திருப்புகழ் 480 அக்குப் பீளை  (சிதம்பரம்)
Thiruppugazh 480 akkuppeeLai  (chidhambaram)
Thiruppugazh - 480 akkuppeeLai - chidhambaramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்தத் தானன தானன தானன
     தத்தத் தானன தானன தானன
          தத்தத் தானன தானன தானன ...... தனதான

......... பாடல் .........

அக்குப் பீளைமு ளாவிளை மூளையொ
     டுப்புக் காய்பனி நீர்மயிர் தோல்குடி
          லப்புச் சீபுழு வோடடை யார்தசை ...... யுறமேவி

அத்திப் பால்பல நாடிகு ழாயள்வ
     ழுப்புச் சார்வல மேவிளை யூளைகொ
          ளச்சுத் தோல்குடி லாமதி லேபொறி ...... விரகாளர்

சுக்கத் தாழ்கட லேசுக மாமென
     புக்கிட் டாசைபெ ணாசைம ணாசைகள்
          தொக்குத் தீவினை யூழ்வினை காலமொ ...... டதனாலே

துக்கத் தேபர வாமல்ச தாசிவ
     முத்திக் கேசுக மாகப ராபர
          சொர்க்கப் பூமியி லேறிட வேபத ...... மருள்வாயே

தக்கத் தோகிட தாகிட தீகிட
     செக்கச் சேகண தாகண தோகண
          தத்தத் தானன டீகுட டாடுடு ...... வெனதாளந்

தத்திச் சூரர்கு ழாமொடு தேர்பரி
     கெட்டுக் கேவல மாய்கடல் மூழ்கிட
          சத்திக் கேயிரை யாமென வேவிடு ...... கதிர்வேலா

திக்கத் தோகண தாவென வேபொரு
     சொச்சத் தாதையர் தாமென வேதிரு
          செக்கர்ப் பாதம தேபதி யாசுதி ...... யவைபாடச்

செப்பொற் பீலியு லாமயில் மாமிசை
     பக்கத் தேகுற மாதொடு சீர்பெறு
          தெற்குக் கோபுர வாசலில் மேவிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

அக்குப் பீளை மூளா இளை மூளையொடுப் புக்(குக்) காய்
பனி நீர் மயிர் தோல் குடிலப் பூச்சி புழுவோடு அடை ஆர்
தசை உற மேவி
... கண்ணில் பீளை, மேலெழும் கோழை, மூளையில்
தோன்றி வீங்குகின்ற புரைப் புண், அச்சம் தருகின்ற துர் நீர்கள், மயிர்,
தோல், வளைவான நாக்குப் பூச்சி, புழு இவற்றுடன் அடைந்து நிறைந்த
ஊன் இவை பொருந்தப் பெற்ற இவ்வுடலில்,

அத்திப் பால் பல நாடி குழாய் அள் வழுப்புச் சார் வலமே
விளை ஊளை கொள் அச்சுத் தோல் குடிலாம் அதிலே
...
எலும்பின் பக்கத்தில் பல நாடிக் குழாய்கள், அசிங்கமான காதுக்
குறும்பி இவை சேர்ந்து பலமாக விளைகின்ற பத்தைகளான
கசுமாலங்களைக் கொண்ட அடையாளங்கள் வாய்ந்த தோலோடு
அமைந்த குடிசையாகிய இவ்வுடலில்,

பொறி விரகாளர் சுக்கத்து ஆழ் கடலே சுகமாம் என புக்கிட்டு
ஆசை பெ(ண்)ணாசை ம(ண்)ணாசைகள் தொக்குத் தீ வினை
ஊழ் வினை காலமொடு அதனாலே
... ஐம்புலன்களாகிய
தந்திரக்காரர்கள் களவுடன் ஒதுங்கியுள்ளதும், ஆழ்ந்த கடல் போன்றதும்
ஆகிய வாழ்க்கையே சுகம் என நினைத்து அதில் ஈடுபட்டு, பொன்னாசை,
பெண்ணாசை, மண் ஆசைகள் ஒன்று சேர்ந்து, தீ வினை ஊழ் வினை
இவைகளின் காலக் கொடுமை காரணமாக,

துக்கத்தே பரவாமல் சதாசிவ முத்திக்கே சுகமாக பராபர
சொர்க்கப் பூமியில் ஏறிடவே பதம் அருள்வாயே
... துக்கம்
பெருகி வேதனைப்படாமல், எப்பொழுதும் மங்களகரமாயுள்ள முக்தி
நிலையில் சுகமாக எவற்றிலும் மேம்பட்ட சொர்க்க நாட்டில் நான் கரை
ஏறும்படி உன் திருவடியைத் தந்து அருளுக.

தக்கத் தோகிட தாகிட தீகிட செக்கச் சேகண தாகண
தோகண தத்தத் தானன டீகுட டாடுடு என தாளம் தத்தி
...
தக்கத் தோகிட தாகிட தீகிட செக்கச் சேகண தாகண தோகண
தத்தத் தானன டீகுட டாடுடு என்ற பல விதமான தாளங்களின்
ஒலியை எழுப்பி,

சூரர் குழாமொடு தேர் பரி கெட்டுக் கேவலமாய் கடல்
மூழ்கிட சத்திக்கே இரையாம் எனவே விடு கதிர் வேலா
...
அசுரர்களின் கூட்டத்துடன் தேர்களும் குதிரைகளும் அழிபட்டு
கீழ் நிலை அடைந்து கடலில் முழுகும்படி சக்தி வேலுக்கே உணவு
ஆயின என்னும்படியாகச் செலுத்திய ஒளி வீசும் வேலனே,

