திருப்புகழ் 543 ஓல மிட்ட சுரும்பு  (திருக்கழுக்குன்றம்)
Thiruppugazh 543 Olamittasurumbu  (thirukkazhukkundRam)
Thiruppugazh - 543 Olamittasurumbu - thirukkazhukkundRamSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தத்த தனந்த தனா தனாதன
     தான தத்த தனந்த தனா தனாதன
          தான தத்த தனந்த தனா தனாதன ...... தனனதான

......... பாடல் .........

ஓல மிட்ட சுரும்பு தனா தனாவென
     வேசி ரத்தில் விழுங்கை பளீர் பளீரென
          வோசை பெற்ற சிலம்பு கலீர் கலீரென ...... விரகலீலை

ஓர்மி டற்றி லெழும்புள் குகூ குகூவென
     வேர்வை மெத்த வெழுந்து சலா சலாவென
          ரோம குச்சு நிறைந்து சிலீர் சிலீரென ...... அமுதமாரன்

ஆல யத்து ளிருந்து குபீர் குபீரென
     வேகு திக்க வுடம்பு விரீர் விரீரென
          ஆர முத்த மணிந்து அளா வளாவென ...... மருவுமாதர்

ஆசை யிற்கை கலந்து சுமா சுமாபவ
     சாக ரத்தி லழுந்தி எழா எழாதுளம்
          ஆறெ ழுத்தை நினைந்து குகா குகாவென ...... வகைவராதோ

மாலை யிட்ட சிரங்கள் செவேல் செவேலென
     மேலெ ழுச்சி தரும்பல் வெளேல் வெளேலென
          வாகை பெற்ற புயங்கள் கறேல் கறேலென ...... எதிர்கொள்சூரன்

மார்பு மொக்க நெரிந்து கரீல் கரீலென
     பேய்கு திக்க நிணங்கள் குழூ குழூவென
          வாய்பு தைத்து விழுந்து ஐயோ ஐயோவென ...... உதிரமாறாய்

வேலை வற்றி வறண்டு சுறீல் சுறீலென
     மாலை வெற்பு மிடிந்து திடீல் திடீலென
          மேன்மை பெற்ற ஜனங்கள் ஐயா ஐயாவென ...... விசைகள்கூற

வேலெ டுத்து நடந்த திவா கராசல
     வேடு வப்பெண் மணந்த புயா சலாதமிழ்
          வேத வெற்பி லமர்ந்த க்ருபா கராசிவ ...... குமரவேளே.

......... சொல் விளக்கம் .........

ஓலம் இட்ட சுரும்பு தனா தனா எனவே சிரத்தில் விழும் கை
பளீர் பளீர் என ஓசை பெற்ற சிலம்பு கலீர் கலீர் என
...
ஒலிக்கின்ற வண்டு தனா தனா என்று ஒலியுடன், தலையில் உள்ள
மலரை நாடி விழும் சப்தம் பளீர் பளீர் என்று கேட்க, ஓசைகளைச் செய்யும்
கால்களில் அணிந்த சிலம்பு கலீர் கலீர் என்று சப்திக்க,

விரக லீலை ஓர் மிடற்றில் எழும் புள் குகூ குகூ என வேர்வை
மெத்த எழுந்து சலா சலா என ரோம குச்சு நிறைந்து சிலீர்
சிலீர் என
... காம விளையாட்டின் போது, ஒப்பற்ற கழுத்தில்
உண்டாகின்ற புட் குரல்கள் குகூ குகூ என்று ஒலிக்க, வியர்வை மிக்க
உண்டாகி சலா சலா என்று கசகசக்க, மயிர்க் கூச்சல் மிகுந்து சிலீர் சிலீர்
எனச் சிலிர்த்துப் புளகம் கொள்ள,

அமுதமாரன் ஆலயத்துள் இருந்து குபீர் குபீர் எனவே
குதிக்க உடம்பு விரீர் விரீர் என ஆர முத்தம் அணிந்து அளா
அளா என மருவு மாதர்
... மன்மதன் தனது இருப்பிடத்திலிருந்து
குபீர் குபீர் என்று வெளிவந்து பாய, உடல் காம வேட்கையால்
விருவிருப்பை அடைய, முத்து மாலை அணிந்தவராய் அளவில்லாமல்
கொடுங்கள் என்று கேட்டுச் சேர்கின்ற விலைமாதர்களின்

ஆசையில் கை கலந்து சுமா சுமா பவ சாகரத்தில் அழுந்தி
எழா எழாது உளம் ஆறு எழுத்தை நினைந்து குகா குகா என
வகை வராதோ
... ஆசையில் நன்கு கலந்து உறவாடி, அடிக்கடி பிறவிப்
பெருங் கடலில் மூழ்கி எழாமல், மனது மூலப் பொருளாகிய (சரவணபவ
என்ற) ஆறு எழுத்துக்களை நினைத்து குகா குகா என்று கூறும்படியான
பேறு எனக்கு வராதோ?

