திருப்புகழ் 641 சமர முக வேல்  (கதிர்காமம்)
Thiruppugazh 641 samaramugavEl  (kadhirgAmam)
Thiruppugazh - 641 samaramugavEl - kadhirgAmamSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனன தானத்த தனதனன தானத்த
     தனதனன தானத்த ...... தனதான தானனா

......... பாடல் .........

சமரமுக வேலொத்த விழிபுரள வாரிட்ட
     தனமசைய வீதிக்குள் ...... மயில்போலு லாவியே

சரியைக்ரியை யோகத்தின் வழிவருக்ரு பாசுத்தர்
     தமையுணர ராகத்தின் ...... வசமாக மேவியே

உமதடியு னாருக்கு மனுமரண மாயைக்கு
     முரியவர்ம காதத்தை ...... யெனுமாய மாதரார்

ஒளிரமளி பீடத்தி லமடுபடு வேனுக்கு
     முனதருள்க்ரு பாசித்த ...... மருள்கூர வேணுமே

இமகிரிகு மாரத்தி யநுபவைப ராசத்தி
     யெழுதரிய காயத்ரி ...... யுமையாள்கு மாரனே

எயினர்மட மானுக்கு மடலெழுதி மோகித்து
     இதணருகு சேவிக்கு ...... முருகாவி சாகனே

அமரர்சிறை மீள்விக்க அமர்செய்துப்ர தாபிக்கு
     மதிகவித சாமர்த்ய ...... கவிராஜ ராஜனே

அழுதுலகை வாழ்வித்த கவுணியகு லாதித்த
     அரியகதிர் காமத்தி ...... லுரியாபி ராமனே.

......... சொல் விளக்கம் .........

சமர முக வேல் ஒத்த விழி புரள வார் இட்ட தனம் அசைய
வீதிக்குள் மயில் போல் உலாவியே
... போர்முகத்துக்கு என்ற
கூர்மை நிறைந்த வேல் போன்ற கண்கள் புரள, கச்சு அணிந்த
மார்பகங்கள் அசைய, தெருவில் மயில் உலவுவது போல,

சரியை க்ரியை யோகத்தின் வழி வரு க்ருபா சுத்தர் தமை
உணர ராகத்தின் வசமாக மேவியே
... சரியை, கிரியை, யோகம்,
(ஞானம்) என்னும் நான்கு வழிகளில்* நிற்கின்ற, அருளும் பரிசுத்தமும்
வாய்ந்த பெரியோர்களும் தம்மை மோகிக்கும்படியாக ஆசை காட்டும்
வழிகளில் பொருந்தி,

உமது அடி உ(ன்)னாருக்கும் அனுமரண மாயைக்கும்
உரியவர் மகா தத்தை எனு(ம்) மாய மாதரார்
... உமது
திருவடியை நினையாதவருக்கும், மரணத்தோடு கூடிய மாயையின்
வசப்பட்டவருக்கும் உரியவராய், சிறந்த கிளிகள் எனப்படும்
மாயைகளில் வல்ல விலைமாதர்களுடைய

ஒளிர் அமளி பீடத்தில் அமடு படுவேனுக்கும் உனது அருள்
க்ருபா சித்தம் அருள் கூர வேணுமே
... ஒளி மிகுந்த
படுக்கையிடத்தே சிக்கிக் கொண்ட எனக்கும் உமது திருவருள்
பிரசாதத்தை அருள் கூர்ந்து அளிக்க வேண்டும்.

இம கிரி குமாரத்தி அநுபவை பராசத்தி எழுத அரிய
காயத்ரி உமையாள் குமாரனே
... இமய மலை அரசனுடைய
மகள், எப்போதும் இன்ப அனுபவத்தைத் தருபவள், பராசக்தி,
எழுதற்கரிய காயத்திரி மந்திரத்தின் உருவினள் (ஆகிய) உமாதேவியின்
மகனே,

எயினர் மட மானுக்கு மடல் எழுதி மோகித்து இதண் அருகு
சேவிக்கும் முருகா விசாகனே
... வேடர்களின் அழகிய மான்
போன்ற வள்ளிக்காக மடல் எழுதி** ஆசைப்பட்டு, அவள் இருந்த
பரண் அருகே சேவித்து நின்ற முருகனே, விசாகனே,

அமரர் சிறை மீள்விக்க அமர் செய்து ப்ரதாபிக்கும் அதிக
வித சாமர்த்ய கவி ராஜராஜனே
... தேவர்களைச் சிறையினின்றும்
மீட்கும் பொருட்டுப் போரிட்டு, கீர்த்தியுற்ற, மிக மேலான திறமை
வாய்ந்த ராஜகவிகளுக்குள் சக்கரவர்த்தியே,

அழுது உலகை வாழ்வித்த கவுணிய குல ஆதித்த ... அழுது
(திருஞான சம்பந்தராகத் தோன்றி பார்வதி தேவியின் திருமுலைப்பால்
உண்டு) தேவாரப் பாடல்களால் உலகை வாழ்வித்த கவுணிய குலத்தைச்
சார்ந்த ஞான சூரியனே,

அரிய கதிர் காமத்தில் உரிய அபிராமனே. ... அருமை வாய்ந்த
கதிர்காமத்துக்கு உரிய அழகனே.


* நான்கு பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:

1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம்
வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு
பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.

2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல்.
இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.

3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு
ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி,
முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.

4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு
ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'.

. . . சிவஞான சித்தியார் சூத்திரம்.


