திருப்புகழ் 852 எகினி னம்பழி  (திருப்பந்தணை நல்லூர்)
Thiruppugazh 852 egininampazhi  (thiruppandhaNai nallUr)
Thiruppugazh - 852 egininampazhi - thiruppandhaNainallUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தந்தன தானன தானன
     தனன தந்தன தானன தானன
          தனன தந்தன தானன தானன ...... தனதான

......... பாடல் .........

எகினி னம்பழி நாடக மாடிகள்
     மயிலெ னுஞ்செய லாரகி நேரல்குல்
          இசையி டுங்குர லார்கட னாளிகள் ...... வெகுமோகம்

எனவி ழுந்திடு வார்முலை மேல்துகில்
     அலைய வுந்திரி வாரெவ ராயினும்
          இளகு கண்சுழல் வார்விலை வேசியர் ...... வலைவீசும்

அகித வஞ்சக பாவனை யால்மயல்
     கொடுவி ழுந்திட ராகமு நோய்பிணி
          யதிக முங்கொடு நாயடி யேனினி ...... யுழலாமல்

அமுத மந்திர ஞானொப தேசமும்
     அருளி யன்புற வேமுரு காவென
          அருள்பு குந்திட வேகழ லார்கழல் ...... அருள்வாயே

ககன விஞ்சையர் கோவென வேகுவ
     டவுணர் சிந்திட வேகடல் தீவுகள்
          கமற வெந்தழல் வேல்விடு சேவக ...... முருகோனே

கரிநெ டும்புலி தோலுடை யாரெனை
     யடிமை கொண்டசு வாமிச தாசிவ
          கடவு ளெந்தையர் பாகம்வி டாவுமை ...... யருள்பாலா

செகமு மண்டமு மோருரு வாய்நிறை
     நெடிய அம்புயல் மேனிய னாரரி
          திருவு றைந்துள மார்பக னார்திரு ...... மருகோனே

தினைவ னந்தனில் வாழ்வளி நாயகி
     வளர்த னம்புதை மார்பழ காமிகு
          திலக பந்தணை மாநகர் மேவிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

எகின் இனம் பழி நாடகம் ஆடிகள் மயில் எனும் செயலார்
அகி நேர் அல்குல் இசை இடும் குரலார் கடனாளிகள்
வெகுமோகம் என விழுந்திடும்
... அன்னப் பறவைகள் கூட்டத்தை
பழிக்கவல்ல நாடகம் நடிப்பவர்கள். மயில் என்று சொல்லத்தக்க
செயலினை உடையவர்கள். பாம்புக்கு ஒப்பான பெண்குறியை
உடையவர்கள். பண்களைக் காட்டும் குரலை உடையவர். (திரும்பிவாரா)
கடன் கொள்ளுபவர்கள். மிக்க மோகம் கொண்டுள்ளோம் என்பவர் போல்
மேலே விழுபவர்கள்.

வார் முலை மேல் துகில் அலையவும் திரிவார் எவராயினும்
இளகு கண் சுழல் வார் விலை வேசியர்
... கச்சு அணிந்த
மார்பகத்தின் மீதுள்ள மேல் ஆடை அசையும்படி திரிபவர்கள். யாராக
இருந்தாலும் இரங்குபவர் போல நெகிழ்ச்சியைக் காட்டும் கண்களைச்
சுற்றுபவர்கள். விலைக்கு உடலை விற்கும் வேசியர்.

