திருப்புகழ் 627 பிறர் புகழ் இன்சொல்  (குன்றக்குடி)
Thiruppugazh 627 piRarpugazhinsol  (kundRakkudi)
Thiruppugazh - 627 piRarpugazhinsol - kundRakkudiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தந்தத் தனதன தந்தத்
     தனதன தந்தத் ...... தனதான

......... பாடல் .........

பிறர்புக ழின்சொற் பயிலுமி ளந்தைப்
     பருவம தன்கைச் ...... சிலையாலே

பிறவித ருஞ்சிக் கதுபெரு கும்பொய்ப்
     பெருவழி சென்றக் ...... குணமேவிச்

சிறுமைபொ ருந்திப் பெருமைமு டங்கிச்
     செயலும ழிந்தற் ...... பமதான

தெரிவையர் தங்கட் கயலைவி ரும்பிச்
     சிலசில பங்கப் ...... படலாமோ

கெறுவித வஞ்சக் கபடமொ டெண்டிக்
     கிலுமெதிர் சண்டைக் ...... கெழுசூரன்

கிளையுடன் மங்கத் தலைமுடி சிந்தக்
     கிழிபட துன்றிப் ...... பொருதோனே

குறுமுநி யின்பப் பொருள்பெற அன்றுற்
     பனமநு வுஞ்சொற் ...... குருநாதா

குலகிரி துங்கக் கிரியுயர் குன்றக்
     குடிவளர் கந்தப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பிறர் புகழ் இன் சொல் பயிலும் இளந்தைப் பருவ மதன் கைச்
சிலையாலே
... ஞானிகள் அல்லாத பிறர் புகழும், இனிய சொல்லைப்
பேசும் வாலிபப் பருவமுள்ள மன்மதனுடைய கையில் உள்ள வில்லால்,

பிறவி தரும் சிக்கு அது பெருகும் பொய்ப் பெரு வழி சென்று
அக் குணம் மேவி
... பிறவியினால் உண்டாகும் சிக்கல்கள் பெருகும்
பொய்யான பெரிய (காம) வழியில் போய் அந்தப் பொய்க் குணத்திலே
பொருந்தி,

சிறுமை பொருந்திப் பெருமை முடங்கிச் செயலும் அழிந்து ...
அதனால் சிறுமை அடைந்து, பெருமை சுருங்கி, செயல்கள் அழிந்து,

அற்பம் அது ஆன தெரிவையர் தங்கள் கயலை விரும்பிச்
சிலசில பங்கப் படலாமோ
... அற்ப குணமுள்ள மாதர்களின் கயல்
மீன் போன்ற கண்ணை விரும்பி, (அதனால்) சில சில அவமானங்களை
அடையலாமோ?

கெறு வித வஞ்சக் கபடமொடு எண் திக்கிலும் எதிர்
சண்டைக்கு எழு சூரன்
... கர்வமும், வஞ்சக எண்ணமும், சூதும்
கொண்டு, எட்டுத் திசைகளிலும் எதிர்த்து போருக்கு எழுந்த சூரன்

கிளையுடன் மங்கத் தலை முடி சிந்தக் கிழி பட துன்றிப்
பொருதோனே
... அவனுடைய சுற்றத்தாருடன் மங்கி அழிய, அவர்கள்
தலை முடிகள் சிதைந்து கிழிபட, நெருங்கிச் சண்டை செய்தவனே,

குறு முநி இன்பப் பொருள் பெற அன்று உற்பன மநுவும்
சொல் குரு நாதா
... குட்டை வடிவு உள்ள (அகத்திய) முனிவர்
உண்மைப் பொருளை அறியும்படி அன்று மனத்தில் தோன்றிய
மந்திரத்தை உபதேசித்த குருநாதனே,

குலகிரி துங்கக் கிரி உயர் குன்றக்குடி வளர் கந்தப்
பெருமாளே.
... விளங்கும் மலையாக, பரிசுத்தமான மலையாக
மேம்பட்டு விளங்கும் குன்றக் குடியில்* வீற்றிருந்து அருளும் கந்தப்
பெருமாளே.


* குன்றக்குடி ராமநாதபுரம் மாவட்டத்தில் காரைக்குடிக்கு மேற்கே
7 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.1021  pg 1.1022  pg 1.1023  pg 1.1024 
 WIKI_urai Song number: 409 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 627 - piRar pugazh insol (kundRakkudi)

piRarpuka zhinsoR payilumi Lanthaip
     paruvama thankaic ...... cilaiyAlE

piRavitha runjik kathuperu kumpoyp
     peruvazhi senRak ...... kuNamEvic

siRumaipo runthip perumaimu dangic
     seyaluma zhinthaR ...... pamathAna

therivaiyar thangat kayalaivi rumpic
     silasila pangap ...... padalAmO

keRuvitha vanjak kapadamo deNdik
     kilumethir saNdaik ...... kezhucUran

kiLaiyudan mangath thalaimudi sinthak
     kizhipada thunRip ...... poruthOnE

kuRumuni yinpap poruLpeRa anRuR
     panamanu vunjcoR ...... gurunAthA

kulakiri thungak kiriyuyar kunRak
     kudivaLar kanthap ...... perumALE.

......... Meaning .........

piRar pukazh in sol payilum iLanthaip paruva mathan kaic cilaiyAlE: He is the sweet-talking youthful Manmathan (God of Love) who is praised by all except the wise people; because of the bow in his hand,

piRavi tharum sikku athu perukum poyp peru vazhi senRu ak kuNam mEvi: people walk along the big unreal path of lust, full of knotty situations caused by birth, and are afflicted by the vice of falsehood;

siRumai porunthip perumai mudangic seyalum azhinthu: consequently, they shrink in status, losing their prestige, become inactive,

aRpam athu Ana therivaiyar thangaL kayalai virumpis silasila pangap padalAmO: and fall for the kayal-fish-like eyes of the mean women; is it worth their while to suffer the humiliations?

keRu vitha vanjak kapadamodu eN thikkilum ethir saNdaikku ezhu cUran: The arrogant demon SUran, with treacherous and devious thoughts, decided to engage in combat from all the eight directions;

kiLaiyudan mangath thalai mudi sinthak kizhi pada thunRip poruthOnE: he and his clan suffered a humiliating defeat, and their crowns were destroyed and torn when You closed in on them in the war, Oh Lord!

kuRu muni inpap poruL peRa anRu uRpana manuvum coR guru nAthA: Making the dwarf-sage Agasthiyar realise the true principle, You taught him the ManthrA that came to Your mind on that day, Oh Great Master!

kulakiri thungak kiri uyar kunRakkudi vaLar kanthap perumALE.: This is an imposing mountain, an impeccable one, in the famous place called KundRakkudi*, which is Your abode, Oh KandhA, the Great One!


* KundRakkudi is in RAmanAthapuram District, 7 miles west of KAraikkudi.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 627 piRar pugazh insol - kundRakkudi

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]