திருப்புகழ் 532 கை ஒத்து வாழும்  (வள்ளிமலை)
Thiruppugazh 532 kaioththuvAzhum  (vaLLimalai)
Thiruppugazh - 532 kaioththuvAzhum - vaLLimalaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தய்யத்த தான தந்த தய்யத்த தான தந்த
     தய்யத்த தான தந்த ...... தனதான

......... பாடல் .........

கையொத்து வாழு மிந்த மெய்யொத்த வாழ்வி கந்து
     பொய்யொத்த வாழ்வு கண்டு ...... மயலாகிக்

கல்லுக்கு நேரும் வஞ்ச வுள்ளத்தர் மேல்வி ழுந்து
     கள்ளப்ப யோத ரங்க ...... ளுடன்மேவி

உய்யப்ப டாமல் நின்று கையர்க்கு பாய மொன்று
     பொய்யர்க்கு மேய யர்ந்து ...... ளுடைநாயேன்

உள்ளப்பெ றாக நின்று தொய்யப்ப டாம லென்று
     முள்ளத்தின் மாய்வ தொன்றை ...... மொழியாயோ

ஐயப்ப டாத ஐந்து பொய்யற்ற சோலை தங்கு
     தெய்வத்தெய் வானை கொங்கை ...... புணர்வோனே

அல்லைப்பொ றாமு ழங்கு சொல்லுக்ர சேவ லொன்று
     வெல்லப்ப தாகை கொண்ட ...... திறல்வேலா

வையத்தை யோடி யைந்து கையற்கு வீசு தந்தை
     மெய்யொத்த நீதி கண்ட ...... பெரியோனே

வள்ளிக்கு ழாம டர்ந்த வள்ளிக்கல் மீது சென்று
     வள்ளிக்கு வேடை கொண்ட ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கை ஒத்து வாழும் இந்த மெய் ஒத்த வாழ்வு இகந்து ... செய்யத்
தக்கதை அறிந்து அதன்படி வாழும் இந்த மெய்யான வாழ்க்கையை
விட்டுவிட்டு,

பொய் ஒத்த வாழ்வு கண்டு மயலாகி ... பொய்யான வாழ்க்கையைப்
பார்த்து அதில் மோகம் கொண்டு,

கல்லுக்கு நேரும் வஞ்ச உள்ளத்தர் மேல் விழுந்து ... கல்லைப்
போன்ற கடினமான வஞ்சக உள்ளத்தை உடைய பொது மகளிர்மேல்
விழுந்து,

கள்ளப் பயோதரங்கள் உடன் மேவி ... (அவர்களுடைய)
கள்ளத்தனம் பொருந்திய மார்பகங்களின் மேல் பொருந்தி,

உய்யப் படாமல் நின்று ... உய்யும் வழியில் சேராது நின்று,

கையர்க்கு உபாயம் ஒன்று பொய்யர்க்குமே அயர்ந்து ...
வஞ்சகருடனும், தந்திரம் நிறைந்த பொய்யர் கூட்டத்துடனுமே கலந்து
சோர்வடைந்து,

உள் உடை நாயேன் ... உள்ளம் குலைகின்ற நாயைப்போன்ற எனக்கு

உள்ளப் பெறாக நின்று தொய்யப்படாமல் என்றும் ... மனதில்
பெறுதற்கு அரிய செல்வமாக நினைத்து, சோர்வு அடையாமல் எப்போதும்

உள்ளத்தின் மாய்வது ஒன்றை மொழியாயோ ... நிலைத்துள்ள
மனப் பக்குவத்தை (அடைய) ஓர் உபதேச மொழியைச் சொல்ல
மாட்டாயோ?

ஐயப் படாத ஐந்து பொய் அற்ற சோலை தங்கு ... சந்தேகம்
இல்லாத, ஐந்து எனப்படும் பொய்யாத வகையில்* (கேட்டதைத் தரும்)
கற்பக மரச் சோலையில் தங்கி வளர்ந்த

தெய்வத் தெய்வானை கொங்கை புணர்வோனே ... தெய்வ மகள்
தேவயானையின் மார்பகங்களை அணைவோனே,

அல்லைப் பொறா முழங்கு சொல் உக்ர சேவல் ஒன்று ...
இரவைப் பொறுக்காமல் கூவி ஒலிக்கும் சொல்லை உடைய வலிமையான
சேவல் ஒன்றை வைத்துள்ள

வெல்லப் பதாகை கொண்ட திறல் வேலா ... வெற்றிக்
கொடியைக்கொண்ட வல்லமை படைத்த வேலனே,

வையத்தை ஓடி ஐந்து கையற்கு வீசு தந்தை ... உலகம்
முழுமையும் ஓடி வலம் வந்தும், ஐந்து திருக் கரங்களைக்கொண்ட
கணபதிக்கு (கனியைக்) கொடுத்த தந்தையாகிய சிவபெருமானுக்கு

மெய் ஒத்த நீதி கண்ட பெரியோனே ... (அவர் நீதி
தவறியபோதிலும்) உண்மைக்குப் பொருந்திய பிரணவ மந்திரத்தை நீதி
முறையில் தெரிவித்த பெரியோனே,

வள்ளிக் குழாம் அடர்ந்த வள்ளிக்கல் மீது சென்று ... வள்ளிக்
கொடிகள் நிறைந்துள்ள வள்ளி மலை** மேல் ஏறிச் சென்று,

வள்ளிக்கு வேடை கொண்ட பெருமாளே. ... வள்ளி நாயகியைத்
தேடி அவள்மீது மோகம்கொண்ட பெருமாளே.


