திருப்புகழ் 815 குடல்நிண மென்பு  (விஜயபுரம்)
Thiruppugazh 815 kudalniNamenbu  (vijayapuram)
Thiruppugazh - 815 kudalniNamenbu - vijayapuramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தந்தன தானன தனதன தந்தன தானன
     தனதன தந்தன தானன ...... தனதான

......... பாடல் .........

குடல்நிண மென்புபு லால்கமழ் குருதிந ரம்பிவை தோலிடை
     குளுகுளெ னும்படி மூடிய ...... மலமாசு

குதிகொளு மொன்பது வாசலை யுடையகு ரம்பையை நீரெழு
     குமிழியி னுங்கடி தாகியெ ...... யழிமாய

அடலையு டம்பைய வாவியெ அநவர தஞ்சில சாரமி
     லவுடத மும்பல யோகமு ...... முயலாநின்

றலமரு சிந்தையி னாகுல மலமல மென்றினி யானுநி
     னழகிய தண்டைவி டாமல ...... ரடைவேனோ

இடமற மண்டு நிசாசர ரடைய மடிந்தெழு பூதர
     மிடிபட இன்பம கோததி ...... வறிதாக

இமையவ ருஞ்சிறை போயவர் பதியு ளிலங்க விடாதர
     எழில்பட மொன்று மொராயிர ...... முகமான

விடதர கஞ்சுகி மேருவில் வளைவதன் முன்புர நீறெழ
     வெயில்நகை தந்த புராரிம ...... தனகோபர்

விழியினில் வந்து பகீரதி மிசைவள ருஞ்சிறு வாவட
     விஜயபு ரந்தனில் மேவிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

குடல்நிணம் என்பு புலால் கமழ் குருதி நரம்பிவை
தோலிடை
... குடல், கொழுப்பு, எலும்பு, மாமிசம், பரந்துள்ள ரத்தம்,
நரம்பு இவைகள் தோலின் இடையே

குளுகுளெ னும்படி மூடிய ... குளிர்ச்சியாக இருக்குமாறு அமையும்படி
வைத்து மூடப்பட்டுள்ளதும்,

மலமாசு குதிகொளும் ஒன்பது வாசலை யுடைய ... மலங்களும்,
பிற அழுக்குகளும் பொதிந்துள்ள, ஒன்பது துவாரங்களை* உடைய
சிறு குடிலாகிய

குரம்பையை நீரெழு குமிழியி னுங்கடிதாகியெ ... இந்த உடலை,
நீரிலே தோன்றும் குமிழியிலும் வேகமாக

அழிமாய அடலை யுடம்பை யவாவியெ ... அழியப்போகின்ற,
துன்பத்துக்கு ஈடான இவ்வுடலை விரும்பி,

அநவரதஞ்சில சாரமில் அவுடதமும்பல யோகமு(ம்) ...
எப்போதும் சில பயனற்ற மருந்துகளையும், பலவித யோகப்
பயிற்சிகளையும்

முயலாநின்று அலமரு சிந்தையி னாகுலம் அலம் அலம் ...
அநுஷ்டித்துப் பார்த்து வேதனைப்படுகின்ற மனத் துன்பம் போதும்,
போதும்.

என்றினி யானுநின் அழகிய தண்டைவிடாமலர்
அடைவேனோ
... என்றைக்குத்தான் இனி நானும் அழகிய தண்டையை
எப்போதும் அணிந்துள்ள உன் திருவடிமலரை அடைவேனோ,
தெரியவில்லையே.

இடமற மண்டு நிசாசரர் அடைய மடிந்து ... இடைவெளி விடாது
நெருக்கும் அசுரர்கள் எல்லாரும் இறக்கவும்,

எழு பூதரம் இடிபட ... (கிரெளஞ்சமலை முதலான) ஏழு குலகிரிகள்
இடிபட்டுப் பொடியாகவும்,

இன்ப மகோததி வறிதாக ... காட்சிக்கு இன்பம் தரும் பெருங்கடல்
வற்றிப் போகவும்,

இமையவருஞ்சிறை போய் அவர் பதியுள் இலங்க விடு ஆதர ...
தேவர்களும் சூரனின் சிறையிலிருந்து நீங்கி, அவர்களது அமராவதி
என்ற ஊரில் விளங்கவும் செய்வித்த ஆதரவாளனே,

எழில்படம் ஒன்றும் ஒராயிர முகமான ... அழகிய பணாமுடி
பொருந்திய, ஓராயிரம் முகங்களைக் கொண்ட

விடதர கஞ்சுகி மேருவில் வளைவதன் முன் ... விஷத்தைத்
தரித்துள்ள ஆதிசேஷன் மேருமலை என்ற வில்லில் நாணாகப்
பூட்டப்பட்டு அந்த வில் வளைபடும் முன்னரே

