திருப்புகழ் 501 சாந்துடனே புழுகு  (சிதம்பரம்)
Thiruppugazh 501 sAndhudanEpuzhugu  (chidhambaram)
Thiruppugazh - 501 sAndhudanEpuzhugu - chidhambaramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தாந்தன தானதன தாந்தன தானதன
     தாந்தன தானதன ...... தனதான

......... பாடல் .........

சாந்துட னேபுழுகு தோய்ந்தழ கார்குழலை
     மோந்துப யோதரம ...... தணையாகச்

சாய்ந்துப்ர தாபமுடன் வாழ்ந்தநு ராகசுக
     காந்தமொ டூசியென ...... மடவார்பால்

கூர்ந்தக்ரு பாமனது போந்துன தாள்குறுகி
     ஓர்ந்துண ராவுணர்வி ...... லடிநாயேன்

கூம்பவிழ் கோகநக பூம்பத கோதிலிணை
     பூண்டுற வாடுதின ...... முளதோதான்

பாந்தளின் மீதினிதி னோங்குக ணேதுயில்கொள்
     நீண்டிடு மாலொடய ...... னறியாது

பாம்புரு வானமுநி வாம்புலி யானபதன்
     ஏய்ந்தெதிர் காணநட ...... மிடுபாதர்

பூந்துணர் பாதிமதி வேய்ந்தச டாமகுட
     மாங்கன காபுரியி ...... லமர்வாழ்வே

பூங்கமு கார்வுசெறி யூங்கந காபுரிசை
     சூழ்ம்புலி யூரிலுறை ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சாந்துடனே புழுகு தோய்ந்து அழகு ஆர் குழலை மோந்து ...
சாந்தும், புனுகும் (மார்பில்) தோய்ந்தும், அழகு நிறைந்த கூந்தலை
முகர்ந்து பார்த்தும்,

பயோதரம் அது அணையாக சாய்ந்து ப்ரதாபமுடன்
வாழ்ந்து
... மார்பகத்தையே தலையணையாகக் கொண்டு அதன் மேல்
சாய்ந்தும், ஆடம்பரத்துடன் வாழ்ந்தும்,

அநுராக சுக காந்தமொடு ஊசி என மடவார் பால் ...
காம இச்சை இன்பத்தில், காந்தமும் ஊசியும் போல இழுக்கப்பட்டு,
விலைமாதர்களிடத்தில்

கூர்ந்த க்ருபா மனது போந்து உன தாள் குறுகி ... மிக்கெழுந்த
அன்பு மனத்தைத் தொலைத்து, உன்னுடைய திருவடியை அணுகி,

ஓர்ந்து உணரா உணர்வு இல் அடி நாயேன் ... ஆய்ந்தறிந்து
உணர்கின்றோம் என்ற உணர்ச்சி இல்லாத மெளன நிலையில் அடி
நாயேனாகிய நான்,

கூம்பு அவிழ் கோகநக பூம் பத கோது இல் இணை பூண்டு
உறவாடு தினம் உளதோ தான்
... குவிந்து அவிழ்ந்த தாமரை
போன்ற அழகிய பதங்களாகிய, குற்றம் இல்லாத இரண்டு
திருவடிகளையும் மனதில் கொண்டு அன்பு பூணும் நாள் ஒன்று
உள்ளதோ?

பாந்தளின் மீது இனிதின் ஓங்கு க(ண்)ணே துயில்கொள்
நீண்டிடும் மாலொடு அயன் அறியாது
... பாம்பாகிய ஆதிசேஷன்
மேல் இன்பமாக விளங்கி கண் துயில் கொள்ளும் நீண்ட வடிவம் கொண்ட
திருமாலும், பிரமனும் (அடி முடியை) காண முடியாது நின்று,

பாம்பு உருவான முநி வா(வு)ம் புலியான பதன் ஏய்ந்து எதிர்
காண நடம் இடும் பாதர்
... பாம்பு வடிவத்தைக் கொண்ட (பதஞ்சலி)
முனிவரும், தாவிச் செல்லும் புலியின் பாதங்களைக் கொண்ட வியாக்ரபாத
முனிவரும் பொருந்தி நின்று, எதிரே தரிசிக்கும்படி நடனம் செய்கின்ற
கூத்தப் பெருமானுடைய

