திருப்புகழ் 441 வலிவாத பித்தமொடு  (திருவருணை)
Thiruppugazh 441 valivAdhapiththamodu  (thiruvaruNai)
Thiruppugazh - 441 valivAdhapiththamodu - thiruvaruNaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதான தத்ததன தனதான தத்ததன
     தனதான தத்ததன ...... தனதான

......... பாடல் .........

வலிவாத பித்தமொடு களமாலை விப்புருதி
     வறல்சூலை குட்டமொடு ...... குளிர்தாகம்

மலிநீரி ழிச்சல்பெரு வயிறீளை கக்குகளை
     வருநீர டைப்பினுடன் ...... வெகுகோடி

சிலைநோய டைத்தவுடல் புவிமீதெ டுத்துழல்கை
     தெளியாவெ னக்குமினி ...... முடியாதே

சிவமார்தி ருப்புகழை எனுநாவி னிற்புகழ
     சிவஞான சித்திதனை ...... யருள்வாயே

தொலையாத பத்தியுள திருமால்க ளிக்கவொரு
     சுடர்வீசு சக்ரமதை ...... யருள்ஞான

துவர்வேணி யப்பன்மிகு சிவகாமி கர்த்தன்மிகு
     சுகவாரி சித்தனருள் ...... முருகோனே

அலைசூரன் வெற்புமரி முகனானை வத்திரனொ
     டசுராரி றக்கவிடு ...... மழல்வேலா

அமுதாச னத்திகுற மடவாள்க ரிப்பெணொடும்
     அருணா சலத்திலுறை ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

வலிவாத பித்தமொடு களமாலை விப்புருதி ... வலிப்பு நோய்,
பித்த நோய், கண்டமாலை நோய், சிலந்திப்புண்,

வறல்சூலை குட்டமொடு குளிர்தாகம் ... உடல் இளைப்பு, வயிற்று
உளைவு, குஷ்டம், குளிர், தாகம்,

மலிநீரிழிச்சல் பெரு வயிறு ஈளை கக்கு ... மிக்க நீரிழிவு,
மகோதரம், கபம் கட்டுதல், வாந்தி,

களைவருநீர டைப்பினுடன் வெகுகோடி ... அயர்ச்சிதரும்
மூத்திரத்தடை நோய் இவைகளுடன் வெகு கோடிக்கணக்கான

சிலைநோயடைத்தவுடல் புவிமீதெடுத்துழல்கை ... சீறி எழும்
நோய்களை அடைத்துள்ள இந்த உடலை, பூமியின் மீது எடுத்துத் திரிதல்

தெளியாவெ னக்குமினி முடியாதே ... தெளிந்த அறிவு இல்லாத
எனக்கும் இனிமேல் முடியாது.

சிவமார்திருப்புகழை எனுநாவினிற்புகழை ... மங்கலம் நிறைந்த
உனது திருப்புகழை என் நாவாறப் புகழ்வதற்கு

சிவஞான சித்திதனை யருள்வாயே ... சிவஞான சித்தியை
தந்தருள்வாயாக.

தொலையாத பத்தியுள திருமால்களிக்கவொரு ... நீங்காத
பக்தியைக் கொண்ட திருமால் மகிழ,

சுடர்வீசு சக்ரமதை யருள்ஞான ... ஒப்பற்றதாய் ஒளி வீசும்
சுதர் ன சக்கரத்தை அவருக்கு அருளிய ஞானமயமான

துவர்வேணி யப்பன்மிகு சிவகாமி கர்த்தன்மிகு ... பவள நிறச்
சடையப்பன், புகழ்மிக்க சிவகாமியின் தலைவன், மிக்க

சுகவாரி சித்தனருள் முருகோனே ... சுக சாகரம் போன்ற
சித்த மூர்த்தி சிவபிரான் அருளிய முருகனே,

அலைசூரன் வெற்பும் அரி முகன் ஆனைவத்திரனொடு ...
கடல், சூரன், கிரெளஞ்சமலை, சிங்கமுகன், ஆனைமுகனான
தாரகாசுரனுடன்

