திருப்புகழ் 848 சொற்பிழை வராமல்  (திருவாவடுதுறை)
Thiruppugazh 848 soRpizhaivarAmal  (thiruvAvaduthuRai)
Thiruppugazh - 848 soRpizhaivarAmal - thiruvAvaduthuRaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்ததன தான தனத்தனத் தத்ததத்த
     தத்ததன தான தனத்தனத் தத்ததத்த
          தத்ததன தான தனத்தனத் தத்ததத்த ...... தனதான

......... பாடல் .........

சொற்பிழைவ ராம லுனைக்கனக் கத்துதித்து
     நிற்பதுவ ராத பவக்கடத் திற்சுழற்றி
          சுக்கிலவ தார வழிக்கிணக் கிக்களித்து ...... விலைமாதர்

துப்பிறைய தான இதழ்க்கனிக் குக்கருத்தை
     வைத்துமய லாகி மனத்தைவிட் டுக்கடுத்த
          துற்சனம காத கரைப்புவிக் குட்டழைத்த ...... நிதிமேவு

கற்பகஇ ராச னெனப்படைக் குப்பெருத்த
     அர்ச்சுனந ராதி யெனக்கவிக் குட்பதித்து
          கற்றறிவி னாவை யெடுத்தடுத் துப்படித்து ...... மிகையாகக்

கத்திடுமெ யாக வலிக்கலிப் பைத்தொலைத்து
     கைப்பொருளி லாமை யெனைக்கலக் கப்படுத்து
          கற்பனைவி டாம லலைத்திருக் கச்சலிக்க ...... விடலாமோ

எற்பணிய ராவை மிதித்துவெட் டித்துவைத்து
     பற்றியக ராவை யிழுத்துரக் கக்கிழித்து
          எட்கரிப டாம லிதத்தபுத் திக்கதிக்கு ...... நிலையோதி

எத்தியப சாசின் முலைக்குடத் தைக்குடித்து
     முற்றுயிரி லாம லடக்கிவிட் டுச்சிரித்த
          யிற்கணையி ராமர் சுகித்திருக் கச்சினத்த ...... திறல்வீரா

வெற்பெனம தாணி நிறுத்துருக் கிச்சமைத்து
     வர்க்கமணி யாக வடித்திருத் தித்தகட்டின்
          மெய்க்குலம தாக மலைக்கமுத் தைப்பதித்து ...... வெகுகோடி

விட்கதிர தாக நிகர்த்தொளிக் கச்சிவத்த
     ரத்தினப டாக மயிற்பரிக் குத்தரித்து
          மிக்கதிரு வாவ டுநற்றுறைக் குட்செழித்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சொல் பிழை வராமல் உனைக் கனக்கத் துதித்து நிற்பது
வராத பவக் கடத்தில் சுழற்றி
... துதிக்கும் சொற்களில் பிழை ஒன்றும்
வராமல் உன்னை நிரம்பத் துதி செய்து வணங்கி நிற்பது என்பதே
இல்லாத பிறவியாகிய காட்டில் சுழன்று,

சுக்கில அவதார வழிக்கு இணக்கிக் களித்து விலைமாதர்
துப்பு இறையதான இதழ்க் கனிக்குக் கருத்தை வைத்து
...
இந்திரியம் மூலமாக பிறப்பு எடுக்கின்ற வழியில் இணங்கிப் பொருந்தி
மகிழ்ச்சி பூண்டு, விலைமாதர்களின் பவளம் தங்குவது போன்ற
வாயிதழின் ஊறலாகிய பழத்தின் ருசியில் என் எண்ணங்களை வைத்து,

மயலாகி மனத்தை விட்டுக் கடுத்த துற்சன மகாதகரை
புவிக்குள் தழைத்த நிதி மேவு கற்பக இராசன் எனப்
படைக்குப் பெருத்த அர்ச்சுன நராதி எனக் கவிக்குள்
பதித்து
... ஆசை மயக்கம் கொண்டு மனதைக் காமத்தில் முழுவதும்
செலுத்தி, பொல்லாத துர்க்குணம் உடைய பெரும் கொடியவர்களை,
இந்தப் பூமியில் வளப்பம் பொருந்தி செல்வம் நிறைந்த கற்பகத் தரு
போன்ற அரசனே (நீ) என்றும், படையில் மிகச் சிறந்த அர்ச்சுன
அரசன் (நீ) என்றும் கவிகளில் அமைத்து,

கற்று அறி வினாவை எடுத்து அடுத்துப் படித்து மிகையாகக்
கத்திடும் மெய் ஆக வலிக் கலிப்பைத் தொலைத்து
... கற்று
அறிந்த சொற்களைப் பொறுக்கி எடுத்து அந்த மனிதர்களை நெருங்கிப்
போய் அவர்கள் மீது நான் அமைத்த கவிகளைப் படித்து, அளவுக்கு
மிஞ்சி கூச்சலிடும் உடலைக் கொண்டவனாய், வன்மை கொண்ட
பொலிவை இழந்து,

கைப்பொருள் இலாமை எனைக் கலக்கப் படுத்து கற்பனை
விடாமல் அலைத்து இருக்கச் சலிக்க விடலாமோ
...
(வேசையருக்குத் தர) கையில் பொருள் இல்லாத காரணத்தால் என்னைக்
கலக்கமுறச் செய்யும் கற்பனைக் கவிதைகளில் இடைவிடாமல் நான்
அலைச்சல் உறும்படியும் சலிப்புறும்படியும் கை விடலாமோ?

