திருப்புகழ் 527 கோங்கிள நீரிளக  (திருவேங்கடம்)
Thiruppugazh 527 kOngkiLaneeriLaga  (thiruvEngkadam)
Thiruppugazh - 527 kOngkiLaneeriLaga - thiruvEngkadamSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தாந்தன தானதன தாந்தன தானதன
     தாந்தன தானதன ...... தனதான

......... பாடல் .........

கோங்கிள நீரிளக வீங்குப யோதரமும்
     வாங்கிய வேல்விழியும் ...... இருள்கூருங்

கூந்தலு நீள்வளைகொள் காந்தளு நூலிடையும்
     மாந்தளிர் போல்வடிவும் ...... மிகநாடிப்

பூங்கொடி யார்கலவி நீங்கரி தாகிமிகு
     தீங்குட னேயுழலும் ...... உயிர்வாழ்வு

பூண்டடி யேனெறியில் மாண்டிங னேநரகில்
     வீழ்ந்தலை யாமலருள் ...... புரிவாயே

பாங்கியும் வேடுவரும் ஏங்கிட மாமுநியும்
     வேங்கையு மாய்மறமி ...... னுடன்வாழ்வாய்

பாண்டவர் தேர்கடவும் நீண்டபி ரான்மருக
     பாண்டிய னீறணிய ...... மொழிவோனே

வேங்கையும் வாரணமும் வேங்கையு மானும்வளர்
     வேங்கட மாமலையி ...... லுறைவோனே

வேண்டிய போதடியர் வேண்டிய போகமது
     வேண்டவெ றாதுதவு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கோங்கு இள நீர் இளக வீங்கு பயோதரமும் ... கோங்கு மரத்தின்
முகை, இளநீர் (இவை இரண்டும்) தோற்கும்படி பெருகி வளரும்
மார்பகங்களும்,

வாங்கிய வேல் விழியும் இருள் கூரும் கூந்தலும் நீள் வளை
கொள் காந்தளு(ம்) நூல் இடையும் மாந்தளிர் போல் வடிவும்
மிக நாடி
... செலுத்தப்பட்ட வேல் போன்ற கண்களும், இருள் மிகுந்த
கூந்தலும், பெரிய வளையல்களை அணிந்துள்ள காந்தள் மலர் போன்ற
கைகளும், நூல் போன்ற இடுப்பும், மாந்தளிர் போன்ற மேனியும் (ஆகிய
இவைகளை) மிகவும் விரும்பி,

பூங்கொடியார் கலவி நீங்க அரிதாகி மிகு தீங்குடனே
உழலும் உயிர் வாழ்வு பூண்டு அடியேன் எறியில் மாண்டு
இ(ங்)ஙனே நரகில் வீழ்ந்து அலையாமல் அருள் புரிவாயே
...
பூங்கொடி போன்ற பொது மாதர்களின் சேர்க்கையை விடுதற்கு முடியாமல்
மிக்க தீமைச் செயல்களுடன் திரிகின்ற உயிர் வாழ்க்கையை மேற்கொண்டு
அடியவனாகிய நான் அந்த இழிந்த வழியிலேயே நின்று இறந்து இங்ஙனம்
நரகத்தில் விழுந்து அலையாமல் அருள் புரிவாயாக.

பாங்கியும் வேடுவரும் ஏங்கிட மா முநியும் வேங்கையுமாய்
மற மி(ன்)னுடன் வாழ்வாய்
... தோழியும் வேடர்களும் திகைக்கும்படி
சிறந்த தவ முனியாக வந்த கிழவர் போலவும், வேங்கை மரமாகவும்
வேடங்கொண்டு வேட்டுவர்களின் மின்னல் போன்ற வள்ளியுடன்
வாழ்பவனே,

பாண்டவர் தேர் கடவும் நீண்ட பிரான் மருக பாண்டியன்
நீறு அணிய மொழிவோனே
... பாண்டவர்களின் தேரைச்
சாரதியாகச் செலுத்தியவனும், நீண்ட (திரிவிக்கிரம) உருவை எடுத்தவனும்
ஆகிய பிரானாகிய திருமாலின் மருகனே, (கூன்) பாண்டியன் திரு நீறு
அணியும்படி பதிகம் பாடிய திருஞானசம்பந்தனே,

