திருப்புகழ் 618 அரிவையர்கள்  (கநகமலை)
Thiruppugazh 618 arivaiyargaL  (kanagamalai)
Thiruppugazh - 618 arivaiyargaL - kanagamalaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனன தனன தந்தத்
     தனதனன தனன தந்தத்
          தனதனன தனன தந்தத் ...... தனதான

......... பாடல் .........

அரிவையர்கள் தொடரு மின்பத்
     துலகுநெறி மிகம ருண்டிட்
          டசடனென மனது நொந்திட் ...... டயராமல்

அநுதினமு முவகை மிஞ்சிச்
     சுகநெறியை விழைவு கொண்டிட்
          டவநெறியின் விழையு மொன்றைத் ...... தவிர்வேனோ

பரிதிமதி நிறைய நின்றஃ
     தெனவொளிரு முனது துங்கப்
          படிவமுக மவைகள் கண்டுற் ...... றகமேவும்

படர்கள்முழு வதும கன்றுட்
     பரிவினொடு துதிபு கன்றெற்
          பதயுகள மிசைவ ணங்கற் ...... கருள்வாயே

செருவிலகு மசுரர் மங்கக்
     குலகிரிகள் நடுந டுங்கச்
          சிலுசிலென வலைகு லுங்கத் ...... திடமான

செயமுதவு மலர்பொ ருங்கைத்
     தலமிலகு மயில்கொ ளுஞ்சத்
          தியைவிடுதல் புரியு முன்பிற் ...... குழகோனே

கருணைபொழி கிருபை முந்தப்
     பரிவினொடு கவுரி கொஞ்சக்
          கலகலென வருக டம்பத் ...... திருமார்பா

கரிமுகவர் தமைய னென்றுற்
     றிடுமிளைய குமர பண்பிற்
          கநககிரி யிலகு கந்தப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

அரிவையர்கள் தொடரு மின்பத்து ... மாதர்களைப் பின் தொடர்ந்து
செல்லும் சிற்றின்பம் சார்ந்த

உலகுநெறி மிக மருண்டிட்டு ... உலகநெறியில் மிகுந்த மோகம்
கொண்டு,

அசடனென மனது நொந்திட்டு அயராமல் ... அசடன் எனக்
கருதப்பட்டு, மனம் வேதனைப்பட்டுச் சோர்வுறாமல்,

அநுதினமும் உவகை மிஞ்சி ... நாள் தோறும் களிப்பு மிகுந்து,

சுகநெறியை விழைவு கொண்டிட்டு ... அற்ப சுகவழியிலேயே
விருப்பம் கொண்டு நடந்து,

அவநெறியின் விழையும் ஒன்றைத் தவிர்வேனோ ... பாவ
வழியிலே செல்ல விரும்பும் புத்தியை நான் நீக்க மாட்டேனோ?

பரிதிமதி நிறைய நின்ற அஃதெனவொளிரும் ... சூரியனும்
சந்திரனும் சேர்ந்து நிற்கும் தன்மையை ஒத்து ஒளிருகின்ற

உனது துங்கப் படிவமுக மவைகள் கண்டுற்று ... உன்
பரிசுத்தமான வடிவுள்ள திருமுகங்களைக் கண்டு,

அகமேவும் படர்கள் முழுவதும் அகன்று ... என் மனத்திலுள்ள
துயரம் யாவும் நீங்கப் பெற்று,

பரிவினொடு துதிபுகன்று ... உள்ளத்தில் அன்போடு உன்னைத்
துதித்து,

பதயுகள மிசை வணங்கற்கு அருள்வாயே ... ஒளி பொருந்திய
உன் திருவடிகள் மீது வணங்குதற்கு அருள் புரிவாயாக.

செருவிலகு மசுரர் மங்க ... போர்க்களத்தில் பின்னடையும்
அசுரர்களின் பெருமை மங்க,

குலகிரிகள் நடுநடுங்க ... பெருமை தங்கிய (கிரெளஞ்சம் முதலிய)
மலைகளெல்லாம் நடுநடுங்க,

சிலுசிலென வலைகுலுங்க ... சிலுசிலுவென்று கடல் அலைகள் கலங்க,

திடமான செயமுதவு மலர்பொருங்கை ... உறுதி வாய்ந்ததும்,
வெற்றி தருவதும், மலர் போன்றதுமான திருக்கரத்தில்

தலமிலகும் அயில்கொளுஞ் சத்தியை ... விளங்கும் கூர்மையான
சக்திவேலாயுதத்தை

விடுதல் புரியு முன்பிற் குழகோனே ... செலுத்தும் பெருமை
வாய்ந்த இளையோனே,

கருணைபொழி கிருபை முந்த ... கருணை பொழியும் அருளே
முந்துவதால்

பரிவினொடு கவுரி கொஞ்ச ... அன்போடு கெளரி (பார்வதி)
கொஞ்சி நிற்க,

கலகலென வரு கடம்பத் திருமார்பா ... கலகல என்று தண்டை
ஒலிக்க வரும் கடப்ப மாலை அணி மார்பனே,