புர நீறெழ வெயில்நகை தந்த புராரி ... திரிபுரத்தை சாம்பலாகச்
செய்ய ஒளிவீசும் புன்சிரிப்பை வெளியிட்ட திரிபுரப் பகைவர்,

மதனகோபர் ... மன்மதனைக் கோபித்து (கண்ணழலாலே) எரித்தவர்,

விழியினில் வந்து பகீரதி மிசைவளருஞ்சிறுவா ... ஆகிய
சிவபிரானது கண்களிலிருந்து பொறியாகப் பிறந்து, கங்கையின் மீது
வளர்ந்த சிறுவனே,

வட விஜயபு ரந்தனில் மேவிய பெருமாளே. ... வட விஜயபுரம்**
என்ற தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.


* விஜயபுரம் திருவாரூர் நகரின் ஒரு பகுதி.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.973  pg 2.974 
 WIKI_urai Song number: 819 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 815 - kudalniNa menbu (vijayapuram)

kudalniNa menbu pulAl kamazh kurudhi narambivai thOlidai
     kuLukuL enumpadi mUdiya ...... malamAsu

kudhikoLum onbadhu vAsalai udaiyaku rambaiyai neeRezhu
     kumizhi yinung kadi dhAgiye ...... yazhimAya

adalai udambaiya vAviye anavara tham sila sAramil
     avudadha mumpala yOgamu ...... muyalA nindru

alamaru chinthaiyin Akula malamalam endrini yAnunin
     azhagiya thaNdai vidAmalar ...... adaivEnO

idamaRa maNdu nisAcharar adaiya madindhezhu bUdharam
     idipada inba mahOdhadhi ...... vaRidhAga

imaiyavarum siRai pOyavar padhiyuL ilanga vidAdhara
     ezhilpadam ondrum orAyira ...... mukamAna

vidadhara kanjuki mEruvil vaLaivadhan munpura neeRezha
     veyilnagai thandha purAri ...... madhanakOpar

vizhiyinil vandhu bageerathi misai vaLarun chiRu vAvada
     vijaya purandhanil mEviya ...... perumALE.

......... Meaning .........

kudalniNa menbu pulAl kamazh kurudhi narambivai thOlidai: The intestines, the fat, the bones, flesh, fully-spread blood and nerves are all enclosed under the cover of the skin

kuLukuL enumpadi mUdiya malamAsu: in a cool and temperate manner; faeces and other dirts

kudhikoLum onbadhu vAsalai udaiyaku rambaiyai: fill up this little cottage of a body, containing nine portals*;

neeRezhu kumizhi yinung kadi dhAgiye yazhi: it is destroyed faster than the bubble formed on the surface of water.

mAya adalai udambaiya vAviye: Being attached to this mystical and miserable body,

anavara tham sila sAramil avudadha mum: I have been always pursuing some useless medicines and

pala yOgamu muyalA nindru: attempting to practise many yogic exercises;

alamaru chinthaiyin Akulam alamalam: and my mind has been tossing about in distress; enough is enough!

endrini yAnunin azhagiya thaNdai vidAmalar adaivEnO: I do not know when I shall attain Your lotus feet, adorned with anklets.

idamaRa maNdu nisAcharar adaiya madindhu: The demons, stampeding and advancing in the war, were all killed together;

ezhu bUdharamidipada: the seven famous mountains (headed by Mount Krouncha) were all shattered to pieces;

inba mahOdhadhi vaRidhAga: the large ocean, which is always pleasant to view, became dry and parched;

imaiyavarum siRai pOyavar padhiyuL ilanga vidAdhara: and the celestials were freed from SUran's prisons and were restored safely in their hometown (AmarAvathi). You made it all possible, Oh Compassionate One!

ezhilpadam ondrum orAyira mukamAna: It has a thousand faces with beautiful hoods;

vidadhara kanjuki: it is the poisonous serpent, (AdhisEshan);

mEruvil vaLaivadhan munpura neeRezha: once, it was supposed to be the string on the bow of Mount MEru (during the war of SivA with Thiripura asuras); before the bow was even bent, Thiripuram was completely burnt down to ashes

veyilnagai thandha purAri madhanakOpar: merely by the bright smile of Lord SivA, the enemy of Thiripuram. He also angrily burnt down Manmathan by His fiery eye in His forehead.

vizhiyinil vandhu bageerathi misai vaLarun chiRu vA: You came from the flames from His eyes and were reared by the River Ganga, Oh young one,

vada vijaya purandhanil mEviya perumALE.: You are seated at this place, North Vijayapuram**, Oh Great One!


* Vijayapuram is a part of the town ThiruvArUr.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 815 kudalniNa menbu - vijayapuram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]