திருப்புகழ் 874 தரையினில் வெகுவழி  (கூந்தலூர்)
Thiruppugazh 874 tharaiyinilveguvazhi  (kUndhalUr)
Thiruppugazh - 874 tharaiyinilveguvazhi - kUndhalUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தனதன தாந்த தானன
     தனதன தனதன தாந்த தானன
          தனதன தனதன தாந்த தானன ...... தனதான

......... பாடல் .........

தரையினில் வெகுவழி சார்ந்த மூடனை
     வெறியனை நிறைபொறை வேண்டி டாமத
          சடலனை மகிமைகள் தாழ்ந்த வீணணை ...... மிகுகேள்வி

தவநெறி தனைவிடு தாண்டு காலியை
     யவமதி யதனில்பொ லாங்கு தீமைசெய்
          சமடனை வலியஅ சாங்க மாகிய ...... தமியேனை

விரைசெறி குழலியர் வீம்பு நாரியர்
     மதிமுக வனிதையர் வாஞ்சை மோகியர்
          விழிவலை மகளிரொ டாங்கு கூடிய ...... வினையேனை

வெகுமல ரதுகொடு வேண்டி யாகிலு
     மொருமல ரிலைகொடு மோர்ந்து யானுனை
          விதமுறு பரிவொடு வீழ்ந்து தாடொழ ...... அருள்வாயே

ஒருபது சிரமிசை போந்த ராவண
     னிருபது புயமுட னேந்து மேதியு
          மொருகணை தனிலற வாங்கு மாயவன் ...... மருகோனே

உனதடி யவர்புக ழாய்ந்த நூலின
     ரமரர்கள் முனிவர்க ளீந்த பாலகர்
          உயர்கதி பெறஅரு ளோங்கு மாமயி ...... லுறைவோனே

குரைகழல் பணிவொடு கூம்பி டார்பொரு
     களமிசை யறமது தீர்ந்த சூரர்கள்
          குலமுழு தனைவரு மாய்ந்து தூளெழ ...... முனிவோனே

கொடுவிட மதுதனை வாங்கி யேதிரு
     மிடறினி லிருவென ஏந்து மீசுரர்
          குருபர னெனவரு கூந்த லூருறை ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

தரையினில் வெகுவழி சார்ந்த மூடனை ... இந்தப் புவியில் பல தீய
வழிகளில் ஈடுபடும் மூடனான என்னை,

வெறியனை ... குடிவெறி கொண்ட பித்தனை,

நிறைபொறை வேண்டிடா மத சடலனை ... நற்குணமும்,
பொறுமையும் இருக்கவேண்டும் என்ற விருப்பம் இல்லாத, செருக்கு
மிகுந்த அறிவற்றவனை,

மகிமைகள் தாழ்ந்த வீணணை ... ஒருவித பெருமையும் இல்லாத
தாழ்நிலையில் இருக்கும் வீணனை,

மிகுகேள்வி தவநெறி தனைவிடு தாண்டு காலியை ... நிரம்பின
கேள்வி, தவ வழி இவற்றை விட்டுத் தாண்டி கண்ட வழியில் திரிகின்ற
கெட்டவனை,

அவமதி யதனில் பொலாங்கு தீமைசெய் சமடனை ... பயனற்ற
புத்தியால் கேடுகளும் தீமைகளும் செய்யும் குணம்கெட்டவனை,

வலிய அசாங்கமாகிய தமியேனை ... வேண்டுமென்றே இனநீக்கம்
செய்யப்பட்ட கதியற்றவனை,

விரைசெறி குழலியர் வீம்பு நாரியர் ... நறுமணம் கமழும் கூந்தலை
உடையவர், பிடிவாதம் உள்ள பெண்கள்,

மதிமுக வனிதையர் வாஞ்சை மோகியர் ... சந்திரனை ஒத்த
முகத்தை உடைய மாதர், விருப்பத்தைத் தூண்டும் காம மயக்கியர்,

