திருப்புகழ் 581 மாலாசை கோபம்  (விராலிமலை)
Thiruppugazh 581 mAlAsaikObam  (virAlimalai)
Thiruppugazh - 581 mAlAsaikObam - virAlimalaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானான தான தானான தான
     தானான தான ...... தனதான

......... பாடல் .........

மாலாசை கோப மோயாதெ நாளு
     மாயா விகார ...... வழியேசெல்

மாபாவி காளி தானேனு நாத
     மாதா பிதாவு ...... மினிநீயே

நாலான வேத நூலாக மாதி
     நானோதி னேனு ...... மிலைவீணே

நாள்போய் விடாம லாறாறு மீதில்
     ஞானோப தேச ...... மருள்வாயே

பாலா கலார ஆமோத லேப
     பாடீர வாக ...... அணிமீதே

பாதாள பூமி யாதார மீன
     பானீய மேலை ...... வயலூரா

வேலா விராலி வாழ்வே சமூக
     வேதாள பூத ...... பதிசேயே

வீரா கடோர சூராரி யேசெ
     வேளே சுரேசர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மாலாசை கோபம் ... மயக்கம், ஆசை, கோபம் இவையெல்லாம்

ஓயாதெ நாளும் ... ஒய்ச்சல் இல்லாமல் நாள்தோறும்

மாயா விகார வழியேசெல் ... பிரபஞ்ச மாயாவிகார வழியிலே
போகின்ற

மாபாவி காளி தானேனு ... மகாபாவி, துர்க்குணம் உள்ளவன்தான்
நானெனிலும்,

நாத மாதா பிதாவு மினிநீயே ... நாதனே, தாயும், தந்தையும் இனி
நீதான் எனக்கு

நாலான வேத நூல் ... நான்கு வேத நூல்களையும்,

ஆக மாதி ... ஆகமங்கள் ஆகிய பிற நூல்களையும்,

நானோதி னேனு மிலை ... நான் படித்ததும் இல்லை.

வீணே நாள்போய் விடாமல் ... வீணாக வாழ்நாள் போய் விடாமல்

ஆறாறு மீதில் ... முப்பத்தாறு தத்துவங்களுக்கு* அப்பாற்பட்ட

ஞானோபதேசம் அருள்வாயே ... நிலைத்த ஞானோபதேசத்தை
அருள்வாயே,

பாலா கலார ஆமோத ... பாலனே, செங்குவளை மலர்ப் பிரியனே,

அணிமீதே லேப பாடீர வாக ... ஆபரணங்களின் மேல் சந்தனம்
பூசிய அழகனே,

பாதாள பூமி யாதார ... பாதாளம், பூமியிரண்டுக்கும் ஆதாரமாய்
உள்ளவனே,

மீன பானீய ... மீனினங்களும் தண்ணீரும் நிறைந்த

மேலை வயலூரா ... மேற்கு வயலூரில் குடிகொண்டவனே,

வேலா விராலி வாழ்வே ... வேலனே, விராலிமலைச்** செல்வனே,

சமூக வேதாள பூத பதி ... திரளான பேய்கள், பூதகணங்கள்
வணங்கும் தலைவன் (சிவன்)

சேயே ... குமாரனே,

வீரா கடோர சூராரியே ... வீரனே, கொடுமையான சூரனுக்குப்
பகைவனே,

செவேளே சுரேசர் பெருமாளே. ... செவ்வேளே, தேவர்களுக்கு
ஈசனே, பெருமாளே.


* 96 தத்துவங்கள் பின்வருமாறு:

36 பரதத்துவங்கள் (அகநிலை):
ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.

ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை):
மண், தீ, நீர், காற்று, வெளி.

ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை):
வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.


** விராலிமலை, திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில்
மணப்பாறைக்கு அருகே உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.899  pg 1.900 
 WIKI_urai Song number: 363 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

திருமதி காந்திமதி சந்தானம்

Mrs Kanthimathy Santhanam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Mrs Kanthimathy Santhanam
Murugan Songs by Ms Sughandhisri K.
சுகந்திஸ்ரீ

Ms Sughandhisri K.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 581 - mAlAsai kObam (virAlimalai)

mAlAsai kOpa mOyAdhe nALu
     mAyA vikAra ...... vazhiyEsel

mApAvi kALi thAnEnu nAdha
     mAthA pithAvum ...... inineeyE

nAlAna vEdha nUl AgamAdhi
     nAnOdhi nEnum ...... ilai veeNE

nALpOy vidAmal ARAru meedhil
     nyAnOba dhEsam ...... aruLvAyE

bAlA kalAra AmOdha lEba
     pAteera vAga ...... aNimeedhE

pAdhALa bUmi AdhAra meena
     pAneeya mElai ...... vayalUrA

vElA virAli vAzhvE samUga
     vEdhALa bUtha ...... pathisEyE

veerA katOra sUrAriyE se
     vELE surEsar ...... perumALE.

......... Meaning .........

mAlAsai kOpam: Daze, desire and anger -

OyAdhe nALu: these were pursued by me constantly everyday.

mAyA vikAra vazhiyEsel: I went about in myriad ways of undesirable mystic pursuit.

mApAvi kALi thAnEnu: Although I am a big sinner and treacherous,

nAdha mAthA pithAvum inineeyE: my Lord, You are my Mother and Father from now on.

nAlAna vEdha nUl: The Four Great Vedas

AgamAdhi: or the Great Scriptures

nAnOdhi nEnum ilai: were never learnt by me.

veeNE nALpOy vidAmal: Lest my remaining days are wasted,

ARAru meedhil nyAnOba dhEsam aruLvAyE: You have to bless me with the True Knowledge (which surpasses 36 fundamental tenets*).

bAlA kalAra AmOdha: Oh, Eternal Youth, and the lover of red kalAra (hibiscus) flower,

lEba pAteera vAga aNimeedhE: You wear fragrant sandal paste on Your jewels,

pAdhALa bUmi AdhAra: You are the supporter of both the PAthAla (Nadir) and the Earth,

meena pAneeya mElai vayalUrA: You chose West VayalUr as Your abode, rich in water and fish.

vElA virAli vAzhvE: Oh VElA, with the Spear, and the Treasure of Virali Mount**,

samUga vEdhALa bUtha pathisEyE: You are the son of SivA, the Leader of multitudes of bhUthas and ghosts.

veerA katOra sUrAriyE: Oh Brave One, who destroyed treacherous SUran,

sevELE surEsar perumALE.: Oh Handsome One, The Lord of all DEvAs and the Great One!


* The 96 thathvAs (tenets) are as follows:

36 ParathathvAs (internal, Superior Tenets): 'AathmA' (soul) thathvAs 24, 'vidhyA' (knowledge) thathvAs 7, 'siva' thathvAs 5.

5 Elements (external, with five aspects each making 25): Earth, Fire, Water, Air, Cosmos.

35 Other thathvAs (external): 'vAyus' (gases) 10, nAdis (kundalinis) 10, karmAs 5, ahangkAram (ego) 3, gunAs (character) 3, vAkku (speech).


** VirAlimalai is located 20 miles from Tiruchi on the route to Madhurai, near MaNappARai.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 581 mAlAsai kObam - virAlimalai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]