திருப்புகழ் 738 விடமும் வேலன  (திருவதிகை)
Thiruppugazh 738 vidamumvElana  (thiruvadhigai)
Thiruppugazh - 738 vidamumvElana - thiruvadhigaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தானன தனதன தனதன
     தனன தானன தனதன தனதன
          தனன தானன தனதன தனதன ...... தனதான

......... பாடல் .........

விடமும் வேலன மலரன விழிகளு
     மிரத மேதரு மமுதெனு மொழிகளும்
          விரகி னாலெழு மிருதன வகைகளு ...... மிதமாடி

மிகவு மாண்மையு மெழினல முடையவர்
     வினையு மாவியு முடனிரு வலையிடை
          வெளியி லேபட விசிறிய விஷமிக ...... ளுடன்மேவா

இடரு றாதுனை நினைபவர் துணைகொள
     இனிமை போலெழு பிறவியெ னுவரியி
          னிடைகெ டாதினி யிருவினை யிழிவினி ...... லிழியாதே

இசையி னாடொறு மிமையவர் முநிவர்கள்
     ககன பூபதி யிடர்கெட அருளிய
          இறைநி னாறிரு புயமென வுரைசெய ...... அருள்வாயே

படரு மார்பினி லிருபது புயமதொ
     டரிய மாமணி முடியொளி ரொருபது
          படியி லேவிழ வொருகணை தொடுபவ ...... ரிடமாராய்

பரவை யூடெரி பகழியை விடுபவர்
     பரவு வார்வினை கெடஅரு ளுதவியெ
          பரவு பால்கட லரவணை துயில்பவர் ...... மருகோனே

அடர வேவரு மசுரர்கள் குருதியை
     அரக ராவென அலகைகள் பலியுண
          அலையும் வேலையும் அலறிட எதிர்பொரு ...... மயில்வீரா

அமர ராதிய ரிடர்பட அடர்தரு
     கொடிய தானவர் திரிபுர மெரிசெய்த
          அதிகை மாநகர் மருவிய சசிமகள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

விடமும் வேல் அ(ன்)ன மலர் அ(ன்)ன விழிகளும் இரதமே
தரும் அமுது எனும் மொழிகளும்
... விஷமும், வேலும்
போன்றனவாகிய, மலரை ஒத்த கண்களும், ருசியைத் தரும் அமுதம்
போல் இனிய பேச்சுக்களும்,

விரகினால் எழும் இரு தன வகைகளும் இதம் ஆடி ...
உற்சாகத்தால் வளர்ந்துள்ள இரு மார்பகங்களும் இன்பம் தருவனவாய்க்
கொண்டு,

மிகவும் ஆண்மையும் எழில் நலம் உடையவர் வினையும்
ஆவியும் உடன் இரு வலை இடை வெளியிலே பட விசிறிய
விஷமிகளுடன் மேவா இடர் உறாது
... மிக்க அகங்காரத்தையும்
அழகு நலத்தையும் உடையவர்களின் பெரிய வலையில் என்
முன்வினையும், உயிரும் ஒருசேர பகிரங்கமாகச் சிக்கும்படி (அந்த
வலையை) வீசுகின்ற விஷமிகளாகிய வேசிகளுடன் சேர்ந்து
துன்பப்படாமல்,

உனை நினைபவர் துணை கொள்ள இனிமை போல் எழு
பிறவி எனும் உவரியின் இடை கெடாது இனி இரு வினை
இழிவினில் அழியாதே
... உன்னைத் தியானிப்பவர்களின்
துணையைப் பெறுதற்கு, இன்பம் போலக் காணப்படும் ஏழு பிறவிகள்
என்ற கடலிடையே அகப்பட்டு அழியாமல், இனியேனும் இரு வினை
(நல்வினை, தீவினை) என்கின்ற இழிந்த நிலையில் அழியாமல்,

*இமையவர் முநிவர்கள் ககன பூபதி இடர் கெட அருளிய
இறை
... தேவர்கள், முனிவர்கள், விண்ணுலக அரசனான இந்திரனின்
துன்பங்கள் தொலைய அருள் புரிந்த இறைவனே,

இசையில் நாள் தொறும்* நின் ஆறிரு புயம் என உரை செய
அருள்வாயே
... கீதத்துடன் தினமும், உனது பன்னிரண்டு
புயங்களைப் போற்றிச் செய்து உரைக்க (எனக்கும்) அருள் புரிவாயாக.

