திருப்புகழ் 386 கரி உரி அரவம்  (திருவருணை)
Thiruppugazh 386 kariuriaravam  (thiruvaruNai)
Thiruppugazh - 386 kariuriaravam - thiruvaruNaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தனன தனந்த தானன
     தனதன தனன தனந்த தானன
          தனதன தனன தனந்த தானன ...... தனதான

......... பாடல் .........

கரியுரி அரவ மணிந்த மேனியர்
     கலைமதி சலமு நிறைந்த வேணியர்
          கனல்மழு வுழையு மமர்ந்த பாணியர் ...... கஞ்சமாதின்

கனமுலை பருகி வளர்ந்த காமனை
     முனிபவர் கயிலை யமர்ந்த காரணர்
          கதிர்விரி மணிபொ னிறைந்த தோளினர் ...... கண்டகாள

விரிவென வுனது ளுகந்த வேலென
     மிகவிரு குழையு டர்ந்து வேளினை
          யனையவ ருயிரை விழுங்கி மேலும்வெ ...... குண்டுநாடும்

வினைவிழி மகளிர் தனங்கள் மார்புற
     விதமிகு கலவி பொருந்தி மேனியு
          மெழில்கெட நினைவு மழிந்து மாய்வதொ ...... ழிந்திடாதோ

எரிசொரி விழியு மிரண்டு வாளெயி
     றிருபிறை சயில மிரண்டு தோள்முகி
          லெனவரு மசுரர் சிரங்கள் மேருஇ ...... டிந்துவீழ்வ

தெனவிழ முதுகு பிளந்து காளிக
     ளிடுபலி யெனவு நடந்து தாள்தொழ
          எதிர்பொரு துதிர முகந்த வேகமு ...... கைந்தவேலா

அரிகரி யுழுவை யடர்ந்த வாண்மலை
     அருணையி லறவு முயர்ந்த கோபுர
          மதினுறை குமர அநந்த வேதமொ ...... ழிந்துவாழும்

அறுமுக வடிவை யொழிந்து வேடர்கள்
     அடவியி லரிவை குயங்கள் தோய்புய
          அரியர பிரம புரந்த ராதியர் ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

கரி உரி அரவம் அணிந்த மேனியர் ... யானையின் உரித்த
தோலையும் பாம்பையும் அணிந்த உடலைக் கொண்டவர்,

கலை மதி சலமு(ம்) நிறைந்த வேணியர் ... ஒளிகள் கொண்ட
திங்களும், கங்கையும் நிறைந்த சடையினர்,

கனல் மழு உழையும் அமர்ந்த பாணியர் ... நெருப்பையும்,
மானையும், பரசையும் ஏந்திய கையினர்,

கஞ்ச மாதின் கன முலை பருகி வளர்ந்த காமனை முனிபவர்
கயிலை அமர்ந்த காரணர்
... தாமரையில் வாழும் லக்ஷ்மியின் பருத்த
மார்பகங்களின் பாலைப் பருகி வளர்ந்த மன்மதனைக்* கோபித்து
அழித்தவர், கயிலாயத்தில் அமர்ந்துள்ள மூலப் பொருளானவர்,

கதிர் விரி மணி பொன் நிறைந்த தோளினர் கண்ட காள ...
ஒளி பரப்பும் ரத்தின மணிகளும் பொன்னும் நிறைந்த தோளை
உடையவராகிய இத்தகைய சிவபெருமானின் கழுத்தில் உள்ள ஆலகால
நஞ்சின்

விரிவு என உனது உள் உகந்த வேல் என ... விரிவோ (இந்த
விலைமாதரின் கண்கள்) என்று எண்ணும்படியும், (கூர்மையில்)
உன்னுடைய மனத்துக்கு விருப்பமான வேலாயுதமோ இது என்று
எண்ணும் படியும்,

மிக இரு குழையும் அடர்ந்து வேளினை அனையவர் உயிரை
விழுங்கி
... மிகவும் இரண்டு காதணி குண்டலங்களையும் நெருங்கியும்,
மன்மதனை ஒத்த ஆடவர்களின் உயிரையே விழுங்கியும்,