மாலை இட்ட சிரங்கள் செவேல் செவேல் என வேல் எழுச்சி
தரும் பல் வெளேல் வெளேல் என வாகை பெற்ற புயங்கள்
கறேல் கறேல் என எதிர் கொள் சூரன்
... மாலைகள் அணிந்த
தலைகள் (ரத்தம் பெருகுவதால்) செக்கச் சிவக்க, வேல் போன்ற கூரிய
பற்கள் வெள்ளை வெளேர் என்று ஒளி தர, வெற்றிமாலைகள் முன்பு
சூடிய தோள்கள் கன்னங் கறேல் என்று கரிய நிறமாக எதிர்த்து
வந்த சூரன்

மார்பும் ஒக்க நெரிந்து கரீல் கரீல் என பேய் குதிக்க
நிணங்கள் குழூ குழூ என வாய் புதைத்து விழுந்து ஐயோ
ஐயோ என உதிரம் ஆறாய்
... மார்பு ஒருமிக்க நொடிந்து கரிந்து
போக, பேய்கள் குதித்து மகிழும்படி மாமிசங்கள் கும்பல் கும்பலாகக்
கிடக்க, அசுரர்கள் வாய் அடைத்துப்போய்க் கீழே விழுந்து ஐயோ ஐயோ
என்று கதறி அழ, ரத்தம் ஆறாகப் பெருக,

வேலை வற்றி வறண்டு சுறீல் சுறீல் என மாலை வெற்பும்
இடிந்து திடீல் திடீல் என மேன்மை பெற்ற ஜனங்கள் ஐயா
ஐயா என இசைகள் கூற வேல் எடுத்து நடந்த திவாகரா
...
கடல் வற்றிப்போய் வறண்டு சுறீல் என்று சுருங்க, மாயை மயக்கங்களைக்
கொண்ட கிரெளஞ்ச மலை இடிந்து திடீல் திடீல் என்று கீழே விழ,
மேலான தேவர்கள் முதலியோர் ஐயா ஐயா என்று பாட்டுக்களைப் பாட,
வேலாயுதத்தை ஏந்தி நடந்த ஞான சூரியனே,

அசல வேடுவப் பெண் மணந்த புய அசலா தமிழ் வேத
வெற்பில் அமர்ந்த க்ருபாகரா சிவ குமர வேளே.
... வள்ளிமலைக்
குறப் பெண்ணாகிய வள்ளியை மணம் புரிந்த மலை போன்ற புயங்களை
உடையவனே, தமிழ் முழங்கும் வேதகிரியில் (திருக்கழுக்குன்றத்தில்*)
வீற்றிருக்கும் அருளாளனே, சிவக் குமாரனாகிய தலைவனே.


* திருக்கழுக்குன்றத்தின் தலவிருட்சம் வாழையாதலால் இதற்கு 'கதலிவனம்' என்றும் பெயர்.


இத்தலம் செங்கற்பட்டு ரயில் நிலையத்துக்கு தென்கிழக்கில் 9 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.791  pg 1.792  pg 1.793  pg 1.794 
 WIKI_urai Song number: 326 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 543 - Ola mitta surumbu (thirukkazhukkundram)

Ola mitta surumpu thanA thanAvena
     vEsi raththil vizhungkai paLeer paLeerena
          vOsai petRa silampu kaleer kaleerena ...... virakaleelai

Ormi datRi lezhumpuL kukU kukUvena
     vErvai meththa vezhunthu salA salAvena
          rOma kucchu niRainthu sileer sileerena ...... amuthamAran

Ala yaththu Lirunthu kupeer kupeerena
     vEku thikka vudampu vireer vireerena
          Ara muththa maNinthu aLA vaLAvena ...... maruvumAthar