** மடல் ஏறுதல்:

காமத்தால் வாடும் தலைவன் பனங்கருக்கால் குதிரை
முதலிய வடிவங்கள் செய்து அவற்றின் மேலே ஏறி ஊரைச் சுற்றி, தலைவியிடம்
உள்ள தன் காதலை ஊரிலுள்ள பிறருக்குத் தெரிவிப்பான்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.1049  pg 1.1050  pg 1.1051  pg 1.1052 
 WIKI_urai Song number: 423 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

திருமதி காந்திமதி சந்தானம்

Mrs Kanthimathy Santhanam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Mrs Kanthimathy Santhanam

Song 641 - samara muga vEl (kadhirgAmam)

samaramuka vEloththa vizhipuraLa vAritta
     thanamasaiya veethikkuL ...... mayilpOlu lAviyE

sariyaikriyai yOkaththin vazhivarukru pAsuththar
     thamaiyuNara rAkaththin ...... vasamAka mEviyE

umathadiyu nArukku manumaraNa mAyaikku
     muriyavarma kAthaththai ...... yenumAya mAtharAr

oLiramaLi peedaththi lamadupadu vEnukku
     munatharuLkru pAsiththa ...... maruLkUra vENumE

imakiaiku mAraththi yanupavaipa rAsaththi
     yezhuthariya gAyathri ...... yumaiyALku mAranE

eyinarmada mAnukku madalezhuthi mOkiththu
     ithaNaruku sEvikku ...... murukAvi sAkanE

amararsiRai meeLvikka amarseythupra thApikku
     mathikavitha sAmarthya ...... kavirAja rAjanE

azhuthulakai vAzhviththa kavuNiyaku lAthiththa
     ariyakathir kAmaththi ...... luriyApi rAmanE.

......... Meaning .........

samara muka vEl oththa vizhi puraLa vAr itta thanam asaiya veethikkuL mayil pOl ulAviyE: Their rolling eyes are sharp like the spear specially honed for the battlefield; shaking their breasts covered by tight blouses, they walk along the street like peacocks;

sariyai kriyai yOkaththin vazhi varu krupA suththar thamai uNara rAkaththin vasamAka mEviyE: even those great men, full of grace and purity, who abide by the four methods* of worship, namely, sariyai, kiriyai, yOgam (and gnAnam), are made to fall for them passionately by their seductive gestures;

umathu adi u(n)nArukkum anumaraNa mAyaikkum uriyavar makA thaththai enu(m) mAya mAtharAr: they belong to men who do not contemplate Your hallowed feet and who are under the delusory spell that causes death; these whores are like great parrots capable of casting a magical charm;

oLir amaLi peedaththil amadu paduvEnukkum unathu aruL krupA siththam aruL kUra vENumE: even though I have been entangled in their bright bed, kindly offer me Your gracious blessing!

ima kiri kumAraththi anupavai parAsaththi ezhutha ariya gAyathri umaiyAL kumAranE: She is the daughter of King HimavAn of the HimAlayAs; She makes one feel happy all the time; She is the Supreme Mother Sakthi; She has the form of GAyathri ManthrA that can never be grasped through description; and You are the son of that UmAdEvi!

eyinar mada mAnukku madal ezhuthi mOkiththu ithaN aruku sEvikkum murukA visAkanE: Oh MurugA, You resorted to scribing the madal** for VaLLi, the deer-like damsel of the hunters, and with extreme passion, You approached the raised platform where she stood and prostrated at her feet, Oh VisAkA!

amarar siRai meeLvikka amar seythu prathApikkum athika vitha sAmarthya kavi rAjarAjanE: You became famous by fighting the war to liberate the celestials from their prison; You are the emperor among many famous and proficient crown-poets!

azhuthu ulakai vAzhviththa kavuNiya kula Athiththa: You cried (coming as a child, ThirugnAna Sambandhar, and imbibing the nectar-like milk, breast-fed by DEvi PArvathi) and uplifted the world (with ThEvAram hymns), Oh the sun of Knowledge, born in the lineage of kavuNiyars!

ariya kathir kAmaththil uriya apirAmanE.: You belong to the rare town, KadhirgAmam, Oh Handsome One!


* The four methods of worship are:

1.  sariyai:  Worship through service in temples such as doing penance, washing the floor, lighting the lamps, maintaining the flower garden, plucking the flowers for offering, making of garlands, singing of hymns, decorating the deities etc. This is known as 'dhAdha mArgam - sAlOkam'.

2.  kiriyai:  Worship, both inwardly and externally, of a God with a form through daily offerings (pUjA) and with several pUjA materials. This is called 'puthra mArgam - sameepam'.

3.  yOgam:  Inward worship only of a formless God by control of senses, holding the oxygen in the inhaled air and letting it through the six centres of 'kuNdalini chakrA' after understanding each state fully, experiencing the flow of nectar in the 'Lunar zone' between the eyebrows and letting it seep throughout the body and meditating on the full effulgence. This is 'sakha mArgam - sArUbam'.

4.  gnAnam:  Ceasing all external and internal activities, this method consists of worshipping through the medium of intellect alone, seeking the True Knowledge. This is 'san mArgam - sAyujyam'.


** madal ERuthal means sending out passion-filled doodles in palm leaves. Here, the passion-stricken hero makes several doodles and mounts a horse made of palm leaves to go around the town announcing to the world his love for the heroine.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 641 samara muga vEl - kadhirgAmam

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]