பூந்து உணர் பாதி மதி வேய்ந்த சடா மகுடமாம் கனகா
புரியில் அமர் வாழ்வே
... அழகிய பூங்கொத்துக்களையும், பிறைச்
சந்திரனையும் சூடியுள்ள ஜடாமகுடமாகிய பொன் வண்ணப் புரிசடையில்
விரும்பி விளையாடும் குழந்தையே,

பூ ங்கமுகு ஆர்வு செறி(யூ)யும் கநகா புரிசை சூழு(ழ்)ம்
புலியூரில் உறை பெருமாளே.
... அழகிய கமுகு மரங்கள் நிறைந்து
வளர்ந்துள்ளதும், நெருங்கியுள்ள பொன்னிற மதில்கள் சூழ்ந்ததுமான
புலியூர் எனப்படும் சிதம்பரத்தில் வாழ்கின்ற பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.505  pg 2.506  pg 2.507  pg 2.508 
 WIKI_urai Song number: 642 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 501 - sAndhudanE puzhugu (chidhambaram)

chAnthuda nEpuzhuku thOynthazha kArkuzhalai
     mOnthupa yOtharama ...... thaNaiyAka

sAynthupra thApamudan vAzhnthanu rAkasuka
     kAnthamo dUsiyena ...... madavArpAl

kUrnthakru pAmanathu pOnthuna thALkuRuki
     OrnthuNa rAvuNarvi ...... ladinAyEn

kUmpavizh kOkanaka pUmpatha kOthiliNai
     pUNduRa vAduthina ...... muLathOthAn

pAnthaLin meethinithi nOnguka NEthuyilkoL
     neeNdidu mAlodaya ...... naRiyAthu

pAmpuru vAnamuni vAmpuli yAnapathan
     Eynthethir kANanada ...... midupAthar

pUnthuNar pAthimathi vEynthasa dAmakuda
     mAngana kApuriyi ...... lamarvAzhvE

pUnkamu kArvuseRi yUngana kApurisai
     sUzhmpuli yUriluRai ...... perumALE.

......... Meaning .........

chAnthudanE puzhuku thOynthu azhaku Ar kuzhalai mOnthu: Smearing (on the chest) the paste of sandal and musk, breathing in the aroma from the beautiful hair,

payOtharam athu aNaiyAka sAynthu prathApamudan vAzhnthu: using their bosom as a pillow and reclining on it, leading an ostentatious life,

anurAka suka kAnthamodu Usi ena madavAr pAl: and indulging in carnal pleasure, I have been attracted to the whores like a needle drawn to a magnet;

kUrntha krupA manathu pOnthu una thAL kuRuki: and lost my mind hankering after them; I now approach Your sacred feet

Ornthu uNarA uNarvu il adi nAyEn: in utter silence without any sense of research and realisation; I am such a lowly dog;

kUmpu avizh kOkanaka pUm patha kOthu il iNai pUNdu uRavAdu thinam uLathO thAn: will there be a day for me to contemplate with love those two unblemished hallowed feet, that are like the blossoming lotus?

pAnthaLin meethu inithin Ongu ka(N)NE thuyilkoL neeNdidum mAlodu ayan aRiyAthu: The tall Lord VishNu, who slumbers blissfully on the serpent bed, AdhisEshan, and Lord BrahmA could not discern (His head or feet);

pAmpu uruvAna muni vA(vu)m puliyAna pathan Eynthu ethir kANa nadam idum pAthar: the serpent-shaped Sage Pathanjali and Sage VyAkrapAthar who has the feet of leaping tiger stood ardently by His side while He danced the Cosmic Dance before them; that Lord SivA

pUnthu uNar pAthi mathi vEyntha sadA makudamAm kanakA puriyil amar vAzhvE: wears on His matted hair beautiful flower bunches and the crescent moon; upon His gloden tresses, You played with relish as a child, Oh Lord!

pUnkamuku Arvu seRi(yU)yum kanakA purisai sUzhu(zh)m puliyUril uRai perumALE.: Beautiful betel-nut trees abound in, and rows of golden walls surround, the city of PuliyUr (Chidhambaram), which is Your abode, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 501 sAndhudanE puzhugu - chidhambaram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]