Asai yiRkai kalanthu sumA sumApava
     sAka raththi lazhunthi ezhA ezhAthuLam
          ARe zhuththai ninainthu kukA kukAvena ...... vakaivarAthO

mAlai yitta sirangaL sevEl sevElena
     mEle zhucchi tharumpal veLEl veLElena
          vAkai petRa puyangaL kaREl kaRElena ...... ethirkoLcUran

mArpu mokka nointhu kareel kareelena
     pEyku thikka niNangaL kuzhU kuzhUvena
          vAypu thaiththu vizhunthu aiyO aiyOvena ...... uthiramARAy

vElai vatRi vaRaNdu suReel suReelena
     mAlai veRpu midinthu thideel thideelena
          mEnmai petRa janangaL aiyA aiyAvena ...... visaikaLkURa

vEle duththu nadantha thivA karAchala
     vEdu vappeN maNantha puyA chalAthamizh
          vEtha veRpi lamarntha krupA karAsiva ...... kumaravELE.

......... Meaning .........

Olam itta surumpu thanA thanA enavE siraththil vizhum kai paLeer paLeer ena Osai petRa silampu kaleer kaleer ena: The humming beetles made the sound "thanA thanA"; the sound produced by their impinging upon the flowers on the hair was like "paLeer paLeer"; the rattling anklets on the legs made a clinking noise;

viraka leelai Or midatRil ezhum puL kukU kukU ena vErvai meththa ezhunthu salA salA ena rOma kucchu niRainthu sileer sileer ena: during their love-play, the crooning calls of birds emanating from their matchless throat sounded "kukU kukU"; they profusely perspired in a sticky and sultry manner; their exhilaration was accompanied by goose-bumps chilling the entire body;

amuthamAran AlayaththuL irunthu kupeer kupeer enavE kuthikka udampu vireer vireer ena Ara muththam aNinthu aLA aLA ena maruvu mAthar: Manmathan (God of Love) got out of his seat and jumped all over in a spurt; the body became tingled due to excessive passion; these whores, adorned with strand of pearls, unite only after their demand of limitless amount of money is met;

Asaiyil kai kalanthu sumA sumA pava sAkaraththil azhunthi ezhA ezhAthu uLam ARu ezhuththai ninainthu kukA kukA ena vakai varAthO: I do not have the desire to copulate with them and sink into the sea of birth only to refloat again; instead, my mind wishes to think of the fundamental principle of the six hallowed letters (SaravaNabava) and to keep on chanting "Oh GuhA, Oh GuhA"; will I ever get that good fortune, Oh Lord?

mAlai itta sirangaL sevEl sevEl ena vEl ezhucchi tharum pal veLEl veLEl ena vAkai petRa puyangaL kaREl kaREl ena ethir koL cUran: With reddish hair on the head (due to bleeding) adorned with garlands, showing his white teeth sharp like the spear and black-complexioned shoulders that once displayed garlands of triumph, the demon SUran advanced confrontingly;

mArpum okka nerinthu kareel kareel ena pEy kuthikka niNangkaL kuzhU kuzhU ena vAy puthaiththu vizhunthu aiyO aiyO ena uthiram ARAy: his chest was charred altogether; pieces of flesh gathered on the floor in heaps after heaps to the rejoicing of the jumping fiends; the dumbfounded demons fell down screaming uncontrollably; blood gushed in the battlefield like a river;

vElai vatRi vaRaNdu suReel suReel ena mAlai veRpum idinthu thideel thideel ena mEnmai petRa janangkaL aiyA aiyA ena isaikaL kURa vEl eduththu nadantha thivAkarA: the seas became dried up and shrank suddenly; the magical and treacherous mount Krouncha was shattered, falling down with a thud; the exalted celestials and others sang songs of praise hailing You "Oh my Lord, Oh my Lord as You came with the spear, Oh, Sun of Knowledge!"

asala vEduvap peN maNantha puya asalA thamizh vEtha veRpil amarntha krupAkarA siva kumara vELE.: You married VaLLi, the damsel of the KuRavAs of VaLLimalai, Oh Lord with mountain-like broad shoulders! In this mountain ThirukkazhukkundRam* (also known as VEthagiri) where Tamil reverberates, You are seated full of grace and compassion! You are the Leader, Oh Son of Lord SivA!


* Kathalivanam - meaning a jungle of plantains - is also another name of ThirukkazhukkundRam as the shrine has plantain as SthalaVriksham {Shrine Tree}. This place is 9 miles Southeast of Chingelpet Railway Station.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 543 Ola mitta surumbu - thirukkazhukkundRam

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]