்ந்து நெருங்கி, (எனக்குக் கொடுக்க வேண்டிய)
பொருள் இதுவே, (நான் கூறுவது) கண்டிப்பான உண்மை மொழியாகும்
என்றெல்லாம் சொல்லி, அவர்கள் கொடுத்து வரும் அந்தப் பணம் வருதல்
இல்லாமல் மாறியவுடன், வெறுப்பும், கோபமும் கலந்த
மனப்பான்மையோடு, சிடு சிடு என்று சினந்து பேசுவாரோடு ஈடுபட்டு
ஒழுகியது முடிவு அடையாதோ?

மலையை மத்து என வாசுகியே கடை கயிறு எனத் திருமால்
ஒரு பாதியும் மருவும் மற்றது வாலியும் மேல் இட
... (மந்தர)
மலையை மத்தாக நாட்டி, வாசுகி என்னும் பாம்பைக் கடைகின்ற
கயிறாகக் கொண்டு, திருமால் ஒரு பாதிப் புறமும், பொருந்திய
மற்றொரு பாதிப் புறத்தை வாலியுமாக முற்பட்டு,

அலை ஆழி வலய முட்ட ஒர் ஓசையதாய் ஒலி திமிதி மித்திம்
எனா எழவே
... அலைகள் வீசும் கடலிலிருந்து பூவலயம் முழுமையும்
ஒரே பேரொலியாய் சப்தம் திமி திமித்திம் என்று கிளம்பவும்,

அலை மறுகிடக் கடையா எழ மேல் எழும் அமுதோடே துலை
வருத் திரு மா மயில் வாழ்வுள வயலை அற்புதனே
... கடல்
கலங்கும்படி கடைதலை மேற்கொள்ள, (அப்போது) மேலே எழுந்த
அமுதுடனே அதற்கு ஒப்பாக வந்த அழகிய மயில் போன்ற லக்ஷ்மியின்
வாழ்க்கைக்கு இடமாக (செல்வச் சிறப்போடு) விளங்கும் வயலூரில்*
உறையும் அற்புத மூர்த்தியே,

வினையானவை தொடர் அறுத்திடும் ஆரிய கேவலி
மணவாளா
... வினைகளின் தொடர்பை அறுத்து எறியும் அழகு,
மேன்மை இவை கொண்ட, முக்தியைத் தரவல்ல, தேவயானையின்
மணவாளனே,

துவள் கடிச் சிலை வேள் பகைவா திரு மறு ஒர் எட்டுடன்
ஆயிரம் மேல் ஒரு துகள் அறுத்து அணி ஆர் அழகா சுரர்
பெருமாளே.
... வளைந்துள்ள, புதுமை வாய்ந்த (கரும்பு) வில்லைக்
கொண்ட காம வேளாகிய மன்மதனுக்கு எதிராய் வந்து (அவன் தரும்
சிற்றின்பத்துக்கு எதிரான பேரின்பத்தைத் தரும்) செவ்வேளே, அழகிய
மச்ச ரேகை ஆயிரத்து எட்டுக்கும் மேலாகக் கொண்டு, குற்றமெல்லாம்
அறுத்து எறியும் ஒப்பற்ற வேலைக் கொண்ட அழகனே, தேவர்கள்
பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1231  pg 2.1232  pg 2.1233  pg 2.1234 
 WIKI_urai Song number: 918 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 914 - mulai maRaikkavum (vayalUr)

mulaima Raikkavum vAsali lEthalai
     maRaiya niRkavum Asaiyu LOrena
          mukizhna kaicchiRu thUthinai yEvavu ...... mukamOdE

mukama zhuththavum AsaikaL kURavu
     nakama zhuththavum leelaiyi lEyuRa
          muRaima sakkavum vAsamu lAmala ...... raNaimeethE

kalaine kizhkkavum vAlipa rAnavar
     udalsa Lappada nALvazhi nALvazhi
          kaRaiya zhikkavu nAnena vEyaNi ...... vilaiyeethE

