Sri AruNagirinAthar - Author of the ThiruppugazhKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

Sri AruNagirinAthar's
Thiruppugazh

Sri Kaumara Chellam
திருப்புகழ் 724 அண்டர்பதி குடியேற  (சிறுவை)
Thiruppugazh 724 aNdarpadhikudiyERa  (siRuvai)
Thiruppugazh - 724 aNdarpadhikudiyERa - siRuvaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்ததன தனதான தந்ததன தனதான
     தந்ததன தனதான ...... தனதான

......... பாடல் .........

அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
     அண்டர்மன மகிழ்மீற ...... வருளாலே

அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
     ஐங்கரனு முமையாளு ...... மகிழ்வாக

மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு
     மஞ்சினனு மயனாரு ...... மெதிர்காண

மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற
     மைந்துமயி லுடனாடி ...... வரவேணும்

புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள
     புந்திநிறை யறிவாள ...... வுயர்தோளா

பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு
     பொன்பரவு கதிர்வீசு ...... வடிவேலா

தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
     தண்டமிழின் மிகுநேய ...... முருகேசா

சந்ததமு மடியார்கள் சிந்தையது குடியான
     தண்சிறுவை தனில்மேவு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

அண்டர்பதி குடியேற ... தேவேந்திரன் மீண்டும் தேவலோகத்தில்
குடிபுகச்செய்து,

மண்டசுரர் உருமாற ... நெருங்கி வந்த அசுரர்களின் உருமாறி
அவர்களை மடியச்செய்து,

அண்டர்மன மகிழ்மீற அருளாலே ... தேவர்களின் மனம் மிகக்
களிப்படையும்படி அருள்செய்து,

அந்தரியொடு உடனாடு சங்கரனு மகிழ்கூர ... காளியுடன்
நடனமாடுகின்ற சிவபெருமான் மகிழ்ச்சி அடைய,

ஐங்கரனும் உமையாளு மகிழ்வாக ... விநாயகனும், உமாதேவியும்
மிகக் களிப்படைய,

மண்டலமு முநிவோரும் எண்டிசையி லுளபேரு ... பூமியில்
உள்ளோரும், முநிவர்களும், எட்டுத்திசையில் உள்ளோரும்,

மஞ்சினனும் அயனாரும் எதிர்காண ... இந்திரனும், பிரமனும்
எதிரே நின்று கண்டு களிக்க,

மங்கையுடன் அரிதானும் இன்பமுற மகிழ்கூற ... லக்ஷ்மியுடன்
திருமாலும் தம்மகிழ்ச்சியை இன்பமாகக் கூற,

மைந்து மயிலுடன் ஆடி வரவேணும் ... வலிமையான மயிலுடன்
ஆடி என்முன் நீ வரவேண்டும்.

புண்டரிக விழியாள ... தாமரை போன்ற கண்களை உடையவனே,

அண்டர்மகள் மணவாளா ... தேவர்கள் வளர்த்த மகள்
தேவயானையின் மணவாளனே,

புந்திநிறை யறிவாள வுயர்தோளா ... அறிவு நிறைந்த
மெய்ஞ்ஞானியே, உயர்ந்த புயங்களை உடையவனே,

பொங்குகடலுடன் நாகம் விண்டு ... பொங்கிய கடலுடன்,
கிரெளஞ்சமலையையும் பிளவுபடச் செய்து

வரை யிகல்சாடு ... ஏழு மலைகளின் வலிமையையும் பாய்ந்து அழித்த

பொன்பரவு கதிர்வீசு வடிவேலா ... பொன்னொளி பரப்பிச் சுடர்
வீசும் கூரிய வேலாயுதனே,

தண் தரள மணிமார்ப ... குளிர்ந்த முத்துமாலையை அணிந்த
மார்பனே,

செம்பொனெழில் செறிரூப ... செம்பொன்னின் அழகு நிறைந்த
உருவத்தோனே,

தண்டமிழின் மிகுநேய முருகேசா ... நல்ல தமிழில் மிகுந்த நேசம்
கொண்ட முருகேசப் பெருமானே,

சந்ததமும் அடியார்கள் சிந்தையது குடியான ... எப்போதும் உன்
அடியார்களின் சிந்தையிலே குடிகொண்ட

தண்சிறுவை தனில்மேவு பெருமாளே. ... குளிர்ந்த சிறுவைத்
தலத்தில்* வீற்றிருக்கும் பெருமாளே.