* தேவலோகத்தில் இருந்த ஐந்து பொய்யற்ற மரங்கள்:

சந்தானம், அரிச்சந்தனம், மந்தாரம், பாரிஜாதம், கற்பகம்.


** வள்ளிமலை வட ஆற்காடு மாவட்டத்தில் ராயவேலூருக்கு 12 மைல் தென்கிழக்கில்,
திருவல்லத்துக்கு வடக்கே உள்ளது. வள்ளி தேவியர் அவதரித்த தலம்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.761  pg 1.762  pg 1.763  pg 1.764 
 WIKI_urai Song number: 315 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 532 - kai oththu vAzhum (vaLLimalai)

kaiyoththu vAzhu mintha meyyoththa vAzhvi kanthu
     poyyoththa vAzhvu kaNdu ...... mayalAki

kallukku nErum vanja vuLLaththar mElvi zhunthu
     kaLLappa yOtha ranga ...... LudanmEvi

uyyappa dAmal ninRu kaiyarkku pAya monRu
     poyyarkku mEya yarnthu ...... LudainAyEn

uLLappe RAka ninRu thoyyappa dAma lenRu
     muLLaththin mAyva thonRai ...... mozhiyAyO

aiyappa dAtha ainthu poyyatRa sOlai thangu
     theyvaththey vAnai kongai ...... puNarvOnE

allaippo RAmu zhangu sollukra sEva lonRu
     vellappa thAkai koNda ...... thiRalvElA

vaiyaththai yOdi yainthu kaiyaRku veesu thanthai
     meyyoththa neethi kaNda ...... periyOnE

vaLLikku zhAma darntha vaLLikkal meethu senRu
     vaLLikku vEdai koNda ...... perumALE.

......... Meaning .........

kaiyoththu vAzhu mintha meyyoththa vAzhvi kanthu: Having given up the righteous way of leading life with moral values,

poyyoththa vAzhvu kaNdu mayalAki: I fell for this false life crazily;

kallukku nErum vanja vuLLaththar mElvi zhunthu: I was ensnared by the whores who were treacherous and stone-hearted,

kaLLappa yOtha ranga LudanmEvi: and passionately cuddled their bosom;

uyyappa dAmal ninRu: not seeking the way towards my deliverance,

kaiyarkku pAya monRu poyyarkku mEya yarnthu: I became drained in the company of cheats and the worst liars;

uLudainAyEn: I, the lowly dog, was completely breaking down inside.

uLLappe RAka ninRu thoyyappa dAma lenRum: I wish to feel the rarest opulence in my heart, without ever getting exhausted,

uLLaththin mAyva thonRai mozhiyAyO: and attain the everlasting wisdom; for this, will You not kindly teach me the most appropriate ManthrA?

aiyappa dAtha ainthu poyyatRa sOlai thangu: There are five trees* in a grove in the land of DEvAs, which are undoubted for their wish-yielding powers; there grew

theyvaththey vAnai kongai puNarvOnE: the Divine damsel, DEvayAnai, whose bosom is hugged by You!

allaippo RAmu zhangu sollukra sEva lonRu: A Rooster (on Your staff) is fiercely crowing, unable to bear the darkness outside;

vellappa thAkai koNdathiRalvElA: You hold that triumphant staff in Your Hand, Oh valorous Lord with the Spear!

vaiyaththai yOdi yainthu kaiyaRku veesu thanthai: You flew around the entire world, but still the prized-fruit was awarded to the five-armed Ganapathi by Your Father, Lord SivA;

meyyoththa neethi kaNda periyOnE: (although He was unjust), You preached to Him the True PraNava ManthrA in the most righteous way, Oh Pre-eminent One!

vaLLikku zhAma darntha vaLLikkal meethu senRu: In the Mount VaLLimalai**, there were plenty of dense plants of VaLLi creepers; You went climbing on them

vaLLikku vEdai koNda perumALE.: very passionately in pursuit of VaLLi, Oh Great One!


* The five truthful and wish-yielding trees in the Celestial grove are: SanthAnam, Harichandhanam, ManthAram, PArijAtham and KaRpagam.


** VaLLimalai is in North Arcot District 12 miles southeast of Roya VelUr, slightly north of Thiruvallam. This is the hill where VaLLi was found as a baby by the tribe of hunters.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 532 kai oththu vAzhum - vaLLimalai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]