திக்கத் தோகண தாவெனவே பொரு சொச்சத் தாதையர்
தாம் எனவே திரு செக்கர்ப் பாதம் அதே பதியா சு(ரு)தி
அவை பாட
... திக்கத் தோகண தாவென்று நடனம் செய்கின்ற நிர்மல
மூர்த்தியான தந்தையாகிய நடராஜப் பெருமானே நீ என்று சொல்லும்படி,
அழகிய சிவந்த திருவடிகளே பதித்து, இசை ஒலிகள் பாட,

செம் பொன் பீலி உலா மயில் மாமிசை பக்கத்தே குற
மாதொடு சீர் பெறு தெற்குக் கோபுர வாசலில் மேவிய
பெருமாளே.
... செம் பொன் நிறத் தோகை விளங்கும் மயில் மீது,
பக்கத்தில் குறப் பெண்ணாகிய வள்ளியோடு சிறப்புற்று சிதம்பரத்தின்
தெற்குக் கோபுர வாசலில் வீற்றிருக்கும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.445  pg 2.446  pg 2.447  pg 2.448 
 WIKI_urai Song number: 621 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 480 - akkup peeLai (chidhambaram)

akkup peeLaimu LAviLai mULaiyo
     duppuk kAypani neermayir thOlkudi
          lappuc cheepuzhu vOdadai yArthasai ...... yuRamEvi

aththip pAlpala nAdiku zhAyaLva
     zhuppuc chArvala mEviLai yULaiko
          Lacchuth thOlkudi lAmathi lEpoRi ...... virakALar

sukkath thAzhkada lEsuka mAmena
     pukkit tAsaipe NAsaima NAsaikaL
          thokkuth theevinai yUzhvinai kAlamo ...... dathanAlE

thukkath thEpara vAmalsa thAsiva
     muththik kEsuka mAkapa rApara
          sorkkap pUmiyi lERida vEpatha ...... maruLvAyE

thakkath thOkida thAkida theekida
     sekkac chEkaNa thAkaNa thOkaNa
          thaththath thAnana deekuda dAdudu ...... venathALan

thaththic chUrarku zhAmodu thErpari
     kettuk kEvala mAykadal mUzhkida
          saththik kEyirai yAmena vEvidu ...... kathirvElA

thikkath thOkaNa thAvena vEporu
     socchath thAthaiyar thAmena vEthiru
          sekkarp pAthama thEpathi yAsuthi ...... yavaipAdac

cheppoR peeliyu lAmayil mAmisai
     pakkath thEkuRa mAthodu seerpeRu
          theRkuk kOpura vAsalil mEviya ...... perumALE.

......... Meaning .........

akkup peeLai mULA iLai mULaiyodup puk(kuk) kAy pani neer mayir thOl kudilap pUcchi puzhuvOdu adai Ar thasai uRa mEvi: With mucus in the eyes, the rising phlegm, the cancerous cyst that forms and swells in the brain, the scary pus and other watery excretions, the hair, the skin, the crooked tape worm and other worms - all these are encased along with flesh to constitute this body;

aththip pAl pala nAdi kuzhAy aL vazhuppuc chAr valamE viLai ULai koL acchuth thOl kudilAm athilE: veins and arteries intertwined with bones, the ugly wax in the ears and similar slags causing a terrible stench leaving their marks on the skin are all held in the cottage of this body;

poRi virakALar sukkaththu Azh kadalE sukamAm ena pukkittu Asai pe(N)NAsai ma(N)NAsaikaL thokkuth thee vinai Uzh vinai kAlamodu athanAlE: the five tricky sensory organs are stealthily hiding in this body; thinking that this vast sea of life is full of bliss, one indulges in it craving for women, gold and landed property; because of all these desires and the cruelty of destiny caused by bad and good deeds,

thukkaththE paravAmal sathAsiva muththikkE sukamAka parApara sorkkap pUmiyil ERidavE patham aruLvAyE: one feels increasingly miserable and suffers; saving me from such misery, and in order to keep me for ever in a blissful and liberated state, kindly grant me Your hallowed feet so that I could step on the shore of heaven, the Supreme Land!

thakkath thOkida thAkida theekida sekkac chEkaNa thAkaNa thOkaNa thaththath thAnana deekuda dAdudu ena thALam thaththi: As many percussion instruments raised the loud noise to the meter "thakkath thOkida thAkida theekida sekkac chEkaNa thAkaNa thOkaNa thaththath thAnana deekuda dAdudu",

cUrar kuzhAmodu thEr pari kettuk kEvalamAy kadal mUzhkida saththikkE iraiyAm enavE vidu kathirvElA: the multitude of the demons, along with their chariots and horses, were all destroyed and sent down sinking in the sea, all of which served as food for the powerful and bright spear wielded by You, Oh Lord!

thikkath thOkaNa thAvenavE poru socchath thAthaiyar thAm enavE thiru sekkarp pAtham athE pathiyA su(ru)thi avai pAda: The unblemished Lord NadarAjar, Your father, who dances to the beat "thikkath thOkaNa thA" is none other than You, Oh Lord! Treading with Your reddish and hallowed feet against the background sounds of music,

sem pon peeli ulA mayil mAmisai pakkaththE kuRa mAthodu seer peRu theRkuk kOpura vAsalil mEviya perumALE.: You mount the peacock with the reddish golden plume, with VaLLi, the damsel of the KuRavAs, remaining next to You, and are seated grandly at the entrance of the Southern Temple Tower of Chidhambaram, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 480 akkup peeLai - chidhambaram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]