எல் பணி அராவை மிதித்து வெட்டித் துவைத்து பற்றிய
கராவை இழுத்து உரக்கக் கிழித்து
... ஒளி பொருந்திய படத்தை
உடைய பாம்பின் (காளிங்கனின்) தலையில் (நடனமாடி காலால்) மிதித்து
வெட்டிக் கலக்கி, (கஜேந்திரனாகிய) யானையைப் பற்றி இழுத்த
முதலையை வெளியே இழுத்து (தன் சக்ராயுதத்தால்) பலமாகக் கிழித்து,

எள் கரி படாமல் இதத்த புத்திக் கதிக்கு நிலை ஓதி எத்திய
பசாசின் முலைக் குடத்தைக் குடித்து முற்று உயிர் இலாமல்
அடக்கி விட்டுச் சிரித்த
... அவமதிப்புக்கு இடமான யானை
(முதலையின் வாயில்) படாமல், இன்பம் தரக்கூடிய முக்தி நிலைக்கான
உறுதிப் பொருளை அதற்குச் சொல்லி, (விஷப்பால் தரும்) வஞ்சனை
எண்ணத்துடன் வந்த பூதனை என்ற ராட்சசியின் முலைக் குடத்தை
உறிஞ்சிக் குடித்து முழுதும் உயிர் இல்லாத வகையில் (அந்தப் பிசாசை)
அடக்கி விட்டு நகைத்த (கண்ணனாகவும்),

அயில் கணை இராமர் சுகித்து இருக்கச் சினத்த திறல் வீரா ...
கூரிய அம்பைக் கொண்ட ராமராகவும் வந்த திருமால் சுகமாக
இருக்கும்படி (சூரன் முதலியோரைக்) கோபித்த வலிமை உடைய வீரனே,

வெற்பு என மதாணி நிறுத்து உருக்கிச் சமைத்து ... மலை
என்னும்படியாக பொன் பதக்கம் ஒன்றை எடை போட்டு, அதனை
உருக்கி உருவமாகச் செய்து,

வர்க்க மணியாக வடித்து இருத்தித் தகட்டின் மெய்க் குலம்
அதாக மலைக்க முத்தைப் பதித்து
... பல வகையான
ரத்தினங்களைப் பொறுக்கி எடுத்து அமைத்து, பொன் தகட்டினுடைய
சரியான கூட்டம் என்று அனைவரும் பிரமிக்கும்படிச் செய்து, அதில்
முத்தைப் பதிக்கச் செய்து,

வெகு கோடி விண் கதிர் அதாக நிகர்த்து ஒளிக்கச் சிவத்த
ரத்தின படாக(ம்) மயில் பரிக்குத் தரித்து
... பல கோடி
சூரியனுடைய ஒளி கூடியது போல ஒளி வீசிச் சிவந்த ரத்தினத் திரைச்
சீலை கொண்டது போன்ற உடலை உடைய குதிரை போன்ற மயில்
வாகனத்தின் மீது அமர்ந்து,

மிக்க திருவாவடு நல் துறைக்குள் செழித்த பெருமாளே. ...
மிகச் சிறந்த திருவாவடுதுறை* என்னும் நல்ல பதியில் வளப்பமுற்று
விளங்கும் பெருமாளே.


வரிகள் 19 முதல் 23 வரை மயிலின் உடல் வர்ணனை கூறப்பட்டுள்ளது.


* திருவாவடுதுறை மாயூரத்துக்கு மேற்கே 13 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1053  pg 2.1054  pg 2.1055  pg 2.1056  pg 2.1057  pg 2.1058 
 WIKI_urai Song number: 852 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 848 - soRpizhai varAmal (thiruvAvaduthuRai)

choRpizhaiva rAma lunaikkanak kaththuthiththu
     niRpathuva rAtha pavakkadath thiRchuzhatRi
          sukkilava thAra vazhikkiNak kikkaLiththu ...... vilaimAthar

thuppiRaiya thAna ithazhkkanik kukkaruththai
     vaiththumaya lAki manaththaivit tukkaduththa
          thuRchanama kAtha karaippuvik kuttazhaiththa ...... nithimEvu

kaRpakai rAsa nenappadaik kupperuththa
     arcchunana rAthi yenakkavik kutpathiththu
          katRaRivi nAvai yeduththaduth thuppadiththu ...... mikaiyAkak

