திருப்புகழ் 403 இருளளகம் அவிழ  (திருவருணை)
Thiruppugazh 403 iruLaLagamavizha  (thiruvaruNai)
Thiruppugazh - 403 iruLaLagamavizha - thiruvaruNaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனன தனதனன தான தத்த தந்த
     தனதனன தனதனன தான தத்த தந்த
          தனதனன தனதனன தான தத்த தந்த ...... தனதான

......... பாடல் .........

இருளளக மவிழமதி போத முத்த ரும்ப
     இலகுகயல் புரளஇரு பார பொற்ற னங்கள்
          இளகஇடை துவளவளை பூச லிட்டி ரங்க ...... எவராலும்

எழுதரிய கலைநெகிழ ஆசை மெத்த வுந்தி
     யினியசுழி மடுவினிடை மூழ்கி நட்பொ டந்த
          இதழமுது பருகியுயிர் தேக மொத்தி ருந்து ...... முனிவாறி

முருகுகமழ் மலரமளி மீதி னிற்பு குந்து
     முகவனச மலர்குவிய மோக முற்ற ழிந்து
          மொழிபதற வசமழிய ஆசை யிற்க விழ்ந்து ...... விடுபோதும்

முழுதுணர வுடையமுது மாத வத்து யர்ந்த
     பழுதில்மறை பயிலுவஎ னாத ரித்து நின்று
          முநிவர்சுரர் தொழுதுருகு பாத பத்ம மென்று ...... மறவேனே

ஒருசிறுவன் மணமதுசெய் போதி லெய்த்து வந்து
     கிழவடிவு கொடுமுடுகி வாச லிற்பு குந்து
          உலகறிய இவனடிமை யாமெ னக்கொ ணர்ந்து ...... சபையூடே

ஒருபழைய சருகுமடி ஆவ ணத்தை யன்று
     உரமொடவ னதுவலிய வேகி ழிக்க நின்று
          உதறிமுறை யிடுபழைய வேத வித்தர் தந்த ...... சிறியோனே

அரியவுடு பதிகடவி யாட கச்சி லம்பொ
     டழகுவட மணிமுடிவி யாள மிட்ட ழுந்த
          அமரரொடு பலர்முடுகி ஆழி யைக்க டைந்து ...... அமுதாக

அருளுமரி திருமருக வார ணத்தை யன்று
     அறிவினுட னொருகொடியி லேத ரித்து கந்த
          அருணகிரி நகரிலெழு கோபு ரத்த மர்ந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

இருள் அளகம் அவிழ மதி போத முத்து அரும்ப இலகு கயல்
புரள இரு பார பொன் தனங்கள் இளக இடை துவள வளை
பூசல் இட்டு இரங்க
... கரிய கூந்தல் அவிழ, சந்திரனைப் போன்ற
முகத்தில் உண்டான முத்துப் போன்ற வேர்வை வெளித்தோன்ற,
விளங்கும் கயல் மீன் போன்ற கண்கள் புரள, இரண்டு கனத்த அழகிய
மார்பகங்கள் நெகிழ்ச்சியுற, இடுப்பு துவள, கை வளையல்கள்
ஒன்றோடொன்று மோதி ஒலிக்க,

எவராலும் எழுத அரிய கலை நெகிழ ஆசை மெத்த உந்தி
இனிய சுழி மடுவினிடை மூழ்கி நட்பொடு அந்த இதழ்
அமுது பருகி உயிர் தேகம் ஒத்திருந்து
... யாராலும் எழுதுதற்கு
முடியாததான அழகிய ஆடை தளர்ச்சி உற, ஆசை அதிகரிக்க,
தொப்புளாகிய இனிமை தரும் சுழி போன்ற மடுவில் (நீர் நிலையில்)
முழுகி, நட்பு பூண்டு, அந்த வாயிதழ்களின் அமுதத்தை உண்டு,
உயிரும் உடலும் ஒன்று போல ஒத்திருந்து,

முனிவு ஆறி முருகு கமழ் மலர் அமளி மீதினில் புகுந்து முக
வனச மலர் குவிய மோகம் உற்று அழிந்து மொழி பதற வசம்
அழிய ஆசையில் கவிழ்ந்து விடு போதும்
... கோபம் வெறுப்பு
எல்லாம் தணிந்து, நறு மணம் வீசுகின்ற மலர்ப் படுக்கையின் மீது படுத்து,
முகமாகிய தாமரை கூம்ப, காம ஆசை கொண்டு அதில் அழிந்து, பேச்சு
தடுமாற, தன் வசம் கெட்டழிய, அந்த ஆசையில் கவிழ்ந்து முழுகி விட்ட
சமயத்திலும் கூட,

முழுது(ம்) உணர உடைய முது மா தவத்து உயர்ந்த பழுது
இல் மறை பயிலுவ எனா தரித்து நின்று முநிவர் சுரர் தொழுது
உருகு பாத பத்மம் என்றும் மறவேனே
... எல்லாம்
உணரும்படியான முற்றிய சிறந்த தவ நிலையில் உயர்ந்ததும் குற்றம்
இல்லாததுமான வேதத்தில் நெருங்கி விளங்குபவன் என்று விரும்பிப்
போற்றி செய்து நின்று முனிவர்களும் தேவர்களும் வணங்கி உருகும்
உனது தாமரைத் திருவடிகளை என்றும் மறக்க மாட்டேன்.

