திருப்புகழ் 483 கொள்ளை ஆசை  (சிதம்பரம்)
Thiruppugazh 483 koLLaiAsai  (chidhambaram)
Thiruppugazh - 483 koLLaiAsai - chidhambaramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தய்ய தானத் தானன தானன
   தய்ய தானத் தானன தானன
      தய்ய தானத் தானன தானன ...... தனதான

......... பாடல் .........

கொள்ளை யாசைக் காரிகள் பாதக
   வல்ல மாயக் காரிகள் சூறைகள்
      கொள்ளும் ஆயக் காரிகள் வீணிகள் ...... விழியாலே

கொல்லும் லீலைக் காரிகள் யாரையும்
   வெல்லு மோகக் காரிகள் சூதுசொல்
      கொவ்வை வாய்நிட் டூரிகள் மேல்விழு ...... மவர்போலே

உள்ள நோவைத் தேயுற வாடியர்
   அல்லை நேரொப் பாமன தோஷிகள்
      உள்வி ரோதக் காரிகள் மாயையி ...... லுழல்நாயேன்

உய்ய வேபொற் றோள்களும் ஆறிரு
   கையு நீபத் தார்முக மாறுமுன்
      உள்ள ஞானப் போதமு நீதர ...... வருவாயே

கள்ள மாயத் தாருகன் மாமுடி
   துள்ள நீலத் தோகையின் மீதொரு
      கையின் வேல்தொட் டேவிய சேவக ...... முருகோனே

கல்லி லேபொற் றாள்பட வேயது
   நல்ல ரூபத் தேவர கானிடை
      கெளவை தீரப் போகுமி ராகவன் ...... மருகோனே

தெள்ளி யேமுற் றீரமு னோதிய
   சொல்வ ழாமற் றானொரு வானுறு
      செல்வி மார்பிற் பூஷண மாயணை ...... மணவாளா

தெள்ளு மேனற் சூழ்புன மேவிய
   வள்ளி வேளைக் காரம னோகர
      தில்லை மேலைக் கோபுர மேவிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கொள்ளை ஆசைக் காரிகள் பாதக வல்ல மாயக் காரிகள் ...
பேராசை கொண்டவர்கள், பாபச் செயல்களைச் செய்ய வல்ல
மாயக்காரிகள்,

சூறைகள் கொள்ளும் ஆயக் காரிகள் வீணிகள் விழியாலே
கொல்லும் லீலைக் காரிகள்
... சூறைக் காற்றைப் போல் கொள்ளை
அடிக்கும் வேட்டைக்காரிகள், பயனற்றவர்கள், கண்களால் கொல்லுகின்ற
லீலைகள் செய்பவர்கள்,

யாரையும் வெல்லும் மோகக் காரிகள் சூது சொல் கொவ்வை
வாய் நிட்டூரிகள்
... யாரையும் மயக்க வல்ல காமாந்தகிகள், சூதான
சொற்களைப் பேசும் கொவ்வைக் கனி போன்ற வாயை உடைய
பொல்லாதவர்கள்,

மேல் விழும் அவர் போலே உள்ள நோ(வ) வைத்து
உறவாடியர்
... மேலே விழுபவர் போல வெளியன்பு பாராட்டி, மனத்தை
நோவச் செய்து உறவாடுபவர்கள்,

அல்லை நேர் ஒப்பா(ம்) மன தோஷிகள் உள் விரோதக்
காரிகள் மாயையில் உழல் நாயேன் உய்யவே
... இருட்டுக்கு
ஒப்பான மனக் குற்றம் உடையவர்கள், பகைமை எண்ணம்
கொண்டவர்கள், அத்தகைய பொது மாதர்களின் மாயைச் சூழலில்
சுழல்கின்ற நாயை ஒத்த அடியேன் பிழைக்கும்படி,

பொன் தோள்களும் ஆறு இரு கையும் நீபத் தார் முகம்
ஆறும் முன் உள்ள ஞானப் போதமும் நீ தர வருவாயே
...
அழகிய தோள்களும், பன்னிரண்டு கைகளும், கடப்ப மாலையும், ஆறு
முகங்களும் முன்னதாக நான் தியானிக்க ஞான அறிவை நீ எனக்குத்
தருவதற்கு வந்தருளுக.

கள்ள மாயத் தாருகன் மா முடி துள்ள நீலத் தோகையின்
மீது
... கள்ளத்தனமும் மாயையும் நிரம்பிய தாருகாசுரனுடைய பெரிய
தலை அற்று விழ, நீல மயில் மேல் விளங்கி,

ஒரு கையில் வேல் தொட்டு ஏவிய சேவக முருகோனே ...
ஒப்பற்ற கை வேலைச் செலுத்தி அனுப்பிய வல்லமை வாய்ந்த முருகனே,

கல்லிலே பொன் தாள் படவே அது நல்ல ரூபத்தே வர ...
கல்லின் மீது அழகிய திருவடி பட்டவுடனே அது நல்ல பெண்
உருவாய் வர,

கான் இடை கெளவை தீரப் போகும் இராகவன் மருகோனே ...
காட்டில் (அகலிகைக்கு உற்ற) துன்பம் நீங்கும்படி சென்ற ராமனுடைய
மருகனே,

தெள்ளி ஏமுற்று ஈரம் முன் ஓதிய சொல் வழாமல் ... ஆய்ந்து,
இன்பமுற்று, முன்பு செய்த வாக்குறுதி* தப்பாமல்,

தான் ஒரு வான் உறு செல்வி மார்பில் பூஷணமாய் அணை
மணவாளா
... விண்ணுலகில் வளர்ந்த செல்வியாகிய தேவயானையை
தன் மார்பில் ஆபரணம் போல் அணைந்த மணவாளனே,

தெள்ளும் ஏனல் சூழ் புன(ம்) மேவிய வள்ளி வேளைக்கார
மனோகர
... நன்கு விளங்கிய தினைப் புனத்தில் இருந்த வள்ளிக்கு
காவற்காரனாய் விளங்கும் மனத்துக்கு இனியோனே,

தில்லை மேலைக் கோபுரம் மேவிய பெருமாளே. ... தில்லை
மேற்குக் கோபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.


