திருப்புகழ் 509 மகரமொடுறு குழை  (சிதம்பரம்)
Thiruppugazh 509 magaramoduRukuzhai  (chidhambaram)
Thiruppugazh - 509 magaramoduRukuzhai - chidhambaramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தனதன தான தாத்தன
     தனதன தனதன தான தாத்தன
          தனதன தனதன தான தாத்தன ...... தனதான

......... பாடல் .........

மகரமொ டுறுகுழை யோலை காட்டியு
     மழைதவழ் வனைகுழல் மாலை காட்டியும்
          வரவர வரஇத ழூற லூட்டியும் ...... வலைவீசும்

மகரவி ழிமகளிர் பாடல் வார்த்தையில்
     வழிவழி யொழுகுமு பாய வாழ்க்கையில்
          வளமையி லிளமையில் மாடை வேட்கையில் ...... மறுகாதே

இகலிய பிரமக பால பாத்திர
     மெழில்பட இடுதிரு நீறு சேர்த்திற
          மிதழியை யழகிய வேணி யார்த்ததும் ...... விருதாக

எழில்பட மழுவுடன் மானு மேற்றது
     மிசைபட இசைதரு ஆதி தோற்றமு
          மிவையிவை யெனவுப தேச மேற்றுவ ...... தொருநாளே

ஜகதல மதிலருள் ஞான வாட்கொடு
     தலைபறி யமணர்ச மூக மாற்றிய
          தவமுனி சகமுளர் பாடு பாட்டென ...... மறைபாடி

தரிகிட தரிகிட தாகு டாத்திரி
     கிடதரி கிடதரி தாவெ னாச்சில
          சபதமொ டெழுவன தாள வாச்சிய ...... முடனேநீள்

அகுகுகு குகுவென ஆளி வாய்ப்பல
     அலகைக ளடைவுட னாடு மாட்டமு
          மரனவ னுடனெழு காளி கூட்டமு ...... மகலாதே

அரிதுயில் சயனவி யாள மூர்த்தனு
     மணிதிகழ் மிகுபுலி யூர்வி யாக்ரனு
          மரிதென முறைமுறை யாடல் காட்டிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மகரமொடு உறு குழை ஓலை காட்டியு(ம்) மழை தவழ் வனை
குழல் மாலை காட்டியும்
... மகர மீன் போன்ற குண்டலங்களையும்
காதோலையையும் காட்டியும், மழை போல் அலங்கரிக்கப்பட்ட கூந்தலில்
உள்ள மாலையைக் காட்டியும்,

வரவர வர இதழ் ஊறல் ஊட்டியும் வலை வீசும் மகர விழி
மகளிர் பாடல் வார்த்தையில் வழி வழி ஒழுகும் உபாய
வாழ்க்கையில் வளமையில் இளமையில் மாடை வேட்கையில்
மறுகாதே
... பழகப் பழக வாயிதழ் ஊறலைக் காட்டியும், (காம) வலையை
வீசுகின்ற மகர மீன் போன்ற கண்ணை உடைய பெண்களின் பாடலிலும்
பேச்சிலும் ஈடுபட்டு அந்த வழியே நடக்கின்ற தந்திரமான வாழ்க்கையிலும்,
அவர்களுடைய செல்வத்திலும், இளமையிலும், பொன்னைச் சேர்க்கும்
ஆசையிலும் நான் சுழன்று மனம் கலங்காமல்,

இகலிய பிரம கபால பாத்திரம் எழில் பட இடு திரு நீறு
சேர்த்திறம் இதழியை அழகிய வேணி ஆர்த்ததும் விருதாக
எழில் பட மழுவுடன் மானும் ஏற்றதும்
... மாறுபட்டுப் பொய்
பேசிய பிரமனுடைய மண்டை ஓடாகிய பாத்திரத்தை (சிவபெருமான்
ஏந்திய திறமும்), அழகு விளங்க இடப்படுகின்ற திரு நீறு அவர் உடலில்
சேர்ந்துள்ள திறமும், கொன்றை மலரை அழகுள்ள சடையில் செருகிச்
சேர்த்துள்ள திறமும், வெற்றிக்கு அடையாளமாக அழகு விளங்க
மழுவாயுதத்தையும் மானையும் கையில் ஏற்ற தன்மையும்,