kadiya saththiya mAmena vEsoli
     yavarko dappaNa mARida veeRodu
          kaduka duththidu vArodu kUdiya ...... thamaiyAthO

malaiyai maththena vAsuki yEkadai
     kayiRe naththiru mAloru pAthiyu
          maruvu matRathu vAliyu mElida ...... alaiyAzhi

valaya muttavo rOsaiya thAyoli
     thimithi miththime nAvezha vEyalai
          maRuki dakkadai yAvezha mElezhu ...... mamuthOdE

thulaiva ruththiru mAmayil vAzhvuLa
     vayalai yaRputha nEvinai yAnavai
          thodara Ruththidu mAriya kEvali ...... maNavALA

thuvaLka dicchilai vELpakai vAthiru
     maRuvo rettuda nAyira mEloru
          thukaLa RuththaNi yArazha kAsurar ...... perumALE.

......... Meaning .........

mulai maRaikkavum vAsalilE thalai maRaiya niRkavum Asai u(L)LOr ena mukizh nakaic chiRu thUthinai Evavum: Concealing their bosom, standing at the door-step just hiding their head, sending (their smile as) a symbolic emissary by showing their bud-like teeth as though they are deeply in love,

mukam OdE mukam azhuththavum AsaikaL kURavu(m) nakam azhuththavum leelaiyilE uRa muRai masakkavum: pressing their face with (their suitor's) face, chatting away with provocative words, making nail-marks, enchantingly calling (their suitors) with various invented relationships (like uncle, cousin etc.),

vAsam ulA malar aNai meethE kalai nekizhkkavum vAlipar Anavar udal saLappada nAL vazhi nAL vazhi kaRai azhikkavum: loosening their attire lying on top of the flowery and fragrant bed, causing destruction to the bodies of young men, contaminating their blood day after day,

nAn enavE a(N)Ni vilai eethE kadiya saththiyamAm enavE so(l)li avar kodu appaNam mARida veeRodu kadukaduththiduvArodu kUdiyathu amaiyAthO: getting close (to their suitors) as if they are announcing their presence and declaring "This is the amount that you have to give me; trust me, whatever I say is nothing but truth", and once the inflow of money ceases, they display an attitude of hatred and rage by admonishing them with harsh words; and why is there no end to my indulging with these whores?

malaiyai maththu ena vAsukiyE kadai kayiRu enath thirumAl oru pAthiyum maruvum matRathu vAliyum mEl ida: Erecting the mount (Manthara) as the churning rod and using the serpent VAsuki as the churning rope, one side of the rope was held by Lord VishNu and the other side by VAli when they engaged in the act (of churning the milky ocean);

alai Azhi valaya mutta or OsaiyathAy oli thimithi miththim enA ezhavE: from the wavy seas, a loud noise emerged and encompassed the entire world sounding "thimithi miththim";

alai maRukidak kadaiyA ezha mEl ezhum amuthOdE thulai varuth thiru mA mayil vAzhvuLa vayalai aRputhanE: as the churning intensified agitating the sea, nectar came up on top of the ocean, and along with that, Goddess Lakshmi, sweet like that nectar, and looking like a beautiful peacock, emerged; apt for the residence of that Lakshmi is the (prosperous) town VayalUr*, and You are seated there, Oh Wondrous Lord!

vinaiyAnavai thodar aRuththidum Ariya kEvali maNavALA: She has the charm and renown that could sever the bondage with past deeds and deliver liberation; and You are the consort of that DEvayAnai, Oh Lord!

thuvaL kadic chilai vEL pakaivA thiru maRu or ettudan Ayiram mEl oru thukaL aRuththu aNi Ar azhakA surar perumALE.: Confronting Manmathan, the God of Love, who has a bent and novel bow (of sugarcane), You outshone him (by offering eternal bliss rather than the transitional pleasure Manmathan could provide), Oh reddish Lord! Over a thousand and eight beautiful moles adorn Your body, and You hold the matchless spear that could sever and cast away all blemishes, Oh Handsome One! You are the Lord of the celestials, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 914 mulai maRaikkavum - vayalUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]