திருப்புகழ் 907 கமை அற்ற சீர்  (வயலூர்)
Thiruppugazh 907 kamaiatRaseer  (vayalUr)
Thiruppugazh - 907 kamaiatRaseer - vayalUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதத்த தானான தனதத்த தானான
     தனதத்த தானான ...... தந்ததான

......... பாடல் .........

கமையற்ற சீர்கேடர் வெகுதர்க்க கோலாலர்
     களையுற்று மாயாது ...... மந்த்ரவாதக்

கடைகெட்ட ஆபாத முறுசித்ர கோமாளர்
     கருமத்தின் மாயாது ...... கொண்டுபூணுஞ்

சமயத்த ராசார நியமத்தின் மாயாது
     சகளத்து ளேநாளு ...... நண்புளோர்செய்

சரியைக்ரி யாயோக நியமத்தின் மாயாது
     சலனப்ப டாஞானம் ...... வந்துதாராய்

அமரிற்சு ராபான திதிபுத்ர ராலோக
     மதுதுக்க மேயாக ...... மிஞ்சிடாமல்

அடமிட்ட வேல்வீர திருவொற்றி யூர்நாதர்
     அருணச்சி காநீல ...... கண்டபார

மமபட்ச மாதேவ ரருமைச்சு வாமீநி
     மலநிட்க ளாமாயை ...... விந்துநாதம்

வரசத்தி மேலான பரவத்து வேமேலை
     வயலிக்குள் வாழ்தேவர் ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

கமை அற்ற சீர் கேடர் வெகு தர்க்க கோலாலர் களை உற்று
மாயாது
... பொறுமை இல்லாத ஒழுங்கீனர்களும், மிகுந்த தர்க்கம்
பேசுகிற ஆடம்பர வாதிகளுமான மனிதர்களால் சோர்வு அடைந்து
மடியாமலும்,

மந்த்ர வாத கடை கெட்ட ஆபாதம் உறு சித்ர கோமாளர்
கருமத்தின் மாயாது
... மந்திர வாதம் செய்யும் மிக இழிவு நிலையில்
உள்ள தாழ்மை வாய்ந்த சித்திரப் பேச்சு பேசி கொண்டாட்டம்
போடுபவர்களின் செய்கைகளில் சிக்கி மடியாமலும்,

கொண்டு பூணும் சமயத்தர் ஆசார நியமத்தின் மாயாது ...
தங்கள் சமய நெறியை மேற் கொண்டு ஒழுகும் வெவ்வேறு
சமயங்களைச் சேர்ந்தோரின் கட்டுப்பாடுகளில் மடியாமலும்,

சகளத்து உளே நாளு(ம்) நண்பு உளோர் செய் சரியை க்ரியா
யோக நியமத்தின் மாயாது
... உருவ வழிபாடு செய்து நாள் தோறும்
பக்தி வைத்துள்ளோர் புரியும் சரியை, கிரியை, யோகம்* எனப்படும்
ஒழுக்கங்களை மேற் கொண்டு மடியாமலும்,

சலனப் படா ஞானம் வந்து தாராய் ... (அதனால்,) எவ்விதமான
சஞ்சலங்களுக்கும் உட்படாத ஞானத்தை நீ எனக்குத் தந்தருளுக.

அமரில் சுரா பான திதி புத்ரர் ஆலோகம் அது துக்கமே ஆக
மிஞ்சிடாமல்
... போரில் கள் குடிக்கும் (திதியின் மக்களாகிய)
அசுரர்களின் அறியாமையானது உலகத்துக்குத் துக்கத்தையே தர,
அந்தத் துக்கத்தை ஒழிக்க,

அடம் இட்ட வேல் வீர ... எப்போதும் துடித்துக் கொண்டிருக்கும்
வேலினைச் செலுத்திய வீரனே,

திருவொற்றியூர் நாதர் அருண சிகா நீல கண்ட பாரம் மம
பட்ச மா தேவர் அருமைச் சுவாமீ
... திருவொற்றியூர் நாதரும்,
சிவந்த ஜடை, நீல கண்டம், பெருமை ஆகியவற்றைக் கொண்டவரும்,
என் மீது அன்புள்ளவருமான மகாதேவர் சிவபெருமானுக்கு
அருமையாக வாய்ந்த சுவாமியே,

நிமல நிட்களா மாயை விந்து நாதம் வர சத்தி மேலான பர
வத்துவே
... மாசில்லாதவனே, உருவம் இல்லாதவனே, மாயை, விந்து,
நாதம், வரங்களைத் தரும் சக்தி இவைகளுக்கு மேம்பட்ட பரம் பொருளே**,

மேலை வயலிக்குள் வாழ் தேவர் தம்பிரானே. ... மேலை
வயலூர்*** என்னும் தலத்தில் வாழ்கின்ற, தேவர்களின் தம்பிரானே.


* நான்கு பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:

1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம்
வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு
பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.

2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல்.
இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.

3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு
ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி,
முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.

4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு
ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'.

. . . சிவஞான சித்தியார் சூத்திரம்.


** இறைவன் ஏக நாதன் என்பதைக் குறிக்கும்.
அருவத் திருமேனி நான்கு = சிவம், சக்தி, நாதம், விந்து.
உருவத் திருமேனி நான்கு = மகேசன், ருத்திரன், மால், அயன்.
அருவுருவத் திருமேனி ஒன்று = சதாசிவம்.


*** வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான்
சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.


வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1215  pg 2.1216  pg 2.1217  pg 2.1218 
 WIKI_urai Song number: 911 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Kumaravayaloor Thiru T. Balachandhar
'குமார வயலூர்' திரு T. பாலசந்தர்

Thiru T. Balachandhar
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 907 - kamai atRa seer (vayalUr)

kamaiyatRa seerkEdr vekutharkka kOlAlar
     kaLaiyutRu mAyAthu ...... manthravAthak

kadaiketta ApAtha muRusithra kOmALar
     karumaththin mAyAthu ...... koNdupUNunj

samayaththa rAsAra niyamaththin mAyAthu
     sakaLaththu LEnALu ...... naNpuLOrsey

sariyaikri yAyOka niyamaththin mAyAthu
     salanappa dAnjAnam ...... vanthuthArAy

amriRsu rApAna thithiputhra rAlOka
     mathuthukka mEyAka ...... minjidAmal

adamitta vElveera thiruvotRi yUrnAthar
     aruNacchi kAneela ...... kaNdapAra

mamapatcha mAthEva rarumaic cuvAmeeni
     malanitka LAmAyai ...... vinthunAtham

varasaththi mElAna paravaththu vEmElai
     vayalikkuL vAzhthEvar ...... thambirAnE.

......... Meaning .........

kamai atRa seer kEdar veku tharkka kOlAlar kaLai utRu mAyAthu: I do not wish to perish being intimidated by people who are impatient, indisciplined, argumentative and ostentatious;

manthra vAtha kadai ketta ApAtham uRu sithra kOmALar karumaththin mAyAthu: nor do I wish to perish being ensnared into the actions of base people who revel in cheap tricks of sorcery and crafty speech;

koNdu pUNum samayaththar AsAra niyamaththin mAyAthu: I do not wish to die being strangulated by the stringent ritualistic rules of various religious zealots;

sakaLaththu uLE nALu(m) naNpu uLOr sey sariyai kriyA yOka niyamaththin mAyAthu: nor do I wish to die undertaking the rituals of sariyai, kiriyai and yOgam* followed by those idol worshippers who make offerings everyday;

salanap padA njAnam vanthu thArAy: (therefore,) kindly bless me with that knowledge which would not be subject to any kind of wavering!

amaril surA pAna thithi puthrar AlOkam athu thukkamE Aka minjidAmal adam itta vEl veera: When the ignorance of the demons (sons of Thithi), who indulged in drinking alcohol in the battlefield, caused excessive misery to this world, You ended that misery by wielding Your dynamic and vibrant spear, Oh valorous Lord!

thiruvotRiyUr nAthar aruNa sikA neela kaNda pAram mama patcha mA thEvar arumaic suvAmee: He is the Lord of TiruvotRiyUr; He possesses reddish matted hair, blueish neck and a lot of fame; He is extremely kind towards me; You are the dear master of that MahAdEvAr, namely, Lord SivA!

nimala nitkaLA mAyai vinthu nAtham vara saththi mElAna para vaththuvE: Oh Impeccable One, You are formless! You are the Supreme Principle above the delusion, 'vindhu nAdham'** and the boon-yielding Shakthi (Power)!

mElai vayalikkuL vAzh thEvar thambirAnE.: You have Your abode in this famous place, MElai VayalUr***. You are the Lord of the celestials, Oh Great One!


* The four methods of worship are:

1.  sariyai:  Worship through service in temples such as doing penance, washing the floor, lighting the lamps, maintaining the flower garden, plucking the flowers for offering, making of garlands, singing of hymns, decorating the deities etc. This is known as 'dhAdha mArgam - sAlOkam'.

2.  kiriyai:  Worship, both inwardly and externally, of a God with a form through daily offerings (pUjA) and with several pUjA materials. This is called 'puthra mArgam - sameepam'.

3.  yOgam:  Inward worship only of a formless God by control of senses, holding the oxygen in the inhaled air and letting it through the six centres of 'kuNdalini chakrA' after understanding each state fully, experiencing the flow of nectar in the 'Lunar zone' between the eyebrows and letting it seep throughout the body and meditating on the full effulgence. This is 'sakha mArgam - sArUbam'.

4.  gnAnam:  Ceasing all external and internal activities, this method consists of worshipping through the medium of intellect alone, seeking the True Knowledge. This is 'san mArgam - sAyujyam'.


'nAdha bhindu' ('vindhu') is explained here:

'nAdha' is the principle of sound. It is also known as 'nAma' or name. From this 'nAdha' or name, came out 'bhindu' or 'rUba' which is the form. These name and form are 'nAma' and 'rUba' or 'nAdha' and 'bhindu', what is known as 'OmkAra praNava', and these are the seed and seat of all matter and force. 'nAdha' is represented by a line or a pillar and the 'bhindu' by a disc or elliptic base. It is this 'nAdha' or vibration that is known as 'lingA', and 'bhindu' is what is known as its 'peetam'. This 'lingam' along with 'peetam' is the principle of name and form, that is beyond any comprehension, and the form that could be comprehended little better came out of the 'bhindu' in the order of evolution. This is what is known as 'Siva-Sakthi aikkiyam' which is 'rUbArUbam' ('rUba - arUbam'), that is with shape or without shape. (reference - Siva Agamam and Saiva SidhdhAndham).


** This denotes the Supremacy and Oneness of the Lord.

The formless aspects of God are four:

Sivam, Shakthi, NAdham and Vindhu, namely, Lord SivA, Mother ParAsakthi ('lingam-peetam');

The four forms of idol worship are:

MahEswaran, Rudran, VishNu and BrahmA;

The One with or without form is SadhAsivam.


*** VayalUr was the capital of Rajagembeera Nadu, a section of the ChOzha Nadu, where AruNagirinAthar got the boon of singing a Thiruppugazh daily.


VayalUr is about 6 miles southwest of ThiruchirApaLLi.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 907 kamai atRa seer - vayalUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]