இசை பட இசை தரு ஆதி தோற்றமும் இவை இவை என
உபதேசம் ஏற்றுவது ஒரு நாளே
... புகழ் விளங்க யாவராலும்
சொல்லப்படும் ஆதியாகத் தோன்றிய தோற்றமும், இன்ன இன்ன
காரணத்தால் என்று நீ உபதேசித்துப் புலப்படுவதும் ஆகிய ஒரு நாள்
எனக்குக் கிட்டுமோ?

ஜகதலம் அதில் அருள் ஞான வாள் கொ(ண்)டு தலை பறி
அமணர் சமூகம் மாற்றிய தவ முனி சகம் உளர் பாடு பாட்டு
என மறை பாடி
... இப்பூமியில் அருள் நிறந்த ஞானமாகிய வாளைக்
கொண்டு, பறித்த தலையை உடைய சமணர்களின் கூட்டத்தை அழித்த
(ஞான சம்பந்தப் பெருமானாகிய) தவ முனியே, உலகத்தில் உள்ளவர்கள்
பாடுகின்ற பாட்டுக்கள் போன்ற பாடல்களில் வேத சாரங்களை
(தேவாரமாக) அமைத்துப் பாடியவனே,

தரிகிட தரிகிட தாகு டாத்திரி கிடதரி கிடதரி தாவெ
னாச்சில சபதமொடு எழுவன தாள் வாச்சியமுடனே நீள்
அகு குகுகுகு என ஆளி வாய்ப் பல அலகைகள் அடைவுடன்
ஆடும் ஆட்டமும்
... தரிகிட தரிகிட தாகு டாத்திரி கிடதரி கிடதரி தா
என்று இந்த விதமான ஒலிகளைக் கொண்டு எழுகின்றனவான தாள
வாத்தியங்களுடன் நெடு நேரம் அகு குகு குகு இவ்வாறான ஒலியுடன்
ஆளியின் வாய் போல பல பேய்கள் முறையுடனே ஆடுகின்ற கூத்தும்,

அரன் அவனுடன் எழு காளி கூட்டமும் அகலாதே அரி
துயில் சயன வியாள மூர்த்தனு(ம்) மணி திகழ் மிகு புலியூர்
வியாக்ரனும்
... சிவபெருமான் ஆடும் போது அவனுடன் எழுந்து
ஆடுகின்ற காளிகளின் கூட்டமும் உன்னைச் சூழ, திருமால் உறங்கும்
படுக்கையான பாம்பாகிய ஆதிசேஷ மூர்த்தியாகிய பதஞ்சலியும், அழகு
பொலியும் பேர் பெற்ற புலியூர் என்னும் சிதம்பரத்தில் வியாக்கிர பாதரும்,

அரிது என முறை முறை ஆடல் காட்டிய பெருமாளே. ...
நடராஜப் பெருமானின் நடனம் அருமை வாய்ந்தது என்று வியக்க விதம்
விதமான கூத்துக்களை ஆடிக் காட்டிய பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.525  pg 2.526  pg 2.527  pg 2.528  pg 2.529  pg 2.530 
 WIKI_urai Song number: 650 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 509 - magaramoduRu kuzhai (chidhambaram)

makaramo duRukuzhai yOlai kAttiyu
     mazhaithavazh vanaikuzhal mAlai kAttiyum
          varavara varaitha zhURa lUttiyum ...... valaiveesum

makaravi zhimakaLir pAdal vArththaiyil
     vazhivazhi yozhukumu pAya vAzhkkaiyil
          vaLamaiyi liLamaiyil mAdai vEtkaiyil ...... maRukAthE

ikaliya piramaka pAla pAththira
     mezhilpada iduthiru neeRu sErththiRa
          mithazhiyai yazhakiya vENi yArththathum ...... viruthAka

ezhilpada mazhuvudan mAnu mEtRathu
     misaipada isaitharu Athi thOtRamu
          mivaiyivai yenavupa thEsa mEtRuva ...... thorunALE

