திருப்புகழ் 531 ஐயுமுறு நோயும்  (வள்ளிமலை)
Thiruppugazh 531 aiyumuRunOyum  (vaLLimalai)
Thiruppugazh - 531 aiyumuRunOyum - vaLLimalaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தய்யதன தான தய்யதன தான
     தய்யதன தானத் ...... தனதான

......... பாடல் .........

ஐயுமுறு நோயு மையலும வாவி
     னைவருமு பாயப் ...... பலநூலின்

அள்ளல்கட வாது துள்ளியதில் மாயு
     முள்ளமுமில் வாழ்வைக் ...... கருதாசைப்

பொய்யுமக லாத மெய்யைவள ராவி
     உய்யும்வகை யோகத் ...... தணுகாதே

புல்லறிவு பேசி யல்லல் படு வேனை
     நல்லஇரு தாளிற் ...... புணர்வாயே

மெய்யபொழில் நீடு தையலைமு நாலு
     செய்யபுய மீதுற் ...... றணைவோனே

வெள்ளையிப மேறு வள்ளல்கிளை வாழ
     வெள்ளமுது மாவைப் ...... பொருதோனே

வையமுழு தாளு மையமயில் வீர
     வல்லமுரு காமுத் ...... தமிழ்வேளே

வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு
     வள்ளிமண வாளப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஐயும் உறு நோயும் மையலும் ... கோழையும், அதனால் ஏற்படும்
பல நோய்களும், மோகங்களும்,

அவாவின் ஐவரும் ... ஆசைகளைத் தூண்டும் ஐம்பொறிகளும்,

உபாயப் பலநூலின் அள்ளல் கடவாது ... பல கலை நூல்களும்,
அவற்றின் சூழ்ச்சிகளும் ஆகிய சேற்றைத் தாண்டாது,

துள்ளியதில் மாயும் உள்ளமும் ... துள்ளி அவைகளுக்கு உள்ளேயே
விழுந்து இறந்து போகிற உள்ளமும்,

இல் வாழ்வைக் கருதாசைப் பொய்யும் ... மனை வாழ்க்கையையே
எண்ணுகின்ற ஆசையும், பொய்யும்

அகலாத மெய்யைவளர் ஆவி உய்யும்வகை ... நீங்காத இந்த
உடலை வளர்க்கின்ற உயிர் உய்யும்படியான

யோகத்து அணுகாதே ... நல்ல யோக வழிகளை நான் அணுகாமல்,

புல்லறிவு பேசி யல்லல் படுவேனை ... இழிவான அறிவுப்
பேச்சுக்களைப் பேசித் துன்பம் அடைகின்ற என்னை

நல்லஇரு தாளிற் புணர்வாயே ... உனது நல்ல திருவடிகளில்
சேர்த்தருள்வாயாக.

மெய்ய பொழில் நீடு தையலை ... மெய்யனே, வள்ளிமலைச்
சோலையில் நீண்ட நேரமாக வள்ளியை

மு(ந்)நாலு செய்யபுய மீதுற்று அணைவோனே ... உன் பன்னிரு
சிவந்த புயங்களாலும் இறுகத் தழுவுவோனே,

வெள்ளையிப மேறு வள்ளல்கிளை வாழ ... வெள்ளையானை
ஐராவதத்தின் மீது ஏறும் இந்திரனின் சுற்றமாகிய தேவர்கள் வாழ,

வெள்ள முது மாவைப் பொருதோனே ... கடலினிடையே பல
காலம் முதுமையான மாமரமாக நின்ற சூரனுடன் போர் புரிந்தவனே,

வையமுழுதாளும் ஐய மயில் வீர ... உலகெல்லாம் முழுமையாக
ஆளும் ஐயனே, மயில் வீரனே,

வல்லமுருகா முத் தமிழ்வேளே ... வல்லம்* என்னும் திருத்தலத்தில்
உள்ள முருகனே, முத்தமிழ்க் கடவுளே,

வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு ... வள்ளிக் கொடி படரும்
மலைச்சாரல் உள்ள வள்ளிமலையில்** வாழும்

வள்ளிமணவாளப் பெருமாளே. ... வள்ளியின் மணவாளப்
பெருமாளே.


