திருப்புகழ் 809 தருவூரிசை  (வழுவூர்)
Thiruppugazh 809 tharuvUrisai  (vazhuvUr)
Thiruppugazh - 809 tharuvUrisai - vazhuvUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனனாதன தானன தானன
     தனனாதன தானன தானன
          தனனாதன தானன தானன ...... தனதானா

......... பாடல் .........

தருவூரிசை யாரமு தார்நிகர்
     குயிலார்மொழி தோதக மாதர்கள்
          தணியாமய லாழியி லாழவு ...... மமிழாதே

தழலேபொழி கோரவி லோசன
     மெறிபாசம காமுனை சூலமுள்
          சமனார்முகில் மேனிக டாவினி ...... லணுகாதே

கருவூறிய நாளுமு நூறெழு
     மலதேகமு மாவலு மாசைக
          படமாகிய பாதக தீதற ...... மிடிதீரக்

கனிவீறிய போதமெய் ஞானமு
     மியலார்சிவ நேசமு மேவர
          கழல்சேரணி நூபுர தாளிணை ...... நிழல்தாராய்

புருகூதன்மி னாளொரு பாலுற
     சிலைவேடுவர் மானொரு பாலுற
          புதுமாமயில் மீதணை யாவரு ...... மழகோனே

புழுகார்பனிர் மூசிய வாசனை
     யுரகாலணி கோலமென் மாலைய
          புரிநூலுமு லாவுது வாதச ...... புயவீரா

மருவூர்குளிர் வாவிகள் சோலைகள்
     செழிசாலிகு லாவிய கார்வயல்
          மகதாபத சீலமு மேபுனை ...... வளமூதூர்

மகதேவர்பு ராரிச தாசிவர்
     சுதராகிய தேவசி காமணி
          வழுவூரில்நி லாவிய வாழ்வருள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

தரு ஊர் இசையார் அமுது ஆர் நிகர் குயிலார் மொழி தோதக
மாதர்கள் தணியா மயல் ஆழியில் ஆழவும் அமிழாதே
... மூங்கில்
மரத்தால் (செய்த புல்லாங்குழலால்) ஏற்படுகின்ற இசையில் வல்லவர்,
அமுதைப் போல் இனியவர், குயிலைப் போன்ற இனிய குரலை உடையவர்,
வஞ்சகம் செய்யும் விலைமாதர்கள் (மீதுள்ள) குறைவுபடாத காம இச்சைக்
கடலில் விழுந்து அழிந்து போகாமலும்,

தழலே பொழி கோர விலோசனம் எறி பாச மகா முனை
சூலம் உள் சமனார் முகில் மேனி கடாவினில் அணுகாதே
...
நெருப்பைப் பொழியும் பயங்கரமான கண்கள், (உயிரைப் பறிக்க) எறிந்து
வீசப்படும் பாசக் கயிறு, முள் போன்ற மிக்க கூர்மையை உடைய சூலம்
ஆகியவைகளை உடையவனும், கரு மேகம் போன்ற நிறம்
கொண்டவனுமாகிய யமன் தன் எருமைக் கடா வாகனத்தின் மீது ஏறி
வந்து என்னை நெருங்காமலும்,

கரு ஊறிய நாளு மு(ந்)நூறு எழு மல தேகமும் ஆவலும்
ஆசை கபடம் ஆகிய பாதக தீது அற மிடி தீர
... கரு
உற்பத்தியான பின் முன்னூற்று ஏழு நாட்களும், மும்மலங்களுக்கு
இடமான உடலும், மண், பெண், பொன் ஆகிய மூவாசைகளும்,
வஞ்சகத்தால் ஏற்படும் பாவங்களும் தீமைகளும் அற்றுப் போகவும்,
என் வறுமை ஒழியவும்,

கனி வீறிய போத(ம்) மெய் ஞானமும் இயலார் சிவ நேசமுமே
வர கழல் சேர் அணி நூபுர தாள் இணை நிழல் தாராய்
...
முதிர்ந்த அறிவும், மெய்ஞ் ஞானமும், தகுதி மிக்க சிவ நேசமும் எனக்கு
உண்டாக, கழல்கள் அணிந்த, சிலம்புகள் கொண்ட உனது இரு
திருவடிகளின் நிழலைத் தருவாயாக.

புருகூதன் மி(ன்)னாள் ஒரு பால் உற சிலை வேடுவர் மான்
ஒரு பால் உற புதுமா மயில் மீது அணையாவரும்
அழகோனே
... இந்திரன் மகளாகிய மின்னலை ஒத்த தேவயானை ஒரு
பக்கத்தில் வீற்றிருக்க, வில் ஏந்திய வேடர்களுடைய மான் போன்ற வள்ளி
மற்றொரு பக்கத்தில் வீற்றிருக்க, அதிசயிக்கத்தக்க சிறந்த மயிலின் மீது
அமர்ந்து அவர்களை அணைந்தவண்ணம் ஏறிவரும் அழகனே,

புழுகு ஆர் ப(ன்)னிர் மூசிய வாசனை உர(ம்) கால் அணி
கோல மென் மாலைய புரி நூலும் உலாவு துவாதச புய வீரா
...
புனுகு சட்டம் நிறைந்த பன்னீர் இவை நெருங்கிக் கூடிய, வாசனை உள்ள
மார்பில் அணிந்துள்ள மெல்லிய மாலையை உடையவனே, பூணூலும்
அசைகின்ற பன்னிரண்டு தோள்களை உடைய வீரனே,

மருவூர் குளிர் வாவிகள் சோலைகள் செழி சாலி குலாவிய
கார் வயல் மக தாபத சீலமுமே புனை வள மூதூர்
... வாசனை
உலாவும் குளிர்ந்த குளங்களும், சோலைகளும், செழிப்பான நெல்
தழைத்துள்ள அழகிய வயல்கள் சேர்ந்துள்ளதும், சிறந்த தவச் சீலர்கள்
வாழ்வதுமான வளப்பம் பொருந்திய பழைய ஊராகியது இந்த வழுவூர்.

