திருப்புகழ் 410 கரு நிறம் சிறந்து  (திருவருணை)
Thiruppugazh 410 karuniRamsiRanthu  (thiruvaruNai)
Thiruppugazh - 410 karuniRamsiRanthu - thiruvaruNaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தந்தனம் தனதன தனதன
     தனன தந்தனம் தனதன தனதன
          தனன தந்தனம் தனதன தனதன ...... தனதான

......... பாடல் .........

கருநி றஞ்சிறந் தகல்வன புகல்வன
     மதன தந்திரங் கடியன கொடியன
          கனக குண்டலம் பொருவன வருவன ...... பரிதாவும்

கடலு டன்படர்ந் தடர்வன தொடர்வன
     விளையு நஞ்சளைந் தொளிர்வன பிளிர்வன
          கணையை நின்றுநின் றெதிர்வன முதிர்வன ...... இளையோர்முன்

செருவை முண்டகஞ் சிறுவன வுறுவன
     களவு வஞ்சகஞ் சுழல்வன வுழல்வன
          தெனன தெந்தனந் தெனதென தெனதென ...... எனநாதம்

தெரிசு ரும்பைவென் றிடுவன அடுவன
     மருள்செய் கண்கள்கொண் டணைவர்த முயிரது
          திருகு கின்றமங் கையர்வச மழிதலை ...... யொழிவேனோ

மருவு தண்டைகிண் கிணிபரி புரமிவை
     கலக லன்கலின் கலினென இருசரண்
          மலர்கள் நொந்துநொந் தடியிட வடிவமு ...... மிகவேறாய்

வலிய சிங்கமுங் கரடியு முழுவையு
     முறைசெ ழும்புனந் தினைவிளை யிதண்மிசை
          மறவர் தங்கள்பெண் கொடிதனை யொருதிரு ...... வுளநாடி

அருகு சென்றடைந் தவள்சிறு பதயுக
     சதத ளம்பணிந் ததிவித கலவியு
          ளறம ருண்டுநெஞ் சவளுடன் மகிழ்வுட ...... னணைவோனே

அமரர் சங்கமுங் குடிபுக நொடியினில்
     நிருதர் சங்கமும் பொடிபட அமர்செய்து
          அருணை வந்துதென் திசைதனி லுறைதரு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கரு நிறம் சிறந்து அகல்வன புகல்வன ... கரிய நிறத்தைக்
கொண்டவனவாய், அகன்று உள்ளனவாய், பேசுவது போலப் பொலிவு
உள்ளனவாய்,

மதன தந்திரம் கடியன கொடியன கனக குண்டலம் பொருவன
வருவன
... காம நூல்ளில் கூறப்பட்ட கடுமையும் கொடுமையும்
உடையனவாய், காதில் உள்ள பொன் குண்டலத்தோடு போரிட வருவது
போலவனவாய்,

பரி தாவும் கடலுடன் படர்ந்து அடர்வன தொடர்வன ...
வடவா முகாக்கினி படர்ந்துள்ள கடல் போலப் பரந்து அடர்ந்து
தொடர்வனவாய்,

விளையும் நஞ்சு அளைந்து ஒளிர்வன பிளிர்வன ... அக்கடலில்
தோன்றும் விஷம் கலந்து பிரகாசித்துக் கொப்புளிப்பனவாய்,

கணையை நின்று நின்று எதிர்வன முதிர்வன ... அம்பை நின்று
நின்று எதிர்ப்பனவாய், முற்றின தொழிலை உடையனவாய்,

இளையோர் முன் செருவை மூண்டு அகம் சிறுவன உறுவன ...
இளைஞர்கள் முன்னிலையில் போரிடும் எண்ணத்தை மேற்கொண்டு
தமக்குள்ளே கோபிப்பனவாய்,

களவு வஞ்சகம் சுழல்வன உழல்வன ... களவும் வஞ்சக எண்ணமும்
கொண்டு சுழன்று திரிகின்றனவாய்,