மேலும் வெகுண்டு நாடும் வினை விழி மகளிர் ... (இத்தனையும்
செய்து) பின்னும் கோபித்து நாடுகின்ற செயலினைச் செய்யும் கண்களை
உடைய விலைமாதர்களின்

தனங்கள் மார்பு உற வித மிகு கலவி பொருந்தி மேனியும்
எழில் கெட
... மார்போடு மார்பாக அணைந்தும், பலவிதமான காம
லீலைகளில் பொருந்தி உடலும் அழகை இழக்கவும்,

நினைவும் அழிந்து மாய்வது ஒழிந்திடாதோ ... நினைவும்
அழிந்து இறந்து போகும் விதி என்னை விட்டு நீங்காதோ?

எரி சொரி விழியும் இரண்டு வாள் எயிறு இரு பிறை சயிலம்
இரண்டு தோள்
... நெருப்பை வீசும் கண்கள் இரண்டுடன், இரண்டு
பிறை போன்ற ஒளி வீசும் பற்களுடனும், மலை போன்ற இரு
தோள்களுடனும்,

முகில் என வரும் அசுரர் சிரங்கள் மேரு இடிந்து வீழ்வது என
விழ முதுகு பிளந்து
... கரிய மேகம் போல் வரும் அசுரர்களுடைய
தலைகள் மேரு மலையே இடிந்து வீழ்வது போல் கீழே விழுந்து முதுகு
பிளவுபட,

காளிகள் இடு பலி எனவு(ம்) நடந்து தாள் தொழ ... காளிகள்
(அப் பிணங்கள்) தமக்கு இட்ட பலி உணவு என நடந்து உனது
திருவடிகளைத் தொழ,

எதிர் பொருது உதிரம் உகந்த வேகம் உகைந்த வேலா ...
எதிர்த்துப் போர் செய்து, அசுரர்களின் ரத்தத்தை விரும்பிய வேகத்துடன்
சென்ற வேலை உடையவனே,

அரி கரி உழுவை அடர்ந்த வாள் மலை அருணையில் அறவும்
உயர்ந்த கோபுரம் அதின் உறை குமர
... சிங்கம், யானை, புலி
இவைகள் நெருங்கி வாழும் ஒளி வீசும் மலையாகிய திருவண்ணாமலையில்
மிகவும் உயர்ந்த கோபுரத்தில் வீற்றிருக்கும் குமரனே,

அநந்த வேத(ம்) மொழிந்து வாழும் அறுமுக வடிவை
ஒழிந்து
... அளவில்லாத வேதங்கள் போற்றி வாழும் (உன் இயல்பான)
ஆறு முக வடிவை விட்டு விட்டு,

வேடர்கள் அடவியில் அரிவை குயங்கள் தோய் புய ...
வேடர்கள் வாழும் காட்டில் இருந்த பெண்ணாகிய வள்ளியின்
மார்பகங்களைச் சேரும் புயங்களை உடையவனே,

அரி அர பிரம புரந்தர் ஆதியர் தம்பிரானே. ... திருமால்,
சிவன், பிரமன், இந்திரன் முதலான தேவர்கள் ஆகியவரின் தம்பிரானே.


* மன்மதன் திருமாலுக்கும், லக்ஷ்மிக்கும் பிறந்த மகன்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.215  pg 2.216  pg 2.217  pg 2.218 
 WIKI_urai Song number: 528 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 386 - kari uri aravam (thiruvaNNAmalai)

kariyuri arava maNintha mEniyar
     kalaimathi salamu niRaintha vENiyar
          kanalmazhu vuzhaiyu mamarntha pANiyar ...... kanjamAthin

kanamulai paruki vaLarntha kAmanai
     munipavar kayilai yamarntha kAraNar
          kathirviri maNipo niRaintha thOLinar ...... kaNdakALa

virivena vunathu Lukantha vElena
     mikaviru kuzhaiyu darnthu vELinai
          yanaiyava ruyirai vizhungi mElumve ...... kuNdunAdum

vinaivizhi makaLir thanangaL mArpuRa
     vithamiku kalavi porunthi mEniyu
          mezhilkeda ninaivu mazhinthu mAyvatho ...... zhinthidAthO