ஒரு சிறுவன் மணம் அது செய் போதில் எய்த்து வந்து கிழ
வடிவு கொடு முடுகி வாசலில் புகுந்து உலகு அறிய இவன்
அடிமை யாம் என கொணர்ந்து சபை ஊடே
... ஒப்பற்ற
சிறுவனான நம்பியூரன் என்னும் சுந்தர மூர்த்திக்குத் திருமணச்
சடங்கு செய்யப்படும் சமயத்தில், களைத்து வந்து ஒரு கிழ உருவம்
கொண்டு வேகமாக முன் வந்து, (மண) வாசலில் புகுந்து உலகோர்
யாவரும் அறியும்படி இந்தச் சிறுவன் (எனக்கு) அடிமையாம் என்று
(ஒரு ஓலையைக்) கொண்டு வந்துசபையோர்களின் மத்தியில் அறிவிக்க,

ஒரு பழைய சருகு மடி ஆவணத்தை அன்று உரமொடு
அவன் அது வலியவே கிழிக்க நின்று உதறி முறை இடு
பழைய வேத வித்தர் தந்த சிறியோனே
... ஒரு பழைய
ஓலையில் எழுதப்பட்டு மடிந்து வைத்திருந்த பத்திரம் ஒன்றை
வலிமையுடன் அந்தச் சிறுவன் வேணுமென்றே பற்றிக் கிழித்தெறிய,
(அப்போது கை கால்களை) உதறிக் கொண்டு இது முறையோ
என்று கூச்சலிட்ட பழையவரும், வேதத்தை நன்கறிந்த
முதல்வருமான சிவபெருமான் பெற்றருளிய குழந்தையே,

அரிய உடு பதி கடவி ஆடகச் சிலம்பொடு அழகு வட(ம்)
மணி முடி வியாளம் இட்டு அழுந்த அமரர் ஒடு பலர் முடுகி
ஆழியைக் கடைந்து அமுதாக அருளும் அரி திரு மருக
...
அருமையான சந்திரனை தூணாக இருக்கும்படிச் செலுத்தி வைத்து,
பொன் மலையாகிய மேரு மலையை மத்தாக வைத்து, ரத்தின முடிகளை
உடைய பாம்பாகிய வாசுகியை கயிறாகப் பூட்டி, அழுத்தமாக
தேவர்களோடு பலரும் விரைவுடன் பாற்கடலைக் கடைந்து (இறுதியில்)
அமுது வரச் செய்து, அதனை (தேவர்களுக்குப்) பகிர்ந்து அளித்த
திருமாலின் மருகனே,

வாரணத்தை அன்று அறிவினுடன் ஒரு கொடியிலே தரித்து
உகந்த அருண கிரி நகரில் எழு கோபுரத்து அமர்ந்த
பெருமாளே.
... சேவலை அன்று முன் யோசனையுடன் ஒரு கொடியில்*
நிறுத்தி மகிழ்ந்து, திரு அண்ணாமலையில் கோபுர வாயிலில்
எழுந்தருளியிருக்கும் பெருமாளே.


* சூரனுடைய உடல் வேலால் பிளவுபட, ஒரு கூறு மயிலாகவும், மற்றொரு கூறு
சேவலாகவும் முருக வேளை எதிர்த்து வர, அவர் அருள் கண்ணால், மயில்
வாகனமாகவும், சேவல் கொடியாகவும் ஆயின.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.245  pg 2.246  pg 2.247  pg 2.248  pg 2.249  pg 2.250 
 WIKI_urai Song number: 545 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 403 - iruLaLagam avizha (thiruvaNNAmalai)

iruLaLaka mavizhamathi pOtha muththa rumpa
     ilakukayal puraLairu pAra potRa nangaL
          iLakaidai thuvaLavaLai pUsa litti ranga ...... evarAlum

ezhuthariya kalainekizha Asai meththa vunthi
     yiniyasuzhi maduvinidai mUzhki natpo dantha
          ithazhamuthu parukiyuyir thEka moththi runthu ...... munivARi

murukukamazh malaramaLi meethi niRpu kunthu
     mukavanasa malarkuviya mOka mutRa zhinthu
          mozhipathaRa vasamazhiya Asai yiRka vizhnthu ...... vidupOthum

muzhuthuNara vudaiyamuthu mAtha vaththu yarntha
     pazhuthilmaRai payiluvae nAtha riththu ninRu
          munivarsurar thozhuthuruku pAtha pathma menRu ...... maRavEnE