வலைவீசும் அகித வஞ்சக பாவனையால் மயல் கொடு
விழுந்திட ராகமு(ம்) நோய் பிணி அதிகமும் கொடு நாய்
அடியேன் இனி உழலாமல்
... காம வலை வீசும் தீமையைத்
தருவதான வஞ்சக நினைப்புள்ள நடத்தையால் மயங்கி, நான் மோகம்
கொண்டு அவர்கள் வலையில் விழுந்திட, ஆசையும், நோய், பிணி
இவைகளை நிரம்பக் கொண்டு நாய் போன்ற அடியேன் இனிமேல்
அலைச்சல் உறாமல்,

அமுத மந்திர ஞான உபதேசமும் அருளி அன்புறவே முருகா
என அருள் புகுந்திடவே கழல் ஆர் கழல் அருள்வாயே
...
அமுதம் போன்ற (சரவணபவ என்னும்) ஆறு எழுத்து மந்திரத்தையும்
ஞான உபதேசத்தையும் எனக்கு அருளி, நான் அன்பு கூடிய மனத்துடன்
முருகா என்று சொல்லும்படியான கழல் அணிந்த உனது திருவடியை
அருள்வாயாக.

ககன விஞ்சையர் கோ எனவே குவடு அவுணர் சிந்திடவே
கடல் தீவுகள் கமற வெம் தழல் வேல் விடு சேவக
முருகோனே
... விண்ணிலுள்ள கல்வி மிக்கோர் கோ என்று அலறி
இரங்க, கிரெளஞ்சமும், ஏழு மலைகளும், அசுரர்களும் அழியுமாறு,
கடலும், தீவுகளும் மிக வேகுதல் உற, கொடிய நெருப்பை வீசும்
வேலாயுதத்தைச் செலுத்திய வலிமை வாய்ந்தவனே, முருகனே,

கரி நெடும் புலி தோல் உடையார் எனை அடிமை கொண்ட
சுவாமி சதாசிவ கடவுள் எந்தையர் பாகம் விடா உமை அருள் பாலா
...
யானை, பெரிய புலி ஆகியவற்றின் தோலைப் புனைந்தவர், என்னை
அடிமையாகக் கொண்ட சுவாமி சதாசிவ மூர்த்திக் கடவுள், எனது தந்தை
ஆகிய சிவபெருமானது (இடது) பாகத்தை விட்டுப் பிரியாத உமா தேவி
அருளிய பாலகனே,

செகமும் அண்டமும் ஓர் உருவாய் நிறை நெடிய அம்புயல்
மேனியனார் அரி திரு உறைந்துள மார்பகனார் திரு
மருகோனே
... உலகங்கள், அண்டங்கள் இவை முழுதிலும் ஓர் உருவாய்
நிறைந்து விளங்கும் பெரிய அழகிய மேக நிறத்து மேனியராகிய திருமால்,
லக்ஷ்மி வாசம் செய்யும் மார்பை உடையவர் ஆகியவரின் அழகிய மருகனே,

தினை வனம் தனில் வாழ் வ(ள்)ளி நாயகி வளர் தனம் புதை
மார்பு அழகா மிகு திலக பந்தணை மாநகர் மேவிய
பெருமாளே.
... தினைப் புனத்தில் வாழ்ந்த வள்ளி நாயகியின் வளர்ச்சி
மிகும் தனத்தில் படிந்த மார்பனே, அழகனே, மிகுந்த சிறப்பு வாய்ந்த
திருப்பந்தணை நல்லூரில்* வீற்றிருக்கும் பெருமாளே.


* இத்தலம் கும்பகோணத்துக்கு அருகிலுள்ள திருவிடைமருதூர் ரயில்
நிலையத்துக்கு வடகிழக்கில் 8 மைல் தொலைவில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1065  pg 2.1066  pg 2.1067  pg 2.1068 
 WIKI_urai Song number: 856 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 852 - egini nampazhi (thiruppandhaNai nallUr)

ekini nampazhi nAdaka mAdikaL
     mayile numcheya lAraki nEralkul
          isaiyi dungkura lArkada nALikaL ...... vekumOkam

enavi zhunthidu vArmulai mElthukil
     alaiya vunthiri vAreva rAyinum
          iLaku kaNchuzhal vArvilai vEsiyar ...... valaiveesum

akitha vanjaka pAvanai yAlmayal
     koduvi zhunthida rAkamu nOypiNi
          yathika mungkodu nAyadi yEnini ...... yuzhalAmal

amutha manthira njAnopa thEsamum
     aruLi yanpuRa vEmuru kAvena
          aruLpu kunthida vEkazha lArkazhal ...... aruLvAyE

