திருப்புகழ் 775 பூமாது உரமேயணி  (சீகாழி)
Thiruppugazh 775 pUmAdhuuramEyaNi  (seegAzhi)
Thiruppugazh - 775 pUmAdhuuramEyaNi - seegAzhiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானாதன தானன தானன
     தானாதன தானன தானன
          தானாதன தானன தானன ...... தந்ததான

......... பாடல் .........

பூமாதுர மேயணி மான்மறை
     வாய்நாலுடை யோன்மலி வானவர்
          கோமான்முநி வோர்முதல் யாருமி ...... யம்புவேதம்

பூராயம தாய்மொழி நூல்களும்
     ஆராய்வதி லாதட லாசுரர்
          போரால்மறை வாயுறு பீதியின் ...... வந்துகூடி

நீமாறரு ளாயென ஈசனை
     பாமாலைக ளால்தொழு தேதிரு
          நீறார்தரு மேனிய தேனியல் ...... கொன்றையோடு

நீரேர்தரு சானவி மாமதி
     காகோதர மாதுளை கூவிளை
          நேரோடம் விளாமுத லார்சடை ...... யெம்பிரானே

போமாறினி வேறெது வோதென
     வேயாரரு ளாலவ ரீதரு
          போர்வேலவ நீலக லாவியி ...... வர்ந்துநீடு

பூலோகமொ டேயறு லோகமு
     நேரோர் நொடி யேவரு வோய்சுர
          சேனாபதி யாயவ னேயுனை ...... யன்பினோடுங்

காமாவறு சோமச மானன
     தாமாமண மார்தரு நீபசு
          தாமாவென வேதுதி யாதுழல் ...... வஞ்சனேனைக்

காவாயடி நாளசு ரேசரை
     யேசாடிய கூர்வடி வேலவ
          காரார்தரு காழியின் மேவிய ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

பூமாது உரமேயணி மால் ... தாமரைமலர் மீது அமரும் லக்ஷ்மி
தேவியை மார்பிலே தரித்துள்ள திருமாலும்,

மறை வாய்நாலுடையோன் ... வேதம் சொல்லும் வாய் நான்கு
உடையவனான பிரமனும்,

மலி வானவர் கோமான் ... கூட்டமான தேவர்களின் தலைவனான
இந்திரனும்,

முநிவோர்முதல் யாரும் ... முநிவர்கள் முதலிய யாவரும்,

இயம்புவேதம் பூராயமதாய்மொழி நூல்களும் ... இயம்பப்படும்
வேதப்பொருளை ஆராய்ந்து கூறும் நூல்களில்

ஆராய்வதிலாத அடலாசுரர் ... ஆராய்ச்சி செய்யாத வலிய அசுரர்கள்
செய்யும்

போரால்மறை வாயுறு பீதியின் வந்துகூடி ... போருக்குப் பயந்து,
மறைந்து, அச்சத்துடன் வந்து ஒன்று கூடி,

நீ மாறு அருளாயென ... நீ, பகைவர்களை அழிக்கவல்ல, ஒரு
மாற்றுப் பகைவனை தந்தருள்வாயாக என்று

ஈசனை பாமாலைக ளால்தொழுதே ... ஈசுவரனைப்
பாமாலைகளால் பாடித்தொழுது,

திருநீறார்தரு மேனிய ... திருநீறால் அழகு விளங்கும்
திருமேனியனே,

தேனியல் கொன்றையோடு ... தேன் பொதிந்த கொன்றை
மலருடனே

நீரேர்தரு சானவி* மாமதி ... நீர் அழகுடன் ததும்பும் கங்கையையும்,
சிறந்த நிலவையும்,

காகோதர மாதுளை கூவிளை ... பாம்பையும், மாதுளம் பூவையும்,
வில்வ இலையையும்,

நேரோடம் விளாமுதலார்சடை யெம்பிரானே ... நாவல் இலை,
விளா இலை, முதலியன நிறைந்த சடையணியும் எங்கள் பெருமானே,

போமாறினி வேறெது வோதெனவே ... நாங்கள் உய்ந்து போகும்
வழி இனி உன்னையன்றி வேறு எது உள்ளது எனச் சொல்லி அருள்க
என்று முறையிடவே,

ஆரருளாலவர் ஈதரு போர்வேலவ ... நிறைந்த கருணையினால்
அந்தச் சிவபெருமான் தந்தருளிய வேலவனே,

