திருப்புகழ் 881 குடங்கள் நிரை  (திருக்குரங்காடுதுறை)
Thiruppugazh 881 kudangkaLnirai  (thirukkurangkadudhuRai)
Thiruppugazh - 881 kudangkaLnirai - thirukkurangkadudhuRaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனந்த தனத்தான தனந்த தனத்தான
     தனந்த தனத்தான ...... தனதான

......... பாடல் .........

குடங்கள் நிரைத்தேறு தடங்கள் குறித்தார
     வடங்கள் அசைத்தார ...... செயநீலங்

குதம்பை யிடத்தேறு வடிந்த குழைக்காது
     குளிர்ந்த முகப்பார்வை ...... வலையாலே

உடம்பு மறக்கூனி நடந்து மிகச்சாறி
     யுலந்து மிகக்கோலு ...... மகலாதே

உறங்கி விழிப்பாய பிறந்த பிறப்பேனு
     முரங்கொள பொற்பாத ...... மருள்வாயே

விடங்கள் கதுப்பேறு படங்க ணடித்தாட
     விதங்கொள் முதற்பாய ...... லுறைமாயன்

விலங்கை முறித்தோடி யிடங்கள் வளைத்தேறு
     விளங்கு முகிற்கான ...... மருகோனே

தடங்கொள் வரைச்சாரல் நளுங்கு மயிற்பேடை
     தழங்கு மியற்பாடி ...... யளிசூழத்

தயங்கு வயற்சாரல் குரங்கு குதித்தாடு
     தலங்க ளிசைப்பான ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

குடங்கள் நிரைத்து ஏறு தடங்கள் குறித்து ஆர வடங்கள்
அசைத்தார
... குடங்கள் வரிசையாக அமையப் பெற்றது போல
விளங்கும் மார்பகங்களைக் கருத்தில் வைத்து, (ஆங்கே) முத்து
மாலைகள் பொருந்த அசைத்த விலைமகளிருடைய

குதம்பை இடத்து ஏறு வடிந்த குழைக் காது(ம்) செய நீலம்
குளிர்ந்த முகப் பார்வை வலையாலே
... செவிகள் இருக்கும்
இடத்திலே விளக்கமுற்று நீண்ட குண்டலங்களை வெட்டுவது போலப்
பாய்கின்ற, வெற்றி விளங்கும் நீலோற்பலம் போன்ற விழிப் பார்வை
உடைய முகத் தோற்றம் என்னும் வலையாலே,

உடம்பும் அறக் கூனி நடந்து மிகச் சாறி உலந்து மிகக்
கோலும் அகலாதே
... உடல் கெட்டுப் போய் மிகவும் கூன் அடைந்து,
நடையும் ஒரேயடியாகச் சரிந்து, தோலும் மிகவும் வற்றி, கையில் கோலும்
நீங்காமல்,

உறங்கி விழிப்பு ஆய பிறந்த பிறப்பேனும் உரம் கொள
பொன் பாதம் அருள்வாயே
... தூங்கி விழித்துக் கொண்டது போன்ற,
(இப்போது) பிறந்துள்ள இந்தப் பிறப்பிலாவது திண்மை (ஞானம்)
பெறும்படியாக அழகிய திருவடியை அருள்வாயாக.

விடங்கள் கதுப்பு ஏறு படங்கண் நடித்து ஆட அ(வ்)விதம்
கொள் முதல் பாயல் உறை மாயன்
... நஞ்சு கன்னத்தில் ஏற
காளிங்கனது படத்தின் மீது ஆடி நடித்தவனும், அத்தகைமை கொண்ட
சிறந்த (ஆதிசேஷன் என்ற) பாம்புப் படுக்கையில் பள்ளி
கொள்பவனுமான திருமால்,

வில் அங்கை முறிந்து ஓடி இடங்கள் வளைத்து ஏறு விளங்கும்
முகிற்கு ஆன மருகோனே
... சிவதனுசை அழகிய கையால் முறித்து,
காட்டுக்குச் சென்று, தான் சென்ற இடங்கள் எல்லாம் சிறப்பாக்கி
வைத்து விளங்கின மேக நிறமுடைய ராமனாகிய திருமாலுக்கு மருகனே,

தடம் கொள் வரைச் சாரல் நளுங்கும் மயில் பேடை தழங்கும்
இயல் பாடி அளி சூழ
... நீர் நிலைகளைக் கொண்ட மலைச்
சாரல்களில் நடுங்குகின்ற மயிலும் அதன் பேடையும் ஒலி
செய்யும்படியாக பாடி முரலும் வண்டுகள் சூழ,

தயங்கும் வயல் சாரல் குரங்கு குதித்து ஆடும் தலங்கள்
இசைப்பான பெருமாளே.
... விளங்கும் வயல் பக்கங்களைக் கொண்ட
மலைச்சாரலில் குரங்குகள் குதித்து விளையாடும் (திருக்குரங்காடுதுறை*
போன்ற) தலங்களில் மனம் உவந்து வீற்றிருக்கும் பெருமாளே.