* வல்லம் என்னும் திருவல்லம் வள்ளிமலைக்குத் தெற்கே 9 மைலில் உள்ளது.


** வள்ளிமலை வட ஆற்காடு மாவட்டத்தில் ராயவேலூருக்கு 12 மைல் தென்கிழக்கில்,
திருவல்லத்துக்கு வடக்கே உள்ளது. வள்ளி தேவியர் அவதரித்த தலம்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.759  pg 1.760  pg 1.761  pg 1.762 
 WIKI_urai Song number: 314 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 531 - aiyumuRu nOyum (vaLLimalai)

aiyumuRu nOyu maiyalum avAvin
     aivarumu bAyap ...... palanUlin

aLLalkada vAdhu thuLLiyadhil mAyum
     uLLamumil vazhvaik ...... karudhAsaip

poyyumaga lAdha meiyyaivaLa rAvi
     uyyumvagai yOghath ...... thaNugAdhE

pullaRivu pEsi allalpadu vEnai
     nalla iru thALiR ...... puNarvAyE

meyyapozhil needu thaiyalaimu nAlu
     seyyabuya meethutru ...... aNaivOnE

veLLaiyiba mERu vaLLalkiLai vAzha
     veLLamudhu mAvaip ...... porudhOnE

vaiyyamuzhu dhALu maiyamayil veera
     vallamuru gAmuth ...... thamizhvELE

vaLLipadar sAral vaLLimalai mEvu
     vaLLimaNa vALap ...... perumALE.

......... Meaning .........

aiyumuRu nOyu maiyalum avAvin aivarum: The phlegm, the disesases caused by it, the lust, the provocative sensory organs,

ubAyap palanUlin aLLalkada vAdhu: and the several erotic literatures - all these cause havoc on my mind and I am unable to cross over this mire.

thuLLiyadhil mAyum uLLamum: My mind falls into that rut and is dying.

il vazhvaik karudhAsaip poyyum aga lAdha meiyyaivaLar: The desire for family life and falsehood never leave my body;

Avi uyyumvagai yOghath thaNugAdhE: and I do not know the ways to direct my life towards yOgA which will lead to fulfillment.

pullaRivu pEsi allalpadu vEnai: I speak only of trivial things and suffer enormously.

nalla iru thALiR puNarvAyE: Kindly take me unto Your two great feet!

meyya pozhil needu thaiyalai: You are Truth incarnate! Once, in the grove at VaLLimalai, You embraced VaLLi

mu nAlu seyyabuya meethutru aNaivOnE: ardently with Your twelve fair shoulders!

veLLaiyiba mERu vaLLalkiLai vAzha: To liberate the DEvAs, associated with IndrA who mounts the white elephant AirAvadham,

veLLamudhu mAvaip porudhOnE: You fought in the seas with SUran who stood resolutely as an old mango tree!

vaiyyamuzhu dhALu maiyamayil veera: You rule the entire world and mount Your Peacock!

vallamuru gAmuth thamizhvELE: You are MurugA having an abode at Thiruvallam*! You are the Master of the three branches of Tamil!

vaLLipadar sAral vaLLimalai mEvu: The creepers that produce the VaLLi roots are aplenty in VaLLimalai**

vaLLimaNa vALap perumALE.: where VaLLi, Your consort lives, Oh Great One!


* Thiruvallam is 9 miles south of VaLLimalai.


** VaLLimalai is in North Arcot District 12 miles southeast of Roya VelUr, slightly north of Thiruvallam.
This is the hill where VaLLi was found as a baby by the tribe of hunters.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 531 aiyumuRu nOyum - vaLLimalai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]