திருப்புகழ் 714 சுருதி மறைகள்  (உத்தரமேரூர்)
Thiruppugazh 714 surudhimaRaigaL  (uththaramErUr)
Thiruppugazh - 714 surudhimaRaigaL - uththaramErUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தனன தனதான தனன தனன தனதான
     தனன தனன தனதான ...... தனதான

......... பாடல் .........

சுருதி மறைக ளிருநாலு திசையி லதிபர் முநிவோர்கள்
     துகளி லிருடி யெழுபேர்கள் ...... சுடர்மூவர்

சொலவில் முடிவில் முகியாத பகுதி புருடர் நவநாதர்
     தொலைவி லுடுவி னுலகோர்கள் ...... மறையோர்கள்

அரிய சமய மொருகோடி அமரர் சரணர் சதகோடி
     அரியு மயனு மொருகோடி ...... யிவர்கூடி

அறிய அறிய அறியாத அடிக ளறிய அடியேனும்
     அறிவு ளறியு மறிவூற ...... அருள்வாயே

வரைகள் தவிடு பொடியாக நிருதர் பதியு மழிவாக
     மகர சலதி அளறாக ...... முதுசூரும்

மடிய அலகை நடமாட விஜய வனிதை மகிழ்வாக
     மவுலி சிதறி இரைதேடி ...... வருநாய்கள்

நரிகள் கொடிகள் பசியாற உதிர நதிக ளலைமோத
     நமனும் வெருவி யடிபேண ...... மயிலேறி

நளின வுபய கரவேலை முடுகு முருக வடமேரு
     நகரி யுறையு மிமையோர்கள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சுருதி மறைகள் ... வேதங்கள், உபநிஷதம் முதலிய ஆகமங்கள்,

இருநாலு திசையில் அதிபர் முநிவோர்கள் ... எட்டுத் திக்குப்
பாலகர்கள்*1, முநிவர்கள்

துகளில் இருடி யெழுபேர்கள் சுடர்மூவர் ... குற்றமில்லாத ரிஷிகள்
ஏழு பேர்*2, சூரியன், சந்திரன், அக்கினி எனப்படும் மூன்று சுடர்கள்,

சொலவில் முடிவில் முகியாத பகுதி புருடர் நவநாதர் ...
சொல்லுவதற்கு முடிவிலே முடியாத பிரகிருதி புருஷர்களான பிரபஞ்ச
மாயா அதிகாரிகள், பிரதானசித்தர்களான ஒன்பது நாதர்கள்*3,

தொலைவில் உடுவின் உலகோர்கள் மறையோர்கள் ... வெகு
தூரத்தில் உள்ள நக்ஷத்திர உலகில் வாழ்பவர்கள், வேதம் வல்லவர்கள்,

அரிய சமய மொருகோடி அமரர் சரணர் சதகோடி ...
அருமையான சமயங்கள் கோடிக்கணக்கானவை, தேவர்கள், நூற்றுக்
கோடிக்கணக்கான அடியார்கள்,

அரியும் அயனும் ஒருகோடி யிவர்கூடி ... திருமால், பிரமன், ஒரு
கோடி பேர் - இவர்களெல்லாம் கூடி,

அறிய அறிய அறியாத அடிகள் அறிய ... அறிந்து கொள்ள,
அறிந்து கொள்ள (எத்தனை முயன்றும்) அறிய முடியாத உனது
திருவடிகளை,

அடியேனும் அறிவுள் அறியும் அறிவூற அருள்வாயே ...
அடியேனும் எனது அறிவுக்கு உள்ளேயே அறிந்து கொள்ள வல்லதான
அறிவு ஊறும்படி நீ அருள்புரிவாயாக.

வரைகள் தவிடு பொடியாக நிருதர் பதியும் அழிவாக ...
கிரெளஞ்சம் முதலிய மலைகள் தவிடு பொடியாக, அசுரர்களின் ஊர்கள்
அழிவடைய,

மகர சலதி அளறாக முதுசூரும் மடிய ... மகர மீன்கள் உள்ள கடல்
சேறாக, பழைய சூரனும் அழிவுற,

அலகை நடமாட விஜய வனிதை மகிழ்வாக ... பேய்கள் நடனம்
செய்ய, விஜய லக்ஷ்மி மகிழ்ச்சி அடைய,

மவுலி சிதறி இரைதேடி வருநாய்கள் ... அசுரர்களின் தலைகள்
சிதறிவிழ, இரையைத் தேடிவந்த நாய்களுடன்,

நரிகள் கொடிகள் பசியாற உதிர நதிகள் அலைமோத ...
நரிகளும், காக்கைகளும், பசி நீங்க, ரத்த வெள்ளம் அலைமோதி ஓட,

நமனும் வெருவி யடிபேண ... யமனும் அச்சமுற்று உனது
திருவடிகளைத் துதிக்க,

மயிலேறி நளின வுபய கரவேலை முடுகு முருக ... மயிலில் ஏறி,
மகிமைவாய்ந்த திருக்கரத்து வேலாயுதத்தை விரைவாகச் செலுத்தும்
முருகனே,

வடமேரு நகரி யுறையும் இமையோர்கள் பெருமாளே. ...
உத்தரமேரூர்*4 என்ற தலத்தில் வீற்றிருப்போனே, தேவர்களின்
பெருமாளே.


(*1) அஷ்டதிக்குப் பாலகர்கள் (எண்திசையைக் காப்பவர்கள்) பின்வருமாறு:

இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன்.