erisori vizhiyu miraNdu vALeyi
     RirupiRai sayila miraNdu thOLmuki
          lenavaru masurar sirangaL mErui ...... dinthuveezhva

thenavizha muthuku piLanthu kALika
     Lidupali yenavu nadanthu thALthozha
          ethirporu thuthira mukantha vEkamu ...... kainthavElA

arikari yuzhuvai yadarntha vANmalai
     aruNaiyi laRavu muyarntha kOpura
          mathinuRai kumara anantha vEthamo ...... zhinthuvAzhum

aRumuka vadivai yozhinthu vEdarkaL
     adaviyi larivai kuyangaL thOypuya
          ariyara pirama purantha rAthiyar ...... thambirAnE.

......... Meaning .........

kari uri aravam aNintha mEniyar: He has a body wrapped in the hide of an elephant and adorned with serpents;

kalai mathi salamu(m) niRaintha vENiyar: His matted hair is filled with bright moon and river Gangai;

kanal mazhu uzhaiyum amarntha pANiyar: in His hands, He holds fire, a deer and a pick-axe;

kanja mAthin kana mulai paruki vaLarntha kAmanai munipavar kayilai amarntha kAraNar: He became enraged with (and destroyed) Manmathan (God of Love) who imbibed milk from the huge breast of Goddess Lakshmi*, seated on a lotus; He is the primordial and causal One, seated in Mount KailAsh;

kathir viri maNi pon niRaintha thOLinar kaNda kALa: His shoulders are filled with dazzling gemstones and gold; such a great Lord SivA holds in His neck the evil poison, AlakAlam;

virivu ena unathu uL ukantha vEl ena: (the eyes of these whores are) looking like an expanded version of that poison; making one wonder whether those eyes are Your favourite Spear (in sharpness),

mika iru kuzhaiyum adarnthu vELinai anaiyavar uyirai vizhungi: they creep up close to the swinging ear-studs and gobble up the lives of young men looking like Manmathan;

mElum vekuNdu nAdum vinai vizhi makaLir thanangaL mArpu uRa vitha miku kalavi porunthi: (not satisfied with all these acts), those eyes display more anger and greater desire; hugging tightly the whores endowed with such eyes and engaging in various acts of carnal pleasure,

mEniyum ezhil keda ninaivum azhinthu mAyvathu ozhinthidAthO: my body lost all its sheen and my memory began to fade; will I ever be able to avoid such a destructive end?

eri sori vizhiyum iraNdu vAL eyiRu iru piRai sayilam iraNdu thOL: With the two eyes emitting fire, their crescent teeth dazzling and two mountain-like shoulders,

mukil ena varum asurar sirangaL mEru idinthu veezhvathu ena vizha muthuku piLanthu: the demons confronted like the black cloud; knocking their heads, which fell down as if Mount MEru had collapsed, splitting their backs, and

kALikaL idu pali enavu(m) nadanthu thAL thozha: as the KALis in the battlefield walked up to You and prostrated at Your feet for feeding them (those corpses),

ethir poruthu uthiram ukantha vEkam ukaintha vElA: Your spear fought back, rushing with relish to taste the blood of those demons, Oh Lord!

ari kari uzhuvai adarntha vAL malai aruNaiyil aRavum uyarntha kOpuram athin uRai kumara: You are seated in the very tall temple tower of ThiruvaNNAmalai, whose mountain is radiant and in which a close company of lions, elephants and tigers inhabit!

anantha vEtha(m) mozhinthu vAzhum aRumuka vadivai ozhinthu: Discarding Your (usual) form with six hallowed faces that are worshipped by countless vEdAs,

vEdarkaL adaviyil arivai kuyangaL thOy puya: You went in pursuit of VaLLi who lived in a forest belonging to the hunters and hugged her bosom with Your hallowed shoulders!

ari ara pirama puranthar Athiyar thambirAnE.: You are the Lord of VishNu, SivA, BrahmA, IndrA and all other celestials, Oh Great One!


* Manmathan is the son of Lord VishNu and Goddess Lakshmi.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 386 kari uri aravam - thiruvaruNai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]