kaththidume yAka valikkalip paiththolaiththu
     kaipporuLi lAmai yenaikkalak kappaduththu
          kaRpanaivi dAma lalaiththiruk kacchalikka ...... vidalAmO

eRpaNiya rAvai mithiththuvet tiththuvaiththu
     patRiyaka rAvai yizhuththurak kakkizhiththu
          etkaripa dAma lithaththaputh thikkathikku ...... nilaiyOthi

eththiyapa sAsin mulaikkudath thaikkudiththu
     mutRuyiri lAma ladakkivit tucchiriththa
          yiRkaNaiyi rAmar sukiththiruk kacchinaththa ...... thiRalveerA

veRpenama thANi niRuththuruk kicchamaiththu
     varkkamaNi yAka vadiththiruth thiththakattin
          meykkulama thAka malaikkamuth thaippathiththu ...... vekukOdi

vitkathira thAka nikarththoLik kacchivaththa
     raththinapa dAka mayiRparik kuththariththu
          mikkathiru vAva dunatRuRaik kutchezhiththa ...... perumALE.

......... Meaning .........

chol pizhai varAmal unaik kanakkath thuthiththu niRpathu varAtha pavak kadaththil chuzhatRi: I have been roaming about in the jungle of this birth where I never paused once to worship You saying a lot of prayers without even a single grammatical error;

sukkila avathAra vazhikku iNakkik kaLiththu vilai mAthar thuppu iRaiyathAna ithazhk kanikkuk karuththai vaiththu: I have been deriving pleasure in the union of genital organs and fixing my thoughts on the fruity taste of the saliva oozing from the whores' red lips that look like the seat of coral;

mayalAki manaththai vittuk kaduththa thuRchana makAthakarai puvikkuL thazhaiththa nithi mEvu kaRpaka irAsan enap padaikkup peruththa arcchuna narAthi enak kavikkuL pathiththu: driven by desire to dizzy heights, I have been totally obsessed with passion for them; composing poems on the worst and the most wicked people, I called them the wish-yielding kaRpaga tree saying that they are the richest and the most charitable kings in this world and that, in bravery in the battlefield, they are like King Arjunan;

katRu aRi vinAvai eduththu aduththup padiththu mikaiyAkak kaththidum mey Aka valik kalippaith tholaiththu: using the choicest words that I have learnt, I approached those men and loudly read out the poems that I composed on them; my body used to shake due to excessive screaming, and my handsome appearance faded;

kaipporuL ilAmai enaik kalakkap paduththu kaRpanai vidAmal alaiththu irukkac chalikka vidalAmO: just because I did not have enough money in hand (to pay those whores), is it fair that I am abandoned and left roaming about and writing imaginary poems that make me edgy and dejected?

el paNi arAvai mithiththu vettith thuvaiththu patRiya karAvai izhuththu urakkak kizhiththu: He danced on the bright hood of the Serpent (KALingan), trampling with His feet, slashing and pounding; when the crocodile grabbed the elephant (GajEndran), He pulled the crocodile out and fiercely maimed it (with His disc);

eL kari padAmal ithaththa puththik kathikku nilai Othi eththiya pasAsin mulaik kudaththaik kudiththu mutRu uyir ilAmal adakki vittuc chiriththa: saving the elephant from the humiliation (of falling a victim to the crocodile's jaws), He preached to it the firm principle essential to attain the blissful state of liberation; when PUthanai, the demoness, came to Him with a treacherous motive (of breast-feeding Him with poisonous milk), He (KrishNan) completely sucked out her pot-like breast, felling down the lifeless body of the subdued demoness, and smiled;

ayil kaNai irAmar sukiththu irukkas sinaththa thiRal veerA: He came as RAmA with sharp arrows; to enable that Lord VishNu to rest in comfort, You showed Your fiery rage (on SUran and other demons), Oh valorous One!

veRpu ena mathANi niRuththu urukkic chamaiththu: Weighing a massive golden pendant that looked like a mountain, melting it and bringing it into a shape,

varkka maNiyAka vadiththu iruththith thakattin meyk kulam athAka malaikka muththaip pathiththu: selecting a variety of precious gems and embedding them on the golden plate to the amazement of all who exclaimed that those gems truly belong to that plate, and then, inlaying a precious pearl on it,

veku kOdi viN kathir athAka nikarththu oLikkac chivaththa raththina padAka(m) mayil parikkuth thariththu: thus making a reddish gem-studded brocade, with the lustre of millions of suns, as the body of Your horse-like vehicle, the Peacock, and mounting it gracefully,

mikka thiruvAvadu nal thuRaikkuL sezhiththa perumALE.: You came to this famous town ThiruvAvaduthuRai* and took Your seat here with relish, Oh Great One!


Lines 19 through 23 of the song describe the beautiful body of the peacock of Lord Murugan.


* ThiruvAvaduthuRai is 13 miles west of MayilAduthurai.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 848 soRpizhai varAmal - thiruvAvaduthuRai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]