விழிவலை மகளிரொடு ஆங்கு கூடிய வினையேனை ... கண்
என்னும் வலையை வீசும் மகளிர் - இத்தகையோருடன் அவ்வப்போது
கூடிய தொழிலை உடையவனாகிய என்னை,

வெகுமல ரதுகொடு வேண்டி யாகிலும் ... நிரம்ப மலர்கள் கொண்டு
விரும்பிப் பூஜித்தாகிலும்,

ஒருமலர் இலைகொடும் ஓர்ந்து யானுனை ... ஒரு பூவோ ஓர்
இலையோ கொண்டாகிலும் நான் உன்னை நினைத்து,

விதமுறு பரிவொடு வீழ்ந்து தாழ் தொழ அருள்வாயே ... நல்ல
வகையில் அன்போடு கீழே விழுந்து உனது திருவடிகளைத் தொழுமாறு
அருள்வாயாக.

ஒருபது சிரமிசை போந்த ராவணன் ... பத்துத் தலைகளோடு போர்
செய்ய வந்த ராவணனுடைய

இருபது புயமுடன் ஏந்தும் ஏதியும் ... இருபது தோள்களும், ஏந்திய
வாள் ஆயுதமும்

ஒருகணை தனில் அற வாங்கு மாயவன் மருகோனே ... ஒரே
பாணத்தால் அற்று விழும்படி அம்பு செலுத்திய ராமனாம் மாயத்
திருமாலின் மருகனே,

உனதடியவர்புகழ் ஆய்ந்த நூலினர் ... உன்னுடைய அடியார்களின்
புகழை ஆராய்ந்த நூல் வல்லவர்களும்,

அமரர்கள் முனிவர்கள் ஈந்த பாலகர் ... தேவர்களும், முநிவர்களும்,
கொடைகள் செய்து பாலிப்பவர்களும்,

உயர்கதி பெறஅருளோங்கு மாமயில் உறைவோனே ... உயர்ந்த
நற்கதியைப் பெற, அருள் விளங்கும் அழகிய மயிலில் அமர்ந்திருப்பவனே,

குரைகழல் பணிவொடு கூம்பிடார் ... ஒலிக்கின்ற தண்டையணிந்த
உன்னடியைத் தாழ்மையோடு கும்பிடாமல்,

பொரு களமிசை யறமது தீர்ந்த சூரர்கள் ... போர்க்களத்தில் தர்ம
நெறியைக் கைவிட்ட அசுரர்களின்

குலமுழுது அனைவரு மாய்ந்து தூளெழ முனிவோனே ... குல
முழுமையும் யாவருமாக மாண்டு போய்ப் பொடியாகும்படிக்
கோபித்தவனே,

கொடுவிட மதுதனை வாங்கியே ... ஆலகால விஷத்தைக் கொடு
என்று கூறி வாங்கியே,

திரு மிடறினில் இருவென ஏந்தும் ... அழகிய கழுத்திலேயே இரு
என்று அதை கண்டத்தில் தாங்கும் சிவபிரானுக்கு

ஈசுரர் குருபரன் எனவரு ... சிவ பெருமானின் குருமூர்த்தியாக
வந்தவனே,

கூந்தலூர் உறை பெருமாளே. ... கூந்தலூர்* என்னும் தலத்தில்
வீற்றிருக்கும் பெருமாளே.


* கூந்தலூர் கும்பகோணத்துக்கு தென் கிழக்கே 7 மைலில், அரிசிலாற்றின்
தென் கரையில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1125  pg 2.1126  pg 2.1127  pg 2.1128 
 WIKI_urai Song number: 878 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 874 - tharaiyinil veguvazhi (kUndhalUr)

tharaiyinil veguvazhi sArndha mUdanai
     veRiyanai niRai poRai vEndidA madha
          sadalanai magimaigaL thAzhndha veeNanai ...... migu kELvi

thavaneRi thanaividu thANdu kAliyai
     avamadhi adhanil polAngu theemai sey
          samadanai valiya asAnga mAgiya ...... thamiyEnai

viraiseRi kuzhaliyar veembu nAriyar
     madhimuka vanithaiyar vAnchai mOgiyar
          vizhivalai magaLirod Angu kUdiya ...... vinaiyEnai

