திருப்புகழ் 529 வரிசேர்ந்திடு  (திருவேங்கடம்)
Thiruppugazh 529 varisErndhidu  (thiruvEngkadam)
Thiruppugazh - 529 varisErndhidu - thiruvEngkadamSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதாந்தன தானன தானன
     தனதாந்தன தானன தானன
          தனதாந்தன தானன தானன ...... தனதான

......... பாடல் .........

வரிசேர்ந்திடு சேல்கய லோவெனு
     முழைவார்ந்திடு வேலையு நீலமும்
          வடுவாங்கிடு வாள்விழி மாதர்கள் ...... வலையாலே

வளர்கோங்கிள மாமுகை யாகிய
     தனவாஞ்சையி லேமுக மாயையில்
          வளமாந்தளிர் போல்நிற மாகிய ...... வடிவாலே

இருள்போன்றிடு வார்குழல் நீழலில்
     மயல்சேர்ந்திடு பாயலின் மீதுற
          இனிதாங்கனி வாயமு தூறல்கள் ...... பருகாமே

எனதாந்தன தானவை போயற
     மலமாங்கடு மோகவி காரமு
          மிவைநீங்கிட வேயிரு தாளினை ...... யருள்வாயே

கரிவாம்பரி தேர்திரள் சேனையு
     முடனாந்துரி யோதன னாதிகள்
          களமாண்டிட வேயொரு பாரத ...... மதிலேகிக்

கனபாண்டவர் தேர்தனி லேயெழு
     பரிதூண்டிய சாரதி யாகிய
          கதிரோங்கிய நேமிய னாமரி ...... ரகுராமன்

திரைநீண்டிரை வாரியும் வாலியும்
     நெடிதோங்கும ராமர மேழொடு
          தெசமாஞ்சிர ராவண னார்முடி ...... பொடியாகச்

சிலைவாங்கிய நாரண னார்மரு
     மகனாங்குக னேபொழில் சூழ்தரு
          திருவேங்கட மாமலை மேவிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

வரிசேர்ந்திடு சேல்கயலோவெனும் ... செவ்வரி படர்ந்த சேல் மீனோ,
கயல் மீனோ என்று சொல்லத்தக்கதும்,

உழைவார்ந்திடு வேலையு நீலமும் ... மானையும்,
வார்த்தெடுக்கப்பட்ட வேலையும், நீலோத்பல மலரையும்,

வடுவாங்கிடு வாள்விழி மாதர்கள் வலையாலே ...
மாம்பிஞ்சினையும் நிகர்த்த கண்களை உடைய மாதர்களின் காம
வலையினாலும்,

வளர்கோங்கிள மாமுகை யாகிய ... வளர்ந்த கோங்கு மரத்தின்
இளம் சிறப்பான அரும்பையொத்த

தனவாஞ்சையிலே முக மாயையில் ... மார்பகங்களின் மேல் வைத்த
ஆசையாலும், முகத்தின் மயக்கத்தாலும்,

வளமாந்தளிர் போல்நிற மாகிய வடிவாலே ... செழுமையான
மாந்தளிர் போன்ற நிறத்து வடிவத்தாலும்,

இருள்போன்றிடு வார்குழல் நீழலில் ... இருளையொத்துக் கருத்து
நீண்ட கூந்தலின் நிழலாலும்,

மயல்சேர்ந்திடு பாயலின் மீதுற ... காம மயக்கம் கொண்ட
படுக்கையின் மேலே பொருந்த,

இனிதாங்கனி வாயமு தூறல்கள் பருகாமே ... இனிதான
கோவைக்கனி இதழ்களின் அமுதாகிய ஊறல்களை உண்ணாதபடி,

எனதாந் தனதானவை போயற ... என்னுடையவை, தன்னுடையவை
என்றவை நீங்கி அற்றுப்போகவும்,

மலமாங் கடு மோகவிகாரமு மிவைநீங்கிடவே ...
மும்மலங்களினால் உண்டாகும் காம விகாரங்கள் அனைத்தும்
அகன்றிடவும்,

இரு தாளினை யருள்வாயே ... உன் இரு திருவடிகளை
அருள்வாயாக.

கரிவாம்பரி தேர்திரள் சேனையும் ... யானைப்படையும், தாவும்
குதிரைப் படையும், தேர்ப்படையும், திரண்ட காலாட்படையும்,

உடனாந்துரி யோதன னாதிகள் ... ஒன்றாகக் கூடியுள்ள
துரியோதனாதியர்

களமாண்டிடவே யொரு பாரதம் அதிலேகி ... போர்க்களத்தில்
இறந்தழிய, ஒரு பாரதப் போர்க்களத்தில் சென்று,

கனபாண்டவர் தேர்தனி லே ... பெருமைவாய்ந்த பாண்டவர்களின்
தேரிலே,

எழுபரிதூண்டிய சாரதி யாகிய ... கிளம்பிப் பாயும் குதிரைகளைச்
செலுத்திய தேரோட்டி ஆனவனும்,