நீல கலாவி யிவர்ந்து ... நீலத் தோகை மயில் மீது ஏறி

நீடு பூலோகமொடே யறு லோகமு ... நீண்ட இந்தப்
பூலோகத்துடனே மீதி ஆறு லோகங்களையும்

நேரோர் நொடி யேவரு வோய ... நேராக ஒரே நொடிப் பொழுதிலே
சுற்றி வந்தவனே,

சுர சேனாபதி யாயவனே ... தேவர்களின் சேனாதிபதி ஆனவனே,

உனை யன்பினோடுங் காமா அறு சோம சம ஆனன ...
உன்னை அன்போடு, மன்மதனைப் போன்ற அழகனே, ஆறு பூரண
சந்திரர்களுக்கு சமமான திருமுகங்களை உடையவனே,

தாமாமண மார்தரு நீப ... மணம் நிறைந்து வீசும் கடப்பமாலைகளை
அணிந்தவனே,

சுதாமாவெனவேதுதி யாது ... நல்ல திவ்விய ஒளியை உடையவனே
என்றெல்லாம் போற்றித் துதிக்காமல்

உழல் வஞ்சனேனைக் காவாய் ... திரிகின்ற வஞ்சகனாகிய என்னைக்
காத்தருள்வாயாக.

அடிநாள் அசு ரேசரையேசாடிய ... அந்நாளில் அசுரர்களின்
தலைவனான சூரன் முதலியவர்களை சம்ஹரித்த

கூர்வடி வேலவ ... கூரிய வேலாயுதத்தை உடையவனே,

காரார்தரு காழியின் மேவிய தம்பிரானே. ... மேகங்கள் நிறைந்த
சீகாழிப்பதியில்** வீற்றிருக்கும் தம்பிரானே.


இப்பாடலின் முக்கால் பகுதி கந்த புராணச் சுருக்கமாக அமைந்துள்ளது.


* சானவி = ஜானவி, ஜன்னு என்ற முநிவரின் காது வழியே சென்றதனால்
கங்கைக்கு ஜானவி என்ற பெயர் உண்டு.


** சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.
சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்.


சீகாழிக்கு உரிய பெயர்கள்:

சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம்,

பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம்,

வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன்
                  பூஜித்த தலம்,

தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால்
                  இப் பெயர் வந்தது,

பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம்,

சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு
                  கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம்,

புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக்
                  கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம்,

சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம்,

கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில்
                  பெற்று, அது நீங்கப் பூசித்த தலம்,

வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம்,

கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம்,

முதுநகர் - ,

புகலி -
            ... என்பன.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.871  pg 2.872  pg 2.873  pg 2.874 
 WIKI_urai Song number: 779 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 775 - pUmAdhu uramEyaNi (seegAzhi)

pU mAdhura mEyaNi mAn maRai
     vAy nAl udaiyOn mali vAnavar
          kOmAn munivOr mudhal yArumi ...... yambu vEdham

pUrAya madhAy mozhi nUlgaLum
     ArAyvadhi lAthada lAsurar
          pOrAl maRai vAyuRu beethiyin ...... vandhu kUdi

neemARaru LAyena eesanai
     pA mAlaigaLAl thozhudhE thiru
          neeRAr tharu mEniya thEn iyal ...... kondRaiyodu

neerErtharu jAnavi mAmadhi
     kAkOdhara mAdhuLai kUviLai
          nErOdam viLA mudhalAr sadai ...... empirAnE

pOmARini vERedhu vOdhena
     vEyAr aruLAl avaree tharu
          pOrvElava neela kalAviyi ...... varndhu needu

bUlOkamo dEyaRu lOkamu
     nErOr nodiyE varu vOy sura
          sEnApathi AyavanE unai ...... anbinOdung

kAmAvaRu sOma samAnana
     dhAmA manamAr tharu neepa su
          dhAmA venavE thudhiyA dhuzhal ...... vanjanEnai

kAvay adi nALa surEsarai
     yEsAdiya kUrvadi vElava
          kArArtharu kAzhiyin mEviya ...... thambirAnE.

