திருப்புகழ் 424 செஞ்சொற் பண்  (திருவருணை)
Thiruppugazh 424 senjoRpaN  (thiruvaruNai)
Thiruppugazh - 424 senjoRpaN - thiruvaruNaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்தத் தந்தத் தனதன தானன
     தந்தத் தந்தத் தனதன தானன
          தந்தத் தந்தத் தனதன தானன ...... தனதான

......... பாடல் .........

செஞ்சொற் பண்பெற் றிடுகுட மாமுலை
     கும்பத் தந்திக் குவடென வாலிய
          தெந்தப் பந்தித் தரளம தாமென ...... விடராவி

சிந்திக் கந்தித் திடுகளை யாமுன
     தங்கத் தம்பொற் பெதுவென வோதுவ
          திண்டுப் புந்தித் திடுகனி தானுமு ...... னிதழாமோ

மஞ்சொக் குங்கொத் தளகமெ னாமிடை
     கஞ்சத் தின்புற் றிடுதிரு வேயிள
          வஞ்சிக் கொம்பொப் பெனுமயி லேயென ...... முறையேய

வந்தித் திந்தப் படிமட வாரொடு
     கொஞ்சிக் கெஞ்சித் தினமவர் தாடொழு
          மந்தப் புந்திக் கசடனெ நாளுன ...... தடிசேர்வேன்

நஞ்சைக் கண்டத் திடுபவ ராரொடு
     திங்கட் பிஞ்சக் கரவணி வேணியர்
          நம்பர்ச் செம்பொற் பெயரசு ரேசனை ...... யுகிராலே

நந்தக் கொந்திச் சொரிகுடல் சோர்வர
     நந்திக் கம்பத் தெழுநர கேசரி
          நஞ்சக் குண்டைக் கொருவழி யேதென ...... மிகநாடி

வெஞ்சச் சிம்புட் சொருபம தானவர்
     பங்கிற் பெண்கற் புடையபெ ணாயகி
          விந்தைச் செங்கைப் பொலிசுத வேடுவர் ...... புனமீதே

வெண்டித் தங்கித் திரிகிழ வாவதி
     துங்கத் துங்கக் கிரியரு ணாபுரி
          வெங்கட் சிங்கத் தடிமயி லேறிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

(முதல் 11 வரிகள் வேசைகளை வர்ணிப்பது கூறப்படுகிறது).

செம் சொல் பண்(பு) பெற்றிடு குட மா முலை கும்பத் தந்திக்
குவடு என வாலிய
... செம்மையான சொற்களின் தகுதியைப்
பெற்றுள்ள குடம் போன்ற பருத்த மார்பகம் ஒப்பிடுங்கால் கும்ப கலசம்,
யானை, மலை என விளங்கியும்,

தெந்தப் பந்தித் தரளம் அதாம் என இடர் ஆவி சிந்திக்
கந்தித்து இடு களையாம் உனது அங்கத்து அம் பொற்பு எது
என ஓதுவ(து)
... வெண்மை நிறம் கொண்ட பற்களின் வரிசை முத்துப்
போல் விளங்கியும், துன்பத்தில் என் உயிரை எடுத்து, மணம் வீச வல்ல
களை வாய்ந்தனவாய் உள்ள உன்னுடைய அங்கங்களின் அழகிய
பொலிவுக்கு எதை நான் உவமையாகக் கூறுவது?

திண் துப்பும் தித்திடு கனி தானும் உன் இதழாமோ ...
திண்மையான பவளமும், தித்திப்பு உள்ள பழமும் உன் வாயிதழுக்கு
நிகர் ஆகுமோ?

மஞ்சு ஒக்கும் கொத்து அளகம் எனா மிடை கஞ்சத்து
இன்புற்று இரு திருவே இள வஞ்சிக் கொம்பு ஒப்பு எனு(ம்)
மயிலே
... மேகத்தை ஒக்கும் திரண்டு நிறைந்துள்ள கூந்தல்
என்றெல்லாம் கூறி, நெருங்கிய தாமரையில் மகிழ்ந்து வீற்றிருக்கும்
லக்ஷ்மியே, இளமை வாய்ந்த வஞ்சிக் கொடிக்கு ஒப்பான மயில்
போன்றவளே,

என முறை ஏய வந்தித்து இந்தப் படி மடவாரொடு
கொஞ்சிக் கெஞ்சித் தினம் அவர் தாள் தொழு மந்தப் புந்திக்
கசடன் எ(ந்)நாள் உனது அடி சேர்வேன்
... என்றெல்லாம் முறை
பொருந்த வந்தனைப் பேச்சுக்கள் பேசி, இவ்வாறு விலைமாதர்களுடன்
கொஞ்சியும், கெஞ்சிப் பேசியும், தினமும் அவர்களின் திருவடியைத்
தொழுகின்ற மழுங்கின அறிவுடைய குற்றமுள்ளவனாகிய நான் உனது
திருவடியை என்று சேர்வேன்?