மக தேவர் புராரி சதாசிவர் சுதர் ஆகிய தேவ சிகாமணி
வழுவூரில் நிலாவிய வாழ்வருள் பெருமாளே.
... மகாதேவர், திரி
புரங்களை அழித்தவர், சதாசிவர் ஆகிய சிவபெருமானின் மகனாகிய தேவ
சிகாமணியே, வழுவூரில்* வீற்றிருந்து அடியார்களுக்கு வாழ்வு அருளும்
பெருமாளே.


* வழுவூர் மயிலாடுதுறைக்குத் தெற்கே இலந்தங்குடி ரயில் நிலையத்துக்கு
மேற்கே கால் மைலில் உள்ள தலம்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.953  pg 2.954  pg 2.955  pg 2.956 
 WIKI_urai Song number: 813 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 809 - tharuvUrisai (vazhuvUr)

tharuvUrisai yAramu thArnikar
     kuyilArmozhi thOthaka mAtharkaL
          thaNiyAmaya lAzhiyi lAzhavu ...... mamizhAthE

thazhalEpozhi kOravi lOsana
     meRipAsama kAmunai cUlamuL
          samanArmukil mEnika dAvini ...... laNukAthE

karuvURiya nALumu nURezhu
     malathEkamu mAvalu mAsaika
          padamAkiya pAthaka theethaRa ...... miditheerak

kaniveeRiya pOthamey njAnamu
     miyalArsiva nEsamu mEvara
          kazhalsEraNi nUpura thALiNai ...... nizhalthArAy

purukUthanmi nALoru pAluRa
     silaivEduvar mAnoru pAluRa
          puthumAmayil meethaNai yAvaru ...... mazhakOnE

puzhukArpanir mUsiya vAsanai
     yurakAlaNi kOlamen mAlaiya
          purinUlumu lAvuthu vAthasa ...... puyaveerA

maruvUrkuLir vAvikaL sOlaikaL
     sezhisAliku lAviya kArvayal
          makathApatha seelamu mEpunai ...... vaLamUthUr

makathEvarpu rArisa thAsivar
     sutharAkiya thEvasi kAmaNi
          vazhuvUrilni lAviya vAzhvaruL ...... perumALE.

......... Meaning .........

tharu Ur isaiyAr amuthu Ar nikar kuyilAr mozhi thOthaka mAtharkaL thaNiyA mayal Azhiyil Azhavum amizhAthE: They are experts in playing music on the flute made out of a bamboo shoot; they are sweet like the nectar; they have the pleasing voice like that of a cuckoo; they are treacherous; and I do not wish to drown and destroy myself in the sea of unabated passion for these whores;

thazhalE pozhi kOra vilOsanam eRi pAsa makA munai cUlam uL samanAr mukil mEni kadAvinil aNukAthE: he has scary eyes that spew fire; he holds in his hand the rope of bondage that is hurled (to take the life) and a trident, sharp like a thorn; he is Yaman (God of Death) with the complexion of dark cloud; I do not wish him to approach me mounting his vehicle, the wild buffalo;

karu URiya nALu mu(n)nURu ezhu mala thEkamum Avalum Asai kapadam Akiya pAthaka theethu aRa midi theera: this body has been subject to the three slags (arrogance, karma and delusion) during and after the three hundred and seven days since conception in the (mother's) womb; to destroy those slags, the three desires, namely, lust for land, woman and gold, the sins and miseries arising out of treachery and my poverty,

kani veeRiya pOtha(m) mey njAnamum iyalAr siva nEsamumE vara kazhal sEr aNi nUpura thAL iNai nizhal thArAy: kindly grant me the shade of Your hallowed feet, adorned with toe-rings anklets, so that I am blessed with a mature intellect, true knowledge and worthy love of SivA!

purukUthan mi(n)nAL oru pAl uRa silai vEduvar mAn oru pAl uRa puthumA mayil meethu aNaiyAvarum azhakOnE: Mounting the wonderful and famous peacock and hugging Your consorts, namely, DEvayAnai, the lightning-like daughter of IndrA, on one side, and VaLLi, the deer-like damsel of the bow-holding hunters, on the other side, You come to bless me, Oh Handsome One!

puzhuku Ar pa(n)nir mUsiya vAsanai ura(m) kAl aNi kOla men mAlaiya puri nUlum ulAvu thuvAthasa puya veerA: Smeared with the paste of musk, mixed with rose water, on Your fragrant chest You wear a fine garland, Oh Lord! On your twelve hallowed shoulders, the sacred thread is swaying, Oh valorous One!

maruvUr kuLir vAvikaL sOlaikaL sezhi sAli kulAviya kAr vayal maka thApatha seelamumE punai vaLa mUthUr: This fertile and old town, VazhuvUr, contains many fragrant and cool ponds, groves, and pretty paddy-fields rich with crops; many famous and virtuous people known for their penance live here;

maka thEvar purAri sathAsivar suthar Akiya thEva sikAmaNi vazhuvUril nilAviya vAzhvaruL perumALE.: He is the greatest celestial who destroyed the Thiripuram and who is known as SadhAsivan; You are the son of that Lord SivA, Oh Pinnacle of the Celestials! You are seated in VazhuvUr*, blessing Your devotees with good life, Oh Great One!


* VazhuvUr is south of MayilAduthuRai - MAyUram, a quarter mile west of Ilanthankudi railway station.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 809 tharuvUrisai - vazhuvUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]