......... Meaning .........

pU mAdhura mEyaNi mAn: Vishnu, Who wears Sri Lakshmi, seated on the lotus, on His chest,

maRai vAy nAl udaiyOn: BrahmA, the four-mouthed, Who recites the VEdAs (Scripture),

mali vAnavar kOmAn: IndrA, the Leader of the Celestials,

munivOr mudhal yArum: sages and all others

pOrAl maRai vAyuRu beethiyin: went into hiding frightened by the battling demons.

iyambu vEdham pUrAya madhAy mozhi nUlgaLum ArAyvadhi lAthada lAsurar: Those mighty demons did not explore the holy Texts that seek to explain the essence of the spoken VEdAs.

vandhu kUdi: All those assembled, terror-stricken,

neemARaru LAyena eesanai: entreated Lord SivA, to bless them with an adversary to destroy the inimical demons,

pA mAlaigaLAl thozhudhE: by worshipping SivA with garlands of poems and prayed

thiruneeRAr tharu mEniya: "Oh Lord! Lustrous is Your body sprinkled with the sacred ash!

thEn iyal kondRaiyodu: With honey-filled kondRai (Indian laburnum) flowers

neerErtharu jAnavi mAmadhi: Jhanvi* (River Ganga) beautified by water, the great crescent moon,

kAkOdhara mAdhuLai kUviLai: the cobra, the pomegranate flower, leaves of vilwa,

nErOdam viLA mudhalAr sadai empirAnE: nAval and viLA, Your tresses are elegant, Oh our Lord!

pOmARini vERedhu vOdhenavE: You alone are our solace. Do we have any other refuge but you?"

Ar aruLAl avaree tharu pOrvElava: Out of boundless compassion, SivA gave You, Oh VElavA, (to the tormented world!)

neela kalAviyi varndhu: MurugA, You mounted on the blue-feathered Peacock,

needubUlOkamo dEyaRu lOkamu: flew around the earth and six other worlds

nErOr nodiyE varu vOy: and returned in just a moment!

surasEnApathi AyavanE: You became the Commander-in-Chief of the Celestials!

unai anbinOdung: I do not say with love

kAmAvaRu sOma samAnana: "Oh Lord, You are handsome as Manmathan (Love God), Your six faces match six full moons,

dhAmA manamAr tharu neepa: You wear the fragrant kadappa garlands,

sudhAmA venavE thudhiyA dhuzhal vanjanEnai kAvay: and possess dazzling brilliance", and I, the spiteful me, simply roam about not caring to worship thus. Still, You must protect me, Oh Lord!

adi nALa surEsarai yEsAdiya kUrvadi vElava: Once You killed the demon king SUran with Your sharp spear, Oh VelavA!

kArArtharu kAzhiyin mEviya thambirAnE.: You reside in the cloud-filled prosperous town of SeegAzhi**, Oh Great One!


(Nearly three-fourth of this song is the synopsis of Kantha PuraNam, the Story of Lord Murugan).


* Jhanvi is another name of River Ganga as She flowed through the ears of Sage Jhannu.


** SeegAzhi is 11 miles south of Chidhambaram. It is the place of birth of one of the Saivite Quartets, ThirugnAna SambandhAr.


The various names of SeekAzhi are as follows:

1. VENupuram: The shrine where Indra named VENu worshipped to overcome his fear of a demon, GajamugA.
2. Thiruppukali: It is the place of refuge for the celestials who were terrified by the demon SUran.
3. Venguru: It is the shrine where Brahaspathi (Jupiter) worshipped.
4. PUntharAy: It is the shrine where Earth and ThArai worshipped.
5. Sirapuram: When the nectar was distributed by Lord VishNu to the celestials, Rahu and KEthu stealthily came as
     DEvAs and were beheaded by VishNu; at this shrine, they worshipped and got their heads back.
6. PuRavam: At this shrine a sage PrajApathi came in the disguise of a pigeon and offered his flesh as a sacrifice
     to save the king.
7. SaNpai: Sage DurvAsA, known as Sanpaimuni, worshipped at this shrine.
8. SeekAzhi: A serpent named KALi worshipped at this shrine.
9. Kochchai: Sage ParAsara was cursed by other sages and developed a stench all over his body which was removed
     after his worship at this shrine.
10. Kazhumalam: This is a shrine where all the sins of souls are washed away.
11. Piramapuram: This is a shrine where Lord Brahma offered worship.
12. ThONipuram: This shrine had the distinction of floating like a boat during the devastating flood at the end
     of the aeons.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 775 pUmAdhu uramEyaNi - seegAzhi

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]