(*2) சப்தரிஷிகள் பின்வருமாறு:

அகஸ்தியர், புலஸ்தியர், ஆங்கீரசர், கெளதமர், வசிஷ்டர், காச்யபர், மார்க்கண்டர்.


(*3) நவநாதராகிய பெருஞ் சித்தர் பின்வருமாறு:

சத்தியநாதர், சதோகநாதர், ஆதிநாதர், அனாதிநாதர், வகுளநாதர், மதங்கநாதர்,
மச்சேந்திரநாதர், கடேந்திரநாதர், கோரக்கநாதர். இவர்கள் குகைகளில் இருந்து சிவனைக்
குறித்துத் தவம் செய்து சித்தராயினர்.


(*4) உத்தரமேரூர் செங்கற்பட்டு ரயில் நிலையத்திலிருந்து தென்மேற்கே
18 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.713  pg 2.714  pg 2.715  pg 2.716 
 WIKI_urai Song number: 718 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 714 - surudhi maRaigaL (uththaramErUr)

surudhi maRaigaL irunAlu dhisaiyil adhipar munivOrgaL
     thugaLil irudi yezhupErgaL ...... sudarmUvar

solavil mudivil mugiyAdha pagudhi purudar navanAdhar
     tholaivi luduvi nulagOrgaL ...... maRaiyOrgaL

ariya samaya morukOdi amarar saraNar sathakOdi
     ariyum ayanu morukOdi ...... yivarkUdi

aRiya aRiya aRiyAtha adika LaRiya adiyEnum
     aRivuL aRiyum aRivURa ...... aruLvAyE

varaigaL thavidu podiyAga nirudhar pathiyum azhivAga
     magara saladhi aLaRAga ...... mudhusUrum

madiya alagai nadamAda vijaya vanithai magizhvAga
     mavuli sidhaRi iraithEdi ...... varunAygaL

narigaL kodigaL pasiyARa udhira nadhigaL alaimOdha
     namanum veruvi adipENa ...... mayilERi

naLina ubaya karavElai mudugu muruga vadamEru
     nagari uRaiyum imaiyOrgaL ...... perumALE.

......... Meaning .........

surudhi maRaigaL: The Scriptures (VEdAs), the theosophic treatises (Upanishads),

irunAlu dhisaiyil adhipar munivOrgaL: the protectors of the eight cardinal directions (AshtadhikpAlakAs)*1, the ascetics,

thugaLil irudi yezhupErgaL sudarmUvar: the unblemished sages (rishis)*2 numbering seven, and the three great flames [namely, the sun, the moon and fire (agni)]

solavil mudivil mugiyAdha pagudhi purudar navanAdhar: the prakrithi purushas (who are in charge of the five elements) who are beyond any description, the nine prime siddhas known as NavanAthar*3,

tholaivi luduvi nulagOrgaL maRaiyOrgaL: those residing in galaxies afar, the experts in scriptures,

ariya samaya morukOdi amarar saraNar sathakOdi: the millions of unique religions, the Celestials, the millions of devotees,

ariyum ayanu morukOdi yivarkUdi: Vishnu, BrahmA and million others - all of them got together

aRiya aRiya aRiyAtha adika LaRiya: to perceive and know Your hallowed feet but failed;

adiyEnum aRivuL aRiyum aRivURa aruLvAyE: kindly bless me so that the knowledge to discern Your two feet springs like a fountain within my intellect!

varaigaL thavidu podiyAga nirudhar pathiyum azhivAga: All the mountains (including Mount Krouncha) were smashed into powder; all the places of the demons were destroyed;

magara saladhi aLaRAga mudhusUrum madiya: the seas full of makara fish dried up and became slimy; the old SUran was killed;

alagai nadamAda vijaya vanithai magizhvAga: the devils began to dance; the Goddess of Victory (Vijaya Lakshmi) was delighted;

mavuli sidhaRi iraithEdi varunAygaL narigaL kodigaL pasiyARa: the hunger of dogs, foxes and crows, coming in search of food, was satiated when the heads of the demons were scattered;

udhira nadhigaL alaimOdha: rivers of blood gushed with rippling waves;

namanum veruvi adipENa: and Yaman, the God of Death, was terrified and fell at Your feet;

mayilERi naLina ubaya karavElai mudugu muruga: when You, mounting the peacock, hurled swiftly the spear from Your lovely hand, Oh MurugA!

vadamEru nagari uRaiyum imaiyOrgaL perumALE.: Your abode is the town of UththaramErUr*4, and You are the Lord of the Celestials, Oh Great One!


*1 AshtadhikpAlakAs - protectors of the eight cardinal directions - are:

IndrA, Agni, Yama, Nruthi, VaruNa, VAyu, KubEra and EesAna.


*2 The seven Rishis are:

Agasthya, Pulasthya, Aangeeras, Gouthama, Vasishta, Kasyapa and MArkkaNda.


*3 The nine senior SidhdhAs (achievers - NavanAthars) - were as follows:

SathyanAthar, SathokanAthar, AadhinAthar, AnAdhinAthar, VaghuLanAthar, MadhanganAthar, MachchendranAthar, GadendranAthar and GorakkanAthar. They did penance in the caves praying to Lord SivA and attained the status of Sidhdha.


*4 UththaramErUr is 18 miles southwest of Chengalpatttu railway station.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 714 surudhi maRaigaL - uththaramErUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]