திருப்புகழ் 766 ஊனத்தசை தோல்கள்  (சீகாழி)
Thiruppugazh 766 UnaththasaithOlgaL  (seegAzhi)
Thiruppugazh - 766 UnaththasaithOlgaL - seegAzhiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானத்தன தான தனந்த தானத்தன தான தனந்த
     தானத்தன தான தனந்த ...... தனதான

......... பாடல் .........

ஊனத்தசை தோல்கள் சுமந்த காயப்பொதி மாய மிகுந்த
     ஊசற்சுடு நாறு குரம்பை ...... மறைநாலும்

ஓதப்படு நாலு முகன்ற னாலுற்றிடு கோல மெழுந்து
     ஓடித்தடு மாறி யுழன்று ...... தளர்வாகிக்

கூனித்தடி யோடு நடந்து ஈனப்படு கோழை மிகுந்த
     கூளச்சட மீதை யுகந்து ...... புவிமீதே

கூசப்பிர மாண ப்ரபஞ்ச மாயக்கொடு நோய்க ளகன்று
     கோலக்கழ லேபெற இன்று ...... அருள்வாயே

சேனக்குரு கூடலி லன்று ஞானத்தமிழ் நூல்கள் பகர்ந்து
     சேனைச்சம ணோர்கழு வின்கண் ...... மிசையேறத்

தீரத்திரு நீறு புரிந்து மீனக்கொடி யோனுடல் துன்று
     தீமைப்பிணி தீர வுவந்த ...... குருநாதா

கானச்சிறு மானை நினைந்து ஏனற்புன மீது நடந்து
     காதற்கிளி யோடு மொழிந்து ...... சிலைவேடர்

காணக்கணி யாக வளர்ந்து ஞானக்குற மானை மணந்து
     காழிப்பதி மேவி யுகந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஊனத் தசை தோல்கள் சுமந்த காயப் பொதி ... அழிந்து போகும்
தன்மையுடைய மாமிசம், தோல்கள் (இவைகளைச்) சுமக்கும் உடற்சுமை,

மாயம் மிகுந்த ஊசல் சுடும் நாறும் குரம்பை ... மாயம் மிக்கதும்,
ஊசிப்போவதும், கடைசியில் சுடப்படுவதும், நாறுவதுமான சிறு
குடிலாகிய இந்த உடல்

மறை நாலும் ஓதப் படும் நாலு முகன் த(ன்)னால் உற்றிடும்
கோலம் எழுந்து
... நான்கு வேதங்களால் ஓதப்படுகின்ற நான்முகன்
பிரமனால் ஏற்படுத்தப்பட்ட அழகுடன் உருப்பெற்று எழுந்து,

ஓடித் தடுமாறி உழன்று தளர்வாகி ... ஓடியும், தடுமாறியும்,
திரிந்தும், தளர்ச்சி அடைந்தும்,

கூனித் தடியோடு நடந்து ... கூனித் தடிகொண்டு நடந்தும்,

ஈனப்படு கோழை மிகுந்த கூளச் சடம் ஈதை ... இழிவைத் தரும்
கோழை மிக்க குப்பையான இந்த உடலை,

உகந்து புவி மீதே கூசப் பிரமாண ... மிக விரும்பி, இந்தப் பூமியில்,
நாணம் உறும்படியாக விதிப் பிரகாரம் செல்வதான

ப்ரபஞ்ச மாயக் கொடு நோய்கள் அகன்று ... இந்த உலக
மயக்கத்தில் உண்டாகும் பிணிகள் நீங்கி,

கோலக் கழலே பெற இன்று அருள்வாயே ... உனது அழகிய
இரண்டு திருவடிகளை இன்று எனக்கு அருள் புரிவாயாக.

சேனக் குரு கூடலில் அன்று ... சேனன் என்னும் பட்டப் பெயர்
வைத்திருந்த சமண குருக்களின் முன்னிலையில், மதுரையில் முன்பு

ஞானத் தமிழ் நூல்கள் பகர்ந்து ... (சம்பந்தராக வந்து) ஞானத்
தமிழ் நூல்களாகிய தேவாரப் பாக்களைப் பாடி,

சேனைச் சமணோர் கழுவின் கண் மிசை ஏற ... கூட்டமான
சமணர்கள் கழுவில் ஏறும்படிச் செய்து,

தீரத் திரு நீறு புரிந்து ... திடத்துடன் திரு நீற்றை விநியோகித்து,

மீனக் கொடியோன் உடல் துன்று ... மீனைக் கொடியாகக்
கொண்ட பாண்டியனின் உடலில் பொருந்திய

தீமைப் பிணி தீர உவந்த குருநாதா ... கொடிய சுர நோய்
தீரும்படியாக அருள் சுரந்த குரு நாதனே,

கானச் சிறு மானை நினைந்து ... (வள்ளி மலைக்) காட்டில் மீது
இருந்த சிறு மான் போன்ற வள்ளியை நினைந்து,

ஏனல் புனம் மீது நடந்து ... தினைப்புனத்தில் நடந்து சென்று,

காதல் கிளியோடு மொழிந்து ... ஆசைக் கிளியாகிய அவளோடு
பேசி,

சிலை வேடர் காணக் கணியாக வளர்ந்து ... வில் ஏந்திய வேடர்கள்
காணும்படியாக வேங்கை மரமாக வளர்ந்து,

ஞானக் குற மானை மணந்து ... அந்த ஞானக் குறப்பெண்ணை
மணந்து,

காழிப் பதி மேவி உகந்த பெருமாளே. ... சீகாழிப்* பதியில்
அமர்ந்து மகிழும் பெருமாளே.


* சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.
சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்.