* சிறுவைத்தலம் சென்னை - ஆரணி வழியில் பொன்னேரிக்கு மேற்கே
7 மைல் தூரத்தில் உள்ளது. முழுப் பெயர் 'சிறுவரம்பேடு'. 'லவ - குசர்' ஆகிய
சிறுவர் அம்பெடுத்துப் போர் செய்த இடம். முருகனுக்குத் தனிக் கோயில் உள்ளது.

'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

 பதிவிறக்க 
1.58mb
 to download 
Thiru P. Sambandam Gurukkal
திரு சம்பந்தம் குருக்கள்

Thiru P. Sambandam Gurukkal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

 பதிவிறக்க 
1.48mb
 to download 

Song 724 - aNdarpadhi kudiyERa (siRuvai)

aNdarpadhi kudi ERa maNdasurar urumARa
     aNdar mana magizh meeRa ...... aruLAlE

anthariyo dudanAdu sankaranu magizh kUra
     aingkaranum umai ALu ...... magizhvAga

maNdalamu munivOrum eNdhisaiyil uLa pEru
     manjinanum ayanArum ...... edhirkANa

mangai udan arithAnum inbamuRa magizh kURa
     maindhu mayiludan Adi ...... varavENum

puNdarika vizhiyALa aNdar magaL maNavALa
     pundhi niRai aRivALa ...... uyarthOLA

pongu kadaluda nAgam viNduvarai igalsAdu
     pon paravu kadhir veesu ...... vadivElA

thaNdaraLa maNi mArba sempon ezhil seRi rUpa
     thaNdamizhin migu nEya ...... murugEsA

santhathamum adiyArgaL chinthaiyadhu kudiyAna
     thaN siRuvai thanil mEvu ...... perumALE.

......... Meaning .........

aNdarpadhi kudi ERa: (Because of You), IndrA, the Lord of DEvAs, got back his kingdom;

maNdasurar urumARa: the advancing demons (asuras) were transformed from living to dead;

aNdar mana magizh meeRa aruLAlE: the DEvAs were rejoicing on being graciously protected;

anthariyo dudanAdu sankaranu magizh kUra: Sankara who danced with KALi was in ecstasy;

aingkaranum umai ALu magizhvAga: VinAyagA and PArvathi were delighted;

maNdalamu munivOrum eNdhisaiyil uLa pEru: the entire galaxies, all the sages and people in all eight directions,

manjinanum ayanArum edhirkANa: along with IndrA and BrahmA enjoying Your darshan (vision); and

mangai udan arithAnum inbamuRa magizh kURa: Vishnu, accompanied by Lakshmi, was happy and pleased.

maindhu mayiludan Adi varavENum: (Just like You appeared before them), You must come to me mounted on Your mighty dancing peacock!

puNdarika vizhiyALa: You have lotus-like eyes!

aNdar magaL maNavALa: You are the consort of DEvayAnai, brought up by the DEvAs!

pundhi niRai aRivALa uyarthOLA: You are full of Wisdom and True Knowledge, Oh broad-shouldered One!

pongu kadaluda nAgam viNduvarai igalsAdu: The seas rose with high tides while the Mount Krouncha was rent asunder

pon paravu kadhir veesu vadivElA: when You threw Your sharp and glittering spear!

thaNdaraLa maNi mArba: Your chest is adorned with cool and precious gems.

sempon ezhil seRi rUpa: Your complexion is brilliant golden red.

thaNdamizhin migu nEya murugEsA: You are extremely fond of the rich literature in Tamil.

santhathamum adiyArgaL chinthaiyadhu kudiyAna: You always reside in the thoughts of Your devotees!

thaN siRuvai thanil mEvu perumALE.: Your favourite abode is the cool place called SiRuvai*, Oh Great One!


* SiRuvai is on the route between Chennai and AaraNi, about 7 miles west of PonnEri.
It is also known as SiRuvarambEdu as it is believed that young boys, LavA and KuchA, sons of Rama, fought here with bows and arrows. This place houses a special temple for Murugan.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 724 aNdarpadhi kudiyERa - siRuvai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]