கதிரோங்கிய நேமியனாம் ... ஒளி மிகுந்த சுதர் ன சக்கரத்தை
உடையவனுமான

அரி ரகுராமன் ... ஹரி, ரகுராமன், ஆகிய திருமாலும்,

திரைநீண்டிரை வாரியும் வாலியும் ... அலைகள் ஓங்கி ஒலிக்கும்
கடலையும், வாலியையும்,

நெடிதோங்குமராமரம் ஏழொடு ... நீண்டு உயர்ந்த ஏழு
மராமரங்களையும்,

தெசமாஞ்சிர ராவணனார்முடி பொடியாக ... பத்துத்
தலைகளையுடைய ராவணனின் சிரங்களையும் பொடிபடும்படி

சிலைவாங்கிய நாரணனார் மருமகனாங் குகனே ... கோதண்ட
வில்லை வளைத்த (ராமனாக வந்த) நாராயணனின் மருகனான குகனே,

பொழில் சூழ்தரு திருவேங்கட மாமலை மேவிய
பெருமாளே.
... சோலைகள் சூழ்ந்த திருவேங்கடமாம் திருமலையில்
வீற்றிருக்கும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.597  pg 1.598  pg 1.599  pg 1.600 
 WIKI_urai Song number: 248 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 529 - varisErndhidu (thiruvEngkadam)

varisErnthidu sElkaya lOvenu
     muzhaivArnthidu vElaiyu neelamum
          vaduvAngkidu vALvizhi mAtharkaL ...... valaiyAlE

vaLarkOngkiLa mAmukai yAkiya
     thanavAnjaiyi lEmuka mAyaiyil
          vaLamAnthaLir pOlniRa mAkiya ...... vadivAlE

iruLpOnRidu vArkuzhal neezhalil
     mayalsErnthidu pAyalin meethuRa
          inithAngkani vAyamu thURalkaL ...... parukAmE

enathAnthana thAnavai pOyaRa
     malamAngkadu mOkavi kAramu
          mivaineengkida vEyiru thALinai ...... yaruLvAyE

karivAmpari thErthiraL sEnaiyu
     mudanAnthuri yOthana nAthikaL
          kaLamANdida vEyoru pAratha ...... mathilEkik

kanapANdavar thErthani lEyezhu
     parithUNdiya sArathi yAkiya
          kathirOngkiya nEmiya nAmari ...... rakurAman

thiraineeNdirai vAriyum vAliyum
     nedithOngkuma rAmara mEzhodu
          thesamAnjchira rAvaNa nArmudi ...... podiyAkach

chilaivAngkiya nAraNa nArmaru
     makanAngkuka nEpozhil chUzhtharu
          thiruvEngkada mAmalai mEviya ...... perumALE.

......... Meaning .........

varisErnthidu sElkaya lOvenu: They look like the fish of sEl or kayal variety with reddish blood vessels;

muzhaivArnthidu vElaiyu neelamum: they are like deer's eyes, resembling the moulded spear and blue lilies;

vaduvAngkidu vALvizhi mAtharkaL valaiyAlE: they appear like baby mangoes and swords - these are the tantalizing eyes of women.

vaLarkOngkiLa mAmukai yAkiya: Looking like rows of bright buds of tall betel-nut trees,

thanavAnjaiyi lE: their bosoms are captivating.

muka mAyaiyil vaLamAnthaLir pOlniRa mAkiya vadivAlE: Their faces are enticing; their complexion is like that of rich mango leaf;

iruLpOnRidu vArkuzhal neezhalil: and their long dark hair casts a tempting shadow.

mayalsErnthidu pAyalin meethuRa: There is this yearning to recline on the seductive bed.

inithAngkani vAyamu thURalkaL parukAmE: Lest I indulge in sucking the sweet nectar from their fruity lips,

enathAnthana thAnavai pOyaRa: and in order that the concept of mine and theirs is eradicated,

malamAngkadu mOkavi kAramum ivaineengkida vE: and for destroying the erotic thoughts stemming from the three slags (of haughtieness, karma and delusion),

yiru thALinai yaruLvAyE: kindly bless me to attain Your two holy feet.

karivAmpari thErthiraL sEnaiyumudanAn: They had assembled the armies consisting of elephants, horses of great speed, chariots and soldiers;

thuri yOthana nAthikaL kaLamANdida vEyoru pAratha mathilEki: they belonged to the clan of DhuriyOdhanan who all perished in the War of BhAratha; and He (Krishna) went to that battlefield.

kanapANdavar thErthani lEyezhu: He mounted the chariot of the famous PAndavAs,

parithUNdiya sArathi yAkiya: and drove the galloping horses as the charioteer.

kathirOngkiya nEmiya nAmari rakurAman: He holds in His hand the bright wheel of Sudharsana; and He is Hari and Raghuraman.

thiraineeNdirai vAriyum vAliyum: As Rama, He tamed the roaring wavy ocean, attacked VAli,

nedithOngkuma rAmara mEzhodu: shot an arrow to pierce the seven tall trees,

thesamAnjchira rAvaNa nArmudi podiyAka: and crushed the ten heads of RAvaNA into powder

chilaivAngkiya nAraNa nArmarumakanAngkuka nE: by His sheer strength using His bow. He is Narayana, and You are His favourite nephew, Oh GuhA!

pozhil chUzhtharu thiruvEngkada mAmalai mEviya perumALE.: You reside in the holy hill of ThiruvEngkadam, surrounded by groves, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 529 varisErndhidu - thiruvEngkadam

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]