vegumalar adhu kodu vEndi yAgilum
     oru malar ilaikodu mOrndhu yAn unai
          vidhamuRu parivodu veezhndhu thALthozha ...... aruLvAyE

orupadhu siramisai pOndha rAvaNan
     irupadhu buyamuda nEndhu mEdhiyum
          orukaNai thanilaRa vAngu mAyavan ...... marugOnE

unadhadiyavar pugazh Ayndha nUlilnar
     amarargaL munivargaL eendha pAlakar
          uyar gathi peRa aruL Ongu mAmayil ...... uRaivOnE

kurai kazhal paNivodu kUmbidAr poru
     kaLamisai aRamadhu theerndha sUrargaL
          kulamuzhu dhanaivaru mAyndhu thULezha ...... munivOnE

koduvidam adhu thanai vAngiyE thiru
     midaRinil iruvena Endhum eesurar
          guruparan enavaru kUndhalUr uRai ...... perumALE.

......... Meaning .........

tharaiyinil veguvazhi sArndha mUdanai: I am an utter fool indulging in all bad ways of the world;

veRiyanai niRai poRai vEndidA madha sadalanai: I am a crazy drunkard and an arrogant scum without any desire to practise virtues or patience;

magimaigaL thAzhndha veeNanai: I am a wastrel at the basest level without any greatness at all;

migu kELvi thavaneRi thanaividu thANdu kAliyai: I am a roaming loafer who has digressed from the path of knowledge and ascetic life;

avamadhi adhanil polAngu theemai sey samadanai: I deliberately harm others due to a useless brain;

valiya asAnga mAgiya thamiyEnai: I have been discarded by the society as an outcast and am left alone;

viraiseRi kuzhaliyar veembu nAriyar: women with fragrant hair, women with an adamant mind,

madhimuka vanithaiyar vAnchai mOgiyar: women with moon-like faces, women who provoke lust,

vizhivalai magaLirod Angu kUdiya vinaiyEnai: and women who trap me with the net of their charming eyes - these are the ones with whom I have illicit relationship time and again; (even though I am such a useless person,)

vegumalar adhu kodu vEndi yAgilum: either by worshipping You with plenty of flowers,

oru malar ilaikodu mOrndhu yAn unai: or by offering a flower or a leaf to You with total contemplation,

vidhamuRu parivodu veezhndhu thALthozha aruLvAyE: You have to graciously make me learn the proper method of prostrating at Your feet with utmost devotion.

orupadhu siramisai pOndha rAvaNan: RAvaNA who came to fight with his ten heads,

irupadhu buyamudan Endhu mEdhiyum: lost his twenty shoulders and the powerful sword he was holding

orukaNai thanilaRa vAngu mAyavan marugOnE: to His single arrow; and He was magical RAmA. You are His nephew!

unadhadiyavar pugazh Ayndha nUlilnar: Those learned researchers who have studied Your devotees' sagas,

amarargaL munivargaL eendha pAlakar: the DEvAs, the sages and the philanthropists

uyar gathi peRa aruL Ongu mAmayil uRaivOnE: are all shown the path of liberation by You; and You are seated on Your great peacock!

kurai kazhal paNivodu kUmbidAr: Those demons who do not bow at Your feet adorned with lilting anklets and

porukaLamisai aRamadhu theerndha sUrargaL: those demons who do not fight according to well-laid war rules based on DharmA

kulamuzhu dhanaivaru mAyndhu thULezha munivOnE: are fully annihilated and reduced to dust by Your rage!

koduvidam adhu thanai vAngiyE: He received the fierce poison in His hand and said

thiru midaRinil iruvena Endhum eesurar: "Stay right at my throat and move no farther"; and He was Lord SivA!

guruparan enavaru kUndhalUr uRai perumALE.: You were SivA's Master, and You chose KUndhalUr* as Your abode, Oh Great One!


* KUndhalUr is near KumbakONam, about 7 miles away in the southeast direction on the southern bank of River Arisil.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 874 tharaiyinil veguvazhi - kUndhalUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]