தெனன தெந்தனந் தெனதென தெனதென என நாதம் தெரி
சுரும்பை வென்றிடுவன அடுவன
... தெனன தெந்தனந் தெனதென
தெனதென என்ற ஒலியை எழுப்பும் வண்டை வெல்வனவாய், அதையும்
தன் உறு ஒளியால் அடக்குவனவாய்,

மருள் செய் கண்கள் கொண்டு அணைவர் தம் உயிர் அது
திருகுகின்ற மங்கையர் வசம் அழிதலை ஒழிவேனோ
...
மருட்சியை ஊட்டும் கண்களைக் கொண்டு தம்மை அணைபவர்களின்
உயிரைத் திருகிப் பறிக்கின்ற விலைமாதர்களின் வசத்தே அழிந்து
போவதை ஒழிக்க மாட்டேனோ?

மருவு தண்டை கிண் கிணி பரிபுரம் இவை ... பொருந்திய
தண்டைகளும், கிண்கிணியும், சிலம்பும் இவை யாவும்

கல கலன் கலின் கலின் என இரு சரண் மலர்கள் நொந்து
நொந்து அடி இட வடிவமும் மிக வேறாய்
... கல கலன் கலின்
கலின் என்று ஒலிக்கும்படி இரண்டு திருவடி மலர்களும் நொந்து நொந்து
நடந்து அலைய, உருவமும் மிக மாறி*,

வலிய சிங்கமும் கரடியும் உழுவையும் உறை செழும் புனம்
தினை விளை இதண் மிசை
... வலிமை உடைய சிங்கமும், கரடியும்
புலியும் வாழும் செழிப்பான தினை விளையும் புனத்தில் பரண் மேல் இருந்த

மறவர் தங்கள் பெண் கொடி தனை ஒரு திரு உளம் நாடி ...
வேடர் குலப் பெண்ணான வள்ளியை ஒப்பற்ற திருவுள்ளத்தில் விரும்பி,

அருகு சென்று அடைந்து அவள் சிறு பதயுக சத தளம்
பணிந்து
... அவள் அருகே சென்று சேர்ந்து அவளுடைய சிறிய இரண்டு
பாத தாமரைகளைப் பணிந்து,

அதி வித கலவியுள் அற மருண்டு நெஞ்சு அவளுடன்
மகிழ்வுடன் அணைவோனே
... பல விதமான ஆடல்களில் மிகவும்
மருட்சி பூண்டு அவளை மன மகிழ்ச்சியுடன் அணைபவனே,

அமரர் சங்கமும் குடி புக நொடியினில் நிருதர் சங்கமும்
பொடிபட அமர் செய்து
... தேவர்கள் கூட்டமும் விண்ணுலகில் குடி
போகவும், நொடிப் பொழுதில் அசுரர்கள் கூட்டமும் பொடிபட்டுப்
போகவும் போர் செய்து,

அருணை வந்து தென் திசை தனில் உறை தரு பெருமாளே. ...
திருவண்ணாமலையில் வந்து தெற்குத் திசையில் வீற்றிருக்கும் பெருமாளே.


பாட்டின் முதல் பாதியில் விலைமாதர்களின் கண்கள் வர்ணனை கூறப்பட்டுள்ளது.


* முருகன் வள்ளியை நாடிச் சென்றபோது வேடன், வேங்கை மரம், விருத்தன்
என்று பல வேஷங்கள் தரித்ததைக் குறிக்கிறது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.261  pg 2.262  pg 2.263  pg 2.264 
 WIKI_urai Song number: 552 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 410 - karu niRam siRanthu (thiruvaNNAmalai)

karuni RamchiRan thakalvana pukalvana
     mathana thanthirang kadiyana kodiyana
          kanaka kuNdalam poruvana varuvana ...... parithAvum

kadalu danpadarn thadarvana thodarvana
     viLaiyu nanjaLain thoLirvana piLirvana
          kaNaiyai ninRunin Rethirvana muthirvana ...... iLaiyOrmun

seruvai muNdakam siRuvana vuRuvana
     kaLavu vanchakam chuzhalvana vuzhalvana
          thenana thenthanan thenathena thenathena ...... enanAtham