orusiRuvan maNamathusey pOthi leyththu vanthu
     kizhavadivu kodumuduki vAsa liRpu kunthu
          ulakaRiya ivanadimai yAme nakko Narnthu ...... sapaiyUdE

orupazhaiya sarukumadi Ava Naththai yanRu
     uramodava nathuvaliya vEki zhikka ninRu
          uthaRimuRai yidupazhaiya vEtha viththar thantha ...... siRiyOnE

ariyavudu pathikadavi yAda kacchi lampo
     dazhakuvada maNimudivi yALa mitta zhuntha
          amararodu palarmuduki Azhi yaikka dainthu ...... amuthAka

aruLumari thirumaruka vAra Naththai yanRu
     aRivinuda norukodiyi lEtha riththu kantha
          aruNakiri nakarilezhu kOpu raththa marntha ...... perumALE.

......... Meaning .........

iruL aLakam avizha mathi pOtha muththu arumpa ilaku kayal puraLa iru pAra pon thanangaL iLaka idai thuvaLa vaLai pUsal ittu iranga: Their dark hair falling loose, pearl-like beads of perspiration appearing on their moon-like face, their rolling eyes looking like bright kayal fish, their twin breasts, heavy and beautiful, thawing, their waist caving in, the bangles on their arms colliding with one another,

evarAlum ezhutha ariya kalai nekizha Asai meththa unthi iniya suzhi maduvinidai mUzhki natpodu antha ithazh amuthu paruki uyir thEkam oththirunthu: their elegant attire whose beauty in indescribable by any one loosening and getting dishevelled, and passion growing unabatedly, I endeared myself to them, drowning myself in the sweet whirlpool of their navel, imbibing the nectar-like saliva oozing from their lips and uniting the lives and bodies as one;

munivu ARi muruku kamazh malar amaLi meethinil pukunthu muka vanasa malar kuviya mOkam utRu azhinthu mozhi pathaRa vasam azhiya Asaiyil kavizhnthu vidu pOthum: with anger and hatred subsiding, I lay on the fragrant and flowery bed; as their lotus-like face withered, I was destroyed by my own passionate desire; with my speech becoming incoherent and my balance becoming shaky, I totally sank drowning in the sea of lust; even at that time,

muzhuthu(m) uNara udaiya muthu mA thavaththu uyarntha pazhuthu il maRai payiluva enA thariththu ninRu munivar surar thozhuthu uruku pAtha pathmam enRum maRavEnE: I would never forget Your lotus feet that are worshipped ardently by the sages and the celestials who laud You as One closely associated with the VEdAs, acknowledged by all as the highest pinnacle of mature and great penance, and regarded as unblemished, Oh Lord!

oru siRuvan maNam athu sey pOthil eyththu vanthu kizha vadivu kodu muduki vAsalil pukunthu ulaku aRiya ivan adimai yAm ena koNarnthu sapai UdE: During the marriage ceremony of a unique young man NambiyUrAn (Sundhara MUrthy), He entered the main door of the wedding hall coming in the disguise of a tired old man and declared openly to the hearing of all assembled people that the young groom was His slave (showing a palm leaf as the evidence);

oru pazhaiya saruku madi AvaNaththai anRu uramodu avan athu valiyavE kizhikka ninRu uthaRi muRai idu pazhaiya vEtha viththar thantha siRiyOnE: the crumpled old palm leaf that was produced was forcibly snatched from the old man's hand and deliberately torn to pieces by the young groom; at that time, (throwing up His arms and legs into the air), the old man shouted creating an uproar and questioning the injustice meted out to Him; that Primeval old man, who was well-versed in the VEdAs, was none other than Lord SivA who delivered You as His child!

ariya udu pathi kadavi Adakac chilampodu azhaku vada(m) maNi mudi viyALam ittu azhuntha amarar odu palar muduki Azhiyaik kadainthu amuthAka aruLum ari thiru maruka: The unique Moon was erected as the central pillar and the golden mount MEru was set up as the churner; the Serpent VAsuki, with its hoods embedded with precious gems, was tied as the churning rope, and the celestials and others swiftly began to churn the milky ocean; when (ultimately) nectar emerged from the sea, it was equally distributed (among the celestials) by Lord VishNu, and You are His nephew!

vAraNaththai anRu aRivinudan oru kodiyilE thariththu ukantha aruNa kiri nakaril ezhu kOpuraththu amarntha perumALE.: With deep foresight, You once established the Rooster on Your staff*, and took Your seat at the main gate of the Temple Tower in ThiruvaNNAmalai, Oh Great One!


* When the demon SUran's body was split by Lord Murugan's spear, one part became a Peacock and the other a Rooster both of which began to confront the Lord; with His gracious look, He converted the Peacock as His vehicle, and the Rooster was fixed as the symbol on His staff.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 403 iruLaLagam avizha - thiruvaruNai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]