* முற்பிறப்பில் திருமாலின் மகளாகத் தோன்றிய அமிர்தவல்லி, சுந்தரவல்லி
என்ற கன்னிகைகளுக்கு மறுபிறவியில் அவர்கள் முறையே தேவயானை, வள்ளி
என்று பிறந்து முருகனை மணந்து கொள்வர் என்று திருமால் வாக்களித்தார்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.451  pg 2.452  pg 2.453  pg 2.454  pg 2.455  pg 2.456 
 WIKI_urai Song number: 624 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 483 - koLLai Asai (chidhambaram)

koLLai yAsaik kArikaL pAthaka
   valla mAyak kArikaL cURaikaL
      koLLum Ayak kArikaL veeNikaL ...... vizhiyAlE

kollum leelaik kArikaL yAraiyum
   vellu mOkak kArikaL cUthusol
      kovvai vAynit tUrikaL mElvizhu ...... mavarpOlE

uLLa nOvaith thEyuRa vAdiyar
   allai nErop pAmana thOshikaL
      uLvi rOthak kArikaL mAyaiyi ...... luzhalnAyEn

uyya vEpot ROLkaLum ARiru
   kaiyu neepath thArmuka mARumun
      uLLa njAnap pOthamu neethara ...... varuvAyE

kaLLa mAyath thArukan mAmudi
   thuLLa neelath thOkaiyin meethoru
      kaiyin vElthot tEviya sEvaka ...... murukOnE

kalli lEpot RALpada vEyathu
   nalla rUpath thEvara kAnidai
      kauvai theerap pOkumi rAkavan ...... marukOnE

theLLi yEmut Reeramu nOthiya
   solva zhAmat RAnoru vAnuRu
      selvi mArpiR pUshaNa mAyaNai ...... maNavALA

theLLu mEnaR sUzhpuna mEviya
   vaLLi vELaik kArama nOkara
      thillai mElaik kOpura mEviya ...... perumALE.

......... Meaning .........

koLLai Asaik kArikaL pAthaka valla mAyak kArikaL: They are extremely avaricious; they are capable of committing sorcerous and sinful acts;

cURaikaL koLLum Ayak kArikaL veeNikaL vizhiyAlE kollum leelaik kArikaL: they are raiders like the whirlwind; they are utterly useless; they fool around with their flippant and killing eyes;

yAraiyum vellum mOkak kArikaL cUthu sol kovvai vAy nittUrikaL: their passionate advances can lure anyone; with their red lips like the kovvai fruit, these wicked women utter deceitful words;

mEl vizhum avar pOlE uLLa nO(va)vaiththu uRavAdiyar: they feign love outwardly, falling all over, but carry on relationship in a hurting manner;

allai nEr oppA(m) mana thOshikaL uL virOthak kArikaL mAyaiyil uzhal nAyEn uyyavE: the blemish in their heart is like darkness; they have inbuilt antagonism; and I have been roaming around, like a dog, in the delusory circle of such whores! To rescue me,

pon thOLkaLum ARu iru kaiyum neepath thAr mukam ARum mun uLLa njAnap pOthamum nee thara varuvAyE: kindly come to bless me with the knowledge and intellect of meditating upon Your broad shoulders, the twelve hands, the garland of kadappa flowers and the six hallowed faces, Oh Lord!

kaLLa mAyath thArukan mA mudi thuLLa neelath thOkaiyin meethu: In order to knock off the big head of the demon, ThArukan, who was full of deviousness and sorcery, You mounted the blue peacock

oru kaiyil vEl thottu Eviya sEvaka murukOnE: and wielded the matchless spear from Your hand, Oh Mighty MurugA!

kallilE pon thAL padavE athu nalla rUpaththE vara: When the hallowed foot (of Lord RAmA) came in contact with a stone, it was transformed into a virtuous woman (AhalyA),

kAn idai kauvai theerap pOkum irAkavan marukOnE: and the misery that afflicted her in the forest was removed as RAmA walked along that way; You are the nephew of that RAmA!

theLLi EmutRu eeram mun Othiya sol vazhAmal: The thoughtful and pleasant promise* previously made was fulfilled without fail when

thAn oru vAn uRu selvi mArpil pUshaNamAy aNai maNavALA: DEvayAnai, the damsel who grew up in the celestial land, was hugged by You, as her Consort, cherishing her as a jewel on Your hallowed chest!

theLLum Enal sUzh puna(m) mEviya vaLLi vELaikkAra manOkara: To VaLLi, who was in the fully grown millet field, You served as a timely bodyguard as well as her sweetheart, Oh Lord!

thillai mElaik kOpuram mEviya perumALE.: You have chosen Your seat in the Western Tower of the Temple in Chidhambaram, Oh Great One!


* In their previous births, DEvayAnai and VaLLi, were born as the daughters of Lord VishNu; they were deeply in love with Lord Murugan. VishNu promised to them that, in their next birth, they would have Murugan as their consort.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 483 koLLai Asai - chidhambaram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]