படரும் மார்பினில் இருபது புயம் அதொடு அரிய மாமணி
முடி ஒளிர் ஒரு பது படியிலே விழ ஒரு கணை தொடுபவர்
...
பரவி அகன்றுள்ள மார்பின் பக்கத்தில் உள்ள (ராவணனது) இருபது
புயங்களும், அருமையான சிறந்த ரத்தினக் கிரீடங்கள் விளங்கும்
ஒப்பற்ற பத்து தலைகளும் பூமியில் அறுந்து விழும்படி நிகரற்ற
அம்பைச் செலுத்தியவரும்,

இடம் ஆராய் பரவை ஊடு எரி பகழியை விடுபவர் ...
சந்தர்ப்பத்தை ஆராய்ந்தறிந்து கடலின் மீது நெருப்பு வீசும் அம்பை
விடுத்தவரும்,

பரவுவார் வினை கெட அருள் உதவியே பரவு பால் கடல்
அரவு அணை துயில்பவர் மருகோனே
... தம்மைப் போற்றும்
அடியவர்களின் வினைகள் கெட அருள் பாலித்து, பரந்துள்ள
திருப்பாற்கடலில் பாம்பாகிய ஆதிசேஷனின் மேல் துயில்பவருமான
திருமாலின் மருகனே,

அடரவே வரும் அசுரர்கள் குருதியை அரகரா என அலகைகள்
பலி உண்ண
... நெருங்கி வந்த அசுரர்களின் ரத்தத்தை அரகரா என்று
கூவி பேய்கள் உணவாக உண்ண,

அலையும் வேலையும் அலறிட எதிர் பொரு மயில் வீரா ...
அலைகள் வீசும் கடலும் கூச்சலிட, சண்டை செய்த மயில் வீரனே,

அமரர் ஆதியர் இடர் பட அடர் தரு கொடிய தானவர் திரிபுரம்
எரி செய்த அதிகை மா நகர் மருவிய
... தேவர்கள் முதலானோர்
துன்பப்படும்படி நெருங்கி எதிர்த்த கொடுமையான அசுரர்கள்
(வாழ்ந்திருந்த) திரிபுரங்களை எரித்த திருவதிகை** என்னும் பெரிய
ஊரில் வீற்றிருப்பவனே,

சசி மகள் பெருமாளே. ... (இந்திரன் மனைவி) சசியின் மகளான
தேவயானையின் பெருமாளே.


* 'இசையில் நாள்தொறும்' என்ற சொற்கள் அன்வயப் படுத்தப்பட்டுள்ளன.


** சிவபெருமான் திரிபுரத்தை எரித்த தலம் திருவதிகை. இது கடலூர் மாவட்டம்
பண்ணுருட்டி ரயில் நிலையத்துக்கு தென்கிழக்கில் 2 மைலுக்குள் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.777  pg 2.778  pg 2.779  pg 2.780 
 WIKI_urai Song number: 743 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 738 - vidamum vElana (thiruvadhigai)

vidamum vElana malarana vizhikaLu
     miratha mEtharu mamuthenu mozhikaLum
          viraki nAlezhu miruthana vakaikaLu ...... mithamAdi

mikavu mANmaiyu mezhinala mudaiyavar
     vinaiyu mAviyu mudaniru valaiyidai
          veLiyi lEpada visiRiya vishamika ...... LudanmEvA

idaru RAthunai ninaipavar thuNaikoLa
     inimai pOlezhu piRaviye nuvariyi
          nidaike dAthini yiruvinai yizhivini ...... lizhiyAthE

isaiyi nAdoRu mimaiyavar munivarkaL
     kakana pUpathi yidarkeda aruLiya
          iRaini nARiru puyamena vuraiseya ...... aruLvAyE