கரிமுகவர் தமையனென்று உற்றிடும் ... யானைமுகக் கணபதியைத்
தமையனாகப் பெற்று விளங்கும்

இளைய குமர ... இளைய சகோதரக் குமரனே,

பண்பிற் கநககிரி யிலகு கந்தப் பெருமாளே. ... அழகோடு
கனககிரி* (பொன்மலை) யில் வாழும் கந்தப் பெருமாளே.


* கனகமலை வட ஆற்காடு மாவட்டத்தில் போரூர் ரயில் நிலையத்துக்கு
கிழக்கே 9 மைலில் தேவிகாபுரத்தின் அருகே உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.997  pg 1.998  pg 1.999  pg 1.1000 
 WIKI_urai Song number: 400 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 618 - arivaiyargaL (kanagamalai)

arivaiyarkaL thodaru minpath
     thulakuneRi mikama rundit
          tacadenana manathu nonthit ...... tayarAmal

anuthinamu muvakai minjich
     cukaneRiyai vizhaivu koNdit
          tavaneRiyin vizhaiyu monRaith...... thavirvEnO

parithimathi niRaiya ninRah
     thenavoLiru munathu thungap
          padivamuka mavaikaL kaNduR ...... RakamEvum

padarkaLmuzhu vathuma kanRut
     parivinodu thuthipu kanReR
          pathayukaLa micaiva NangaR ...... karuLvAyE

ceruvilaku macurar mangak
     kulakirikaL naduna dungach
          cilucelena valaiku lungath ...... thidamAna

ceyamuthavu malarpo rungkaith
     thalamilaku mayilko Lunjcath
          thiyaividuthal puriyu munpiR ...... kuzhakOnE

karunaipozhi kirupai munthap
     parivinodu kavuri konjak
          kalakalena varuka dampath ...... thirumArpa

karimukavar thamaiya nenRuR
     RidumiLaiya kumara paNpiR
          kanakakiri yilaku kanthap ...... perumALE.

......... Meaning .........

arivaiyarkaL thodaru minpaththu: Chasing women, pursuing carnal desire,

ulakuneRi mika marunditta: and indulging in worldly pleasures, I became very intoxicated.

acadenana manathu nonthittayarAmal: I do not want to be deemed a fool and suffer mental torture.

anuthinamu muvakai minjich: Each and every day, becoming excited about

cukaneRiyai vizhaivu koNdittu: trivial pleasures and longing for them,

avaneRiyin vizhaiyu monRaith thavirvEnO: I tread a sinful path willingly; and when will I learn to avoid this base desire?

parithimathi niRaiya ninRahthenavoLirum: Just like the sun and the moon shining in unison,

unathu thungap padivamukam: Your faces glow with purity!

avaikaL kaNduRRu: I want the delight of beholding them!

akamEvum padarkaLmuzhuvathum akanRu: As a result, my mental agonies will vanish entirely.

utparivinodu thuthi pukanRu: With kindness filled in the recess of my heart, I should praise Your glory.

eRpathayukaLa micai vaNangaRKaruLvAyE: You must bless me to worship Your sparkling feet!

ceruvilakum acurar manga: The demons (asuras) retreating from the battlefield were disgraced;

kulakirikaL nadunadunga: the famous Mounts of yore (like Krouncha) were shaken;

cilucelena valaikulunga: the waves in the seas were turbulent;

thidamAna ceyamuthavu malarporung kaith: when Your strong, victorious and flower-like hand

thalamilakum ayilkoLunj caththiyai viduthal puriyu: began to fling the sharp powerful Spear called SakthiVEl!

munpiR kuzhakOnE: Oh famous and mighty Young Lord!

karunaipozhi kirupai muntha: Because Her compassionate grace predominates,

parivinodu kavuri konjak: Mother Gowri (PArvathi) caresses You fondly!

kalakalena varuka dampath thirumArpa: With lilting sounds of the anklets, You come to Her wearing Kadappa garland on Your chest!

karimukavar thamaiya nenRuRRidum: You have the Great elephant-faced Ganapathi as Your elder brother!

iLaiya kumara: You are the Younger One, Oh Kumara!

paNpiR kanakakiri yilaku kanthap perumALE.: Oh KanthA, You majestically reside in Kanagamalai*, Oh Great One!


* Kanagamalai is in North Arcot District, 9 miles to the east of POrUr Railway Station, near DEvikApuram.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 618 arivaiyargaL - kanagamalai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]