நஞ்சைக் கண்டத்து இடுபவர் ஆரொடு திங்கள் பிஞ்சு
அக்கு அரவு அணி வேணியர் நம்பர்
... விஷத்தைக் கழுத்தில்
தரிப்பவர், ஆத்தி மாலையோடு, இளம் பிறையையும், எலும்பையும்,
பாம்பையும் அணிந்துள்ள சடையினர் ஆகிய நம் சிவபெருமான்,

செம் பொன் பெயர் அசுரேசனை உகிராலே நந்தக் கொந்திச்
சொரி குடல் சோர் வர கம்பத்து நந்தி எழு நர கேசரி நஞ்சக்
குண்டைக்கு ஒரு வழி ஏது என மிக நாடி
... இரணியன் என்னும்
பெயருள்ள அசுரனை நகத்தாலே அழிந்து போகும்படி குத்திக் கிழித்து,
ரத்தம் சொரிந்து விழும் குடல் தளர்ச்சி உறும்படியாக தூணிலே தோன்றி
வெளி வந்த நரசிம்ம மூர்த்தியின் வெறி நைந்து அடங்கிக் குறுகுவதற்கு
வழி யாதென்று மிகவும் யோசித்து,

வெஞ்சச் சிம்புள் சொருபம் அது ஆனவர் பங்கில் பெண்
கற்புடைய பெண் நாயகி விந்தைச் செம் கைப் பொலி சுத
...
கடுமை கொண்டவராய் சரபப் பட்சியின்* வடிவம் கொண்டவராகிய
சிவபிரானின் இடப் பாகத்தில் இடம் கொண்டவளும், கற்பு நிறைந்த
பெண்களின் நாயகியுமாகிய பார்வதியின் அழகிய செங்கையில்
விளங்கும் குழந்தையே,

வேடுவர் புன(ம்) மீதே வெண்டித் தங்கித் திரி கிழவா ...
வேடர்களின் தினைப் புனத்தில் களைப்பு உற்று தங்கித் திரிகின்ற
கிழவனே,

அதி துங்கத் துங்கக் கிரி அருணாபுரி வெம் கண் சிங்கத்து
அடி மயில் ஏறிய பெருமாளே.
... மிக உயர்ந்ததும்,
பரிசுத்தமானதுமான மலை உள்ள திருஅண்ணாமலை என்னும் ஊரில்,
விரும்பத்தக்க கண்களை உடைய சிங்காசனம் போன்ற மயிலின் மேல்
ஏறிய பெருமாளே.


* இரணியனை வதைத்த நரசிம்மம் (திருமால்) உக்கிரம் கொண்டு உலகங்களை
வருத்தத் தொடங்கினார். தேவர்கள் முறையிட, சிவபெருமான் வீரபத்திரரை ஏவ,
அவர் சரபப்பட்சியின் உருவம் எடுத்து அந்த நரசிங்கத்தைக் கீறி, அதன்
தோலையும், முகத்தையும் சிவன் முன் வைத்தார். அதனால் சிவபெருமானுக்கு,
சிங்க உரியும், நாரசிங்காம்பரன் என்ற பெயரும் உண்டாயின - சிவ புராணம்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.295  pg 2.296  pg 2.297  pg 2.298  pg 2.299  pg 2.300 
 WIKI_urai Song number: 566 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 424 - senjoR paN (thiruvaNNAmalai)

chenchoR paNpet Ridukuda mAmulai
     kumpath thanthik kuvadena vAliya
          thenthap panthith tharaLama thAmena ...... vidarAvi

sinthik kanthith thidukaLai yAmuna
     thangath thampoR pethuvena vOthuva
          thiNdup punthith thidukani thAnumu ...... nithazhAmO

manjok kungoth thaLakame nAmidai
     kanjath thinput Riduthiru vEyiLa
          vanjik kompop penumayi lEyena ...... muRaiyEya