padaru mArpini lirupathu puyamatho
     dariya mAmaNi mudiyoLi rorupathu
          padiyi lEvizha vorukaNai thodupava ...... ridamArAy

paravai yUderi pakazhiyai vidupavar
     paravu vArvinai kedAru Luthaviye
          paravu pAlkada laravaNai thuyilpavar ...... marukOnE

adara vEvaru masurarkaL kuruthiyai
     araka rAvena alakaikaL paliyuNa
          alaiyum vElaiyum alaRida ethirporu ...... mayilveerA

amara rAthiya ridarpada adartharu
     kodiya thAnavar thiripura meriseytha
          athikai mAnakar maruviya sasimakaL ...... perumALE.

......... Meaning .........

vidamum vEl a(n)na malar a(n)na vizhikaLum irathamE tharum amuthu enum mozhikaLum: Because of their flower-like poisonous eyes looking like the spear, their nectar-like sweet and delicious speech and

virakinAl ezhum iru thana vakaikaLum itham Adi: their pleasurable bosom that swell with great enthusiasm,

mikavum ANmaiyum ezhil nalam udaiyavar vinaiyum Aviyum udan iru valai idai veLiyilE pada visiRiya vishamikaLudan mEvA idar uRAthu: these haughty whores go about looking very beautiful; in the large net cast by them, my past deeds and life are together ensnared explicitly; to retrieve me from the miserable company of such mischievous net-casters,

unai ninaipavar thuNai koLLa inimai pOl ezhu piRavi enum uvariyin idai kedAthu ini iru vinai izhivinil azhiyAthE: to let me join the company of the devotees who meditate upon You, to escape from drowning in the seas of seven births that superficially look blissful and to save me henceforth from the debilitating effects of the two deeds (good and bad),

*imaiyavar munivarkaL kakana pUpathi idar keda aruLiya iRai: Oh Lord who graciously removed the miseries of the celestials, the sages and IndrA, the leader of the DEvAs,

isaiyil nAL thoRum* nin ARiru puyam ena urai seya aruLvAyE: kindly bless me too to praise the glory of Your twelve hallowed shoulders everyday with music!

padarum mArpinil irupathu puyam athodu ariya mAmaNi mudi eLir oru pathu padiyilE vizha oru kaNai thodupavar: His (RAvaNan's) twenty shoulders adjoining his broad chest and his matchless ten heads wearing crowns embedded with the rarest gems were knocked down to the earth by the peerless arrow wielded by Him;

idam ArAy paravai Udu eri pakazhiyai vidupavar: biding His time, He carefully chose an opportune moment to shoot a fiery arrow upon the sea;

paravuvAr vinai keda aruL uthaviyE paravu pAl kadal aravu aNai thuyilpavar marukOnE: He showers His gracious blessing on the devotees who praise His glory and destroys their past deeds; He slumbers on the serpent, AdhisEshan, on the wide milky ocean; You are the nephew of that Lord VishNu!

adaravE varum asurarkaL kuruthiyai arakarA ena alakaikaL pali uNNa: The blood gushing from the bodies of the confronting demons was devoured by the devils who hailed it as their food amidst their shrieks of "Hara, HarA!";

alaiyum vElaiyum alaRida ethir poru mayil veerA: and the wavy seas roared in rapture when You fought the war, mounted on the peacock, Oh Brave One!

amarar Athiyar idar pada adar tharu kodiya thAnavar thiripuram eri seytha athikai mA nakar maruviya: You have Your abode in this big town, Thiruvathikai**, that witnessed the burning of Thiripuram where the evil demons once lived and ganged up aggressively to torture the celestials and others!

sasi makaL perumALE.: You are the Lord of DEvayAnai, the daughter of Sasi (whose consort is IndrA), Oh Great One!


* The words "isaiyil nAL thoRum" have been transposed for the sake of meaning.


** The place where Lord SivA burnt down Thiripuram happens to be Thiruvathikai which is in Cuddalore District, 2 miles southeast of PaNNurutti Railway Station.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 738 vidamum vElana - thiruvadhigai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]