அசுரார் இறக்கவிடும் அழல்வேலா ... அசுரர்கள் யாவரும்
இறக்கும்படிச் செய்த நெருப்பு வேலனே,

அமுதாசனத்தி குற மடவாள் கரிப்பெணொடும் ... அமுதமயமான
பீடத்தினள் குறமகள் ஆகிய வள்ளியுடனும், யானை ஐராவதம்
வளர்த்த பெண் தேவயானையுடனும்

அருணா சலத்திலுறை பெருமாளே. ... திருவண்ணாமலையில்
வீற்றிருக்கும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.333  pg 2.334  pg 2.335  pg 2.336 
 WIKI_urai Song number: 582 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Thiru P. Shanmugam
திரு பொ. சண்முகம்

Thiru P. Shanmugam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 441 - valivAdha piththamodu (thiruvaNNAmalai)

valivAtha piththamodu kaLamAlai vippurudhi
     vaRaL sUlai kuttamodu ...... kuLir dhAgam

malineer izhichchal peru vayiReelai kakkukaLai
     varu neeradaippinudan ...... vegukOdi

silai nOy adaiththa udal buvimeedh eduththuzhalgai
     theLiyA enakkumini ...... mudiyAdhE

sivamAr thiruppugazhai enu nAviniR pugazha
     sivanyAna sidhdhi thanai ...... aruLvAyE

tholaiyAdha baththiyuLa thirumAl kaLikka oru
     sudar veesu chakramadhai ...... aruL nyAna

thuvar vENi appan migu sivakAmi karththan migu
     sukavAri sidhdhan aruL ...... murugOnE

alai sUran veRpum ari muganAnai vaththiranod
     asurAr iRakka vidum ...... azhal vElA

amudhA sanaththi kuRa madavAL karippeNodum
     aruNAchalaththil uRai ...... perumALE.

......... Meaning .........

valivAtha piththamodu kaLamAlai vippurudhi: Epilepsy, rheumatism, biliousness, mumps, ringworm,

vaRaL sUlai kuttamodu kuLir dhAgam: dehydration, ulcer, leprosy, chillness, thirst,

malineer izhichchal peru vayiReelai kakkukaLai: excessive diabetes, edema in the stomach, pneumonia, vomiting,

varu neeradaippinudan vegukOdi: inability to urinate due to prostatis, and so many other million diseases

silai nOy adaiththa udal buvimeedh eduththuzhalgai: fiercely attack and occupy this body! Carrying this body in this world, roaming around aimlessly,

theLiyA enakkumini mudiyAdhE: is just not possible for me any more as I lack clear intellect.

sivamAr thiruppugazhai enu nAviniR pugazha: To make my tongue praise Your auspicious glory,

sivanyAna sidhdhi thanai aruLvAyE: will You kindly bless me with the attainment of the Knowledge of SivA?

tholaiyAdha baththiyuLa thirumAl kaLikka: Vishnu, who has abiding devotion to SivA, was exhilarated

oru sudar veesu chakramadhai aruL: when His unique and bright wheel (Sudharsanam) was presented to Him

nyAna thuvar vENi appan migu sivakAmi karththan: by the wise Lord SivA with tresses of coral hue and who is the Consort of SivagAmi (PArvathi);

migu sukavAri sidhdhan aruL murugOnE: He is the ocean of supreme bliss; You are that SivA's son, Oh MurugA!

alai sUran veRpum ari mugan Anai vaththiranod: The seas, the demon SUran, Mount Krouncha, the lion-faced demon Singamukan, the elephant-faced demon TharakAsuran and along with them

asurAr iRakka vidum azhal vElA: all other demons were killed when You wielded the burning Spear, Oh Lord!

amudhA sanaththi kuRa madavAL karippeNodum: She sits on the seat of nectar; She is the damsel of the KuRavAs; along with that VaLLi, and DEvayAnai, the daughter reared by AirAvadham, the celestial elephant,

aruNAchalaththil uRai perumALE.: You are seated at Your abode in ThiruvaNNAmalai, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 441 valivAdha piththamodu - thiruvaruNai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]