vanthith thinthap padimada vArodu
     konjik kenjith thinamavar thAdozhu
          manthap punthik kasadane nALuna ...... thadisErvEn

nanjaik kaNdath thidupava rArodu
     thingat pinjak karavaNi vENiyar
          namparc chempoR peyarasu rEsanai ...... yukirAlE

nanthak konthic chorikudal sOrvara
     nanthik kampath thezhunara kEsari
          nanjak kuNdaik koruvazhi yEthena ...... mikanAdi

venjac chimput sorupama thAnavar
     pangiR peNkaR pudaiyape NAyaki
          vinthaic chengaip polisutha vEduvar ...... punameethE

veNdith thangith thirikizha vAvathi
     thungath thungak kiriyaru NApuri
          venkat singath thadimayi lERiya ...... perumALE.

......... Meaning .........

(The first 11 lines describe the parts of body of the whores)

chem chol paN(pu) petRidu kuda mA mulai kumpath thanthik kuvadu ena vAliya: "If one has to describe in worthy words, your pot-like big breasts may be compared to the dome on the temple, the elephant and the mountain;

thenthap panthith tharaLam athAm ena idar Avi sinthik kanthiththu idu kaLaiyAm unathu angaththu am poRpu ethu ena Othuva(thu): the row of white teeth are bright like pearls; the beauty of your bodily organs simply casts a gloom on me and grabs my life; what kind of comparison can I cite to the radiating beauty of your parts that exude fragrance?

thiN thuppum thiththidu kani thAnum un ithazhAmO: Can I compare your lips to the solid coral or to the sweet fruit?

manju okkum koththu aLakam enA midai kanjaththu inputRu iru thiruvE iLa vanjik kompu oppu enu(m) mayilE: Saying that your dense and well-spread hair is like the dark cloud, can I address you as Goddess Lakshmi happily seated on a richly blossomed lotus? Or may I compare you to the young creeper of vanji (rattan reed) or one who is like the peacock?"

ena muRai Eya vanthiththu inthap padi madavArodu konjik kenjith thinam avar thAL thozhu manthap punthik kasadan e(n)nAL unathu adi sErvEn: - so uttering a series of words of adulation, I have been talking sweetly and softly with entreaties to the whores and worshipping their feet everyday; how can such a stupid and foolish sinner like me ever attain Your hallowed feet, Oh Lord?

nanjaik kaNdaththu idupavar Arodu thingaL pinju akku aravu aNi vENiyar nampar: He holds poison in His throat; on His matted hair, He wears the Aththi (mountain ebony) garland, the young crescent moon, the bone and the serpent; He is our Lord SivA;

chem pon peyar asurEsanai ukirAlE nanthak konthic chori kudal sOr vara kampaththu nanthi ezhu nara kEsari nanjak kuNdaikku oru vazhi Ethu ena mika nAdi: after the demon HiraNyan was killed by Lord Narasimhar who emerged from a pillar and used His nails to pierce and tear into his bleeding and weakening intestines, the mounting rage (of Narasimhar) became uncontrollable; Lord SivA contemplated deeply as to how that temper could be tamed and ultimately decided

venjac chimpuL sorupam athu Anavar pangil peN kaRpudaiya peN nAyaki vinthaic chem kaip poli sutha: to take the form of Sarabhar* (a fierce eight-legged monstrous bird that could control a lion); She is concorporate on the left side of that Lord SivA; She is the leader of all chaste women; You are the little child on the reddish arms of that Goddess PArvathi, Oh Lord!

vEduvar puna(m) meethE veNdith thangith thiri kizhavA: You roamed about as a tired old man in the field of millet that belonged to the hunters, Oh Lord!

athi thungath thungak kiri aruNApuri vem kaN singaththu adi mayil ERiya perumALE.: The mount in this town ThiruvaNNAmalai is very high and pure; here, You are seated on the throne of Your peacock that has attractive eyes, Oh Great One!


* After killing the demon HiraNyan, Narasimhar became uncontrollably wild and began to harass all the worlds. SivA, who had assumed many fierce forms, asked His aspect Veerabhadrar to take the form of fabulous Sarabha Murthi in order to suppress the pride of Narasimhar, the man-lion incarnation of Vishnu. The monstrous bird Sarabha tore the skin and the lion-face of Narasimhar and offered them to Lord SivA. Hence, SivA assumed the name of NArasingAmbaran - Siva PurANam.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 424 senjoR paN - thiruvaruNai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]