சீகாழிக்கு உரிய பெயர்கள்:

சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம்,

பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம்,

வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன்
                  பூஜித்த தலம்,

தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால்
                  இப் பெயர் வந்தது,

பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம்,

சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு
                  கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம்,

புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக்
                  கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம்,

சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம்,

கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில்
                  பெற்று, அது நீங்கப் பூசித்த தலம்,

வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம்,

கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம்,

முதுநகர் - ,

புகலி -
            ... என்பன.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.851  pg 2.852 
 WIKI_urai Song number: 770 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 766 - Unaththasai thOlgaL (seegAzhi)

Unath thasai thOlgaL sumandha kAyappOdhi mAya migundha
     UsaR sudu nARu kurambai ...... maRai nAlum

Odhappadu nAlu mukandra nAl utridu kOlam ezhundhu
     Odith thadumARi uzhandru ...... thaLarvAgi

kUnith thadiyOdu nadandhu eenappadu kOzhai migundha
     kULach chadameedhai ugandhu ...... buvimeedhE

kUsap piramANa prapancha mAyak kodu nOygaL agandru
     kOlak kazhalE peRa indru ...... aruL vAyE

sEnak guru kUdalil andru nyAnath thamizh nUlgaLpagarndhu
     sEnaich samaNOr kazhuvin kaN ...... misai ERa

dheerath thiru neeRu purindhu meenak kodiyOn udal thundru
     theemaip piNi theera uvandha ...... gurunAthA

kAnach chiRumAnai ninaindhu EnaRpuna meedhu nadandhu
     kAdhaR kiLiyOdu mozhindhu ...... silai vEdar

kANak kaNiyAga vaLarndhu nyAna kuRamAnai maNandhu
     kAzhip padhimEvi ugandha ...... perumALE.

......... Meaning .........

Unath thasai thOlgaL sumandha kAyappOdhi: This bundle of a body carries destructible flesh and skin;

mAya migundha UsaR sudu nARu kurambai: this stinking little cottage is delusory, destined to rot and ultimately to be consumed by fire.

maRai nAlum Odhappadu nAlu mukandra nAl utridu kOlam ezhundhu: It took a lovely shape as determined by the four-headed BrahmA who is worshipped by the four vEdAs.

Odith thadumARi uzhandru thaLarvAgi: Then this body ran about, tottered, roamed around and got tired.

kUnith thadiyOdu nadandhu: It developed a hunch-back and leaned on a walking stick.

eenappadu kOzhai migundha kULach chadameedhai ugandhu: It became a waste basket containing disgusting phlegm and mucus; I became attached to this body!

buvimeedhE kUsap piramANa prapancha mAyak kodu nOygaL: On this earth, this body is destined to shamefully fall victim to many diseases arising out of worldly delusions;

agandru kOlak kazhalE peRa indru aruL vAyE: kindly rid me of these diseases and bless me to attain Your hallowed feet today!

sEnak guru kUdalil andru: Once, in Madhurai, confronting the SamaNa priests with the surname of "Senan"

nyAnath thamizh nUlgaLpagarndhu: You (coming as ThirugnAna Sambandhar) sang several erudite Tamil Songs (called ThEvAram),

sEnaich samaNOr kazhuvin kaN misai ERa: and saw to it that a host of SamaNa priests were sent to the gallows.

dheerath thiru neeRu purindhu: You distributed the powerful holy ash (VibUthi);

meenak kodiyOn udal thundru theemaip piNi theera uvandha gurunAthA: and graciously cured the evil fever that was afflicting the PANdiya King whose flag carries the fish symbol, Oh Master!

kAnach chiRumAnai ninaindhu: Thinking about the deer-like petite VaLLi, the damsel of the forest in VaLLimalai,

EnaRpuna meedhu nadandhu: You walked all the way to the millet field;

kAdhaR kiLiyOdu mozhindhu: You spoke to the lovely parrot-like belle, VaLLi;

silai vEdar kANak kaNiyAga vaLarndhu: right before the eyes of the hunters bearing the bows, You became a neem tree;

nyAna kuRamAnai maNandhu: and later, You wedded the wisest VaLLi, looking pretty like a deer.

kAzhip padhimEvi ugandha perumALE.: You chose SeegAzhi* as Your favourite abode, Oh Great One!


* SeegAzhi is 11 miles south of Chidhambaram.
It is the place of birth of one of the Saivite Quartets, ThirugnAna SambandhAr.


The various names of SeekAzhi are as follows:

1. VENupuram: The shrine where Indra named VENu worshipped to overcome his fear of a demon, GajamugA.
2. Thiruppukali: It is the place of refuge for the celestials who were terrified by the demon SUran.
3. Venguru: It is the shrine where Brahaspathi (Jupiter) worshipped.
4. PUntharAy: It is the shrine where Earth and ThArai worshipped.
5. Sirapuram: When the nectar was distributed by Lord VishNu to the celestials, Rahu and KEthu stealthily came as
     DEvAs and were beheaded by VishNu; at this shrine, they worshipped and got their heads back.
6. PuRavam: At this shrine a sage PrajApathi came in the disguise of a pigeon and offered his flesh as a sacrifice
     to save the king.
7. SaNpai: Sage DurvAsA, known as Sanpaimuni, worshipped at this shrine.
8. SeekAzhi: A serpent named KALi worshipped at this shrine.
9. Kochchai: Sage ParAsara was cursed by other sages and developed a stench all over his body which was removed
     after his worship at this shrine.
10. Kazhumalam: This is a shrine where all the sins of souls are washed away.
11. Piramapuram: This is a shrine where Lord Brahma offered worship.
12. ThONipuram: This shrine had the distinction of floating like a boat during the devastating flood at the end
     of the aeons.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 766 Unaththasai thOlgaL - seegAzhi

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]