kakana vinjaiyar kOvena vEkuva
     davuNar sinthida vEkadal theevukaL
          kamaRa venthazhal vElvidu sEvaka ...... murukOnE

karine dumpuli thOludai yArenai
     yadimai koNdasu vAmisa thAsiva
          kadavu Lenthaiyar pAkamvi dAvumai ...... yaruLbAlA

sekamu maNdamu mOruru vAyniRai
     nediya ampuyal mEniya nArari
          thiruvu RainthuLa mArpaka nArthiru ...... marukOnE

thinaiva nanthanil vAzhvaLi nAyaki
     vaLartha namputhai mArpazha kAmiku
          thilaka panthaNai mAnakar mEviya ...... perumALE.

......... Meaning .........

ekin inam pazhi nAdakam AdikaL mayil enum seyalAr aki nEr alkul isai idum kuralAr kadanALikaL vekumOkam ena vizhunthidum: They could dance dramatically putting the flock of swans to shame. Their movements are like those of the peacock. Their genitals look like the hood of the cobra. They have a voice that produces a variety of melodies. They run into heavy debts (which they never repay). They fall all over men making them believe that they are very passionate.

vAr mulai mEl thukil alaiyavum thirivAr evarAyinum iLaku kaN chuzhal vAr vilai vEsiyar: While roaming about, they deliberately loosen and wave the upper attire, covering their bosom held tightly by the blouse. They roll their eyes expressing tenderness towards anyone as though they are deeply moved. These whores sell their body for a price.

valaiveesum akitha vanjaka pAvanaiyAl mayal kodu vizhunthida rAkamu(m) nOy piNi athikamum kodu nAy adiyEn ini uzhalAmal: By their treacherous behaviour, they spread their evil net of lust, in which I am ensnared due to delusory passion. Being filled with desire, diseases and affliction, I roam around vainly like a dog; saving me from this sort of roaming about,

amutha manthira njAna upathEsamum aruLi anpuRavE murukA ena aruL pukunthidavE kazhal Ar kazhal aruLvAyE: kindly grant me Your hallowed feet adorned with anklets, along with the nectar-like manthra (saravaNabava) and the preaching of True knowledge so that I am enabled to chant "MurugA" with a heart filled with love, Oh Lord!

kakana vinjaiyar kO enavE kuvadu avuNar sinthidavE kadal theevukaL kamaRa vem thazhal vEl vidu sEvaka murukOnE: The distinguished celestials of letters screamed uncontrollably; Mount Krouncha, the seven mountains and the demons were all destroyed; and the seas and the islands were severely scorched when You wielded the spear spewing blistering flames of fire, Oh Mighty Lord MurugA!

kari nedum puli thOl udaiyAr enai adimai koNda suvAmi sathAsiva kadavuL enthaiyar pAkam vidA umai aruL bAlA: He wraps the hides of the elephant and the huge tiger around His loin; He is Lord SadhAsivan who has taken me over as His humble slave; He is my Father Lord SivA on whose left side Goddess UmA is inseperably concorporate; and You are Her Child, Oh Lord!

sekamum aNdamum Or uruvAy niRai nediya ampuyal mEniyanAr ari thiru uRainthuLa mArpakanAr thiru marukOnE: He is Lord VishNu, of the complexion of the beautiful black cloud, with an enormous singular figure covering all the worlds and planets; on His chest, Goddess Lakshmi is concorporate; and You are His handsome nephew, Oh Lord!

thinai vanam thanil vAzh va(L)Li nAyaki vaLar thanam puthai mArpu azhakA miku thilaka panthaNai mAnakar mEviya perumALE.: Your chest hugs the fully developed bosom of Goddess VaLLi who dwelt in a field of millet, Oh Gorgeous One! You are seated in this famous place, Thirup PanthaNainallUr*, Oh Great One!


* This town is 8 miles northeast of ThiruvidaimaruthUr railway station.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 852 egini nampazhi - thiruppandhaNai nallUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]