வேங்கையும் வாரணமும் வேங்கையும் மானும் வளர் வேங்கட
மா மலையில் உறைவோனே
... புலியும் யானையும் வேங்கை மரமும்
மானும் மிகுந்த திருவேங்கடமாகிய சிறந்த மலையில் உறைபவனே,

வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது வேண்ட
வெறாது உதவு(ம்) பெருமாளே.
... தங்களுக்குக் குறைகள்
உண்டான போது அடியார்கள் அவர்களுக்கு வேண்டிய சுக போகங்களை
முறையிட்டு வேண்ட, (சற்றேனும்) வெறுப்பு இல்லாமல் அதை
உதவுகின்ற பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.593  pg 1.594  pg 1.595  pg 1.596 
 WIKI_urai Song number: 246 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 527 - kOngkiLa neeriLaga (thiruvEngkadam)

kOngiLa neeriLaka veengupa yOtharamum
     vAngiya vElvizhiyum ...... iruLkUrung

kUnthalu neeLvaLaikoL kAnthaLu nUlidaiyum
     mAnthaLir pOlvadivum ...... mikanAdip

pUngodi yArkalavi neengari thAkimiku
     theenguda nEyuzhalum ...... uyirvAzhvu

pUNdadi yEneRiyil mANdinga nEnarakil
     veezhnthalai yAmalaruL ...... purivAyE

pAngiyum vEduvarum Engida mAmuniyum
     vEngaiyu mAymaRami ...... nudanvAzhvAy

pANdavar thErkadavum neeNdapi rAnmaruka
     pANdiya neeRaNiya ...... mozhivOnE

vEngaiyum vAraNamum vEngaiyu mAnumvaLar
     vEngada mAmalaiyi ...... luRaivOnE

vENdiya pOthadiyar vENdiya pOkamathu
     vENdave RAthuthavu ...... perumALE.

......... Meaning .........

kOngu iLa neer iLaka veengu payOtharamum: Surpassing the size of the bud of kOngu tree and the baby-coconut, their breasts bulge out;

vAngiya vEl vizhiyum iruL kUrum kUnthalum neeL vaLai koL kAnthaLu(m) nUl idaiyum mAnthaLir pOl vadivum mika nAdi: their eyes look like wielded spears; their hair is pitch-dark; their arms looking like the kAnthaL flowers (daffodils) are adorned with large bangles; their waist is slender like the thread; the tone of their skin is like the tender leaf of mango; being smitten by all these organs,

pUngodiyAr kalavi neenga arithAki miku theengudanE uzhalum uyir vAzhvu pUNdu adiyEn eRiyil mANdu i(ng)nganE narakil veezhnthu alaiyAmal aruL purivAyE: and not being able to give up my liaison with these whores who look like a flowery creeper, I have been roaming about carrying on with this life doing many an evil deed; without letting me remain in the destructive path that is sure to result in my death and drifting about in hell, kindly bless me, Oh Lord!

pAngiyum vEduvarum Engida mA muniyum vEngaiyumAy maRa mi(n)nudan vAzhvAy: To the utter bewilderment of the companion-maid and the hunters, You took several disguises in the form of a ripe old sage and a neem tree so that You could live happily with VaLLi, the lightning-like damsel of the hunters!

pANdavar thEr kadavum neeNda pirAn maruka pANdiyan neeRu aNiya mozhivOnE: He was the charioteer of the PANdavAs; He took the very tall form of ThirivikramA; and You are the nephew of that Lord VishNu! You sang sacred hymns for the hunch-back King PANdiyan to whom You offered the holy ash, coming as ThirugnAna Sambandhar!

vEngaiyum vAraNamum vEngaiyum mAnum vaLar vEngada mA malaiyil uRaivOnE: You live in the famous Mount ThiruvEngkadam where tigers, elephants, neem trees and deers abound.

vENdiya pOthu adiyar vENdiya pOkam athu vENda veRAthu uthavu(m) perumALE.: When Your devotees are in need of some thing and beseech You for that fervently, You bestow upon them their wishes without the slightest indifference, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 527 kOngkiLa neeriLaga - thiruvEngkadam

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]