jakathala mathilaruL njAna vAtkodu
     thalaipaRi yamaNarsa mUka mAtRiya
          thavamuni sakamuLar pAdu pAttena ...... maRaipAdi

tharikida tharikida thAku dAththiri
     kidathari kidathari thAve nAcchila
          sapathamo dezhuvana thALa vAcchiya ...... mudanEneeL

akukuku kukuvena ALi vAyppala
     alakaika Ladaivuda nAdu mAttamu
          maranava nudanezhu kALi kUttamu ...... makalAthE

arithuyil sayanavi yALa mUrththanu
     maNithikazh mikupuli yUrvi yAkranu
          marithena muRaimuRai yAdal kAttiya ...... perumALE.

......... Meaning .........

makaramodu uRu kuzhai Olai kAttiyu(m) mazhai thavazh vanai kuzhal mAlai kAttiyum: They show off their swinging ear-studs that are shaped like the makara fish and display golden ornaments on their ears; they exhibit the garland adorning their rain-cloud-like hair;

varavara vara ithazh URal Uttiyum valai veesum makara vizhi makaLir pAdal vArththaiyil vazhi vazhi ozhukum upAya vAzhkkaiyil vaLamaiyil iLamaiyil mAdai vEtkaiyil maRukAthE: they feed their saliva through their lips again and again to their suitors in course of time; I do not wish to have my head reeling over the songs and sweet speech of these girls who cast their net of passion through their eyes looking like the makara fish; nor do I wish to be involved in pursuing their tricky life, their wealth, youth and avaricious greed for gold;

ikaliya pirama kapAla pAththiram ezhil pada idu thiru neeRu sErththiRam ithazhiyai azhakiya vENi Arththathum viruthAka ezhil pada mazhuvudan mAnum EtRathum: the style with which Lord SivA held in His hand the skull of Lord Brahma who uttered a lie uncharacteristically, the manner in which the holy ash has beautifully blended with His body, the elegance with which He has placed the kondRai (Indian laburnum) flower on His pretty and matted hair, the symbolic way of His holding the axe and the deer in His hands establishing His triumph,

isai pada isai tharu Athi thOtRamum ivai ivai ena upathEsam EtRuvathu oru nALE: and His Primordial form that radiates His fame praised by all - explaining the cause of each of these phenomena, when do You propose to preach to enlighten me, and will I ever see such a day, Oh Lord!

jakathalam athil aruL njAna vAL ko(N)du thalai paRi amaNar samUkam mAtRiya thava muni sakam uLar pAdu pAttu ena maRai pAdi: In this world, wielding graciously the sword of Knowledge, You destroyed, coming as a pious sage, ThirugnAna Sambandhar, the clan of the SamaNAs known to have practised a custom of plucking the hair of one another! You composed the famous hymns (ThEvAram) containing the essence of the VEdAs and set them to music in a very common tune sung by the people of the world!

tharikida tharikida thAku dAththiri kidathari kidathari thAve nAcchila sapathamodu ezhuvana thAL vAcchiyamudanE neeL aku kukukuku ena ALi vAyp pala alakaikaL adaivudan Adum Attamum: Percussion instruments were beaten to the meter "tharikida tharikida thAku dAththiri kidathari kidathari thA"; along with that sound, many fiends with lions' mouth yelled for a long time making a noise like "aku kuku kuku" and danced to that rhythm;

aran avanudan ezhu kALi kUttamum akalAthE ari thuyil sayana viyALa mUrththanu(m) maNi thikazh miku puliyUr viyAkranum: when Lord SivA danced, the group of KALees arose to dance along with Him; they surrounded You, Oh Lord, in the company of Pathanjali, who is an aspect of the Ancient Serpent, AdhisEshan, who serves as the bed for Lord VishNu, and VyAkrapAthar who all came to this beautiful town, PuliyUr (Chidhambaram);

arithu ena muRai muRai Adal kAttiya perumALE.: admiring the dance of Lord NadarAjar as a rare event, You also performed many kinds of dances, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 509 magaramoduRu kuzhai - chidhambaram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]