திருப்புகழ் 508 பனி போலத் துளி  (சிதம்பரம்)
Thiruppugazh 508 panipOlaththuLi  (chidhambaram)
Thiruppugazh - 508 panipOlaththuLi - chidhambaramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனனா தத்தன தனனா தத்தன
     தனனா தத்தன ...... தனதான

......... பாடல் .........

பனிபோ லத்துளி சலவா யுட்கரு
     பதின்மா தத்திடை ...... தலைகீழாய்ப்

படிமே விட்டுடல் தவழ்வார் தத்தடி
     பயில்வா ருத்தியில் ...... சிலநாள்போய்த்

தனமா தர்க்குழி விழுவார் தத்துவர்
     சதிகா ரச்சமன் ...... வருநாளிற்

றறியா ரிற்சடம் விடுவா ரிப்படி
     தளர்மா யத்துய ...... ரொழியாதோ

வினைமா யக்கிரி பொடியா கக்கடல்
     விகடா ருக்கிட ...... விடும்வேலா

விதியோ னைச்சது முடிநால் பொட்டெழ
     மிகவே குட்டிய ...... குருநாதா

நினைவோர் சித்தமொ டகலா மற்புகு
     நிழலாள் பத்தினி ...... மணவாளா

நிதியா மிப்புவி புலியூ ருக்கொரு
     நிறைவே பத்தர்கள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பனி போலத் துளி சல வாயுள் கரு பதின் மாதத்து இடை
தலை கீழாய்ப் படி மேவிட்டு
... பனி போல் அளவுள்ள ஒரு துளி
சுக்கிலம் ஜலத் துவார வழியாய்ச் சென்று கரு தரித்து, பத்து மாதக்
கணக்கில் தலை கீழாக பூமியில் வந்து பிறந்து,

உடல் தவழ்வார் தத்து அடி பயில்வார் உத்தியில் சில நாள்
போய்
... உடல் கொண்டு தவழ்பவராய், தத்தித் தத்தி அடியிட்டு நடை
பயில்பவராய், மழலைப் பேச்சில் சில நாட்கள் கழிந்த பின்னர்,

தன மாதர்க் குழி விழுவார் தத்துவர் ... மார்பகங்கள் மிக்க உடைய
பெண்கள் என்னும் காமக் குழியில் வீழ்பவராய், காலத்தைத் தாவிச்
செலவிடுவார்.

சதி காரச் சமன் வரு நாளில் ... வஞ்சனை கொண்டவனாகிய யமன்
வருகின்ற அந்த நாளில்,

தறியார் இல் சடம் விடுவார் இப்படி தளர் மாயத் துயர்
ஒழியாதோ
... நிலைத்திருக்க முடியாதவராய் தமக்கு வீடாகிய உடலை
விடுவார். இந்த விதமாக தளர்ந்து ஒழியும் மாயமான துயரம் என்னை
விட்டு நீங்காதோ?

வினை மாயக் கிரி பொடியாகக் கடல் விகடார் உக்கிட விடும்
வேலா
... மாயைத் தொழிலில் வல்ல கிரெளஞ்ச மலை பொடியாக,
கடலில் செருக்கு வாய்ந்த அசுரன் சூரன் அழிந்து போக, வேலினைச்
செலுத்தியவனே,

விதியோனைச் சது முடி நால் பொட்டு எழ மிகவே குட்டிய
குருநாதா
... பிரமனை, நான்கு முடிகளும் தொங்கிக் கவிழ்ந்து
பொடிபட, வலிமையாகக் குட்டிய குருநாதனே,

நினைவோர் சித்தமொடு அகலாமல் புகு நிழலாள் பத்தினி
மணவாளா
... நினைத்துத் தியானிப்பவர்களுடைய உள்ளத்தில்
நீங்காமல் புகுந்திருக்கும் ஒளி வீசுபவளாகிய பத்தினி வள்ளியின்
கணவனே,

நிதியாம் இப்புவி புலியூருக்கு ஒரு நிறைவே பத்தர்கள்
பெருமாளே.
... இந்தப் பூமிக்கு நிதி போன்றதான புலியூரில்
(சிதம்பரத்தில்) இருக்கும் ஒரு நிறைந்த செல்வமே, பக்தர்களுக்கு
உரிய பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.523  pg 2.524  pg 2.525  pg 2.526 
 WIKI_urai Song number: 649 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 508 - pani pOlath thuLi (chidhambaram)

panipO laththuLi salavA yutkaru
     pathinmA thaththidai ...... thalaikeezhAyp

padimE vittudal thavazhvAar thaththadi
     payilvA ruththiyil ...... silanALpOyth

thanamA tharkkuzhi vizhuvAar thaththuvar
     sathikA racchaman ...... varunALit

RaRiyA riRchadam viduvA rippadi
     thaLarmA yaththuya ...... rozhiyAthO

vinaimA yakkiri podiyA kakkadal
     vikadA rukkida ...... vidumvElA

vithiyO naicchathu mudinAl pottezha
     mikavE kuttiya ...... gurunAthA

ninaivOr siththamo dakalA maRpuku
     nizhalAL paththini ...... maNavALA

nithiyA mippuvi puliyU rukkoru
     niRaivE paththarkaL ...... perumALE.

......... Meaning .........

pani pOlath thuLi sala vAyuL karu pathin mAthaththu idai thalai keezhAyp padi mEvittu: A sperm of the size of a drop of dew sets about its journey along the urinary track causing pregnancy; after ten months, the baby arrives on this earth upside down;

udal thavazhvAr thaththu adi payilvAr uththiyil sila nAL pOy: a few days pass by seeing the baby crawl, its steps stumbling while learning to walk and speech prattling;

thana mAthark kuzhi vizhuvAr thaththuvar: then they fall into the pit called women with voluptuous bosom and fritter away their precious time;

sathi kArac chaman varu nALil: on the appointed day for the visit of the evil God of Death (Yaman),

thaRiyAr il sadam viduvAr ippadi thaLar mAyath thuyar ozhiyAthO: they are unable to hold themselves steady and shed the cottage of their bodies; will I never be spared such a debilitating and delusory grief at all?

vinai mAyak kiri podiyAkak kadal vikadAr ukkida vidum vElA: Mount Krouncha, notorious for its trickery, was shattered to pieces and the arrogant demon SUran was destroyed in the sea when You wielded Your spear, Oh Lord!

vithiyOnaic chathu mudi nAl pottu ezha mikavE kuttiya gurunAthA: BrahmA's four heads were pulverized and knocked down when You hit them forcefully with Your knuckles!

ninaivOr siththamodu akalAmal puku nizhalAL paththini maNavALA: You are the consort of VaLLi who illuminates brightly the hearts of the devotees meditating on her.

nithiyAm ippuvi puliyUrukku oru niRaivE paththarkaL perumALE.: You are the rich treasure seated in PuliyUr (Chidhambaram) which in itself is the repository of wealth of the world, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 508 pani pOlath thuLi - chidhambaram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]