* வட குரங்காடுதுறை கும்பகோணத்தை அடுத்த ஐயம்பேட்டைக்கு 4 மைலில்
உள்ளது. தென் குரங்காடுதுறை இப்போது ஆடுதுறை எனப்படும் ஊர்.
திருவிடைமருதூருக்கு கிழக்கே 2 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1147  pg 2.1148  pg 2.1149  pg 2.1150 
 WIKI_urai Song number: 885 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 881 - kudangkaL nirai (thirukkurangkAduthuRai)

kudangaL niraiththERu thadangaL kuRiththAra
     vadangaL asaiththAra ...... seyaneelang

kuthampai yidaththERu vadintha kuzhaikkAthu
     kuLirntha mukappArvai ...... valaiyAlE

udampu maRakkUni nadanthu mikacchARi
     yulanthu mikakkOlu ...... makalAthE

uRangi vizhippAya piRantha piRappEnu
     murangoLa poRpAtha ...... maruLvAyE

vidangaL kathuppERu padanga NadiththAda
     vithangoL muthaRpAya ...... luRaimAyan

vilangai muRiththOdi yidangaL vaLaiththERu
     viLangu mukiRkAna ...... marukOnE

thadangoL varaicchAral naLungu mayiRpEdai
     thazhangu miyaRpAdi ...... yaLicUzhath

thayangu vayaRchAral kurangu kuthiththAdu
     thalanga LisaippAna ...... perumALE.

......... Meaning .........

kudangaL niraiththu ERu thadangaL kuRiththu Ara vadangaL asaiththAra: Having a fixation of mind on the whores' breasts that appear like a row of pots neatly arranged, thinking about the strings of pearl that wave over their bosom,

kuthampai idaththu ERu vadintha kuzhaik kAthu(m) seya neelam kuLirntha mukap pArvai valaiyAlE: and falling a victim to the net of their charming face with eyes like blue lily whose movement extends up to the ears as if to cut the swinging ear-studs elegantly displayed on the lobes,

udampum aRak kUni nadanthu mikac chARi ulanthu mikak kOlum akalAthE: my body has deteriorated so much that I have developed a hunch-back; my gait has stumbled, my skin has dried up, and the walking-stick has never left my hand;

uRangi vizhippu Aya piRantha piRappEnum uram koLa pon pAtham aruLvAyE: this birth feels as though I have just woken up after sleep; at least, in this birth, I should obtain true knowledge firmly; for that, kindly grant me Your hallowed feet, Oh Lord!

vidangaL kathuppu ERu padangaN nadiththu Ada a(v)vitham koL muthal pAyal uRai mAyan: When He (Lord KrishNa) danced on top of the hood of the Serpent KaLingan, poison shot up to its cheeks; using a similar poison-filled great Serpent, AdhisEshan, as His bed, He slumbered on it; He is the great Lord VishNu;

vil angai muRinthu Odi idangaL vaLaiththu ERu viLangum mukiRku Ana marukOnE: He broke the famous bow (of Lord SivA) with His hallowed hand; He then proceeded to the forest, and wherever He went, He made that place venerable; He is of the complexion of the black cloud; and You are the nephew of that Lord RAmA (VishNu), Oh Lord!

thadam koL varaic chAral naLungum mayil pEdai thazhangum iyal pAdi aLi cUzha: Several ponds are seen in the valley of the mountain where the peacock and its peahen shiver in the drizzle shrieking loudly, while the swarming beetles hum musically;

thayangum vayal sAral kurangu kuthiththu Adum thalangaL isaippAna perumALE.: in the fertile fields of this valley, the monkeys jump about playfully (in places like ThirukkurangAduthuRai*) where You are seated with relish, Oh Great One!


* North KurangkAduthuRai is at a distance of 4 miles from AyyampEttai, near KumbakONam.
South KurangkAduthuRai, is now simply known as AaduthuRai, which is 2 miles to the east of ThiruvidaimarudhUr, near KumbakONam.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 881 kudangkaL nirai - thirukkurangkadudhuRai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]