therisu rumpaiven Riduvana aduvana
     maruLsey kaNkaLkoN daNaivartha muyirathu
          thiruku kinRamang kaiyarvasa mazhithalai ...... yozhivEnO

maruvu thaNdaikiN kiNipari puramivai
     kalaka lankalin kalinena irusaraN
          malarkaL nonthunon thadiyida vadivamu ...... mikavERAy

valiya singamung karadiyu muzhuvaiyu
     muRaise zhumpunan thinaiviLai yithaNmisai
          maRavar thangaLpeN kodithanai yoruthiru ...... vuLanAdi

aruku senRadain thavaLsiRu pathayuka
     sathatha LampaNin thathivitha kalaviyu
          LaRama ruNdunen javaLudan makizhvuda ...... naNaivOnE

amarar sangamung kudipuka nodiyinil
     niruthar sangamum podipada amarseythu
          aruNai vanthuthen thisaithani luRaitharu ...... perumALE.

......... Meaning .........

karu niRam siRanthu akalvana pukalvana: Those (eyes) are beautifully black, wide and sparklingly expressive;

mathana thanthiram kadiyana kodiyana kanaka kuNdalam poruvana varuvana: they have the ferocity and evil quality as defined in erotic texts; they move aggressively towards the golden ear-studs and return;

pari thAvum kadaludan padarnthu adarvana thodarvana: they are wide like the sea where the vadavAmukA fire (the ultimate inferno from the North pole that flows at the end of the aeon) spreads wildly;

viLaiyum nanju aLainthu oLirvana piLirvana: they are like the poison in that sea that spurts brightly;

kaNaiyai ninRu ninRu ethirvana muthirvana: they challenge the arrows in sharpness and surpass them; their action is consummate;

iLaiyOr mun seruvai mUNdu akam siRuvana uRuvana: they are determined to battle in front of the young men and bicker among themselves;

kaLavu vanchakam suzhalvana uzhalvana: they roll and roam about with stealthy and treacherous thoughts;

thenana thenthanan thenathena thenathena ena nAtham theri surumpai venRiduvana aduvana: they outclass the beetle that hums the tune of "thenana thenthanan thenathena thenathena" exercising a control over it with their brightness;

maruL sey kaNkaL koNdu aNaivar tham uyir athu thirukukinRa mangaiyar vasam azhithalai ozhivEnO: with such delusory eyes, these whores squeeze the life out of the hugging suitors; will I be able to save myself from destruction in their hands?

maruvu thaNdai kiN kiNi paripuram ivai: The fitting anklets, the beads within them and ornaments around the ankles

kala kalan kalin kalin ena iru saraN malarkaL nonthu nonthu adi ida vadivamum mika vERAy: made the sound of "kala kalan kalin kalin" from Your sore hallowed feet when You wandered around, assuming several disguises;*

valiya singamum karadiyum uzhuvaiyum uRai sezhum punam thinai viLai ithaN misai: You went up to the raised platform in the fertile millet-field amidst the forest where mighty lions, bears and tigers inhabit;

maRavar thangaL peN kodi thanai oru thiru uLam nAdi: You sought in Your heart the matchless belle, VaLLi, belonging to the tribe of KuRavAs;

aruku senRu adainthu avaL siRu pathayuka satha thaLam paNinthu: You approached her and fell at the petite lotus feet of VaLLi;

athi vitha kalaviyuL aRa maruNdu nenju avaLudan makizhvudan aNaivOnE: You played with her in many a dizzy way and embraced her with delight!

amarar sangamum kudi puka nodiyinil niruthar sangamum podipada amar seythu: You fought with such valour that the whole lot of celestials was reestablished in their own land and the bunch of demons was destroyed to pieces;

aruNai vanthu then thisai thanil uRai tharu perumALE.: and then You came to ThiruvaNNAmalai to take Your seat in the southern side of the temple, Oh Great One!


The first half of this song describes the eyes of the whores.


* In pursuit of VaLLi, Murugan assumed several disguises such as hunter, neem tree and an old man.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 410 karu niRam siRanthu - thiruvaruNai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]